PMP - 4

Rudraprarthana

Well-Known Member
10617

பாதை - 4

'இவளெல்லாம் திருந்தவே மாட்டாளா? என்ன நெனச்சிட்டு இருக்கா மனசுல !! விலகி போனா விட்டு தொலைய வேண்டியது தானே ! பின்னாடியே வந்தா மட்டும் நெனச்சதை நடத்திடலாம்னு நெனைக்குறாளா? என்று பற்களை கடித்து அடங்கா கோபத்தோடு, தலையை அழுத்தமாய் கோதியவாறே கார்த்தி குளத்தில் பார்வையை பதித்திருக்க அவன் மனமோ மைதிலியை எண்ணி உலைக்கலமென கொதித்துக்கொண்டிருந்தது.

அவன் ஊரை சேர்ந்த தையல்காரரின் மகளான மைதிலி கார்த்தியை கடந்த ஒரு வருடமாக காதலிக்கிறாள். பல முறை மைதிலியை அவள் வீட்டிலும் வெளி இடங்களிலும் சந்தித்ததில் அவள் பார்வையின் செய்தி புரிந்தாலும் அதை என்றுமே கார்த்தி ஊக்குவிக்கும் விதமாக கார்த்தி நடந்து கொண்டது இல்லை. முதலில் சினேகமாய் புன்னகைத்து அம்மா இல்லையா? தைச்சு முடிச்சிட்டாங்களா? என்று ஆரம்பித்தது நாளடைவில் அவளுக்கு அவன் மீது ஈர்ப்பு கூடவும் மைதிலியே அவனை வெளி இடங்களில் நோட்டமிட்டு இருக்கிறாள்.

கார்த்தி மற்றவர்களோடு பழகும் முறை, உதவும் மனப்பான்மை, பெண்களை மதித்து நடப்பது என்று அவள் பார்த்தவரையில் கார்த்தி அவளை வசீகரிக்க முதலில் ஈர்ப்பாக இருந்ததை காதல் என்ற புள்ளியில் கொண்டு நிறுத்தி இருந்தாள் மைதிலி.

மைதிலியின் பார்வையின் அர்த்தம் புரிந்தாலும் கரை சேராது படகு இது !!என்பதை உணர்ந்தவனாய் கார்த்தி கண்டுகொள்ளாமல் சென்று விடுவான். ஆனால் நாட்கள் மாதங்களாய் கடந்தும் தன் பார்வைக்கு அவனிடமிருந்து எந்த எதிர்வினையும் வராது போகவும் ஒரு நாள் தன் மனம் திறந்து காதலை அவனிடம் கூறி விட்டாள்.

அன்று அவள் வீட்டிற்கு சென்ற போது தன் அன்னை தைத்திருந்த துணிகளை அவனிடம் கொடுத்தவள் கிளம்ப போனவனை தடுத்து தயக்கத்துடனே பேச தொடங்கினாள்,

“எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல நான் சொல்றதை நீங்க எப்படி எடுத்துப்பிங்கனும் புரியல !! ஆனா எனக்கு ரொம்ப நாளா இதை மனசுக்குள்ள வெச்சிட்டு இருக்குறது ரொம்பவே பாரமா அழுத்திட்டு இருக்கு. இப்படி நான் வந்து உங்க கிட்ட பேசுறது சரியா? தப்பா? இதனால என்னை தப்பான பொண்ணுன்னு நெனச்சிடுவீங்களான்னு கூட எனக்கு தெரியல என்றவள் தாவணியின் முந்தானையை பிடித்து சுற்றியவாறே, ஆனாலும் இத சொல்லாம இருந்து கஷ்டபடரதுக்கு சொல்லிட்டா நல்லா இருக்கும்ன்னு ஒரு எண்ணம், ஆனா இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படியே போயிட்டு இருக்கும்னு ஒரு பயம்" என்று சுற்றி வளைக்க,

'என்ன சொல்லணுமோ தெளிவா சொல்லுங்க' என்றான் கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு

'ஹான்' என்று தலையை அசைத்தவள்,

"எங்க வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கிறாங்க அதனால தான் உங்ககிட்ட சொல்லியே ஆகணும்னு வந்துட்டேன்' என்று அவன் கண்களை பார்த்தவள் கைகளை அழுத்தமாக மூடிக்கொண்டு சிறு தயக்கத்துடனே தலைகுனிந்தவாறு மெல்லிய குரலில்,

"எனக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்கு, உங்களை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்" என்று ஒருவழியாய் சொல்லி முடித்தாள்.

மைதிலி பேசி முடிக்கவும் வரை அவளை தீர்க்கமான பார்த்து கொண்டிருந்த கார்த்தி, மிக மிக அழுத்தமான குரலில், "இது சரிப்பட்டு வராது விட்டுடுங்க" என்றான்.

அவனிடம் இப்படி ஒரு பதிலை எதிர்பாராதவளுக்கு பல நிமிடம் எடுத்தது அவன் கூற்றை உணர,

ஏன்..??? நீங... என்று ஆரம்பித்தவளுக்கு அந்த கேள்வியையே கேட்க பிடிக்கவில்லை இருப்பினும் கேட்டால் தானே பதில் தெரியும் அதனால் எச்சில் கூட்டி விழுங்கியவள், " நீங்க வேற யாரையாவது காதலிக்கறீங்களா..??" என்று உயிரை கையில் பிடித்து கொண்டு கேட்க,

'இல்லை' என்று உடனே பதில் வந்தது அவனிடம் இருந்து.

அதில் ஒரு ஆசுவாசமூச்சை எடுத்து விட்டவள் "வேற என்னனு தெரிஞ்சுக்கலாமா...??" என்றாள்.

"இங்க பாருங்க நீங்க உங்களோட விருப்பத்தை சொன்னீங்க நான் என்னோட பதில சொல்லிட்டேன் ஆனா அதுக்கு காரணம் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை" என்றவன்

அவள் காதலை கூறியதுமே தன் விருப்பமின்மையை அவள் மனம் காயபடாதவாறு தன்மையாய் சொல்லி பார்த்துவிட்டான்.

ஆனால் அவன் மீதான பார்வையை மைதிலி மாற்றாது போக பல முறை கோபமாக கண்டித்தும் விட்டான். ஆனால் இன்று வரையிலும் அவள் மாறாமல் தான் கொண்ட நிலையிலேயே இருப்பேன் என்று தன்னை பின் தொடர்வதில் இறுதியாக "எக்கேடோ கேட்டு போ!!" என்னும் நிலைக்கு கார்த்தி வந்துவிட்டான்.

நினைவுகளில் மூழ்கி இருந்தவனை 'என்னங்க' என்ற மைதிலியின் குரல் அவன் செவி தீண்டவும் தன்னை கட்டுபடுத்தி கொண்டு திரும்பிய கார்த்தி தங்களின் உரையாடல் நடுத்தெருவில் நடப்பதை விரும்பாதவனாய் அவளை அருகிருந்த மரத்தடிக்கு அழைத்துச் சென்றான். அவள் எதை பற்றி பேச போகிறாள் என்பதை அறிந்தவனாய், இன்று இதற்கு ஒரு முடிவு காட்டியே ஆகவேண்டும் என்று எண்ணி, "சொல்லுங்க" என்றான்.

இன்னைக்கு மாப்பிள்ளை வீட்டார் வராங்க எனக்கு என்ன பண்றதுன்னே புரியலை உங்க கிட்ட ஒரு சொன்னதுக்கு நீங்க சரியான பதில் சொல்லல அதான் என்று இழுக்கவும்

"இதோ பாருங்க அன்னைக்கே தெளிவா என்னோட முடிவை சொன்ன பிறகும் இப்படி கேட்கிறது முட்டாள் தனமா தோணலையா..?? , மாப்பிள்ளை பார்த்திருக்காங்கன்ன கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருங்க அதை விட்டுட்டு எந்த நம்பிக்கையில என் பின்னாடி வந்துட்டு இருக்கீங்கன்னு புரியலை" என்றவன் கோபத்தோடு திரும்பி நடக்க,"ஏங்க ஒரு நிமிஷம் நில்லுங்க" என்றவாறு அவனை தடுத்தவள், ப்ளீஸ் உங்களுக்கும் என்னை பிடிக்கும்ன்னு ரொம்ப நம்பிக்கையோட இருந்தேன் அட்லீஸ்ட் காரணம் சொல்லுங்க எதுவும் தெரியாம என்னால இங்க இருந்து போக முடியாது" என்று பிடிவாதம் பிடிக்க,

அவளை கூர்மையாக பார்த்தவன், "இங்க பாருங்க நான் என்னைக்கும் உங்க பின்னாடி வந்தது இல்லை காதலிக்கிறேன்னு சொன்னது இல்லை நீங்களா மனசுக்குள்ள ஆசையை வளர்த்துகிட்டதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். ஒரு பெண்ணை கூட்டிட்டு வந்து நல்லா பார்த்துக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லாம நான் ஒரு விஷயத்துல இறங்க தயாரா இல்லை"

"ஏன் அப்படி சொல்றீங்க நான் உங்களை நம்புறேன் எனக்கு நம்பிக்கை இருக்கு நீங்க கண்டிப்பா பெரிய ஆளா வருவீங்க என்று தன் காதல் நிராகரிக்கப்பட்டதை தாங்க இயலாத மைதிலியோ விடாது அவனை பின்தொடர்ந்து கேட்க,

அதில் சலிப்புற்றவன் தன் நடையை நிறுத்தி அவளிடம், 'நீ' என ஆரம்பித்து பின்னர் எதையோ நினைத்தவனாய் 'நீங்க' என்று அதை மாற்றியவன்,

"நிறைய படம் பார்ப்பீங்களா..?? அதான் இப்படி உளறிட்டு இருக்கீங்க..?? இதோ பாருங்க இப்படி என் பின்னாடி வருவது உங்களுக்கு நல்லது இல்ல யாராவது பார்த்தா உங்களுக்கு தான் கஷ்டம் வேண்டாம் கிளம்புங்க" என்றவன் அவனை தடுக்க முயன்ற நண்பனையும் முறைத்துவிட்டு மறுநொடியே அங்கிருந்து கிளம்பி விட்டான்.

கண்ணீருடன் செல்லும் அவனை பார்த்து நின்றாள் மைதிலி.

*

தன்னை பார்க்காமல் எங்கோ பார்த்து கொண்டே பின்புறத்தில் புத்தகப்பையை வைத்துவிட்டு தன்னருகில் அமர்ந்திருந்தவளை சிறு புன்னகையுடன் பார்த்துக்கொண்டே வண்டியை எடுத்தான் ரகு.

எப்போதும் வண்டியில் ஏறி அமர்ந்த மறுநொடி அன்றைய நிகழ்வுகளை தன்னிடம் பகிர தொடங்கிவிடுபவளின் வழக்கத்திற்கு மாறான அமைதியை கண்டு அவன் புருவ மத்தியில் முடிச்சிட்டது, நான்கு நாள் தாடியை ஒரு கரத்தால் நீவி விட்டுக்கொண்டே அவளை அளவிட தொடங்கியவன் திடிரென ஹாரனை பலமாக ஒலிக்க விடவும் அவளிடம் சிறு அதிர்வு அதை தொடர்ந்து அவள் செவியருகே 'அனும்மா' என்று மயிலிறகாய் அவன் குரல் வருட மேலும் திகைத்து நிமிர்ந்தவளுக்கு அப்போது தான் ரகு வண்டியை ஓரம் கட்டி நிறுத்தி இருப்பது புரிபட உடனே திரும்பி அவனை பார்த்தாள்.

தன்னருகே இருந்த அவன் பார்வையின் மாற்றம் கண்டு ஒரு நொடி திடுக்கிட்டவள் உடனே தலை குனிந்து கொண்டு தன் கைவிரல்களை கோர்த்து பிரித்து, சொடுக்கெடுத்து என்று நேரத்தை கடத்த பொறுமை இழந்த ரகு அவள் முகத்தை நிமிர்த்தி, "அனும்மா என்னடா ஆச்சு ஏன் இப்படி இருக்கீங்க..?? எக்ஸாம் சரியா எழுதலையா..?? கேள்வி கஷ்டமா இருந்ததா..??" என்று வாஞ்சையுடன் கேட்க,

அவன் விழிகளில் வழிந்த நேசத்தை மனதில் நிரப்பியவாறே 'இல்லை' என்று தலை அசைத்தவள் சில கணம் கழித்து மெல்லிய குரலில், "சாரி ரகு நான் அப்படி பண்ணி இருக்க கூடாது, தெரியாம செஞ்சுட்டேன்" என்றாள்.

