Promo 2 - இதய கூட்டில் அவள்

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Hi friends

Promo 2 for Idhaya koottil aval.


திருமணம் ஆகி இந்த ஏழு வருடங்களில் தம்பதிகளின் அன்னியோன்யம் வளர்ந்து கொண்டே தான் சென்றிருக்கிறதே தவிர குறைய வில்லை. அது முன் இரவில் நடந்த கூடலால் மட்டுமா அல்லது பின் இரவு வரை நீடித்த இருவருக்குமான பேச்சிலா?

வெறும் கூடல் மட்டும் ஒரு தம்பதிகளுக்கு இடையே அன்னியோனியத்தை ஏற்படுத்த முடியாது. இருவரும் மனம் விட்டு பேசும்போது தான், கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். தன் துணையுடன் என்ன வேண்டுமாமனாலும் பேச முடியும் என்பதே... ஆரோக்கியமான உறவுக்கு அடையாளம்.
********************************************************************************************************

வெற்றி கட்டிலில் உட்கார்ந்து இருக்க, குளியல் அறைக்குள் இருந்து வந்த மனைவியின் முகம் மற்றும் கழுத்தில் இருந்த சிவப்பு தடங்களைப் பார்த்தவன், அதை மெதுவாக வருடி வலிக்குதா டி என்றான். ஆதிரை இல்லை என தலையசைக்க, “சாரி ஆதி என்னால என்னை கண்ட்ரோல் பண்ண முடியலை. உன்னை அப்படியே கடிச்சு சாப்பிடணும் போலத்தான் இருந்தது.” என்ற கணவனின் பேச்சில் ஆதிரைக்கு சிரிப்பு வர... “அது என்னைக்கோ ஒருநாள் இப்படி பாய்ஞ்சா அப்படித்தான் இருக்கும்.” என்றாlள் கேலியாக.

“ஏன் என்னை சொல்றவ நீ என்ன பண்ற? நீயும் தானே இழுத்து மூடிட்டு தூங்கிற.”
“மார்கழி மாசம்ன்னு நான் காலையில நாலு மணிக்கு எழுந்துகிறேன். நீங்க நைட் பதினோரு மணிக்கு வந்து, அதுக்கு அப்புறம் சாப்பிட்டு படுக்கத்தான் நேரம் சரியா இருக்கு. இன்னைக்குதான் நீங்க சீக்கிரம் வந்தீங்க.”
*******************************************************************************************************
விழிகள் மூடி இருந்தாலும், வெற்றியின் இதழ் சிரித்துக் கொண்டு இருக்க. கணவன் சொன்னதைக் கேட்டு மனைவிக்கும் சிரிப்புதான்.

“நீங்க பார்க்கதான் ஆள் அமைதி. ஆனா செம வாலு நீங்க.”
“கொஞ்சம் பெரிய பையனா ஆனதும் போறது இல்லை. திரும்ப காலேஜ் சேர்ந்ததும் போனோம்.”
எதற்கு அந்த வயதில் என அதிரை யோசிக்க, வெற்றியே தொடந்தான். “பொண்ணுங்க எல்லாம் வருவாங்க இல்ல... அவங்களை பார்க்க. எங்களோட சக்கரை பொங்கல் சுண்டல் எல்லாம் அவங்களுக்கு கொடுப்போம்.”
கண்ணை மூடி இருந்தாலும் மனைவி இப்போது எப்படி கொதித்துப் போய் இருப்பாள் என தெரியும் என்பதால்... வெற்றி லேசாக கண்திறந்து பார்க்க, அவன் எதிர்பார்த்தபடி ஆதிரை அவனை முறைத்துக் கொண்டு இருந்தாள்.
********************************************************************************************************

“இப்ப என்ன உங்க அம்மாவுக்கு நான் அவங்களை மாதிரி மாடு கண்ணு மேய்க்கலைன்னு கவலையா... நீங்களும் வேணா ரெண்டு மாடு வாங்கி வீட்ல விடுங்க. உங்க அம்மாவுக்கு அப்பவாவது நிம்மதியா இருக்கா பார்ப்போம். உங்க அம்மாவுக்கே சாப்பாடு போடுறேன். மாட்டுக்கு தண்ணி காட்ட மாட்டேனா...”

“ஆதி ரொம்ப பேசுற நீ... அவங்க அந்தக் காலத்தில இருந்ததை சொல்றாங்க. நீ ஏன் அதை தப்பா எடுக்கிற?”
“ஆமாம் எனக்கு வேற வேலை இல்லைப் பாருங்க.”
“நீ வேலைப் பண்ணலைன்னு யாருடி சொன்னா... அவங்க அப்ப ரொம்ப வேலை
பண்ணாங்கன்னு சொல்றாங்க.”
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

கணவன் மனைவி அன்னியோன்யம் (y)(y)(y)

மாமியார் தொடங்கிட்டாங்க போல நாங்கெல்லாம் எங்க காலத்துல :p:p:p
நீங்க அப்படி இருந்தால் மருமகளும் அப்படியே இருக்கணும்னு நினைக்கிறது ஒருவகையான ragging தானே???

இப்போ நிறைய பணம் இருக்கு....... அவங்க செஞ்ச மாதிரி ரொம்ப கஷ்ட படுத்தி செய்யுற வேலைகள் வேண்டாம்னு ஏன் நினைக்கமாட்டேங்குறாங்க???
வீடு சமையல் எல்லாமே பார்த்தாலும் நாங்கெல்லாம் எவ்ளோ வேலை செய்தோம்னு சொல்றது ஒரு வாடிக்கை......
இவங்க பேச மருமகள் பதில் பேச அது மகன் மருமகள் விரிசலுக்கு வழிவகுக்கும்னு தெரியாதா???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice

மாமியார் கும்மி அடிக்க ஆரம்பிச்சாட்டாங்களா...

உங்க அம்மாவுக்கே சாப்பாடு போடுறேன்...
மாட்டுக்கு தண்ணி காட்ட மாட்டேனா...
ஏம்மா ஆதிரை மாமியாரும் மாடும் ஒண்ணா???

Waiting for episode...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top