P3 எந்தன் காதல் நீதானே

Advertisement

Ramya Rajan

Well-Known Member
மூன்று நாட்களாக கரனை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. அவனுக்கு எதோ ஆகி விட்டது என அவன் பெற்றோர் பதற... இந்த திருமணத்தை நிறுத்த அவன் எதோ முடிவு செய்து விட்டான் என வெண்ணிலாவுக்கு புரிந்தது.

அவன் வீட்டில் சொன்ன போது எல்லாம் பேசாமல் இருந்துவிட்டு.. இப்போது திருமணம் நெருங்கும் வேளையில், அவன் பின்வாங்கியது எவ்வளவு பெரிய துரோகம்.

இவனின் அம்மாவின் ஆசைக்காக தானே... வெண்ணிலாவின் பெற்றோர் இந்த திருமணத்திற்கு சம்மதித்தனர். ஆனால் யாரைப் பற்றியும் நினைக்காமல் கரன் சுயநலமாக முடிவெடுத்தது வெண்ணிலாவால் ஏற்கவே முடியவில்லை.

******************************************************************************************************************

மகனுக்கு எதோ நடந்து விட்டது என பயந்திருந்த பெற்றோருக்கு அவன் நலமாகத் தான் இருக்கிறான் என்றதும் மற்றது பின்னுக்கு சென்றுவிட்டது. ஆனால் யுவராஜ்க்கு தங்கையின் வாழ்க்கை முக்கியம் அல்லவா...

விருப்பம் இல்லைனா முன்னாடியே சொல்றதுக்கு என்ன? இப்ப வெண்ணிலாவுக்கு என்ன பதில் என யுவராஜ் கொதிக்க...

“அவன் அதுக்குள்ள வந்திடுவானா இருக்கும். அதெல்லாம் அவன் வந்திடுவான்.” என அன்பரசி சொல்ல.. யுவராஜுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் உண்மையில் அன்பரசி அப்படித்தான் நம்பிக் கொண்டு இருந்தார்.

**************************************************************************************************************

இதில் கற்பகம் வேறு, பேரன் செய்த தவறை அப்படியே பூசி மொழுகி பேச... எல்லோரும் வெண்ணிலாவை தான் சந்தேகமாக பார்த்தனர்.

“போறவன் கல்யணம் பண்ணிட்டு போய் இருக்கலாமே... இந்த பெண்ணை கல்யாணம் பண்ணிக்க இஷ்ட்டம் இல்லையோ.”

“ஒரு வேளை பெண்ணுக்கு எதுவும் காதலோ... அது தெரிஞ்சு பையன் வேண்டாம்ன்னு போயிட்டானோ... இப்படி ஆளுக்கு ஒன்று பேச...” வெண்ணிலா வீட்டினர் மனம் உடைந்து போனார்கள்.

“பேரன் ஒரு வருடம் கழித்து வருவான்... வந்து எப்படியும் வெண்ணிலாவை திருமணம் செய்வான் என கற்பகம் வாய்வட...

“போதும் உங்களையும் உங்க மகளையும் நம்பி என் பொண்ணு வாழ்க்கையை ஒப்படச்சத்துக்கு என்ன பண்ணணுமோ பண்ணிட்டீங்க. திரும்ப உங்க பேரனுக்கு என் பெண்ணை செய்யணும்ன்னு பேச்சை ஆரம்பிச்சிகீங்க அவ்வளவு தான்.”

“எங்க பொண்ணு வாழ்க்கை அதை நாங்க பார்த்துக்கிறோம்.” என மகேஸ்வரி ஆத்திரமாக சொல்ல..

********************************************************************************************************************

இரண்டு நாட்கள் வீடே சோகத்தில் மூழ்கிக் கிடக்க... மதிய உணவுக்கு வந்த ஜெய், வீட்டினர் ஆளுக்கு ஒருபுறம் படுத்து கிடப்பதைப் பார்த்தவன்,

“இப்ப என்ன ஆச்சுன்னு ஆளுக்கு ஒருபக்கம் இப்படி படுத்து கிடக்கீங்க.” என்றவன், “எங்கே வெண்ணிலா?” சத்தமாக குரல் கொடுக்க...

முற்றத்தில் இருந்த கல்லில் படுத்து கிடந்தவள், அவன் குரல் கேட்டு எழுந்து உட்கார்ந்தாள். அவளிடம் வந்தவன், “எதுக்கு இப்ப இவ்வளவு சோகம்? அவன் என்ன செத்தா போயிட்டான்.”

“உனக்கு அவன்தான் வேணுமா சொல்லு... வா இப்பவே உன்னைக் கொண்டு போய் அவன்கிட்ட விடுறேன்.” என வெண்ணிலாவின் கைப்பற்றி இழுக்க,

அவனிடம் இருந்து விலகிய வெண்ணிலா, “நான் உங்ககிட்ட அப்படி சொன்னேனா?” என்றாள் அவனை முறைத்துக் கொண்டு.

“அப்ப ஒழுங்கா இரு. நீ இப்படி இருந்தா... உன்னை பார்த்து அத்தையும் அழுகிறாங்க.” என அவன் சொல்ல, வெண்ணிலா அவன் சொன்னதுக்கு பதில் சொல்லாமல் இருக்க.. ஒரு தோள் குலுக்கலுடன் அங்கிருந்து சென்றான். ஆனால் அதன் பிறகு அவள் சாதரணமாக இருக்க... மகளைப் பார்த்து மகேஸ்வரியின் கண்ணீரும் நின்றது.
 

Joher

Well-Known Member
:love::love::love:

அவன் போனான்னா அவன் கிட்ட விசாரிக்கணுமா ஏன் போனேனு???
அதை விட்டுட்டு பொண்ணு ஹிஸ்டோரியை அலசி ஆராயுறாங்க......
oh கார்டு குடுத்த பிறகு சொல்லாமல் கொள்ளாமல் எஸ்ஸாகி ஓடுவான்...... இந்த புள்ளை இலவு காத்த கிளியா :mad::mad::mad:
கிழவி உங்க பொண்ணுக்கு இப்படி நடந்தாலும் இப்படி தான் சொல்வீங்களா???
நல்ல வேலை தாலியை கட்டிட்டு ஓடிபோகலை.......

யுவராஜ் உங்கப்பா பேசமாட்டாருடா...... தங்கச்சி பாசம் தடுக்கும்.....
நல்ல போட்டுவிடு அத்தைக்கும் உங்க கிழவிக்கு.......

மகேஸ்வரி ஏன் ஜெய் வீட்டுல பொண்ணோட இருக்காங்க???
ஜெய் கல்யாணம் பண்ணிகிட்டானா???
இப்படி விட்டுட்டு போறீங்களே ரம்யா :oops::oops::oops:
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice precap

கல்யாணம் பிடிக்காம அவன் எஸ்கேப் ஆயிட்டான்.. இப்ப பழி வெண்ணிலா மேல.. இதுல இந்த கற்பகம், அவங்க பேரன் ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்குவான்னு வேற சொல்லுது..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top