அவள் எதற்க்காக மன்னிப்பு கேட்கிறாள் என்பது தெரியாதவனா அவன் இருப்பினும் நமட்டு சிரிப்பு சிரித்தவாறே, 'எதுக்கு சாரி..?? என்ன பண்ணின நீ" என்றான்.

அவன் சிரிப்பிலும் பார்வையிலும் வெட்கம் பிடுங்கித் தின்ன அருணா பதிலளிக்க முடியாமல் மறுபுறம் திரும்பி அமர்ந்து ஜன்னல் வழியே பார்வையை செலுத்தி, "ஒன்னுமில்ல..." என்று மறுத்தாள்.

அப்படியா..??' என்றவனின் ஆழ்ந்த குரல் அவளுக்கு மேலும் நெருக்கமாக கேட்க படபடத்த நெஞ்சை பிடித்தவாறு இல்லை என்று மீண்டும் தலை அசைத்தாள்.

நம்பிட்டேன் என்று பலமாக சிரித்தவன் தன் பக்க கதவை திறந்து அவள் புறம் வந்து கதவை திறந்தவன் தள்ளி உட்கார் என்றவாறே அவளருகே அமர உடலை குறுக்கி கொண்டு சற்று தள்ளி அமர்ந்தவளின் பார்வை இப்போதும் கோர்த்திருந்த விரல்களின் மீதே,

அதை ஒரு பார்வை பார்த்தவன், "அனுக்குட்டியோட கண் அசைவுக்கு கூட எனக்கு காரணம் தெரியும், அதனால மறைக்காம என்னன்னு சொல்லு செல்லம்" என்று மேலும் அவளை நெருங்கி அமர,

கூச்சத்துடன் அவனை பார்த்தவள் பதில் சொல்லாமல் விட மாட்டான் என்பது புரிய, "அது! அது! வந்து, காலையில உன்கிட்ட கிப்ட்டுக்காக காசு கொடுத்தேன் இல்ல, அது உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிடுச்சு அதுக்குத்தான் ச... ச... சாரி சொன்னேன்" என்று திக்கி திணறி அப்பேச்சிற்க்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

நிஜமா...??

ஹ்ம்ம்...

"இல்லையே !! இது அது இல்லையே வேற ஏதோ இருக்கு" என்று மேவாயை தேய்த்து விட்டுக்கொண்டு அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தான்.

தான் முற்றுபுள்ளி வைக்கும் நேரத்தில் அதை அவன் காற்புள்ளியாய் மாற்ற நினைப்பதை கண்டவளுக்கு படபடப்பு கூடியது.

'சொல்லுடா குட்டி' என்று அவள் கைகளை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு கேட்க,

அவன் நெருக்கம் அசௌகரியமாக இருந்தாலும் அவனை தவிர வேறு ஆதரவு இல்லாதவளுக்கு அவனை தள்ளி அமர சொல்லும் தைரியம் இல்லை. தொண்டை வரை எழுந்த வார்த்தைகளை முழுங்கியாவாறே மெளனமாக அமர்ந்திருந்தாள்.

அவள் மேவாயை நிமிர்த்தி விழிகளை உற்று நோக்கியவாறு, "என் அனு பாப்பா என்கிட்டே எதுவும் மறைக்க மாட்டான்னு நெனச்சி இருந்தேன் ஆனா இப்போ நீ தயங்குறதை பார்த்தா உனக்கு நான் யாரோ தானே, என் மேல உனக்கு நம்பிக்கை இல்லை, காதல்ல நம்பிக்கை ரொம்ப முக்கியம் அருணா" என்று விரக்தியுடன் கூறியவனின் வார்த்தைகளில் அத்தனை காரம்.

அதை கண்டு பதறிய அருணா 'இல்லை ரகு, அப்படி எல்லாம் இல்லை' என்று மறுக்கும் முன்னமே தன் கரத்தை நீட்டி நிறுத்துமாறு சைகை செய்தவன் உடனே காரில் இருந்து இறங்கினான்.

கைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்து காரசாரமாக பேசியவாறே அங்கிருந்து நகர்ந்தவன் சில நிமிடங்களில் திரும்பி அங்கே அவனுக்காக காத்திருந்த அருணாவை கண்டுகொள்ளாமல் எதிர்புறம் இருத்த கட்டிடத்தை பார்த்தவாறு கைகளை கட்டிக்கொண்டு நின்றுவிட்டான்.

