Poorva Jenmam. - Episode 16 &17

Advertisement

மறுநாள் தாரா டிடெக்ட்டிவ் agency

கோபியும் ரித்திகாவும் chief இடம் பேசிக்கொண்டிருந்தனர். பினாமியின் மகனுக்காக வாதாடும் வக்கீலிடம் மறைமுகமாக கேட்டதில் வழக்கின் போக்கு அவனுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது என்று கூறினார். ரித்திக்காவிற்கு இதை எப்படியாவது தடுக்கவேண்டும் என்று கூறினாள். Chief இம் தான் எதாவது முயற்சி செய்வதாக கூறி அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். அவர் மனதில் ஒரு யோசனை இருந்தது ஆனால் எந்த அளவிற்க்கு சாத்தியம் என்று தெரியவில்லை. ரித்திகா அலுவலகத்திற்கு வந்தவுடன் எடிட்டரை சந்தித்தாள். தான் அந்த பினாமியின் மகன் பற்றியும், வழக்கு திசை திரும்பும் போக்கை பற்றி எழுதபோவதாக கூறினாள்.

நான்கு நாட்களில் செய்தி ப்ரசுரமாயிற்று. இதை அறிந்ததும் ப்ரனவ் என்று அறியபடும் பினாமியின் மகன் கொதித்தெழுந்தான். வக்கீலும் அவன் அப்பாவும் அவனுக்கு அறிவுரை கூறி அடக்கி வைத்தனர்.

அதற்கு மேல் இந்த கட்டுரையினால் வழக்கு திசை மாற வாய்ப்பில்லையெனவும் அவனுக்கு எதிராக எந்த சாட்சியும் இல்லையெனவும் சொல்லவும் கொஞ்சம் அமைதியானான். ஆனால் இந்த விஷயத்தை அப்படியே விட மனமில்லை. இதற்கு பொறுப்பாளர் யார் என்று விசாரிக்க ஆரம்பித்தான்.

செய்தித்தாள் அலுவலகம் இவள் எழுதிய கட்டுரைக்கு சப் எடிட்டர் அவர் பெயரை போட்டு வெளியிட்டுவிட்டார். ரித்திகா அதை காட்டி எடிட்டரிடம் கேள்வி கேட்டு கொண்டிருந்தாள். எடிட்டரும் தனக்கு தெரிந்துதான் இது நடந்தது என்று எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினார். பிறகு பொறுமையாக புரியவைத்தார். அரசியலில் உள்ளவரின் விஷயத்தில் தலையிடும் பொது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் எனவும், அவனுக்கு உன் மேல் ஏற்கனவே கோபம் இருப்பதால் தான் விஷயத்தை யாரோ ஒருவர் மூலம் கேள்விப்பட்டு எழுதியது போல எழுத சொன்னதாகவும் கூறினார். பிறகு கோபம் கொஞ்சம் கட்டுக்குள் வந்தது. மன்னித்து விடுங்கள் என்று மட்டும் கூறிவிட்டு எழுந்து வந்து விட்டாள்Mr . ரகுராமன் சிறைத்துறை அதிகாரியிடம் பேசிக்கொண்டிருந்தார். இந்த வழக்கின் விவரத்தை பற்றியும் அதற்கு என்ன செய்யலாம் என்று மனதில் இருப்பதை சொன்னார். முதலில் பின்வாங்கிய கூறிய ஏற்பாடுகளை கேட்டு தலையாட்டினார். நியாயத்தை வாழவைக்க சில சில சமயங்களில் சட்டத்திற்கு எதிர் திசையில் பயணித்தாலும் தவறில்லை.

அந்த ஏற்பாட்டின் படி பிரணவ் இன் நண்பனை வேறு அறைக்கு அனுப்பினர். அங்கு ஏற்கனவே இரண்டு பேர் இருந்தனர். சிறைத்துறை அதிகாரிகள் சொல்லிக்கொடுத்தது போல் வெளியுலக விஷயங்களை பேசிக்கொண்டிருந்தனர். இன்னும் இரண்டு நாட்களில் தீர்ப்பு வழங்க உள்ள இவனுடைய வழக்கையையும் அதில் அந்த வக்கீலின் வாத திறமையையும், சாட்சிகளை அவனுக்கு சாதகமாக மாற்றிய சாதுர்யத்தையும் பேசி கொண்டிருந்தனர்.மனதுக்குள் கொதித்து போயிருந்த இவனுக்கோ இவர்கள் பேசியது மேலும் ஆத்திரத்தை கிளப்பியது. இவர்களுடன் சண்டை போட ஆரம்பித்தான். வாய் சண்டை கை சண்டையாக மாறியது. இந்த நேரத்தை எதிர்பார்த்து இருந்த இரண்டாவது ஆள் உடனே அடிக்க வேண்டியது எங்களை அல்ல உன்னை ஏமாற்றியவனை என்று உரைத்ததும் சிறிது அசையாது நின்று விட்டான். பிறகு அவர்கள் பேசினார்கள். நிச்சயம் நீங்கள் செய்த குற்றத்திற்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ தான் கிடைக்கும். உனக்கு கடைசி வரை சிறை வாசம்தான் என்று ஏற்றிவிட்டனர். உன் நண்பன் உனக்கு துரோகம் இழைத்து அவன் அங்கே சந்தோஷமாக இருக்கிறான் என கூறவும் இவன் இல்லை அவன் உயிரோடு இருக்க கூடாது இருக்க விடமாட்டேன் என சூளுரைத்தான்.

பிரணவ் இந்த கட்டுரை யாருடைய கைங்கர்யம் என்று கண்டுபிடித்துவிட்டான். எடிட்டரின் பெயர் போட்டிருந்தாலும் இவ்வளவு விஷயங்கள் யாருக்கு தெரியும் என்று யோசித்ததில் இந்த கைதுக்கு காரணமான அந்த நபர்களாக தான் இருக்கக்கூடும் என உத்தேசித்து விசாரிக்க ஆரம்பித்தனர். கடைசியில் ரித்திகாவிடம் வந்து நின்றது. அவளை சும்மா விடக்கூடாது என்று கருவிக்கொண்டான். ஆனால் தீர்ப்பு வரும்வரை எதிலும் சிக்கக்கூடாது எனவே பொறுமை காத்தான்.

தனஞ்செயன் ரித்திக்காவின் உரையாடல்களில் கொஞ்சம் இடைவெளி குறைந்திருந்தது. ரித்திக்காவின் வீட்டிலும் வரன் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என கூறியிருந்தாள். தனஞ்செயன் தன் அப்பாவிடம் சொல்லி ஒரு முடிவெடுக்கலாமா என யோசித்து அன்று இரவு உணவு உண்டபிறகு பேச ஆரம்பித்தான். தான் ஒரு பெண்னை விரும்புவதாகவும் அவள் சென்னையில் செய்திதாள் ஒன்றில் பணிபுரிவதாகவும் கூறினான். அவருக்கு ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் இந்த சம்பந்தம் ஒத்து வருமா என்று அவருக்கும் சந்தேகம். மனதில் இருந்தாலும் வெளியே காட்டி கொள்ளாமல் சரி தங்கையின் திருமணம் முடிந்ததும் பார்கலாம் என்று கூறிவிட்டு எழுந்து சென்று விட்டார்.

தங்கையின் திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதம் இருந்தது. அவன் நினைத்தது திருமணத்திற்குள் பேசி விட்டால் அவளை ஊருக்கு அழைத்து வரலாம். நிச்சயத்திற்கே அழைக்கவில்லையென அவளுக்கு கொஞ்சம் குறை இருந்தது. சரி பார்கலாம் என்று அடுத்த வேலையை பார்க்க சென்றான்.

நினைத்தது போல் தீர்ப்பும் ப்ரணவ் க்கு சாதகமாக வந்தது. அன்று இரவு அனைவருக்கும் பார்ட்டி வழங்கப்பட்டது. கழுத்து வரை குடித்தனர். ரித்திக்காவை கொல்ல வேண்டும் என்ற வெறி அதற்கு மேல் இருந்தது. அடுத்த நாளே அதற்கான வேலையில் ஈடுப்பட்டான். தான் நேரடியாக ஈடுபடாமல் வெளி மாநிலத்தில் இருந்து ஆட்களை வரவழைத்தான்.

கோபிக்கு ரித்திக்காவிடம் முன்போல் சாதாரணமாக பேச முயற்சி செய்ய வேண்டி இருந்தது. ஆனாலும் ஏற்று கொள்ளதான் வேண்டும் அவளுக்கு பிடித்திருக்கிறது. இதில்லெல்லாம் இருந்து வெளியே வர கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது.

Thodarum...16

ப்ரணவ் இன் ஆட்கள் அவளை கடத்துவதற்காக தொடர ஆரம்பித்தனர். ரித்திக்கா மாலை வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாள்.

கோபி போன் செய்திருந்தான். டெஹ்ராடூன் செல்லப்போவதாகவும், வருவதற்கு 15 லிருந்து 20 நாட்கள் ஆகும் எனவும் கூறினான். ரித்திக்காவிற்கும் புரிந்திருந்தது அவன் தன்னிடம் சரியாக பேசுவதில்லையென்று. முதலில் அவனுக்கு அரசியல் பிடிக்காது அதற்கு மேல் அரசியலில் இருப்பவர்களை சுத்தமாக பிடிக்காது. எப்படியாவது அவனை சமாதானப்படுத்த வேண்டும் என்று நினைத்து வண்டியில் சென்று கொண்டிருந்தாள்.

அப்போது திடீர் என ஒரு கார் அவளை வழிமறித்தது. கத்தி முனையில் காரில் ஏறச்சொல்லி வற்புறுத்தினார்கள். அது ஒரு அதிக மக்கள் நடமாட்டம் இல்லாத, மேல் தட்டு மக்கள் வாழும் ஏரியா.

இவளும் முரண்டு பிடிப்பதை விட்டுவிட்டு காரில் ஏறினாள். அதற்கு முன் வண்டியை அப்படியே நிறுத்தி விட்டு ஒரு பட்டன் ஐ அழுத்தி விட்டு வந்தாள். கார் கொஞ்சம் தூரம் சென்றதும் வண்டியை நிறுத்திவிட்டு ஆம்புலன்ஸ் போல் இருந்த வண்டியில் மாற்றிக்கொண்டனர். மயக்க ஊசியும் போடப்பட்டது. வண்டி சென்னையை தாண்டி சென்று கொண்டிருந்தது. அவளை கொல்வதற்கு முன் ப்ரணாவிடம் சொல்வதற்காக போன் செய்தனர். அவன் முன்பே சொல்லி வைத்திருந்தான் தனக்கு போன் செய்யவேண்டாம் என்று. பிரணவ் போன் வரவும் எடுத்தான். இவர்கள் தான் போன் செய்தது என்றவுடன் கோபம் வந்தது. உடனே பேச்சில் கவனம் செலுத்தினான்.

கோபத்தில் எதையும் பேசிவிட்டு மறுபடியும் மாட்டிக்கொள்ள கூடாது. கவனமாக கேட்டான். கடத்தி விட்டதாக கூறினார். கண்டதும் சரி இப்போதும் சரி முரண்டு பண்ணவில்லை எனவும் அதுதான் ஒரு சந்தேகத்தில் போன் பண்ணதாகவும் சொன்னார்கள். மயக்க ஊசி போட்டிருப்பதாகவும் முடித்துவிடலாமா என்றும் கேட்டனர். அவன் யோசிக்க ஆரம்பித்தான். எதிர்க்கவில்லை என்றால் அவள் இதை எதிர்பார்த்திருப்பாளா அல்லது பயந்து போயிருப்பாளா என்று யோசித்தான். உடனே இப்போது கொல்வது சரியில்ல என்று ரகசியமான ஒரு இடத்திற்கு அழைத்து வர சொன்னான்.

மயங்கி கிடந்தவளை அவன் சொன்ன இடத்திற்கு கொண்டுசெல்ல புறப்பட்டனர்.

