P9 எந்தன் காதல் நீதானே

Advertisement

Ramya Rajan

Well-Known Member
அறையில் விளக்கு எரிந்ததால் ஜெய் தன் கைக் கொண்டு கண்ணை மறைத்தபடி படுத்திருந்தான். அதைப் பார்த்ததும் விளக்கணைக்க சென்றவள், பிறகே எடுத்து வந்த பாலைக் கவனித்தாள்.

“அத்தான், அத்தை பால் கொடுத்து விட்டாங்க. சொல்ல மறந்திட்டேன்.” என்றாள்.

“நீயே குடி.” என்றான்.

“உங்களுக்கு பால் பிடிக்காதா.. நேத்தும் நான்தான் குடிச்சேன். நாளைக்கு அத்தைகிட்ட எனக்கு மட்டும் கொடுக்க சொல்றேன்.” என்றதும், பட்டென்று எழுந்து அமர்ந்தவன், “அம்மா தாயே, அப்படி எதாவது உளறி வைக்காத. கொடு அந்தப் பாலை.” என்றான்.

வெண்ணிலா எடுத்து வந்து கொடுத்துவிட்டு கீழே அமர்ந்து கொண்டாள். அவன் அண்ணாந்து மடமடவென குடிக்க... வெண்ணிலா அவனையே பார்த்துக் கொண்டிருக்க...

“இந்தா உன்னோட பங்கு.” என மீதி இருந்த பாலைக் அவளிடம் கொடுக்க... வாங்கிக் கொண்டவள், நிதானமாக அருந்த ஆரம்பித்தாள்.

ஜெய் சென்று வாய் கொப்பளித்து விட்டு வந்து மண்பானையில் இருந்த தண்ணீரை எடுத்து அருந்தியவன், மீண்டும் படுக்க செல்ல...

“அத்தான், இந்த நெக்லஸ் கொஞ்சம் கழட்டி விடுங்களேன். கழட்ட வரலை... போட்டுட்டு தூங்க முடியாது கழுத்தை அழுத்தும்.” என்றவள், திரும்பி உட்கார்ந்து கொண்டு, கூந்தலை எடுத்து முன்புறம் போட்டுக் கொண்டாள்.

நெக்லஸில் அவளது தலை முடி சுற்றியிருந்தது. அதனால் தான் அவளுக்கு கழட்ட வரவில்லை.

ஜெய் சிக்கியிருந்த கூந்தலை மெதுவாக எடுத்தான். மனைவியின் அருகாமையும், அவள் கூந்தலில் இருந்த மல்லிகையின் மனமும் அவனைக் கிறங்க செய்ய போதுமானதாக இருக்க... மனதை அடக்குவது மிகவும் சிரமமாக இருந்தது.

********************************************************************************************

காலை உணவு, மதியம் விருந்து, மாலை பலகாரம் என ஒவ்வொரு வீட்டில் உண்டனர். நடுநடுவே வழியில் இருந்த மற்ற உறவினர்கள் வீட்டிலும் தலையைக் காட்டி விட்டு சென்றனர். வெண்ணிலா மிகவும் களைத்துப் போனாள்.

“ஏன் அத்தான் ஒரே நாள்ல எல்லார் வீட்டுக்கும் போறோம். இன்னொரு நாள் போகலாமே?”

“உனக்கு இங்க இருக்க பழக்கம் தெரியாது. ஒருநாள் ஒரு வீட்டுக்கு போனா... காலையில டிபினுக்கே வர வச்சு... சாயங்கலாம் பலகாரம் கொடுத்துதான் விடுவாங்க. ஒருநாள் முழுக்க இருக்க வேண்டியது வரும். இப்படி ஒரே நாள்ல எல்லார் வீட்டுக்கும் போனாதான் தான் தப்பிக்க முடியும்.”

“ஓ... இதில் இவ்வளவு இருக்கா?” என நினைத்தவள், அவன் சொல்வதும் சரிதான் என நினைத்தாள்.

அன்று வேறு எதுவும் உணவு அருந்தாமல் பாலும் பழமும் மட்டும் உண்டு இருவரும் இரவு உணவை முடித்துக் கொண்டனர்.

ஐந்தாம் நாள் காலை வெண்ணிலா எழுந்து கொண்ட போதே ஜெய் வீட்டில் இல்லை. அவன் அலுவலகத்திற்கு பத்து நாள் விடுப்பு என அவளுக்கு தெரியும். பிறகு வேறு எங்கு சென்றான் என நினைத்தவள், எழுந்து அவள் வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.

அன்று பள்ளி கல்லூரி என காலையே அனைவரும் கிளம்பி சென்றிருக்க... வெண்ணிலா போர் அடித்து போய் இருக்க... அப்போது வந்த கவிதாவை அவள் ஆவலாக வரவேற்க... கவிதாவோ முகத்தை திருப்பிக் கொண்டு சென்றாள்.

***************************************************************************************************
 

Joher

Well-Known Member
:love::love::love:

நெக்லஸ் கழட்டினானா இல்லையா :p:p:p
விருந்து வீட்டுக்கு ஜெய் சொல்லும் டெக்னிக் :eek::eek::eek:

வில்லங்கம் 5-ஆம் நாளே வருதா......
ஜெய் வேற இல்லையே...... நிலா ஓடவிடனும் அவளை.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top