P20 இதய கூட்டில் அவள்

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
வனிதா மகளை வீட்டுப் பாடம் செய்ய வைத்துக் கொண்டிருந்தாள்.

தந்தையை பார்த்ததும், “பாருங்கப்பா அம்மா என்னை வெளியே விளையாட கூட விடலை... வீட்டுக்குள்ளையே படிச்சு வச்சிருக்காங்க.” என மகள் அவனிடம் புகார் சொல்ல,

“நான்தான் அம்மாகிட்ட சுஜியை எங்கையும் விடாத சொன்னேன்.” என்றதும்,

“நீங்க தான் சொன்னீங்களா...” என்றவள், சரிதான் என்பது போல இருக்க...

“அப்பா சொன்னா மட்டும் கேட்பீங்களா? அம்மா சொல்றதும் நல்லதுக்குதான் இருக்கும். அம்மா சொன்னா கேட்கணும்.” என்றான் விக்ரம் மகளுக்கு புரியும்படி.

நாம் சரியாக மனைவியை மதிக்காததால்தான் மகளும் இப்படி இருகிறாளோ என நினைத்தவன், “அம்மாவை எதிர்த்து பேசக் கூடாது. அம்மா என்ன சொல்றாங்களோ, அதன்படி செய்.” என்றான் சற்று அழுத்தமாகவே.

***********************************************************************************************************

வெற்றி வீட்டிற்கு சென்றவன், அங்கே காவலில் இருந்தவர்களை இருங்க பத்து நிமிஷத்துல வரேன் என சொல்லிவிட்டு உள்ளே சென்றவன், வாசல் கதவு திறந்தே இருப்பதைப் பார்த்தவன், “யாரு அது கதவை திறந்து போட்டது.” என கத்தினான்.

“நான்தான் டா விளக்கு ஏத்துறேன்னு கதவை திறந்து வச்சேன்.” என்றார் ஜோதி.

“ஆமாம் இப்ப இருக்கிற காலத்தில நீங்க இன்னும் இதெல்லாம் பாருங்க. எவனாவது வீட்டுக்குள்ள வரட்டும்.”

“நம்ம வீட்டுக்குள்ள அப்படி யாரு வருவா?”

“நீங்க இன்னும் அந்தக் காலத்திலேயே இருங்க மா... நாட்டில என்னென்ன நடக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா இல்லையா...டிவியில நியூஸ்ல அப்புறம் பேப்பர் எல்லாம் உட்கார்ந்து மணிக்கணக்கா படிக்கிறீங்க. அப்பவும் இப்படித்தான் இருக்கீங்க.” என்றான் கோபமாக.

மகன் சொல்வதை ஜோதி பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை. என்ன சொன்னாலும் அவர் செய்வதைத்தான் செய்வார் என ஆதிரைக்கு தெரியும். அவரோடு பேசுவதே வீண். இவங்ககிட்ட எதுக்கு இந்த மனுஷன் உயிரைக் கொடுக்கிறார் என நினைத்தபடி, கணவனுக்கு சிற்றுண்டி எடுத்துக் கொண்டு வந்தாள்.

**********************************************************************************************************

கணவன் சொன்னதைக் கேட்ட ஆதிரை கலங்கிப் போனாள். அந்த மாத்திரையால் கணவனுக்கு தீங்கு எதுவும் வந்திருந்தாள்.

மனைவியின் கலக்கத்தை பார்த்த வெற்றி, “நல்லவேளை விக்ரம் வந்தான். இல்லைனா வேற மாதிரி ஆகி இருக்கும் இல்ல...” என சொன்னதற்கு.

“எனக்கு அதெல்லாம் பத்தி ஒன்னும் இல்லை வெற்றி. உங்க மனசரிஞ்சு செய்யாத செயலுக்கு நீங்க எப்படி பொறுப்பாவீங்க? அந்த மாத்திரையினால உங்களுக்கு எதாவது ஆகி இருந்தா. உங்களுக்கு தலைவலி வேற இருந்தது இல்ல.... எனக்கு அதுதான் கவலை. எதுக்கும் டாக்டரை பார்த்திடுவோமா?”

