P18 Sangeetha Swarangal

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
Thilo is Back :love::love:


“என்ன டி குழந்தையையே பார்த்திட்டு இருக்க?”
“ம்ம்... உங்களை மாதிரி அவனுக்கும் கன்னத்துல குழி விழுதான்னு பார்க்கிறேன்.”
“பிறந்து பத்து நாள் ஆன குழந்தைக்கு அதுக்குள்ளே எப்படி திலோ குழி விழும்.”
“விழாதா...” திலோ அப்பாவியாக கேட்க, அரவிந்தன் புன்னகைத்தான்.
கணவன் மனைவி இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்களின் மகன் மெதுவாக கண் திறந்து சோம்பல் முறிக்க....
“பாருங்க பிள்ளைக்கு எவ்வளவு அலுப்புன்னு, பால் குடிக்கிற, தூங்கிடுற, இதுல என்ன டா சோம்பல் முறிக்கிற அளவுக்கு உனக்கு அலுப்பு?” என திலோ மகனிடம் கேட்க,
“அது மட்டுமா, நீயும் உன் பொண்ணும் தூக்கி வச்சிகிறேன்னு அவனை போட்டு என்ன பாடு படுத்துறீங்க, அது தான் அவனுக்கு அவ்வளவு அலுப்பு.” என்றார் வைதேகி. தன அம்மாவை முறைத்த திலோ,
“எங்களுக்கு தூக்கி வச்சுக்க ஆசையா இருக்காதா?” என்றவள்,
“பாருங்க என்ன அழகா கொட்டாவி விடுறான்.” என வியக்க,
“உன் கண்ணே குழந்தை மேல பட்டுடும் போல இருக்கு. குழந்தையை இப்படியே பார்த்திட்டே இருக்க கூடாது.” வைதேகி சொல்ல,
“என்ன மா கஷ்ட்டப்பட்டு பெத்தது நான், என் குழந்தையை ரசிக்க கூட கூடாதா. நீங்க சொல்றது எல்லாம் கேட்க முடியாது என்றவள், “வா டா நாம உள்ள போய்டலாம். இங்க இருந்தா உன் அம்மம்மா எதாவது சொல்லிட்டே இருப்பாங்க.” என்றவள்,
குழந்தையை தூக்கிக்கொண்டு அறைக்குள் செல்ல, அரவிந்தனும் வைதேகியும் புன்னகைத்துக் கொண்டனர்.

**********************************************************************************************************************

“அம்மா ஒரு மாசம் ஆகிடுச்சு இல்ல... நான் அங்க போகட்டுமா...” திலோ மெதுவாக கேட்க,
“குழந்தை பெத்துக்கிறது என்ன விளையாட்டு விஷயமா. மூன்னு மாசமாவது ரெஸ்ட் எடுக்கணும். நீ அங்கப் போனா இங்க இருக்கிற மாதிரி அங்க இருக்க முடியாது. அதோட மூன்னு மாசமாவது புருஷன் பொண்டாட்டி சேரவே கூடாது. அங்கப் போனா, நீங்க ஒரே ரூம்ல தான் தூங்குவீங்க. அதனால நீ இங்கயே இரு.”
“அம்மா, உங்களுக்கு உங்க மாப்பிள்ளையை பத்தி தெரியாது. அவரே ஒரு ரூல்ஸ் ராமானுஜம், பின்ன ஏன்மா பயப்படுறீங்க?”
“எனக்கு அவரை நினைச்சு பயம் இல்லை. உன்னை நினைச்சுதான் பயம்.” என வைதேகி சொல்லிவிட்டு வெளியே சொல்ல, திலோ முகம் அஷ்ட்டகோணல் ஆனது.
“வாயை வச்சிட்டு சும்மா இருந்திருக்கலாம். நீயே உன்னை இப்படி டேமேஜ் பண்ணிக்கிறியே திலோ.” என அவளே அவளை கேட்டுக் கொண்டாள்.

****************************************************************************************************************

“நீங்க முதல்ல கையை எடுங்க. எங்க அம்மா என்னவோ நீங்க ரொம்ப உத்தமர், நான்தான் உங்க பின்னாடி மயங்கி போய் சுத்துற மாதிரி நினைக்கிறாங்க.”
“அது உண்மை தான” என அரவிந்தன் புன்னகைக்க,
திலோ அவனை முதலில் முறைத்தாள். பிறகு அவளே, “ஆனாலும் எல்லோருக்கும் தெரியிற மாதிரியா நான் இருக்கேன்.” என்றாள்.
அரவிந்தன் பதில் சொல்லாமல் சிரிக்க, “சிரிக்காம சொல்லுங்க. அப்படியா?”
“இப்ப தெரிஞ்சு என்னப் பண்ணப் போற?”
“ம்ம்... இனிமே உங்க கிட்ட இருந்து தள்ளி இருக்கப் போறேன்.”
“அது உன்னால முடியாது டி செல்லக் குட்டி.” மனைவியைப் பற்றி தெரிந்தவனாக அரவிந்தன் சொல்ல, “ஆமாம் என்னால முடியாது தான். யார் என்ன நினைச்சாலும் பரவாயில்லை.” என்றவளை தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டான்.
 

Suvitha

Well-Known Member
திலோ திரும்ப வந்தது சந்தோஷம் என்றால் அவள் குழந்தையை கொஞ்சுவதை பார்க்க இன்னும் சந்தோசம். இதே வேகத்தில் பதிவையும் குடுத்திடுங்க ரம்யா.
நன்றி ரம்யா திலோவை கூட்டிட்டு வந்ததுக்கு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top