Raasitha's Ninmel Kaadhalagi Nindren P32

Advertisement

"நம்ம வீட்ல இருந்து கடல் ரொம்பக் கிட்டக்கவா ? கடல் சத்தம் கேட்குது..." என ஏதோ பேசவேண்டும் என்பதற்காக ஆரம்பித்தாள். உண்மையில் கடலை பற்றியெல்லாம் அவளின் எண்ணம் இல்லவே இல்லே. கதிரவனின் காதல் பார்வை அவளைத் தடுமாறச் செய்தது. நாணம் தாளாமல் எங்காவது சென்று ஒளிந்துகொள்ளலாம் என்றால் இருப்பதோ ஒரே அறை. இதில் எங்கு ஒளிவதற்கு இடம் தேட ? என்றது அவளின் மனம்.

"ஹ்ம்ம் ஆமாம்..உனக்கு கடல்னா ரொம்பப் பிடிக்கும்ல"

"ஆமா மாமா..ரொம்பா....ஆனா ஒரே ஒருமுறை தான் போனே"

இப்போது இருவருக்குள்ளும் ஓரளவு சகஜமான பேச்சுவார்த்தை தொடங்கியிருந்தது.

"சரி வா இப்ப போகலாம்..." என எழுந்தவன், அவள் எழுவதற்குத் தன் கையை நீட்ட, ஓர் நொடி தயக்கம், அதைத் தொடர்ந்து சிறு வெட்கம் என ஆயிரம் உணர்வுகளுடன் மெல்ல அவனின் கரத்திற்குள் அவளுடைய மெல்லிய கரங்கள் பதிய, வாகாக அவளை இழுத்தவன் வேணுமென்றே தன் மீது சாய்த்துக்கொண்டான்.
--------------------------------------------------------------------------------------------------------------------

"பிடிச்சிருக்கா..." என்று கதிரவன் கேட்க,

"ஹா..என்ன ? யார ?" எனத் தடுமாறினாள் விழி.

"இந்தக் கடல் பயணம் பிடிச்சிருக்கா...?" எனக் கதிரவன் வினவ,

"உன்னோட வர வாழ்க்கை பயணமே பிடிச்சிருக்கு மாமா... உன்கூட இருக்க இந்தக் கடல் பயணம் பிடிக்காம போகுமா ?" என்பதை மனதோடு மட்டும் சொல்லிக்கொண்டாள். ஏனோ நிறையப் பேசுபவளுக்கு அன்று தழிழில் உள்ள அத்தனை வார்த்தைகளும் மறந்து போனதை போன்றதொரு பிம்பம்.

-----------------------------------------------------------------------------------------------------------------

"கடலையும் கடல் காற்றையும் உணர்ந்துட்டோம்...இனி ஆழ்கடலுக்குப் போனா தான் முத்தெடுக்க முடியும்? மூழ்கி முத்தெடுக்கலாமா ?" என அவளிடம் ஏக்கம் நிறைந்த குரலில் வினவ, அவன் தோள் வளைவினிலையே முகத்தைப் புதைத்துக்கொண்டு ஆழ்கடல் பயணத்திற்குச் சம்மதம் சொன்னாள்.

---------------------------------------------------------------------------------------------------------------------
Kathit, neeyum romance panra... good job
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top