P17 எந்தன் காதல் நீதானே

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
“சாப்பாடு கட்டி எடுத்திட்டு போவோமா?” என அமுதா கேட்க, “ஒரு நாளாவது சமைக்காம இருங்க. அதெல்லாம் உங்க பையன் வெளிய வாங்கி தருவார்.” என வெண்ணிலா கணவனை ஓரப்பார்வை பார்த்துக் கொண்டு சொல்ல...

“எங்க எப்படியும் உன் பெரிய மாமாவுக்கும் சின்ன மாமாவுக்கும் செஞ்சு வச்சிட்டு தான் போகணும். அது கூட சேர்ந்து எல்லோருக்கும் கட்டு சாதமே பண்ணிடவா அதுதான் கேட்டேன்.”

“அதுதான் உங்க மருமகள் சொல்றாளே... அவங்க ரெண்டு பேருக்கும் சிம்பிள்லா எதாவது செஞ்சு வச்சிட்டு வாங்க.” என்றான் ஜெய்.

யஸ்வந்த் வெள்ளி இரவே வந்துவிட... சனிக்கிழமை அதிகாலையே வீடு பரபரப்பாகியது. வெண்ணிலா, அகல்யா ராதிகா மூவரும் ஒரே மாதிரி சுடிதார் அணிந்து வந்தனர்.

ஜெய் அவனின் நண்பனின் சுமோவை அவனே ஓட்டிக் கொண்டு வந்தான். வெண்ணிலா ஜெய்யின் அருகே முன்புறம் அமர்ந்துகொள்ள, பெரியவர்கள் நடு இருக்கையிலும், இளையவர்கள் கடைசி இருக்கையிலும் உட்கார்ந்து கொண்டனர்.

“புகழ் அண்ணா வண்டியா?” வெண்ணிலா கேட்க ஜெய் ஆமாம் என்றான்.

“உங்களுக்கு கார் ஓட்ட தெரியுமா?”

“இப்படியெல்லாம் உனக்கு சந்தேகம் வருமா... இப்ப என்ன பண்ணிட்டு இருக்கேன்.”

“அப்போ அன்னைக்கு எங்க வீட்டு காரை நீங்களே ஓட்டி இருக்கலாமே. அதுதான் கேட்டேன்.”

“அன்னைக்கு உங்க வீட்ல யாராவது எனக்கு வண்டி ஓட்ட தெரியுமான்னு கேட்டீங்களா? எங்ககிட்ட கார் இல்லை அதனால நீங்களாவே ஓட்ட தெரியாதுன்னு முடிவு பண்ணிடீங்க.”

“அதோட உங்களோடது புது வண்டி. ரொம்ப ஷார்ப்பா இருக்கும். நான் எங்காவது இடிச்சு வச்சேன்னு வை. வீணா மனஸ்தாபம் வரும். நான் பணம் கொடுத்தாலும் உங்க வீட்ல வாங்க மாட்டாங்க. அதுதான் நானும் ஒட்றேன்னு சொல்லலை.”

“இது என் பிரண்ட் வண்டி. நான் என்ன பண்ணாலும் ஏன்டான்னு கேட்க மாட்டான். அதனால எனக்கு டென்ஷன் இல்லை. அப்படியே எதாவது ஆனாலும், நானும் சரி பண்ணித்தான் கொடுப்பேன்.”

கணவன் சொன்னதும் வெண்ணிலாவுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. பேச்சை மாற்றும் பொருட்டு, “நீங்களும் புகழ் அண்ணாவும் ரொம்ப க்ளோஸ் இல்லை. ஆனா அவங்க நம்ம வீட்டுக்கு வர மாட்டேங்கிறாங்களே.”

*********************************************************************************************

முதலில் செல்லும் வழியில் ஒரு ஹோட்டலில் நிறுத்தி காலை உணவை உண்டனர். பின்னே அங்கிருந்து அணைக்கு சென்று சுற்றிப்பார்த்தவர்கள், அருகில் இருந்த நீர் வீழ்ச்சிக்கு சென்று மதியம் வரை அருவியில் ஆடினார்.

வேறு உடை மாற்றிக் கொண்டு மதிய உணவுக்கு சென்றவர்கள், பிறகு அங்கே பிரசித்தி பெற்ற சில கோவில்களுக்கு சென்றுவிட்டு, மாலை ஏழு மணிப் போல வீடு திரும்பினர்.

எல்லோரும் சேர்ந்து சென்றது மிகவும் ஆனந்தமாக இருந்தது. வரும் வழியிலேயே இரவு உணவையும் வாங்கிக் கொண்டு வீடு வந்தனர்.

இருந்த களைப்பில் வந்ததும் எல்லோரும் ஆளுக்கு ஒருபக்கம் உட்கார்ந்து விட, அகல்யா தான் எல்லோருக்கும் உணவு எடுத்து வைத்தாள். எல்லோரும் உண்டுவிட்டு நேரமே படுக்க சென்றனர்.

**********************************************************************************************

கற்பகத்தின் தங்கை பேத்திக்கு திருமணம். இவர்களுக்கும் பத்திரிகை வைத்திருந்தனர். “நீ உங்க வீட்டோட போயிட்டு வா... நான் வரலை.” என ஜெய் சொல்லிவிட... கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் ஒரு வாக்குவாதம் ஆரம்பித்தது.

“ஏன்?”

“எனக்கு வரணும்னு தோணலை.”

“இதெல்லாம் ஒரு காரணமா?” என வெண்ணிலா கோபப்பட....

“இங்க பாரு நம்ம கல்யாணம் திடிர்ன்னு நடந்தது. என்னை எல்லோரும் எதோ வேடிக்கை பொருள் மாதிரி பார்த்தா எனக்கு பிடிக்காது. கொஞ்ச நாள் போகட்டும். அதுக்குள்ள வேற விஷயம் கிடைக்கலாம்.” என ஜெய் சொல்ல...

“நீங்களா எதாவது கற்பனை பண்ணிக்கிட்டு பேசுங்க. இப்படியெல்லாம் யோசிக்கிறவர் என்னைக் கல்யாணம் பண்ணி இருக்க கூடாது.” என வெண்ணிலாவும் பட்டென்று சொல்லிவிட,

“ஏன் டி? ஏன்? உன்னை விரும்பி தொலைச்சேன்னு உனக்கு தெரியும் தானே. பிறகும் இப்படி கேட்டு வச்சேன்னு வை... பளார்ன்னு அறைதான் விழும்.”

“நான் உன்னை விரும்பி கல்யாணம் பண்ணது நமக்குத்தான் தெரியும். மத்தவங்களைப் பொறுத்தவரை, நான் திடீர் மாப்பிள்ளை தான்.”

“நம்மைப் பார்த்தா அங்க கல்யாணத்துல உட்கார்ந்து அலசி ஆராய்வாங்க. அது தேவையா? அதோட இது ஒன்னும் அப்படி முக்கியமான கல்யாணம் இல்லை. நீ உங்க வீட்டோட போயிட்டு வா...” என்றான் முடிவாக.
 

Joher

Well-Known Member
:love::love::love:

ஏன் மாமாக்கள் வெளியே சாப்பிடமாட்டாங்களா???
பேச்செல்லாம் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான் ஜெய்க்கு :mad::mad::mad:

உண்மைனாலும் அவளுக்கு கஷ்டமா இருக்காதா???
ரொம்ப கஷ்டம்டா உன்னோடு.......
உங்கம்மா என்னவோ பையன் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டான்னு நினைச்சுட்டு இருக்காங்க...... நீ யாருக்கும் தெரியாதுன்னு சொல்ற......

வேலைல பிஸினு சரியா கல்யாண நேரத்துக்கு மட்டும் கொஞ்ச நேரம் கூட்டிட்டு போயிட்டு வா........
அட்டெண்டன்ஸ் போட்ட மாதிரிக்கு ஆச்சு...... பொண்டாட்டியும் சந்தோச படுவா.....
உன் பின்னாடி அவங்க என்ன பேசினால் என்ன???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Precap,
ரம்யாராஜன் டியர்

அடடா அந்த சூனியக் கிழவிக்கெல்லாம் தங்கச்சி ஒரு கேடு
அதுக்கு ஒரு பேத்தி
அதுக்கு ஒரு கல்யாணம்
அதுக்கு நீ அவசியம் போகணுமா, நிலா?
போ போ கல்யாணத்துக்கு போய் கற்பகம் சூனியக் கிழவி வண்டி வண்டியாய் உனக்கு கொடுப்பாள்
வாங்கிட்டு வா நிலா
அந்த கண்ணாலத்துக்கு உன்ற புருஷன் வரலேன்னு சொன்னா விட வேண்டியதுதானே
அங்கே தேவையில்லாத நொரநாட்டியம் பேசுவாங்க
இது உனக்கு வேணுமா, நிலா?
நல்லா குளுகுளுன்னு அமைதியா போய்க்கிட்டிருக்கிற வாழ்க்கையை கசகசன்னு ஆக்கப் பார்க்கிறியே, வெந்நீர்நிலா?
உன்னை ஜெய் நல்லாத்தானே வைச்சிருக்கிறான்
டூர்லாம் கூட்டிட்டு போறானில்லே
அப்புறமென்ன உனக்கு?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top