மனைவி தன் உடல்நலனை நினைத்தே கலங்குகிறாள் என புரிந்ததும், வெற்றிக்கு இன்னுமே மனைவியை நினைத்து பெருமிதம்.

“அது ஒருநாள் லேசா இருந்தது. அதுக்கு அப்புறம் ஒரு பிரச்சனையும் இல்லை. அந்த மாத்திரை எல்லாம் தொடர்ந்து எடுத்தா தான் பயப்படணும்.”

“இவங்களை நாம சும்மா விடக் கூடாது வெற்றி. உங்களுக்கு எவ்வளவு மனஉளைச்சல் கொடுத்தாங்க. அவங்களை நாம விடக் கூடாது.” என்றாள் ஆதிரை ஆத்திரமாக.

***************************************************************************************************************

வெற்றி வெளியே இருந்த தன் ஆட்களை பார்க்க செல்ல, “அண்ணே, நம்ம தெரு பக்கமே ரெண்டு பசங்க சுத்தி சுத்தி வந்தாங்க. நாங்க மறைவா வீட்டுக்கு பின்னாடி போய் பார்த்தோம். நம்ம வீட்டை தான் பார்த்திட்டு இருந்தாங்க. நாங்க முன்னாடி வந்து நின்னதும் போயிட்டாங்க.” என்றனர்.

வெற்றி விக்ரமை அழைத்து சொல்ல, “நானும் இப்பத்தான் இங்க இருக்கிறவரை விசாரிச்சேன். இங்கேயும் ரெண்டு பேர் சுத்திட்டு இருந்திருக்கானுங்க.”

“நாம எதுக்கும் இருக்கட்டும்னு தானே ஆள் போட்டோம். ஆனா நாம எச்சரிக்கையா இல்லாம இருந்திருந்தா.. நினைக்கவே பயமா இருக்கு டா.... அவனுங்களை இப்படியே விடக்கூடாது. அவங்க முந்திக்கிறதுக்கு முன்னாடி நாம முந்திக்கணும்.”

“ஆமாம் வெற்றி நீ சொல்றது சரிதான். நான் இப்ப அங்க வரேன்.”
 

Joher

Well-Known Member
:love::love::love:

இந்த காலம் பிரச்சனைனா உடனே என்னனு பார்க்கணும்.......
இல்லைனா சாய்ச்சிடுவானுங்க.......

உங்கம்மா திறந்து போடும் கதவு வழியா யாரும் வராமல் இருக்கணும்......
எவனா இருந்தாலும் விடாதீங்க...... கதற விடுங்க......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Precap,
ரம்யாராஜன் டியர்

மகளிடம் விக்ரம் சொல்வது ரொம்ப கரெக்ட்
கணவன் மனைவியை மதித்தால்தான் குழந்தைகளும் அம்மாவை மதிக்கும்
லூசு ஜோதி இப்படித்தான் செய்வாள்ன்னு தெரியும்
ஆதிரையின் பயம் நியாயம்தான்
அந்த கருமத்தைக் குடித்ததில் வெற்றிக்கு ஏதாவது ஆபத்து வருமோ?
வெற்றியின் மாமனாரின் உதவியேதும் இல்லையா?
சக்தி போன் கால்ஸ் கலெக்ட் செஞ்சானா?
ஆதிரையிடம் கொடுத்தானா? இல்லையா?
சபாஷ் வெற்றி and விக்ரம்
இவங்க இரண்டு பேரின் அதிரடி நடவடிக்கையைக் காண ஆவலோடு வெயிட்டிங், ரம்யா டியர்
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice precap

ஒரு கணவன் மனைவியை மதித்தால் தான் மற்றவர்களும் மதிப்பார்கள்.. இப்பவாவது இதை விக்ரம் புரிஞ்சிக்கிட்டானே..
ஆதிரை வெற்றி மேல வச்சிருக்கிற நம்பிக்கை அபாரம் தான்..
நல்லவேளை அவங்க முன் கூட்டியே வீட்டு பாதுகாப்புக்கு ஆள் போட்டாங்க..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top