Rudraprarthana
Well-Known Member
பாதை - 3

மிதிவண்டியை எடுத்துகொண்டு வெளியேறிய கார்த்தியின் மனம் அம்பிகாவின் செயலால் வெகுவாக கசங்கி இறுகி போனது. சிறு வயதில் கார்த்தியை அன்னை ஸ்தானத்தில் இருந்து வளர்த்த அம்பிகா தான் மறுப்பதற்கு இல்லை ஆனால் கடந்த சில வருடங்களாகவே தன் காரியங்களுக்கு மட்டும் தம்பியை உபயோகபடுத்தி கொண்டு இருக்கிறார் அது கார்த்திக்கும் தெரியும் இருந்தாலும் உடன்பிறந்தவர்களுக்கு செய்வதில் கணக்கு பார்ப்பது அவன் வழக்கம் இல்லை என்பதால் அதை பெரிது படுத்தியது இல்லை.
ஆனால் காரியத்திற்கு உபயோகபடுத்துவதோடு நிற்காமல் பலமுறை கதிர்வேலனுக்காக இவனை அலட்சியபடுத்துவது, அவமதிப்பது என்று அவர் கார்த்தியிடம் காட்டும் கடுமை மட்டும் குறைவதே இல்லை. சகுந்தலாவை போலவே இயல்பிலேயே சுயநலமும் பேராசையும் கொண்டவர் எத்தருணத்தில் இப்படி மாறினார் என்று கேட்டால் கார்த்திக்கே விடை தெரியாத கேள்வி அது. கால சுழற்சியில் பாசம் எனும் தராசு தட்டு கூட பணத்தின் புறம் சாய்வது தான் உலக நியதியோ என்று அவனுக்கு தோன்றாத நாள் இல்லை.
இயல்பிலேயே பெண்களை மதித்து நடப்பவனுக்கு அன்னை மற்றும் தமக்கையின் பேச்சும் செயலும் பிடிக்காது போனாலும் எங்கே அதை கேட்க போய் உறவுகளுக்குள் விரிசலோ அல்லது அவர்கள் மனதை வருத்தி விடகூடுமோ என்றே பெரும்பாலான நேரம் வாக்குவாதத்தை வளர்க்காமல் அமைதியாக அங்கிருந்து வெளியேறிவிடுவான். வார்த்தைகளை கொட்டுவது இயல்பு ஆனால் அள்ளுவது கடினம் அல்லவா..!!
வியர்க்க விருவிருக்க மிதித்து கொண்டு வந்தவன் நேரே சென்று நின்றது அவனும் அரவிந்தும் வழக்கமாக சந்திக்கும் ஊர் கோவில் மரத்தடியில் தான். அரவிந்துக்கு கார்த்தியின் குடும்ப அங்கத்தினர் குறித்து அத்துபடி அதனால் அவன் முகவாட்டத்தை கண்டு கொண்டவன் ‘இரு மச்சி வந்துடுறேன்’ என்று சென்றவன் அவனுக்கான உணவை வாங்கி கொண்டு வந்தான்.
'சாப்பிடு மச்சி'
“வேண்டாம்டா சாப்பிடற மனநிலை இல்லை” என்று மறுக்க,
“டேய் நீ சாப்பிடாம இருந்தா எல்லாமே மாறிடுமா..?? வயித்துக்கு வஞ்சனை செய்ய கூடாது அமைதியா சாப்பிடுறா” என்று பிரித்து கொடுத்தவன் நண்பனின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான்.
எண்ணங்களின் ஊடே பயணித்து ஒருவாறு உண்டு முடித்த கார்த்தியை அடுத்த நொடியே பிலு பிலுவென பிடித்து கொண்டான் அரவிந்த்.
"என்னடா மனுஷங்க எப்ப பாரு சாப்பிட நீ உக்காரும் போது தான் உங்க அம்மா, அண்ணன்னு யாரவது ஒருத்தர் ஏதாவது பேசுவாங்களா..?? நீ ஏன் அமைதியா எழுந்து வர உனக்கும் பேச தெரியும் தானே அவங்க பண்ற தப்பை எடுத்து சொல்ல கூடாதா...??" என்று கடிய,
"அம்மாவை, அக்காவை எப்படி மச்சான் பேசுறது, ஏதோ ஒரு நேர கோபம் என் மேல திரும்பிடுது அதை எல்லாம பெருசு படுத்த முடியுமா.. எனக்கே தெரியாம அவங்களக்கு என் மேல ஏதாவது வருத்தம் இருக்கலாம் காலபோக்கில் சரி ஆகிடும் நீ ப்ரீயா விடுடா"
"என்ன சரி ஆகிடும்" என்று நண்பனை முறைத்தவன் "டேய் உன்னோட பிறப்பே ஒரு சவால் டா... அப்படி இருக்கும்போது உனக்கான இடத்தை நீதான் நிலைப்படுத்தனும். அதிகம் படிக்கலை, சம்பாதிக்கலைன்னு உன்னை குத்தி பேசுறது வயித்துல அடிக்கிறது எல்லாம் மனுஷ தன்மையே இல்லை . அங்கேயே அவங்கள நாலு கேள்வி கேட்டா தான் என்ன ? நீ என்ன தண்டமாவா உக்காந்து சாப்பிடுற? மாடு மாதிரி உழைக்கிற, உங்க அம்மா வேலைக்கு போறதால உங்க அக்காங்க எல்லாம் கல்யாணம் பண்ணி போன அப்புறம் உங்க அண்ணி வர வரை அங்க ஆணுக்கு ஆணாய் பெண்ணுக்கு பெண்ணாய் மொத்த வேலையையும் இழுத்து போட்டு செய்தவன் நீதானடா" என்று கேட்க கார்த்தியின் தலையும் அசைந்து அதை ஆமோதித்தது.
"அந்த மைனர் அதான் உங்க அண்ணன் உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு ஒரு மகனா அவன் என்ன பெருசா செய்து கிழிச்சிட்டான்" என்று அரவிந்த் குரல் உயர்த்த அதை தடுத்த கார்த்தி,
'டேய் அவன் கூட போட்டி போட்டு என்னையும் எதுவும் செய்ய வேண்டாம்ன்னு சொல்றியா..??, என் வீடு மச்சான் அது...!! எங்க அப்பா அம்மா என்னை வளர்த்த அக்காங்க என்னால அவனை மாதிரி விட்டேர்த்தியா இருக்க முடியாதுடா'
"அப்படி இல்ல மச்சான் உங்கண்ணன் சுயநலத்தோடு மொத்த உருவம்டா எனக்கு அவனை நெனச்சாலே காண்டாகுது. நீயே சொல்லி இருக்க உங்க அப்பா அம்மாக்கு மாத்திரை மருந்துக்கு அவங்க பணத்தை எடுத்து செலவு பண்ண கூட கணக்கு பார்க்கிறவன்னு ஆனா பாரு அவனை எல்லாரும் மதிக்கிறாங்க உங்க அக்கா தூக்கி வச்சி கொண்டாடுறாங்க, உன்னை மட்டும் ஏன் பாரபட்சமா நடத்துறாங்க..?? வேண்டாத பிள்ளைன்னா உன்ன அப்பவே கலைச்சிருக்கணும் உங்க அப்பத்தாவுக்காக பெத்துட்டு இப்போ இப்படி நடத்த கூடாது" என்று தன் நண்பனின் வாழ்வை எண்ணி குமைந்தான் அரவிந்த்.
"மச்சான் எல்லாரும் நம்மள மாதிரியே யோசிக்கணும், நடக்கணும்ன்னு எதிர்பார்க்கிறது மிகப்பெரிய முட்டாள் தனம்டா... இங்க பாரு இதெல்லாம் இல்லாம குடும்பம் இல்லை.., ஆனா நானும் மனுஷன் தான் ஒரு நேரம் இல்லாட்டியும் ஒரு நேரம் வலிக்க தான் செய்யுது இல்லைன்னு சொல்லல அதுக்காக சொந்த அப்பாம்மா கிட்ட அண்ணன் தம்பிகிட்ட சண்டை போடுறதோ நான் பெரியவனா நீ பெரியவனான்னு நிற்கிறது எனக்கு ஒத்து வராத விஷயம். இப்போ என்னை புரிஞ்சிக்காதவங்க கண்டிப்பா ஒருநாள் புரிஞ்சிப்பாங்க" என்று கூற,
'எப்படி' என்று தலை சாய்த்து கார்த்தியை பார்த்தவன், "இன்னும் ஒன்னு ரெண்டு வருஷம் போனா, உனக்கு கல்யாணம்னு ஒன்னு பண்ணுவாங்களே அதுக்கு அப்புறமாவா..??" என்று நக்கலாக கேட்டவன், இப்பவே உன் வார்த்தைக்கு எந்த மரியாதையும் இல்லை கல்யாணத்துக்கு பின்னே ஒரு பொண்ணு முன்னாடி எப்படி இருக்கும்ன்னு யோசிச்சிகோ" என்றிட,
"டேய் இப்போ கல்யாணம் ரொம்ப முக்கியமா..??, நானே வேற டென்ஷன்ல இருக்கேன்" என்று நெற்றியை நீவிக்கொள்ள,
"என்னடா..??"
"ப்ச் அதான் மச்சான் ஹோட்டல் வைக்கிறதுக்கு இடம் பார்த்து இருக்கேன்னு சொன்னேனே அது லீஸ் எடுக்க மொதல்ல முன் பணம் கட்ட சொன்னவங்க இப்போ மொத்த பணத்தையும் கட்ட சொல்றாங்க ஏற்கனவே எங்க மாமா மூலமா கேட்டு இருந்த இடத்துல லேட் ஆகும் போல" என்று நண்பனை பார்த்தவன்,
"உன்கிட்டயும் சொல்லி இருந்தேனே ஏதாவது விசாரிச்சியா.. ??"
"எங்க மச்சான் வட்டிகாரனுங்க எல்லாம் நம்ம மாமனாரா என்ன..?? கேட்ட உடனே தூக்கி கொடுக்க, நான் விசாரிச்ச வரை ஷுரிட்டி இல்லாம கொடுக்க முடியாதுன்னு சொல்றாங்கடா"
"அதுதான் நாம கையெழுத்து போட்டு கொடுக்க போறோமே அப்புறம் என்ன...??"
"முன்ன மாதிரி இல்லை கார்த்தி பல காவாலி பசங்க பணத்தை வாங்கிட்டு கம்பியை நீட்டிட்டு ஊரையே காலி பண்ணிட்டு எஸ் ஆகிடுறாங்களாம் அதனால பத்திரத்துல கையெழுத்து போட்டு கொடுத்தா மட்டும் போதாதாம் நம்ம பக்கம் இருந்து ஏதாவது சொத்து பத்திரம் இல்லை உங்க அப்பா பேங் பாஸ்புக், இல்லை வண்டி ஆர். சி புக் இப்படி ஏதாவது கேட்குறாங்கடா சும்மா கொடுக்க யாரும் தயாரா இல்லை" என்று கையை விரிக்க,
கார்த்தியின் முகத்தில் யோசனையின் கீற்று,
அதை கண்ட அரவிந்த், "எதுக்கு மச்சான் ரிஸ்க் எடுத்துட்டு உங்க அப்பாகிட்ட கேட்டா அவரே கொடுக்க போறாரு " என்று அவன் முகம் பார்க்க,
"இல்லைடா அது சரி வராது ஏற்கனவே அவங்க சொன்னாங்கன்னு எந்த முன்தயாரிப்பும், தொழில் அறிவும் இல்லாம பேக்கரி பிசினஸ் எடுத்து செய்ய தொடங்கியதுல ஏகப்பட்ட நஷ்டம் அதை வச்சே எங்கண்ணன் அப்பப்போ குத்தி காட்டிட்டு இருப்பான். இந்த முறை எங்க அப்பாக்கிட்ட பணத்துக்காக போய் நிற்க முடியாது... அது தேவை இல்லாத பிரச்சனயை கொண்டு வரும், கதிரு இதுக்குன்னே காத்திருக்கவன் ஒருவேளை இப்போ தொடங்கபோறதுல ஏதாவது கோளாறு ஆச்சு என்னமோ அவன் காசு போன மாதிரி வீட்டையே ரெண்டக்கிடுவான். அதான் இந்த முறை லாபமோ நஷ்டமோ எல்லா சுமையும் என்னோடவே போகட்டும் அப்பா, அண்ணன்னு யாரையும் உள்ளே இழுத்து விட நான் தயாரா இல்லை என்று திடமாக தன் முடிவை உரைத்திருந்தான்.
"டேய் கடன் வாங்குறது சாதாரண விஷயம் இல்லை மாசாமாசம் அதுக்கு வட்டி கட்டனும் எல்லா தொழிலும் ஆரம்பிக்கிற புதுசுல ஜோரா போகும் அப்புறம் மெல்ல மெல்ல படுத்துடும் உன்னால அதை எல்லாம் சமாளிக்க முடியுமாடா..??"
"எனக்கு நம்பிக்கை இருக்கு மச்சான் எந்த தொழிலா இருந்தாலும் நேரா முதாலாளி சீட்ல உட்கார நினைக்க கூடாது அப்படி உட்காந்தா அதோட விளைவு என்னன்னு எனக்கு பேக்கிரி பிசனஸ் பெரிய பாடம் கத்து கொடுத்துடுச்சி"
'ஏன்டா நீயா அப்படி நினைச்சிக்கிற..?? எல்லாம் உன்னோட நேரமும் அவங்க கொடுத்த நெருக்கடியும் தான் காரணம்'
"அடப்போடா அப்படி என்னை நானே சமாதனபடுத்திக்க வேண்டியது தான். ஆனா நிஜம் என்ன தெரியுமா மச்சான் எப்பவும் ஒரு தொழில் தொடங்கும் முன்ன அந்த தொழிலோட நெளிவு சுளிவு, சாதகம் பாதகம், மூலதனத்தை எப்படி விரயமாக்காம காசாக்கணும், அதுவும் நான் தொடங்க போறது மத்தவங்க வயித்தை நிறைக்க போற தொழில் அதுல லாபத்தை குறிவச்சி எந்த சமரசமும் இருக்க கூடாது, அதே சமயம் சம்பாதிக்கணும், வரக்கூடிய தொழில் போட்டியை சமாளிக்கணும்,முக்கியமா வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யணும் இப்படி பல விஷயம் இருக்கு அதான் அவசரப்பட விரும்பாம ரெண்டு வருஷமா முத்தண்ணன் கடையில அப்பப்போ வேலை செஞ்சிட்டே காய்கறி கொள்முதல்ல இருந்து ஒவ்வொன்னும் கத்துக்க ஆரம்பிச்சேன்" என்று கூற,
'டேய் இதெல்லாம் எப்போடா நடந்தது என்கிட்டே கூட ஒரு வார்த்தை சொல்லலை..?? மேலோட்டமா பணம் வேணும்ன்னு கேட்டிருந்த அதுல இவ்ளோ விஷயமா..??'
'அப்படி இல்லைடா ஒரு முறை அவசரபட்டுடேன் இந்த முறை அப்படி இருக்க வேண்டாம் எனக்கு முழு நம்பிக்கை வந்த பிறகு வீட்ல சொல்லலாம்ன்னு இருந்தேன் அதான் உன்கிட்டயும் சொல்லல'
'அப்போ படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லையாடா..??' என்று சம்பந்தம் இல்லாமல் கேட்க,
'என்னடா சொல்ற..??'
'இல்ல மச்சி ஸ்கூலே தாண்டலை ஆனா இப்படி தொழில் நுணுக்கத்தை புட்டு புட்டு வைக்கிறியே' என்று அரவிந்த் அதிசயித்து அவனை பார்க்க,
"எனக்கு தெரிஞ்சி கண்ணு பார்த்தா கை செய்யணும் மச்சான், காலைல, சாயங்காலம் நம்ம முத்தண்ணன் கடையில தான் இருப்பேன் அங்க பார்த்து புரிஞ்சிகிட்டது தான் இதெல்லாம் ஏன் இதுக்கு எல்லாம் பெரிய படிப்பு படிச்சி இருக்கனுமா..??" என்று கேட்க,
"ச்சே ச்சே அப்படி எல்லாம் இல்லடா, உனக்கு உன் மேல நம்பிக்கை இருக்குல அப்போ சுரிட்டி பத்தின கவலை வேண்டாம் நான் இருக்கேன்" என்று அவன் கூறிக்கொண்டு இருக்கும் போதே அவர்கள் எதிரே மைதிலி குடத்தோடு வந்து கொண்டிருந்தாள்.
அவளை கண்ட கார்த்தி மறுகணமே திரும்பி எதிரே இருந்த குளத்தில் பார்வையை நிலைக்கவிட அதை கண்ட அரவிந்த் "மச்சான் உன்னை பார்க்க தான் மைதிலி வந்துட்டு இருக்கு நீ திரும்பி நின்னா என்ன அர்த்தம்" என்று கேட்க,
'கொஞ்சம் அடங்குடா' என்று நண்பனை முறைத்து விட்டு கார்த்தி மீண்டும் திரும்ப அதே நேரம் அவன் பின்னே வந்து நின்ற மைதிலி சிறு தயக்கத்துடன் 'என்னங்க' என்று கார்த்தியை அழைத்திருந்தாள்.
****
புத்தகப்பையோடு தன்னை திரும்பி பார்த்து கொண்டு செல்லும் அருணாவை பார்த்தவாறே கரங்களை தலைக்குப்பின் கோர்த்து இருக்கையில் சாய்ந்த ரகுவின் நினைவுகளோ மூன்றாண்டுகளுக்கு முன் அவன் கோபாலசாமியிடம் வேலைக்கு சேர்ந்த பின்பான ஒரு நாளையை அசைபோட்டது.
பெரிதாக படிப்பறிவு இல்லையென்றாலும் தன் பேச்சு திறமையால் ஒருவரை வசப்படுத்துவதில் கில்லாடியான ரகு அதையே மூலதனமாக வைத்து வாழ்வில் முன்னேறி விட வேண்டும் என்ற எண்ணத்தோடு கோபாலசாமியிடம் வேலைக்கு சேர்வதற்கு முன் நாள் முழுக்க காலையும், மாலையும் கல்லூரி மற்றும் பள்ளி வாசலிலேயே பொழுதை கழித்து கொண்டிருந்தவன்.
அனைத்து கெட்ட பழக்கங்களையும் பழக்கி வைத்திருந்த ரகுவின் சகாக்களும் அவனை போலவே குறுக்கு வழியில் முன்னேறிவிட வேண்டும் என்று நாள்தோறும் தவமிருப்பவர்கள் தான். ஆனால் ரகுவின் தந்தையின் புண்ணியத்தில் கோபால்சாமியிடம் வேலைக்கு சேர்ந்துவிட்டாலும் தன் சகவாசங்களை விடாமல் அவ்வபோது சந்தித்து தொடர்பில் வைத்திருப்பவன் தான். கோபால்சாமியிடம் வேலை செய்து கொண்டிருந்தாலும் அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்தது சில சட்டத்திற்கு புறம்பான வேலைகளும் செய்து வருபவன் காலை ஆறு மணிக்கு கோபாலசாமி வீட்டிற்கு சென்றால் வீடு திரும்ப இரவாகிவிடும்.
அருணா, கோபாலசாமி மட்டுமின்றி வீட்டில் இருக்கும் மற்ற பெண்களின் உபயோகத்திற்கும் அவன் தான் கார் எடுக்க வேண்டும் என்பதால் முழு நேரமும் அவர்கள் வீட்டில் தான் அவன் வாசம். அதற்கேற்ற சம்பளமும் கூடவே வேளாவேளைக்கு உணவும் வந்துவிடும் என்பதால் நண்பர்களுடனான நேரடி சந்திப்பை பெரிதாக இழந்த வருத்தம் இல்லை. அதுதான் அனைவரும் கைபேசியில் தொடர்பில் இருக்கின்றனரே..!!
அன்று ஞாயிறு பெரிதாக வெளியில் செல்லும் வேலை இல்லை என்பதால் கோபாலசாமி அவனுக்கு விடுமுறை அளிக்க நண்பர்களை சந்திக்க ரகு அவர்கள் என்றும் கூடும் இடத்திற்கு சென்றான்.
பலநாள் கழித்து அவனை கண்ட அவன் நண்பர்களோ, “என்ன மச்சி இந்த பக்கம், அதிசயமா இருக்கு ? எங்களை எல்லாம் நியாபகம் இருக்கா உனக்கு" என்று ஆரபாட்டமாய் அவனை வரவேற்க,
"பெரிய எடத்துல சேர்ந்தப்புறம், இந்த பக்கம் திடீர்னு காத்து அடிக்குது இந்நேரம் மறந்திருப்பன்னு இல்ல நெனச்சோம் ஒருவேளை உன்னை பத்தி தெரிஞ்சி தொரத்தி விட்டதால வேற வழி இல்லாம எங்களை தேடி வந்தியா..??? என்று நக்கலாக குரு கேட்க
அவன் கைகளில் இருந்த சிகரெட்டை வாங்கிய ரகு அதை இழுத்து விட்டவாறே, "என்னடா சும்மா பெரிய இடம், பெரிய இடம்னு கலாய்க்குறீங்க நான் என்ன அங்க மாப்பிள்ளையாவா வாக்கப்பட்டு போய் இருக்கேன்...?? என்று அவனுக்கு குறையாத எள்ளலுடன் கேட்டவன்,
"எங்க அப்பன் மண்டைய போட்டதுல எனக்கான ஒரே லாபம் இந்த வேலை தான், ‘நல்ல சம்பளம், நல்ல சாப்பாடு, நல்ல மனுஷங்க டா..’ என்று தான் வேலை செய்யும் இடத்தை பற்றியும், அவர்களின் குடும்பம் பற்றியும், அருணாவை தினமும் பள்ளிக்கு அழைத்து செல்வது பற்றியும் அவன் தோளில் கைபோட்டு ஒரு சிகரெட்டை இருவரும் பகிர்ந்தவாறே கூறி முடித்தான் ரகு .
"ஏதோ அங்க மினிஸ்டர் வேலை பாக்குற மாதிரி பில்ட் அப் குடுக்குற, டிரைவர் தானே டா நீ !!" என்று வாரினான் சதிஷ்
அவனருகே இருந்த செல்வமோ 'டேய் சும்மா இருடா' என்று சதீஷை அடக்கியவன் ரகுவிடம், "மச்சி இப்போ வேணா நீ மாப்பிள்ளையா இல்லாம போகலாம் ஆனா வருங்காலத்துல மாப்பிளை ஆக முடியாதா என்ன ?? நீ சொல்றத பார்த்தா ஒரே பொண்ணு கண்டிப்பா செல்லமா வளர்த்திருப்பாங்க எதை கேட்டாலும் வாங்கி குடுப்பாங்க டா!! அவளை அவங்க கிட்ட உன்னை வேணும்னு கேட்க வை அப்புறம் என்ன ராஜ வாழ்க்கை தான்.." என்று ஒற்றை கண் சிமிட்டி சிரித்தான் செல்வம்.
‘எதுக்குடா எனக்கு அது? அந்த பொண்ணு ரொம்ப சின்னது மாம்ஸு, இப்போதான் பத்தாவது படிக்குது’ எனவும்
நண்பனை ஒருமாதிரியாக பார்த்தவன், “டேய் மச்சி உன்னால முடியாதுன்னு சொல்லு நாங்க கரெக்ட் பண்ணிக்கிறோம், அதை விட்டுட்டு ஏதேதோ சப்பை கட்டு கட்டுற ” எனவும் சுற்றி இருந்தவர்களின் சிரிப்பொலி அடங்க நேரம் எடுத்தது.
"டேய் நம்ம டார்கெட் என்னனு மறந்துட்டியா...? இத்தனை வருஷம் ஸ்கூல், காலேஜ் வாசல்ல கால்கடுக்க நின்னும் ஒன்னும் தேறலை ஆனா உனக்கு லட்டு மாதிரி கைலையே கிடைச்சி இருக்கு அதை யூஸ் பண்ணிக்காம என்னடா சோறு **ன்னு பேசிட்டு இருக்க" என்று குரு ஆதங்கப்பட,
அவனை தொடர்ந்த சதீஷும், “ஆமா மச்சி நீ இதுக்கெல்லாம் சரி பட்டு வரமாட்ட!! உன் எடத்துல நா இருந்திருந்தா இந்நேரம் அவளை என் வீட்ல, என் புள்ளைய சுமக்க வெச்சிருப்பேன் உனக்கு ஏது? அந்த தில்லு! நீயெல்லாம் *** தான் லாயக்கு” என்று ஆரம்பித்த நண்பர்களின் கேலி பேச்சு தொடர்ந்து ஒரு கட்டத்தில எங்கோ ஆரம்பித்து எதிலோ முடித்து ரகுவை வெகுவாக சீண்டி விடவும்…. அதில் சிலிர்த்தெழுந்தவன்,
"அடங்குங்க டா! என்னை பார்த்த ஆம்பளையா தெரியலையா உங்களுக்கு..?? என்றவன் செல்வம் கையில் இருந்த மதுவை பிடுங்கி தன் வாயில் சரித்தவன் குறையாத ஆவேசத்துடன் அவர்களிடம் சொடக்கிட்டு, "இன்னும் ரெண்டு வருசத்துல அவளை என்னை சுத்தி சுத்தி வரவெச்சி நான் இல்லனா வாழ்க்கையே இல்லைனு என் பின்னாடி வர வைக்கல" என்றவன் சில நொடிகளில், 'வைப்பேன்டா எப்படி வர வைக்குறேன்னு மட்டும் பாருங்க !!' அப்போ அவளோட வந்து உங்கள பேசிக்குறேன் என்று சவால் விட்டவாறு கையில் இருந்த பாட்டிலை விட்டெறிந்து கிளம்பினான் ரகு.
"மச்சான் ரொம்ப ஏத்தி விட்டுட்டமோ" என்று அதுநேரம் வரை அமைதியாக இருந்த காளி கேட்க,
'அப்படியா தெரியுது' என்று புருவம் உயர்த்திய செல்வம்,
"அவன் ரோஷம் நமக்கு லாபம் தானேடா எவ்ளோ சீக்கிரம் அந்த பொண்ணோட வரானோ அவளோ சீக்கிரம் நாம செட்டில் ஆகிடலாம்" என்று கண்ணடிக்க அதை அமோதித்த காளியின் முகத்திலும் புன்சிரிப்பு..!!
****
பரீட்சை அறையில் அமர்ந்திருந்த அருணாவின் மனம் பரீட்சை எழுதுவதில் செல்லாமல், ரகுவின் உரிமையான அழைப்பிலும், கண்டிப்பிலும், சுழன்று கொண்டிருந்தது.
கடந்த ஆறு மாதங்களாய், இருவரும் ஒருவரோடு ஒருவர் நன்றாக பேசி புரிதல் கொண்டிருந்தாலும் அவர்களின் காதல் எல்லைக்குள்ளேயே பயணித்து கொண்டிருந்தது. அந்நிய ஆடவரை தொட்டுப் பேசி பழக்கம் இல்லாதவளுக்கு இன்று ஏனோ திடீரென உணர்ச்சிவசப்பட்டு அவன் கன்னம் தாங்கியதையும் அவன் நெஞ்சில் சாய்ந்ததையும் நம்ப முடியவில்லை அதை எண்ணியபோதே ஒரு வித சிலிர்ப்பு ஏற்பட்டு உடலெங்கும் பரவ ஒரு புறம் வெட்கமும் மறுபுறம் பயமும் கலந்து அவளை ஆட்சி செய்ய தொடங்க அது பரீட்சை அறை என்பதையோ ஆசிரியர் கேள்வித்தாளை வைத்து கொண்டு வருவதும் அவள் மனதில் பதியாமல் போனது.
ரகுவை போன்ற கண்ணியமான ஆண்மகனிடம் தானாக சென்று அவன் தோள் சாய்ந்ததை அவன் எவ்வாறு எடுத்து கொள்வான் ஒருவேளை தன்னை தவறாக புரிந்து கொண்டு இனி தன்னுடனான பேச்சை தவிர்த்து விடுவானா அல்லது திட்டுவானோ என்று எண்ணி அவள் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது.
நெஞ்சம் படபடக்க அமர்ந்திருந்தவள் அருகே வந்த ஆசிரியர் மேஜையை தட்டி என்ன வென்று கேட்கவும் தான் நினைவுலகுக்கு வந்தாள். பின்பு தான் புரிந்தது தான் அமர்ந்திருப்பது தேர்வு அறை என்றும் தேர்வு எழுத அமர்ந்துள்ளோம், என்பதும்.
கேள்வி தாளை வாங்கியவள் ஒருவழியாய் தேர்வை எழுதி முடித்து விடைத்தாளை ஆசிரியரிடம் சேர்த்துவிட்டு, தேர்வு அறையை விட்டு வெளியில் வந்தாள்.
புத்தகப்பையை வைத்திருந்த அறையை நோக்கி சென்றவளை தோழிகள் சூழ்ந்துகொண்டனர். வண்ணப் பொடி தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர்கள் ஆட்டம் ஒரு மணி நேரத்திற்கும் நீடிக்க ஒருவழியாக அனைவரையும் அழைத்துக்கொண்டு கேண்டின் சென்றாள்.
அங்கு அனைவருக்கும் வேண்டிய குளிர்பானமும் நொறுக்கு தீனிகளையும் வரவழைத்து.... அரட்டை அடித்தவாறே அனைத்தையும் உண்டு முடித்து அவர்களிடம் பிரியா விடை பெற்று காரில் ஏற சென்றாள். அப்போது அவளை வழிமறித்து... சாம்பவி, அவளிடம் "அருணா நாளைக்கு எல்லாரும் ஒன்றாக மூவி போகலாம் டி" எனவும்... உடனே அருணா, அவளை நோக்கி கையெடுத்து கும்பிட்டவாரே,
"அம்மா தாயே ஆள விடு... இன்னிக்கி இரண்டு மணி நேர பர்மிஷன்க்கே... எங்க அம்மா மூலமா ஒரு வாரம் முன்னாடியே அப்ளை பண்ணி...என்னோட அண்ணிகள் என்கிட்ட இன்டரோகேட் பண்ணி... எங்க அண்ணன்ங்க அதை எக்ஸாமின் பண்ணி... கடைசியா எங்க அப்பா அப்ரூவல் பண்றதுக்குள்ள... எனக்கு, போதும் போதும்னு ஆகிடுச்சு... அதனால என்ன விட்டுடுமா" என்றவாறு தோழிகளிடம் விடைபெற்றவள் தனக்காக காத்திருந்த ரகுவை ஏறிட்டு பார்க்க தயங்கியவாறே பார்வையை தழைத்து காரில் ஏறி அமர்ந்தாள்.
ஹாய் ஹனீஸ்...
இதோ "பாதை மாறிய பயணம்" அடுத்த அத்தியாயம் பதித்துவிட்டேன் படித்து மறக்காமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். சென்ற பதிவிற்கு ஆதரவளித்த தோழமைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ருத்ரபிரார்த்தனா

Last edited: