P20 Uppuk Kattru

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
#1
குளித்து விட்டு வந்தவன் சாப்பிட உட்காராமல், அவனது புவனா அத்தையை அழைத்தான்.
“ஹலோ அத்தை எப்படி இருக்கீங்க?”
“என்ன டா அத்தை மேல திடீர் பாசம். சொல்லாம கல்யாணம் பண்ணிட்டு போனவன் தானே நீ...” என்ற புவனாவின் குரலில் கேலியே இருக்க...
“ம்ம்... வேற வழி, உங்ககிட்ட இருந்து தப்பிக்கத்தான்.” என்றான் அருளும் கிண்டலாக.
“இப்ப என்ன உன் தங்கச்சி உன்கிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்டாளா... அதனால தான எனக்கு போன் பண்ணி இருக்க.”
“தெரியுது இல்ல... உங்களை மாதிரியே வாய் அவளுக்கு.”
“டேய்... எங்க ரெண்டு பேருக்கும் பிறந்த வீட்டு பாசம் அதிகம் டா... என்னை மாதிரியே என் மருமகள். என் மருமகளை நீதான் டா பாடு படுத்திற... ஒழுங்கா உன் பொண்டாட்டியோட இங்க வந்து சேறு...”

*******************************************************************************************************************

அங்கே பவித்ராவை சாப்பிட வா என்றால் வர மாட்டாள் என தெரியும். “காலையில இருந்து நானே எவ்வளவு வேலைப் பார்க்கிறது. பவித்ரா உங்க மாமா சாப்பிட வந்திட்டார். வந்து பரிமாறு.” என குரல் கொடுத்தவர், என்னங்க உங்க மருமகளை சாப்பிட வைக்கிறது உங்க பாடு என சொல்லிவிட்டு சென்றார்.
பவித்ரா ஸ்ரீநிவாஸ்க்கு உணவு பரிமாற, நீயும் சாப்பிடு மா என்றார். அவர் சொல்லைத் தட்ட முடியாது சாப்பிட உட்கார்ந்தாள்.
“நீ ஏன் உங்க அண்ணனை கெஞ்சிட்டு இருக்க... அப்படியே விட்டுடு, அவனுக்கு எல்லாம் பட்டத்தான் புத்தி வரும்.” என்றார். பவித்ரா எதுவும் சொல்ல முடியாது அமைதியாக உண்டாள்.

************************************************************************************************************

“கம்பெனியில உனக்கும் பங்கு இருக்கு. அதை நாங்க இல்லைன்னு சொல்லலை.. ஒன்னாவே பார்த்துகிறதா, தனித்தனியா பிரிச்சிக்கலாமான்னு தான் யோசிச்சிட்டு இருந்தோம்.”
“இப்ப சேர்ந்தே இருக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டோம். நீ வந்து பார்த்துக்கோ... உன் சித்தப்பா தான் சொல்ல சொன்னார் சொல்லிட்டேன்.”
“உன் மேல எனக்கு எந்தக் கோபமும் இல்லை. ஆனா உன் தங்கை மேல எனக்கு பயங்கிற கோபம் தான். இத்தனை நாள் வளர்த்த எங்களை தூக்கி எரிஞ்சு பேசிட்டா...” என வேறு அவர் சொல்ல... அருளுக்கு சங்கடமாக் போய்விட்டது.
“அவ சின்ன பொண்ணு தானே சித்தி தெரியாம பேசிட்டா... நீங்க மனசுல வச்சுக்காதீங்க.” என்றான்.
“உடனே கோபம் போகுமா... பார்க்கலாம்.” என்றார்.

*****************************************************************************************************************

அவன் வந்து விட்டது தெரிந்து, சாரதியும் கலையும் வேறு பதறிப் போய் அழைத்தனர். அருள் எல்லோரிடமும் பேசி முடித்த போது, மாலையாகி இருந்தது. இப்போது ரோஜா என்ன சொல்வாளோ என இருந்தது.


“ரோஜா, நான் கடலுக்கே போக கூடாதுன்னு பவித்ரா சொல்லுறா. ஆனா உனக்கோ இங்க இருந்து வர விருப்பம் இல்லை. உங்க ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தருக்கு தான் நல்லவனா இருக்க முடியும். நான் யாருக்கு இருக்கட்டும் நீயே சொல்லு.” என்றான்.

 
Joher

Well-Known Member
#2
:love::love::love:

அடடா அருளுக்கு நாலா புறமும் தொல்லைகளாவே இருக்காங்க........
பொண்டாட்டி, தங்கை, பாட்டி, அத்தை , சித்தி.........
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி னு சொல்லமுடியாது அருள்.......

உனக்கு தெரியுது தானே யாருக்கோ ஒருத்தருக்கு நல்லவனா இருக்க முடியும்னு........
யாருக்குனு மட்டும் உனக்கு தெரியாது.......
அப்படியே நைசா பாலை தூக்கி இங்கே போட்டுடவேண்டியது......
பழி பாவம் எல்லாம் பொண்டாட்டிக்கு.......

நீயே சொல்லு உனக்கு யாரு முக்கியம்???
தங்கையா பொண்டாட்டியா???
பைபிள் ரீடிங் கல்யாணத்தன்னைக்கு கேட்டியா இல்லையா???
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
#5
பவித்ராவோட எதிர்பார்ப்பு நியாயமானது .....அவளுக்கு இருக்கிறது ஒரே உறவு அண்ணன் தான் ..... அவனை கடலுக்கு தினமும் அனுப்பிட்டு நெருப்பை கட்டிட்டு இருக்க முடியுமா ....
ரோஜாவுக்கு உப்பு காத்து தானே வேணும் கடற்கரை பக்கத்துல வீடு கட்டிட்டு இருக்க சொல்லுங்க ...நாள் முழுசும் உப்பு காத்து
வரும்.....
 
ramyarajan

Writers Team
Tamil Novel Writer
#10
:love::love::love:

அடடா அருளுக்கு நாலா புறமும் தொல்லைகளாவே இருக்காங்க........
பொண்டாட்டி, தங்கை, பாட்டி, அத்தை , சித்தி.........
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி னு சொல்லமுடியாது அருள்.......

உனக்கு தெரியுது தானே யாருக்கோ ஒருத்தருக்கு நல்லவனா இருக்க முடியும்னு........
யாருக்குனு மட்டும் உனக்கு தெரியாது.......
அப்படியே நைசா பாலை தூக்கி இங்கே போட்டுடவேண்டியது......
பழி பாவம் எல்லாம் பொண்டாட்டிக்கு.......

நீயே சொல்லு உனக்கு யாரு முக்கியம்???
தங்கையா பொண்டாட்டியா???
பைபிள் ரீடிங் கல்யாணத்தன்னைக்கு கெட்டியா இல்லையா???

:LOL::D
 
Advertisement

New Episodes