ரகு என்று இரண்டு மூன்று முறை அழைத்தும் அவன் பதிலளிக்காமல் நிற்ப்பதை கண்டவள் அவன் முன்னே வந்து, "ரகு சாரி ரகு, ப்ளீஸ் என்கிட்ட பேசாம மட்டும் இருக்காத, நான் போய் உன்னை அப்படி எல்லாம் நினைப்பேனா..?? என்னைக்குமே நீ வேற நான் வேறன்னு நெனச்சது இல்லை ரகு ப்ராமிஸ்" என்று அவன் கரத்தை எடுத்து சத்தியம் செய்தவள்,

'நம்பு ரகு நீ தான் என் உயிர் மூச்சு உன் கிட்ட ஒரு நாள் பேசலன்னாலும் எனக்கு மூச்சே நின்னு போகும்' என்றவளின் நா தழுதழுத்தது.

அவனோ புருவம் உயர்த்தி அவளை பார்த்தானே தவிர எதுவும் பேசவில்லை.

"நான் சொல்லாததுக்கு காரணம் எங்க நான் சொன்னா அதுக்கு அப்புறம் உனக்கு என்னை பிடிக்காம போயிடுமோன்னு நெனச்சி தான் ஆனா என்னை பத்தி எல்லாம் தெரியும்ன்னு சொல்லிட்டு இப்போ என்னவெல்லாம் பேசுற ரகு நீ எனக்கு யாரோவா..?? இன்னொரு முறை அப்படி சொல்லாத" என்றவளின் குரல் முழுதாக உடைந்து போனது.

கண்களை துடைத்து கொண்டே, "என்.. எனக்.. எனக்கு என் அப்பா அம்மாவிட நீ தான் முக்கியம் ஆ.. ஆனா எப்படி உன்னால அந்த மாதிரி நினைக்க முடிஞ்சது " என்று முடித்தவளின் கண்களில் நிற்காமல் கண்ணீர் கொட்டியது.

கரங்களை விளக்கி நிதானமாக அவள் கண்ணீரை துடைத்தவன், "சரி இப்ப சொல்லு" என்றான்.

"கோவம் போயிடுச்சா..??"

"அது நீ சொல்ற பதில்ல இருக்கு ஆனா என்னமோ என்னால உன் கண்ணீரை பார்க்க முடியலை" என்று விட்டேர்த்தியாக கூற,

அதுவே அவன் காதலின் அளவை எடுத்துரைப்பதை உணர்ந்த அருணா முகத்தில் சட்டென புன்னகை முகிழ்த்து.

அதை பார்த்தவாறே, "இப்போதான் நல்லா இருக்கு சொல்லு" என்று மீண்டும் கேட்க அவளோ சிறு வெட்கத்துடனே காலை அவன் தோள் சாய்ந்ததை கூறி முடிக்கவும் அட்டகாசமான சிரிப்பு ரகுவிடம்

"எதுக்கு ரகு சிரிக்கற" என்று புரியாமல் பார்க்க,

"இன்னும் நீ குழந்தையாவே இருக்க செல்லம்" என்று அவள் கன்னம் கிள்ளி கொஞ்சியவன்,

"இதோ பார் அனு நாம ரெண்டு பெரும் லவ்வர்ஸ், என் மேல உனக்கு இல்லாத உரிமையா? உனக்கு எப்போ வேணுமோ அப்போ எல்லாம் தோளில் சாயறது மட்டுமில்லை, என்னை கட்டிபிடிக்கலாம், முத்தம் கொடுக்கலாம் இன்னும் என்ன வேண்டும்னாலும் பண்ணலாம் எதுவும் தப்பில்லை... அதுக்கு முழு உரிமை பட்டவ நீதான்டி ஆனால் பணத்தை மட்டும் நமக்கு நடுவுல கொண்டு வராத எனக்கு உன்னோட பரிதாபம் வேண்டாம் காதல் மட்டுமே வேணும்" என்று உருக்கமான குரலில் கூற அருணாவுமே உருகித்தான் போனாள் இமைக்கவும் மறந்தவளாக மெய்மறந்து அவனையே பார்த்திருந்தாள்.

