Prasath Krishna's Adheera 1

Advertisement

Prashadi

Member



அத்தியாயம் 1



பரந்த வானம் முழுதும் செம்மை படர பொன்னிற மேனியை வரமாகப் பெற்ற சூரியன், நீலக்கடலுடன் சங்கமிக்கும் ஒரு அழகான மாலைப்பொழுது....


அவ்வழகிற்கு மனதை பறிகொடுக்கத் தோன்றாமல்,
இளந்தென்றல் மீட்டும் இசையில் மெய்மறந்து அதனை இரசிக்கத் தோன்றாமல்
அந்த நீலக்கடலை ஒரு கல் மேடையில் நின்று வெறித்துப் பார்த்தப்படி நின்றிருந்தாள்...


கூர்மையான அழகான நீலக்கண்கள்,மெல்லிய இசை மீட்டும் இமைகள், நீண்ட புருவங்கள் ,கூரான நாசி,சிறிய சிவந்த உதடுகள்,மாநிறத்தை விட சற்று அதிக நிறம் கொண்ட நீண்ட முகம்,மெல்லிய தேகம், அலையலையாய் படர்ந்த கூந்தல் என பார்ப்பவரை கவரும் அமைதியான அழகை கொண்டவள்...


அதீரா.....

வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அவளின் கண்கள் பனித்திருந்தன. தன் மனதை அழுத்தும் துக்கத்தால் கண்ணீரோடு மௌனமாக நின்றாள்.

தன்னை நோக்கி ஏதோ ஒன்று தாக்க வருகின்றதென்பதை உணர்ந்து தன் மெல்லிய விரல்களால் ஒரு சொடுக்கிட்டாள்...
தாக்க வந்த பொருள் அந்தரத்திலே நின்றது.
சிறிய புன்முறுவலுடன் பின்னால் திரும்பினாள்.

"கண்டுப்பிடிச்சிட்டியா?இந்த தடவையும் தோத்துட்டேன்"என உதட்டை சுழித்தாள் அதீராவின் உயிர்த்தோழி ரக்ஷிதா.

"என்கிட்டேயே விளையாடுறியா?அந்த பந்தை எடுக்கும் போதே தெரிஞ்சுது நீ தான்னு"அதீரா

அந்தரத்தில் நின்ற பந்நை கையில் ஏந்தி விளையாடியபடியே ரக்ஷிதாவின் அருகில் வந்தாள்.

"சரி அத விடு,ஏன் உன் கண் எல்லாம் சிவந்திருக்கு?"என ரக்ஷிதா உடைத்த மௌனத்தை மீண்டும் தொடர்ந்தாள்
அதீரா.

"இன்னும் அந்த பழைய நாட்களை நினைச்சிட்டு இருக்கியா?"

"என்னால எப்பிடி மறக்க முடியும் ரக்ஷி?என் பெற்றோர் வரமா தந்த மாயசக்தியினால என்ன பயன்? எனக்கு உயிர் தந்த பெற்றோரோட உயிரை காக்க முடியாம போச்சே. என்னோட விளையாட்டுத்தனத்தால அந்த அழகிய உறவுகளை இழந்தேனே" என உதடுகள் துடிக்க துக்கத்தை விழுங்கினாள்.

கம்பீரமாய் நோக்கும் கண்கள் இன்று ஒளியிழந்து கண்ணீரோடு இருந்ததை பார்த்து கலங்கினாள் ரக்ஷி.
அவளை தோளோடு அணைத்து முதுகை தடவிக்கொடுத்து அவளது துக்கத்தை குறைக்க முயற்சி செய்தாள்.
"நீ ஏன் அப்படி நினைக்கிறாய் தீரா?
அது ஒரு விபத்து. என்ன நடந்தாலும் இறந்தகாலத்தை மாற்ற முடியாது. உனக்கு நான் எப்பவும் துணையாய் இருப்பேன் தீரா."

"காலங்கள் கடந்து அந்தநிகழ்வுகள மறந்தாலும் என்னோட அந்த சந்தோஷமான நாட்கள் திரும்ப வருமா ரக்ஷி?"

"வாழ்வில் இன்பத்தையும் துன்பத்தையும் கடந்து தான் போகனும் தீரா. இப்ப வா போலாம்"என கலங்கிய விழிகளுடனே தீராவை அழைத்துச் சென்றாள் ரக்ஷிதா

(தீராவின் வாழ்வில் வசந்தம் வருமா?பொறுத்திருந்து பார்ப்போம்)

தொடர்வாள்...

-பிரசாத் கிருஷ்ணா-
 
Last edited by a moderator:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "அதீரா"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பிரசாத் கிருஷ்ணா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பிரசாத் கிருஷ்ணா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top