அவள் வண்டியில் அழுத்திய பட்டன் ஆபத்து என குறுந்தகவலை கோபிக்கும் நேத்ரனுக்கும் அனுப்பியது. இருவரும் அவளுடைய கைபேசிக்கு தொடர்பு கொண்டனர். கடத்தல் காரர்கள் அப்போதே அதை அணைத்து விட்டனர். நேத்ரன் கோபியிடம் பேசினான். என்ன செய்யவது என்று யோசித்து. அவளுடைய வண்டியை முதலில் கண்டுபிடிக்கவேண்டும் என்று அவள் வரும் வழியில் எல்லாம் சென்று பார்த்தனர். பாதி தூரம் கடந்தவுடன் எதிர் திசையில் வண்டி இருப்பதை பார்த்து வண்டியை ஸ்டார்ட் செய்தனர். வண்டியில் இருந்த கருவி அவள் பயணித்து கொண்டிருந்த திசையை காட்டியது. அவள் கையில் கட்டியிருந்த கடிகாரத்தில் இருந்து சிக்னல் வந்து கொண்டிருந்தது. இவர்களும் அந்த வழியில் சென்று கொண்டிருந்தனர். போகும் வழியில் சிஎப் க்கும் தெரிவித்தான் கோபி. கடத்தியது யார் என்ற குழப்பத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அந்த ரகசியமான இடம் அவனின் பார்ம் ஹவுஸ். அவனும் அங்கு வந்து சேர்ந்தான். அவளை கட்டி வைத்திருந்தனர். மயக்கத்தில் இருந்தாள். மயக்கம் தெளிய இன்னும் 2 மணி நேரம் ஆகும் என்றனர் கடத்தல்காரர்கள். பிரணவ் எதற்கும் சிக்னல் ஜாமரை உயிர்பித்தான். எதிரில் உட்கார்ந்து கொண்டிருந்தவன் அவள் முகத்தை நிமிர்த்தி பார்த்தான். மயக்கத்திலிருந்தாலும் அவள் முகம் தெளிவாக இருந்தது. துளி கூட பயத்தின் சாயல் தெரியவில்லை. எதோ ஒன்று அவனை ஈர்த்தது. இதுவரை எத்தனையோ பெண்களை பார்த்திக்கிறான் ஆனால் இதுநாள் ஏற்படாத மயக்கம் அவனுக்கு தோன்றியது.

அவளை தேடி வந்து கொண்டிருந்தவர்களுக்கு சிக்னல் கிடைக்காதலால் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தனர். Chief உடனே போலீஸின் உதவியை நாடுவதே சரி என்று அந்த பணியை செய்தார் அது மட்டுமல்லாமல் சிறை துறை அதிகாரியிடமும் பேசி நினைத்த விஷயத்தை அமுல் படுத்தவும் கேட்டு கொண்டார்.

ரித்திக்காவிற்கு மயக்கம் தெளிந்தது. இருந்த இடம் எதுவென்று தெரியவில்லை. அங்கிருந்தவர்கள் உடனே பிரணவ் க்கு சொல்லினர். அவனும் வந்தான் ஒரு முடிவோடு.

நேத்ரன் இன்னும் பெற்றவர்களிடம் விஷயத்தை இன்னும் கூறவில்லை. கோபி அவர்களின் பெற்றவர்களிடம் பேசினான். பயப்பட வேண்டாம் கண்டுபிடித்துவிடலாம் என்றும் கூறினான்.

பிரணவ் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள். பிறகு புரிந்தது யார் கடத்தியது எதற்காக என்று. அவனை எச்சரித்தாள். தவறுக்கு மேல் தவறு செய்கிறாய். இதன் விளைவு மிகவும் மோசமானதாக இருக்கும் என்றாள். அவளுக்கே கொஞ்சம் அதிகமாகத்தான் தெரிந்தது அவள் பேசியது. முதலில் இங்கிருந்து தப்பிக்க வேண்டும். யோசிக்க ஆரம்பித்தாள். அதற்குள் அவன் மிகவும் அருகில் எல்லாம் உன் கையில் தான் இருக்கிறது என்றான். அவளுக்கு புரியவில்லை என்ன உளறுகிறான் என்று நினைத்தாள். அவன் புரியவைத்தான் உன்னை கொள்ள எனக்கு மனம் வரவில்லை. நான் இதுவரை அனுபவிக்காத ஒரு இன்ப உணர்ச்சி உன்னை பார்த்ததும் என் நெஞ்சில் ஏற்பட்டது. அதை நான் இழக்க தயாராக இல்லை. அதனால் என்று நிறுத்தினான். அவளுக்கு தலை சுற்றியது என்ன சொல்ல வருகிறான்.

நீ என்னை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றான் அதற்கு அவள் உயிரை விடுவதும் உன்னை திருமணம் செய்து கொள்வதும் ஒன்றுதான். இரண்டுமே நடக்காது என்றாள். அவனுக்கு ஆத்திரம் வந்தது. உடனே விடிவதற்குள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் எனவும், விடிந்ததும் திருமணம் என்று கூறிவிட்டு சென்று விட்டான்.

அவள் தன் கைக்கடிகாரத்தை பார்த்தாள். கையில் இருந்தது. இன்னும் ஏன் யாரும் வரவில்லை என யோசித்து கொண்டிருந்தாள். நேரம் போய் கொண்டிருந்தது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top