P5 எனக்கென வந்த தேவதையே

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
#1

வார இறுதியில் ஜனனியை பெண் பார்க்க வந்திருந்தனர். அதிகம் பேர் எல்லாம் இல்லை. கல்யாண மாப்பிள்ளை, அவன் பெற்றோர், சகோதரி, அவளின் கணவன் மற்றும் பிள்ளைகள்.

மாப்பிள்ளை சிபி ஜனனியுடன் தனியாகப் பேச வேண்டும் என்றதால்.. அவர்கள் இருவரும் அறையில் தனியாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

சிபியின் சகோதரி ப்ரியா. “ஜனனிக்கு அக்கா இருக்குன்னு சொன்னாங்களே... அவங்க வரலையா?” என்று கேட்க... “இல்லை இப்போ பொண்ணு தானே பார்க்க வர்றாங்கன்னு சொல்லி வரலை.” என்று லக்ஷ்மி சமாளிக்க... மாப்பிள்ளை வீட்டினருக்கு ஏற்கனவே தரகர் சொல்லி யாதவியைப் பற்றித் தெரியும். அவர் எதையும் மறைக்காமல் சொல்லி இருந்தார்.

“ஒரே அக்கா தானே ஏன் வரலை?” என்று சிபியின் அம்மாவும் கேட்க...

“இல்லை அவளுக்கு விவாகரத்து ஆனதுனால எங்கையும் ரொம்ப வர மாட்டா.” என்றார் லக்ஷ்மி.

“இதுல என்ன இருக்கு. அது அவங்க சொந்த விஷயம். அதுக்காக அவங்க ஜனனிக்கு அக்கா இல்லைன்னு ஆகிடுமா? நாங்க அதெல்லாம் எதுவும் நினைக்க மாட்டோம்.” என்று ப்ரியா சொல்ல.. அதைக் கேட்டபடி ஜனனியும் சிபியும் அறையில் இருந்து வெளியே வந்தானர்.

நல்லா கேட்டுக்கோங்க என்பது போல ஜனனி தன் பெற்றோரைப் பார்க்க... சிபி ஜனனியை பிடித்திருப்பதாகச் சொல்ல... மேற்கொண்டு மற்ற விஷயங்களைப் பேசிவிட்டு சென்றனர்.

************************************************************************************************

லிங்காவிடம் கேட்டுப் பார்க்கலாம் என நினைத்தவள், அன்று அவன் கொடுத்த அவனுடைய எண்ணுக்கு அழைத்தாள். அவனிடம் யாதவியின் எண் இல்லை. அதனால் யாரென்று தெரியாமல் தான் அழைப்பை ஏற்றான்.

“ஹலோ லிங்கா சார் தான? நான் யாதவி.” என்றதும்,

“சொல்லுங்க யாதவி.” என்றவனுக்கு, காரணம் இல்லாமல் அழைக்க மாட்டாள் என்று தெரியும்.

“ஒரு உதவி வேணும். முடிஞ்சா சொல்லுங்க இல்லைனா பரவாயில்லை.”

“சொல்லுங்க, செய்ய முடிஞ்சா கண்டிப்பா செய்யுறேன்.”

“என் தங்கைக்குச் சென்னையில ஒரு வரன் வந்திருக்கு. அவங்க ஓகே சொல்லிட்டாங்க. ஆனா மாப்பிள்ளையைப் பத்தி இன்னும் கொஞ்சம் விசாரிச்சா நல்லா இருக்கும். உங்களுக்கு யாராவது சென்னையில தெரிஞ்சவங்க இருக்காங்களா...” என்று கேட்க...

“என் தங்கச்சி வீட்டுக்காரர் சென்னையில தான் வக்கிலா இருக்கார். நான் அவர்கிட்ட சொல்லி விசாரிக்கச் சொல்றேன். இன்னும் வேற பிரண்ட்ஸ் கூட இருக்காங்க. நீங்க பையனை பத்தி விவரங்களை எனக்கு வாட்ஸ் அப் பண்ணிடுங்க.” என்றான்.

தனக்கு ஆனது போலத் தங்கைக்கும் ஆகி விடக்கூடாது என்ற பதட்டம் யாதவிக்கு, அதை லிங்காவால் உணர முடிந்தது.

***********************************************************************************************

கதவை திறந்து பார்த்தவள், அங்கே யாரும் இல்லாமல்... கேட்டின் அருகே சென்று பார்க்க... மாடிப் படியில் மறைந்து நின்ற ஜனனி திடிரென்று கத்த... தங்கையைப் பார்த்ததும் ஆச்சர்யத்தில் யாதவியும் கத்த... ஜனனி அதற்கு மேல் கத்த... அக்காவும் தங்கையும் போட்ட சத்தத்தில், கீழ் வீட்டினர் மற்றும் எதிரே சிவகாமி, மாடி அறையில் இருந்த லிங்கா என எல்லோருமே என்னவோ ஏதோவென்று எட்டிப் பார்க்க... அக்காவும் தங்கையும் சந்தோஷத்தில் கட்டிக்கொண்டு நின்றனர். உறக்கத்தில் இருந்த சந்தோஷ் கூட எழுந்து வந்திருந்தான். அவனைப் பார்த்ததும் ஜனனி இன்னும் கத்தியபடி அவனைத் தூக்கி சுற்றினாள்.

“யாரு யாதவி?” என ஜெயந்தி கேட்க...

“என் தங்கச்சி ஆண்டி. சென்னையில இருந்து வந்திருக்கா...சொல்லாம திடிர்ன்னு வந்திருக்கா அதுதான் சாரி...” என, அவருக்குக் கேட்க வேண்டும் என யாதவி சத்தமாகச் சொல்ல...

“என்னங்க எது பண்ணாலும் கொஞ்சம் சொல்லிட்டு பண்ணுங்க... தென்காசியில நிலநடுக்கம் தான் வந்திடுச்சுன்னு நினைச்சேன்.” என லிங்கா சொல்ல... யாதவி அவனைச் சங்கடமாகப் பார்க்க...

“நாங்க எல்லாம் வந்தா அப்படித்தான் ஊரே அதிரணும்.” என்றால் ஜனனி லிங்காவைப் பார்த்து. அதைக் கேட்டு ஜெயந்தியும் சிவகாமியும் சிரித்தபடி உள்ளே செல்ல... லிங்கா அவன் உறக்கத்தைத் தொடர சென்றான்.

********************************************************************************************

ஜனனியிடம் ஜெயந்தியை அழைத்து வர சொன்னார். ஆனால் ஜெயந்தி இல்லை வீடு பூட்டி இருந்தது. அதனால் யாதவியிடம் சொல்ல... அவள் உடன் சென்றாள்.

“ஜெயந்தி ஆண்டி எதோ விஷேஷ வீட்டுக்கு போறேன்னு சொன்னாங்களே...” என்றபடி யாதவி வர...

“ஆமாம் மறந்துட்டேன்.” என்றவர், “வலிக்குதுன்னு சொல்றா... உண்மை வலியா, பொய் வலியான்னு கூடத் தெரியலையே...” என,

“கொடுத்த டேட்டுக்கு இன்னும் நாலு நாள்தான் இருக்கு. அதனால ஆஸ்பத்திரிக்கே போயிடலாம்.” என்ற யாதவி, தீபிகா கிளம்ப ஜனனியை உதவச் சொல்லிவிட்டு, சிவகாமியை தேவையானது எடுத்து வைக்கக் சொன்னவள், தனது கைபேசியில் லிங்காவை அழைக்க... அவன் தென்காசியில் இருக்கிறேன் என்றான். தீபிகாவை காட்டும் மருத்துவமனையும் அங்கே தான் இருக்கிறது.

“ஒரு வண்டி அனுப்புறீங்களா? நாங்க அங்க ஹாஸ்பிடல் வந்திடுறோம். நீங்க நேரா ஆஸ்பத்திரிக்கு போயிடுங்க.” என்றதும், லிங்கா சரி என்றான்.

*********************************************************************************************

லிங்கா சந்தோஷை தூக்கி வைத்திருக்க... சந்தோஷ் தொட்டிலில் இருந்த குழந்தையை ஆர்வமாகப் பார்த்திருந்தான்.

“பாப்பா... பாப்பா...” என்று அவன் சொல்ல...

“நீயே இன்னும் பாப்பா தான் டா...” என்றான் லிங்கா.

“பரத் நேத்து யாதவி மட்டும் இல்லைனா... அவ்வளவு சீக்கிரம் ஹாஸ்பிடல் வந்திருக்க முடியாது.” லிங்கா சொல்ல... பரத் அவளுக்கு நன்றி சொன்னான்.

இதை போய் பெரிதாக சொல்ல வேண்டுமா என்பது போல யாதவி லிங்காவைப் பார்க்க... சாரி இனிமே சொல்லலை என்றான் அவளைப் பார்த்து.

பரத் ஜனனி தீபிகா மூவரும் அவர்கள் இருவரையும் குறுகுறுவென பார்த்தனர்.

உண்மையில் லிங்கா யாதவி இருவருக்கும் இதுவரை மற்றவர் மீது அதுபோல ஒரு எண்ணமே இல்லை. சில சந்தர்ப்பங்களில் அவன் உதவினான், பதிலுக்கு இவளும் உதவினாள். அவர்கள் இருவருக்குமே முதலில் இன்னொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இல்லை.

லிங்கா வெளியே சென்று விட்டு ஏழு மணி போலப் பைக்கில் வீடு திரும்ப, அக்காவும் தங்கையும் வாசலில் நின்று வழக்காடிக் கொண்டிருந்தனர்.

“நீ தனியா போக வேண்டாம் நானும் வரேன்.” என்று யாதவியும், “நீ ஒன்னும் வர வேண்டாம், எனக்குப் போயிக்கத் தெரியும்.” என்று ஜனனியும் மல்லுகட்ட.... அப்போது லிங்காவை பார்த்ததும் யாதவி இன்னும் பதட்டமானாள்.

“என்ன ரெண்டு பேரும் ரோட்ல நின்னுட்டு இருக்கீங்க.” என்று லிங்கா கேட்க...

“ஒன்னும் இல்லை ஜனனி இன்னைக்கு ஊருக்கு கிளம்புறா.”என்றாள் யாதவி. ஆனால் அவன் ஜனனியை பார்க்க... அவள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தாள்.

“எதுல போற?” லிங்கா ஜனனியிடம் கேட்க...

“பஸ்ல.” என்றாள்.

“சரி நான் போய் விடுறேன்.” என லிங்கா சொல்ல..

“வேண்டாம் வேண்டாம்...” எனப் பதறிய யாதவி, “நானே போறேன்.” என்றாள்.

“நீங்க போனா, நீங்களும் நைட் தனியாத்தானே திரும்பி வரணும். எனக்கு ஒன்னும் கஷ்ட்டம் இல்லை.” என்றவன், “என்னோட பைக்கில வருவா தான.” என்று ஜனனியை கேட்க.... அவள் பதில் சொல்லாமல் பைக்கில் ஏறி உட்கார... யாதவி தங்கையை முறைக்க.... ஜனனி சந்தோஷைப் பார்த்து பாய் என்றாள்.

சந்தோஷ் தானும் வருவதாகச் சொல்ல... அதற்குள் லிங்கா வண்டியை திருப்பிக் கொண்டு கிளம்பி இருந்தான்.

இருவரும் தென்காசி வரும்வரை எதவும் பேசவில்லை. பேருந்துக்கு இன்னும் நிறைய நேரம் இருக்க... அருகில் இருந்த உணவகத்திற்கு லிங்கா அவளை அழைத்துச் சென்றான்.

இருவருக்கும் சிற்றுண்டி சொன்னவன், “ரொம்ப நாள் இருப்போறேன்னு சொன்ன... ஆனா இப்போ உடனே கிளம்புற. அப்படி என்ன சண்டை உங்க ரெண்டு பேருக்கும்?” என்று கேட்க.. ஜனனிக்கு விழிகளில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.

#4

Nirmala vandhachu
 
Joher

Well-Known Member
#9
:love::love::love:

மாப்பிள்ளை வீட்டுக்காரங்க என்ன சொல்வார்களோ னு பொண்ணு முடிவை விமர்சித்தாங்க.... இப்போ ஒண்ணுமே இல்லை னு சொல்லிட்டாங்க.... அம்மாவும் அப்பாவும் என்ன பண்ணப்போறாங்க.....

அடடா அக்கா தங்கை அலம்பல் சத்தம் ரொம்ப ஓவரா இருக்கே..... எங்க வீடு கீழே 3 வயசு குட்டி பொண்ணு இருக்கு அப்பப்போ ஓ ஓ னு கத்துற சத்தம் கேட்கும்.... என்னனு விசாரிச்சா அவ ஷாருக்கான் படம் பாட்டு பார்த்தா கத்துவாளாம் :p:p:p அதாவது ஷாருக்கான் பேன் :p:p:p நம்ம பசங்க வேர்ல்ட் கப் வின் பண்ணுறப்போ கத்துற மாதிரி ஓடுறதென்ன ஓ ஓ னு சத்தம் போடுறதென்ன.... பார்த்து செம சிரிப்பு தான்.....

தள்ளி போனாலும் தேவை னு வர்றப்போ avoid பண்ணமுடியலை..... போன் ல உதவி கேட்கிற அளவுக்கு வந்தாச்சு....
பெண்கள் எல்லாம் ஒன்னுக்குள் ஒன்னுன்னு ஆகிட்டாங்க.....

அக்கா தங்கைக்குள் என்ன சண்டை???
சந்தோஷ் வர்றேன்னு சொல்லியும் விட்டுட்டு போய்ட்டானே......
வக்கீல் யாதவி பதறியதை பார்த்து தங்கை கிட்ட கொக்கி போடுறானே......
கல்யாணத்துக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டாளா???
இல்லை இன்னொரு கல்யாணம் பண்ண சொல்லி கேட்டாளா???
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement