Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen 35

Advertisement

mallika

Administrator
ஹெலோ பிரண்ட்ஸ்!!!

அந்தா இந்தான்னு ஒருவழியா நிறைவு பகுதிக்கு வந்துவிட்டோம். 35 அந்தியாயங்கள், 450 பக்கங்கள் எல்லாமே உங்களுடைய வாசிப்பினால் மட்டுமே சாத்தியம். இந்தக் கதையின் ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து கருத்து கூறியும், லைக் செய்தும், முகப்புத்தகத்தில் கதாபாத்திரங்களைக் கோடியிட்டு காட்டியும், அவர்களின் வசனத்தைக் கொண்டாடியும் ரொம்பவே நான் எதிர்பார்க்கா அளவுக்கு எனக்கும் இந்தக் கதைக்கும் ஆதரவை தந்தீங்க. இங்க ஒன்னொரு முக்கியமான ஆளுக்கு நன்றி சொல்லணும். வேற யாருமில்ல, உங்களுக்கு நல்லாவே தெருஞ்ச எழுத்தாளர் சவீதா முருகேஷனிற்கு. முதலில் நான் இத நேரடி புத்தகமா போட்டுட்டு அப்புறம் தளத்தில் பதிவிடலாம்னு இருந்தேன். 6 பார்ட் எழுதிட்டு கதை எப்படிப் போகுதுனு ஐடியா கேட்டேன். ஆனா சவீ அக்கா முதல் 6 அத்தியாயங்கள் படித்துவிட்டுத் தளத்தில் முதல்ல போடு கண்டிப்பா ரீச் ஆகும்னு சொன்னாங்க. அதுக்கு அப்புறம் தான் போட ஆரம்பித்தேன். கைல ஆறு எப்பியோட ஆரம்பிச்சுக்கூட, உங்க ஆர்வத்திற்கு என்னால் ஈடுகொடுத்து வேகமாக எழுத முடியல :). இப்ப கொஞ்சம் நேரமுன்னாடி தான் கடைசிப் பகுதியை நிறைவு செய்தேன். நிறைவு செய்தவுடன் பதிவிட வந்துவிட்டேன்.

முடித்தவுடன் மல்லி அக்காவை தொந்தரவு பண்ணி போட வச்சுருவேன். மல்லி அக்கா! தேங்க்ஸ் :)

உங்க எல்லாருக்கும் என்னுடைய பிக் நன்றி மக்களே! எதுக்குடா இப்ப இவ்ளோ மொக்க போடறானு பாக்குறீங்களா ? அது ஒண்ணுமில்லைங்க! நான் அடுத்தக் கதையோட உங்கள அடுத்த வருடம் தான் சந்திப்பேன். அதுக்குள்ள நீங்க என்ன மறந்திட கூடாதுல.

அதான் தம் கட்டி இத்தனை பத்திகளை எழுதுறேன்.

இதுக்காகவாச்சும் என்ன நியாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் தாங்கள் அன்புடனும் பாசத்துடனும் எனக்கு அனுப்பிய உருட்டுக்கட்டைகள் அப்படியே இருக்குது. அதை நான் அப்புறம் உரிமையோடு உங்களுக்குப் பார்ஸல் அனுப்பிடுவேன்.

ஜோக்ஸ் அபார்ட்! நிஜமாவே பிரண்ட்ஸ், கதை படிக்கிறது ஒரு அழகான போதை. அதைப் போலவே கதை எழுதுறதும். அதுக்கு நீங்க தருகின்ற ரெஸ்பான்ஸ்-உம் ரொம்பவே எழுத்தாளர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் அப்படிகிறதுல எந்தவொரு சந்தேகமும் இல்லை. அதுனால உங்கள கதையின் மூலமாகச் சந்திக்காமல் இருப்பது எனக்குக் கொஞ்சம் கஷ்ட்டம் தான். ஆனா மல்லி அக்கா தளத்திலையும் முகப்புத்தகத்திலையும் எப்போதும் இருப்பேன்.

இப்ப உடனடியா குடும்ப நாவல் எழுதாததுக்குக் காரணம் என்னுடைய காதல் மக்களே! சரித்திர காதல்! சரித்திரத்தின் மீது தீர காதல்! சரித்திர தேடல். என்னடா இவ ஓவரா பில்ட் அப் பண்றளேனு பார்க்குறீங்களா ?

ஆனா என்ன பண்ண ? நிஜம் அதுதான். எனக்குச் சரித்திரத்தை தேடி தெருஞ்சுக்கவும் அதைக் கதையின் மூலமா உங்ககிட்ட கொண்டுவரவும் அவ்ளோ பிடிக்கும். அதுனால சரித்திர எழுத்துப் பயணத்தைத் தொடங்க போறேன். எப்படியாச்சும் உருண்டு புரண்டாச்சும் நல்லபடியா நான் முடிக்கணும்னு சாமிகிட்ட வேண்டிக்கோங்க.

பாண்டியர்களின் சரித்திர கதை: எட்டு திக்குகளையும் தன் வாளிற்கு அடிபணிய வைத்த வீரனின் வரலாறு. அவன் மீனக்ஷி அம்மன் கோவிலில் ஒரு கோபுரத்தை ஸ்தாபித்தவன். ஸ்ரீ ரங்க நாதர் கோயிலிற்குப் பொன்னால் 3 கூரைகளை வேய்ந்தவன். பல்லவர்கள் முதல் இலங்காபுரியின் அதிபர் வரை, சேரன் முதல் சோழன் வரை அனைவரையும் சிரம் தாழ்த்தி தன்னை வணங்க செய்த புஜபலமும் புத்திபலமும் கொண்ட பராக்கிரமனின் கதை அது.

முடித்துவிட்டு புத்தகமா வெளிவரும் போது நான் கதைக்கான ட்ரைலர்-அ மல்லி அக்காவின் தளத்தில் உங்களுக்காகப் பதிவிடுகிறேன். (வேறு தளத்தில் எனக்குக் கிளையில்லை)

தனித் தனியா பெயரை சொல்லி உங்க எல்லாருக்கும் நன்றி சொல்லணும்னு ஆசை தான். பொறவு அதுவே பெரிய கதையா போய்டும். அவ்ளோ பேர் இருக்கீங்க :) பெயரை இங்க பதிவிடலையே தவிர உங்க எல்லார் பெயரும் எனக்குத் தெரியும் :) நன்றிகள்


Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen 35

Happy Reading!!! Keep Reading !!! Keep Commenting!!!
 

Riy

Writers Team
Tamil Novel Writer
வாழ்த்துக்கள் டியர்.... கதைய அழகா நிறைவு செஞ்சிருக்கீங்க... கதிர், கனலியோட அழகான காதல், சோமாஸ் பாண்டியோட சாப்பாட்டு லிஸ்ட்... சக்கர, பார்வதி, மாறன், சாந்தினி, முல்ல, பார்த்திபன், ரோசா அக்கா.. கந்தசாமி, முருகேஷன் மாமா, தலைகட்டு தலைவரு... எல்லாரையுமே ரொம்ப மிஸ் பண்ண போறோம்...
 

Devi29

Well-Known Member
மிக அருமையான ஸ்டோரி சிஸ். சோமாஸ் பாண்டியை ரொம்ப மிஸ் பண்ணுவோம் . Karupati ku poppy vellam sernthu tucha super.kathirku kanali maraintha unmai theriyuma.... Happy ending Best wishes for your historic novel
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top