அவளிடம் பதில் இல்லாததை கண்டவன், "என்ன அமைதி ஆகிட்ட..??"

'ஆனா நீ சொன்னதெல்லாம் தப்பில்லையா ரகு..??'

'எது !எது! தப்பில்லையா?' என்று அருணாவின் நெற்றியில் முட்டியவன், "லவ் பண்ணும் போது இதெல்லாம் இல்லைன்னா தான் தப்பு செல்லம் ஆனாலும் நெஞ்சில் சாய்ந்ததுக்கு நீ குடுக்குற பில்டப் ரொம்ப ஜாஸ்தி சொல்லிட்டேன்' என்று அடக்க மாட்டாமல் சிரித்தான்.

என்றும் போல் இன்றும் அவளை கவர்ந்திழுக்கும் அவன் சிரிப்பில் தொலைந்து போனாள் பாவையவள்.

மெய் மறந்து தன்னை பார்த்து கொண்டிருந்தவள் முன் சொடக்கட்டு நினைவிற்கு திருப்பியவன் அவள் தோள்களில் தன் இடக் கரத்தை படர விட்டு வலக்கரத்தால் அவள் முகத்தை அழுந்தப் பற்றி தன்னை நோக்கி இழுக்க அவனிடம் அகப்படாமல் ரகுவின் கரங்களை அகற்றி விலகி நின்றவள்,

"ஆனா எனக்கு இது... இதெல்லாம் இந்த மாதிரி .." என்று முடிக்க முடியாமல் தயங்கி தலை குனிந்தாள்.

உடனே 'ஒரு நிமிஷம்' என்று அவள் பேச்சை நிறுத்தியவன், "நான் தான் முதல்லையே சொன்னேனேடா இதெல்லாம் உனக்கு பிடிச்சா மட்டும் தான் எப்பவும் எனக்கு உன்னோட விருப்பம் முக்கியம் ஆனா என்கிட்டே உரிமை எடுக்க நீ தயங்க கூடாதுன்னு தான் சொன்னேன் அனும்மா" என்று முடிக்க அருணாவின் கண்கள் ஏன் என்றே தெரியாமல் கலங்கி போனது.

அருணாவின் கண்ணீரை துடைத்தவன் , "கண்டதையும் யோசிச்சி குழப்பிக்காத நான் உனக்கு லவ்வர் மட்டும் இல்லை பெஸ்ட் ப்ரெண்டும் கூட அதனால என்னை தொட்டதுக்கு எல்லாம் பஞ்சாயத்து வைக்காத புரியுதா" என்றவன் கார் கதவை திறந்து டேஷ்போர்ட்டில் இருந்து ஒரு பெட்டியை எடுத்து அனுவிடம் நீட்டினான்.

'என்ன இது' என்று அவள் விழி விரிக்க,

புன்னகையோடு பின்னந்தலையை வருடிவிட்டவன் "பிரிச்சி பார்" என்றான் ,

ஆவலோடு பெட்டியை பிரித்தவள் அதனுள் இருந்த மொபைல் போனை கண்டு ஒரு நொடி திகைத்து தான் போனாள், ஆனால் அதெல்லாம் சில நொடிகளே பின் ஆசையுடன் அதை வருடி கொடுத்தவள் "ரொம்ப அழகா இருக்கு ரகு !! யாருக்கு..??" என்று கேட்க,

'என்ன கேள்விடி இது ..??' என்று அவள் தலையில் செல்லமாக குட்டியவன், "உன்கிட்ட கொடுக்குறேன்னா அது உனக்கு வாங்கினது தானே..!!" என்றான்.

'நிஜமாவா...??'

'ஆமா' என்று கண்களை மூடி திறக்க

மீண்டும் அதை தூக்கி பார்த்தவளுக்குள் வேண்டும், வேண்டாம் என்ற இரண்டிற்கும் இடையிலான அல்லாட்டம் சில நொடிகளுக்கு பின் அவனை பார்த்தவன், என்ன ரகு இது...?? உனக்கு தான் என்னோட நிலைமை தெரியும் இல்ல அப்புறம் எப்படி..??" என்று தவிப்புடன் அவன் முகம் பார்த்தாள்.

"அதுக்காக போக வர மட்டும் உங்கிட்ட பேசுறது போதலைடி எனக்கு..., விட்டா இப்படியே உன்னை தூக்கிட்டு போயிடுவேன்" என்று கூற,

கலகலத்து சிரித்தவள் "தூக்கிட்டு போகலாமே" என்றால் அவனுக்கு சளைக்காமல்,

'இல்லை அனு' என்று உறுதியாக அதை மறுத்தவன், "சாருக்கும் அம்மாக்கும் உன்னை பத்தின எத்தனை கற்பனை இருக்கு என்னோட சுயநலத்துக்காக அதெல்லாம் கலைஞ்சி போக விடமாட்டேன். நீ நல்லா படி படிச்சி முடிச்சதும் நாம நம்மளோட காதலை புரிய வச்சி அவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கலாம் ஆனா அதுவரை உன்கூட பேசாம இருக்க முடியாது அதான் இது" என்று அவள் கையில் இருந்த கைபேசியை பார்க்க,

அவன் வார்த்தைகளில் நெக்குருகி போனவளுக்கு கண்கள் கலங்கி விட்டது, "ஆனா நான் எப்படி இதை எடுத்துக்க முடியும் வீ.... வீட்ல யாருக்காவது தெரிஞ்சா அவ்ளோ தான் நான் தொலைஞ்சேன்.., படிப்பு சம்பந்தமா வேணும்னு கேட்டதுக்கே கம்ப்யூட்டர் வாங்கி ஹால்ல போட்டு யூஸ் பண்ண சொன்னாங்க என் அண்ணனுங்க இப்போ மொபைல் அதுவும் நீ வாங்கி கொடுத்தன்னு தெரிஞ்சா அவளோ தான் ரகு... எனக்கு இது ரொம்ப பிடிச்சி இருக்கு ஆனா வேண்டாம்" என்று மறுத்து அவனிடமே திருப்பி கொடுக்க,

அதை வாங்காமல் அவளை அழுத்தமாக பார்த்தவன், அவங்களுக்கு தெரிஞ்சாதானே பிரச்சனை, தெரியாம பார்த்துக்கலாம் அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை என்றான் அலட்சியமாக.

தெரியாமையா அது எப்படி முடியும்..??

'ஏன் நம்ம காதலை அவங்களுக்கு தெரியாம பார்த்துக்கலையா அது மாதிரி தான்' என்றான்

அதுதான் எப்படி ரகு ..??

அவள் கையில் இருந்த பேசியை வாங்கியவன் அதன் பாகங்களை தனித்தனியாக பிரித்து சிம்கார்டையும் கழட்டி அவளிடம் கொடுத்தவன் "இந்த பார்ட்ஸ் எல்லாம் உன்னோட ரூம்ல வேற வேற இடத்துல ஈசியா பார்க்க முடியாத படி ஒளிச்சி வச்சிடு நீ என்கூட பேசும் போது மட்டும் அதை எடுத்து ஒன்னு சேர்த்து அசம்பில் பண்ணி எனக்கு கால் பண்ணு அப்புறம் பேசி முடிச்சதும் அதே மாதிரி பண்ணிடு அவ்ளோதான்" என்றிட,

'அப்படி பண்ணா யாருக்கும் தெரியாதா...??'

"கண்டிப்பா தெரியாது, ஆனா நீ ரூம்ல இருக்கப்போ சார்ஜ் போடு வெளியே போகும் முன்னாடி அதை எல்லாம் மறக்காம எடுத்து வச்சிடு போன் எப்பவும் சைலென்ட்ல இருக்கான்னு செக் பண்ணிக்கோ மெசேஜ் டோன்ல இருந்து எல்லாமே சைலென்ட் பண்ணிடு யாருக்கும் சின்ன சந்தேகம் வராது" என்றான்.

மிகவும் கட்டுகோப்பான குடும்பத்தில் வளர்பவளுக்கு ரகு கூறிய அனைத்துமே பிரமிப்பை ஏற்படுத்த அதற்குமேல் பெரிதாக கேள்வி கேட்காமல் சரி என தலை அசைத்தவள் 'என்னாலயும் உன்கிட்ட பேசாம இருக்க முடியாது ரகு என்னை நீ மட்டும் தான் சரியா புரிஞ்சி வச்சி இருக்க எனக்கு என்ன வேணும்ன்னு கேட்காமலே செய்யற நீ கிடைக்க நான் ரொம்ப லக்கி ரகு தேங்க்ஸ்' என்று அவன் கைகளை பிடித்து கொண்டு சொல்ல சிறு புன்னகையில் அதை ஏற்று கொண்டவன் அடுத்த சில நிமிடங்களில் அவளோடு வீட்டை நோக்கி கிளம்பினான்.

சோர்வுடன் வீட்டினுள் நுழைந்த மகளை கண்ட செண்பகம் ஓடி சென்று அவள் பையை வாங்கியவர், "பாப்பா பரீட்சை எப்படி பண்ண கேள்வி எல்லாம் சுளுவா இருந்ததா ஏதாவது மறந்துட்டியா எல்லாமே சரியா எழுதின தானே..? என்றவர் என்ன நினைத்தாரோ அவளை நெட்டி முறித்து கண்டிப்பா நீ டாக்டரா ஆகிடுவ எனக்கு நம்பிக்கை இருக்கு !" என்று கூறி கொண்டிருந்த அன்னையை வெறுமையுடன் பார்த்தாள் அருணா.

அதே நேரம் வீட்டு தொலைபேசி அழைக்க அப்பா தான் பண்றாங்க எடு என்றார் செண்பகம்.

அழைப்பை ஏற்ற உடனே, "பாப்பா எக்ஸாம் எப்படி பண்ண..??" என்றார்

'ஹ்ம்ம் நல்லா பண்ணேன்பா' என்று சுரத்தே இல்லாமல் இருந்தது அவள் குரல்

அதை கேட்டு மறுபுறம் அவரிடம் அட்டகாசமான புன்னகை எழுந்தது "என் பொண்ணாச்சே" என்று அவளை மெச்சி கொண்டவர், சரி பாப்பா டைம் வேஸ்ட் பண்ணாம அடுத்த எக்ஸாம்க்கு படிக்க ஆரம்பிச்சிடு" என்று பேசி கொண்டிருந்தவர் நோயாளிகள் வரவில் அழைப்பை துண்டித்து விட்டார்.

தொலைபேசியை கையில் வைத்து பார்த்து கொண்டிருந்த அருணா முகம் சலனமின்றி இருந்தது.

போனை வச்சிட்டு என்ன பண்ற என்றவாறு அங்கே வந்த சக்திவேல் தங்கையிடம், "வர திங்கட்கிழமையில் இருந்து சென்னையில உனக்கு நீட் கோச்சிங் கிளாஸ் இருக்கு உன்னோட திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணி வச்சுக்கோ என்றவன் கையோடு கொண்டு வந்திருந்த தன் புத்தகங்கள் சிலவற்றை அவளிடம் கொடுத்து ஸ்கூல் முடிஞ்சிடுச்சின்னு அசமந்தமா இருக்காத இங்க இருந்து கிளம்பற வரை ஒரு செக்கன்ட் கூட வேஸ்ட் பண்ண கூடாது இதுல ஒன்பதாவது சேப்டர் ரெபர் பண்ணு நைட் டின்னர் அப்போ கேள்வி கேட்பேன் சரியா சொல்லணும் " என்று கட்டளையிட்டு சென்றான்.

அண்ணன் செல்லவும் கைகளில் இருந்த புத்தகத்தை சில நொடிகள் வெறித்தவள் பின் தன்னறைக்கு சென்று கதவடைத்து கொண்டு முதல் வேலையாக ரகு சொல்லி கொடுத்த படி கைபேசியின் பாகங்களை எடுத்து ஒன்றிணைத்து சிம்மை பொருத்தினாள்.

ஹாய் ஹனீஸ்..

இதோ "பாதை மாறிய பயணம்" அடுத்த பதிவு பதிச்சாச்சு உங்கள் கருத்தே என்னை பாதை மாறாமல் பயணிக்க வைக்கும் படிச்சிட்டு அமைதியா போகாமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். சென்ற பதிவிற்கு லைக்ஸ் கமெண்ட்ஸ் அளித்தவர்களுக்கு என் மனம் கனிந்த நன்றிகள்.

ருத்ரபிரார்த்தனா
 
Last edited:

Priyaasai

Active Member
View attachment 10617

Lacking in Mutual understanding n outspoken.।।।।
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement