Penne nee vandhadenadi-part 1

Chithranjani

Writers Team
Tamil Novel Writer
"அத்தே.....!"என கூவிக் கொண்டு சமையல் அறையில் நுழைந்தாள் மலர்விழி.

"ஆ......"என திடுக்கிட்டுத் திரும்பினார் மீனாட்சி மலர்விழியின் அத்தை.

"தடி கழுத!எதுக்குடி அப்படி கூவினே?நா பயந்தே போய்ட்டேன்"

"யாரு? நீங்க?பயந்திட்டிங்க!!!போங்கத்தே ஆனானப்பட்ட மாமாவே உங்கள பாத்து பயந்து நடுங்குறாறு... நீங்க பயந்திட்டிங்கன்னு சொன்னா இந்த ஊர்ல பச்ச புள்ள கூட நம்பாது"

"யாரு உங்க மாமாவா?!அவரு என்னெ பாத்து பயந்தாருன்னு சொன்னா இந்த ஊரென்ன இந்த உலக்கத்துல பல்லு போன கிழவி கூட நம்பாது...அது கிடக்கு....நீ வந்த விஷயத்த சொல்லு... அண்ணா அண்ணி நல்லா இருக்காங்களா?"

"உங்க அண்ணனுக்கென்ன நல்லா எட்டு இட்லிய திண்ணு அரை சொம்பு காப்பிய குடிச்சிட்டு காலாட்டிக்கிட்டு உக்கார்ந்திருக்காறு....அம்மா எல மடிச்சு கொடுத்துக்கிட்டுருந்தாங்க....அத விடுங்க....வேணி எங்க அத்தே?"

"அவ எங்க வீட்டுக்குள்ள இருப்பா?மாட்டு கொட்டகால காளக் கன்னுக்குட்டிய கொஞ்சிக்கிட்டு இருக்கா...நீ போய் பாரு..."

"சரி அத்தே"என்றவள் அந்த பெரிய வீட்டின் பின்புறத்தில் இருந்த மாட்டு கொட்டிலை நோக்கி ஓடினாள்.

அங்கே கோதுமை நிறத்திலிருந்த காளைக் கன்றுக்குட்டியை முத்தமிட்டுக் கொண்டிருந்தாள் மதுரவேணி.கருநாகமென நீண்ட அவளின் கூந்தல் மண்டியிட்டு அமர்ந்திருந்ததால் நிலத்தை தொட்டது.அவளின் மைவிழியோ பார்ப்போரை தன்நிலை இழக்க செய்தது.அவள் அணிந்திருந்த நீல நிற பாவாடை தாவணி அவள் பொன் உடலோடு பாந்தமாக பொருந்தி இருந்தது.மொத்தத்தில் சித்திரப் பாவையாக இருந்தாள் அவள்.

மறுமுறை கன்றுக்குட்டியை அணைத்த அவள்,

"சரி சரி இப்ப விளையாண்டது போதும்...சாய்ங்காலம் விளையாடலாம்...இப்ப நல்ல புள்ளையா அம்மாகிட்ட போயி பாலு குடி"என்றவாறு கன்றை இழுத்து சென்று அதன் தாய் பசுவிடம் விட்டாள்.

"ஏண்டி வேணி கன்னுக்குட்டியோட விளையாடி முடிச்சாச்சா?"

"மலர்!நீ எப்ப டி வந்தே?"

"ம்ம்...நா வந்து இருவது வருஷமாச்சு!போடி இவளே! எவ்வளவு பெரிய விஷயத்த கொண்டு வந்துருக்கேன்...அத கேக்காம"

"என்னடி அது பெரியயய விஷயம்"

"இத மொதல்ல படிச்சு பாரு தெரியும்"என்ற மலர் மாத இதழ் ஒன்றை அவளிடம் கொடுத்தாள்.

"இதுல அம்பதாவது பக்கத்த பாரு..."

வேகவேகமாக பக்கத்தைத் திருப்பிய வேணி ஐம்பதாவது பக்கத்தை திருப்பவும் ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள்.அதில் இருந்தது இதுதான்,

சினிமா முரசு பத்திரிகையின் வெள்ளிவிழாவினை முன்னிட்டு அதிஷ்ட போட்டி

நடிகர் வம்சிதரனோடு ஒரு நாள்

கீழே நடிகர் வம்சிதரன் நடித்த படங்களைப் பற்றிய சில கேள்விகளுக்கு பதில் எழுதி கூப்பனை சினிமா முரசு பத்திரிகை அலுவலகத்திற்கு பதிவு தபாலில் அனுப்ப வேண்டும்.சரியான பதில் எழுதியவர்களில் ஒரு அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார்.அவர் ஒரு நாள் முழுவதும் நடிகர் வம்சிதரனோடு இருக்கலாம்.

போட்டி முடிவுகள் இரண்டு வாரத்திற்கு பிறகு சினிமா முரசு பத்திரிகையில் வெளியிடப்படும்....

"பாத்தியா..... உடனே எழுதி அனுப்பு.....ஒரு வேள நீயே அந்த அதிர்ஷ்டசாலியா இருந்தா?உன்னோட சாக்லேட் ஹீரோவோட ஒரு நாள் பூரா இருக்கலாம்ல"

"ஆமால்ல.....ம்ம்...போடி.....எத்தன லட்சம் பேரு எழுதி அனுப்புவாங்க! அங்கயே சென்னைல இருக்கறவங்கள தேர்ந்தெடுப்பாங்க...நா அனுப்பல போடி..."

"முயற்சி பண்ணறதுல என்னடி குத்தம்...கெடச்சா கெடக்கட்டும் இல்லாட்டி போகட்டும்....எழுது சீக்கிரம்....இப்பவே அனுப்புசிடலாம்"

சரியென்று அதில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் எழுதி இருவரும் மீனாட்சியிடம் ஏதேதோ சாக்கு போக்குகளை சொல்லி பத்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தலைமை தபால் நிலையத்தில் அதை அனுப்பினர்.

இரண்டு வாரங்களுக்கு பிறகு

டவுனில் இருந்த தின பத்திரிகை கடையில் தோழிகள் இருவரும் நின்றிருந்தனர்.

"அண்ணே சினிமா முரசு ஒண்ணு கொடுங்க!"என வாங்கிய மலர் பரபரப்பாக பக்கத்தை திருப்பினாள்.

"சீக்கிரம் பாருடி..."

பக்கத்தை ஊன்றி படித்த மலர் சோகமானாள்.

"என்னடி மலர்?யாரு பேரு இருக்கு?சொல்லித் தொலையேண்டி....உன் மூஞ்சிய பாத்தா வேற யாரோன்னு தோணுது...அதுக்கே நா சொன்னேன்.... நமக்கெல்லாம் எங்க அதிஷ்டம்ன்னு... நீதான்"சொல்லும் போதே அவள் கண்கள் கண்ணீரை பொழிந்தது.

"வேணி அழாதடி செலக்ட் ஆனது யாரோ மதுரவேணியாம் பழனியப்பன் கிறவரோட பொண்ணாம்.....புதுவயலாம் அவ ஊரு...."

"யாரா வேணா இருக்கட்டும்...எனக்கென்ன....ஆ.....என்ன? என்னன்னு சொன்னே?"

"அடி லூசு நீதாண்டி அந்த அதிர்ஷ்டசாலி...பாரு இத"

அதில் அவள் பெயரைப் பார்க்கவும் சந்தோஷத்தில் அவளுக்கு பேச்சே வரவில்லை.

"ஊ.....ய்........"என சுற்றுப்புறத்தை மறந்து கூவினாள் மதுரவேணி.

ஆனால் அந்த ஒரு நாள் அவள் வாழ்வையே மாற்றப் போவதை அறியாமல் கனவு காணத் தொடங்கினாள் அவள்.
 

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top