P20 எந்தன் காதல் நீதானே

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
#1
தோட்டத்தில் நின்ற காரை வர சொல்லி பெண்கள் அதில் ஏறினர். காமாக்ஷி வரவில்லை என்றுவிட, மற்றவர்கள் தோட்டத்திற்கு கிளம்பினார்கள். ராதிகா அவளும் வரவில்லை என, அன்று யாரும் அவளை வருந்தி அழைக்கும் மனநிலையில் இல்லை.

அகல்யா வெண்ணிலா யாருமே அவளை அழைக்கவில்லை. வரவில்லையா போ என்பது போல இருந்தனர்.

தன் அம்மாவை எல்லோரின் முன்பும் அவமானப் படுத்தி விட்டதாக ராதிகா நினைத்தாள். அதனால் கோபத்தில்தான் வரவில்லை என்றாள்.

காரில் ஏறும் சமயம் ஜெய் கவனித்து விட்டு, “எங்கே ராதிகா?” என கேட்க,

“அவ வரலை.” என்றாள் வெண்ணிலா.

“போ.. போய் அவளை வரசொல்லு.” என,

இவன் ஓரண்டை இழுத்து வைப்பான். நான் போய் சமாதானம் சொல்லி கூப்பிடணும் என நினைத்தவள், கணவனை முறைத்துப் பார்க்க,

அவள் நினைப்பது அவனுக்கும் புரிந்தது. “போடி...” என்றான் மீண்டும்.

வெண்ணிலாவுக்கு விருப்பம் இல்லையென்றாலும் கணவன் சொன்னதினால் சென்றாள். அவள் சென்று ராதிகாவை அழைக்க, தோட்டத்தில் அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என காமாட்சிக்கு தெரியவேண்டியது இருந்தது. அதனால் மகளை போ என வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தார்.

**********************************************************************************************

ராதிகாவுக்கு அவர்கள் எதோ இதைப் பற்றிதான் பேசிகிறார்கள் எனப் புரிந்தது. ஆனால் என்னவென்று தெரியவில்லை. அவள் அங்கிருந்து செல்லலாம் என்றால், யாரும் அங்கிருந்து நகரும் வழியைக் காணோம்.

சிறிது நேரத்தில் ஜெய் வர எல்லோரும் அங்கிருந்து கிளம்பி விட்டனர். மதிய உணவே நிறைய மீதம் இருக்க, அதோடு ஆட்களும் அதிகமென்பதால், டிபன் செய்யாமல் இன்னும் கொஞ்சம் சாதமே வைத்து, இரவு உணவை முடித்துக் கொண்டனர்.

இரவு அவர்கள் பகுதிக்கு வந்ததும் சந்திரன், “அப்படி என்ன வீட்டுக்கு தெரியாம நகை வாங்க வேண்டியது இருக்கு.” என மனைவியிடம் கோபப்பட...

“எல்லாத்துக்கும் நான் உங்களையே எதிர்பார்த்திட்டு இருக்க முடியுமா? எதோ இருக்க காசை சேர்த்து வச்சு வாங்கினேன் இது ஒரு குத்தமா?” என்றார் காமாக்ஷி சாதாரணமாக.

“பின்ன இல்லையா? இதையே அண்ணி பண்ணியிருந்தா நீ சும்மா இருப்பியா. பொதுவில் இருந்து காசு எடுத்து, அவங்க அகல்யாவுக்கு நகை சேர்த்திருந்தா நீ சும்மா விடுவியா?”

“நான் ராதிகா கல்யாணத்தோட சொல்லித்தான் இருப்பேன். கொஞ்ச கொஞ்சமா சேர்த்து வச்சா, உங்களுக்கு சிரமமா இருக்காதுன்னு பார்த்தேன்.”

***********************************************************************************************

“இப்ப எல்லாம் உன் பேச்சு ஒருமாதிரி தான் இருக்கு. ஆமாம் அன்னைக்கு என்ன சொன்ன, குழந்தை உண்டானதும் நீ தேவையில்லையா? அதனாலதான் நான் உன்னைக் கூப்பிட வரலை சொன்ன இல்ல...”

“ஐயையோ இவன் இன்னும் மறக்கலையா... தேவையில்லாம நான் வேற வாயைக் கொடுத்தேனே... விட்டா ஒரு வழி ஆக்கிடுவானே.” என நினைத்தவள்,

“இன்னைக்கு வந்ததுல இருந்து பஞ்சாயத்துதான். முதல்ல மாமாவோட அடுத்து சின்ன அத்தையோட, இப்ப என்னோடவா?”

“இப்ப என்ன என்னைத் திட்டனுமா? திட்டுங்க.”

“காலையில வந்ததுல இருந்து டென்ஷன் தான். குழந்தை வயித்துக்குள்ள இருக்கும்போது மனசை அமைதியா வச்சுக்கணும் சொல்வாங்க. இந்த வீட்ல அதெல்லாம் முடியாது. அதுவும் அவங்க அப்பா மாதிரி வெளிய வந்து எல்லார் கூடவும் சண்டை போடட்டும். எனக்கு என்ன?” என வெண்ணிலா ஜெய் பேச இடமே கொடுக்காமல் பொரித்து தள்ள...

எட்டி ஒரு அறை வைப்போமா என்றுதான் ஜெய் நினைத்தான். ஆனால் அவள் குழந்தையை நினைவூட்டவும், வயிற்ருக்குள் குழந்தை இருக்கும் போது நல்ல விஷயங்களை கேட்பது, செய்வது எல்லாமே குழந்தையின் மன ஆரோக்யத்திற்கு நல்லது என்பதை அவனும் அறிவான். அதனால் மேற்கொண்டு சண்டையிடாமல் மனைவி படுக்க இடம் விட்டு நகர்ந்து படுத்துக்கொண்டான்.
 
MaryMadras

Well-Known Member
#2
பொதுவில் இருந்து பணம் எடுத்து நகை வாங்கியது தப்புன்னு சந்திரனே மனைவியை திட்டறார், ஆனா ராதிகா அம்மாவை அவமானப் படுத்தியதா நினைக்குது:oops::oops::oops:.

தப்பையும் பண்ணிட்டு அவங்க என்ன பேசறாங்கன்னு தெரிஞ்சுக்க பொண்ணையும் அனுப்பி வைக்குது,இதெல்லாம் எப்பத்தான் திருந்துமோ:mad::mad::mad:.

விட்ட ஒரு வழி ஆக்கிடுவான்னு நெனைக்கறது போல,வெண்ணிலா தேவையில்லாம அப்படி என்ன சொன்னா:unsure::unsure::unsure:.அருமை:love::love::love:.
 
Last edited:
#3
:D :p :D
Superb Precap,
ரம்யாராஜன் டியர்

சந்திரன் நல்லாத்தான் கேட்டார்
அகல்யாவுக்குன்னு அமுதா இப்படி வாங்கியிருந்தால் காமு கம்முன்னு இருந்திருப்பாளா?
ஒண்ணா இருந்தாலும் மற்றவர்களுடன் காமாட்சி ஒட்டவில்லை போலவே
காரணம் அண்ணன் வீடோ?
காமுவைப் போலவே பொண்ணு ராதிகாவும் கோக்குமாக்காத்தான் எதையும் நினைக்கும் போலவே
இவள் பேசினதை ஜெய் மறந்துட்டான்னு நினைத்து வயத்துப் புள்ளையை சாக்காட்டி வெண்ணிலா புள்ளை எப்படி பேசுது?
ஹா ஹா ஹா
 
Last edited:

Joher

Well-Known Member
#5
:love::love::love:

அம்மா பண்ணின தப்பு தெரியலை........
ஆனால் அவமானப்படுத்தினது தெரியுதா உனக்கு.......
அப்புறம் பொண்டாட்டிங்க வேலை என்னனு நினைச்ச.......
உன் நல்லதுக்கு தானே சொன்னாங்கனு சமரசம் பண்ணுறது தான்........
காமாட்ஷி கேடி நம்பர் 1 தான் போல.......

செம strategy வெண்ணிலா :p:p:p இதான் அவங்க பேசுறதுக்கு முன்னே பேசிட்டே கோபமா இருக்கன்னு விட்டுடுவாங்க......
'அவங்க அப்பா மாதிரி வெளியே வந்து எல்லோர் கூடவும் சண்டை போடட்டும்' :LOL::LOL::LOL:
இதுக்கு ஜெய் சிரிச்சானா (atleast மனசுக்க்குள்ளேயாவது) இல்லையா???
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#8
Nice Precap

அம்மா பண்ணுன தப்பு தெரியல... ஆனா அவமான படுத்துனதும் மட்டும் தெரியுதா???

அதுவும் அவங்க அப்பா மாதிரி வெளிய வந்து எல்லார் கூடவும் சண்டை போடட்டும்...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: அவன் அடியில இருந்து குiழந்தை தான் வெண்ணிலாவை காப்பாத்துச்சு...
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement