P16 Sangeetha Swarangal

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
#1
திலோத்தம்மா முதல் முறையாக வருவதால்... அரவிந்தன் அவளுக்கு தோட்டத்தை சுற்றிக் காட்டிக் கொண்டிருந்தான். தென்னை, வாழை, தேக்கு என நிறைய வைத்திருந்தனர்.
இவர்கள் இருவரும் சுற்றிக் கொண்டிருக்க.... சின்ன வாண்டுகள் எல்லாம் அங்கிருந்த பம்ப்செட்டில் குளிக்க ஆரம்பித்திருக்க... அவர்களைப் பார்க்க சில பேர் அருகிலேயே இருக்க... மற்றவர்கள் அங்கிருந்து வேப்ப மரத்திற்கு கீழே உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர்.
“இவங்க மாலினி அண்ணி மாதிரி இல்லை. நல்லாத்தான் எல்லார்கிட்டயும் பழகிறாங்க. நான் கூட இவ்வளவு படிச்சு இருக்காங்களே... எப்படி இருப்பாங்களோன்னு நினைச்சேன்.” பூரணி சொல்ல...
“இப்பத்தானே வந்திருக்காங்க, கொஞ்ச நாள் போனாத்தான் உண்மையான குணம் தெரியும்.” என்றாள் வித்யா.
“இல்லை இவங்க மாலினி அண்ணி மாதிரி கண்டிப்பா கிடையாது. மாலினி அண்ணி இருக்கும்போது அண்ணன் எப்பவுமே தலைவலியில இருக்கிற மாதிரிதான் முகத்தை வச்சிட்டு சுத்திட்டு இருப்பாரு. ஆனா இப்ப நல்லா சிரிச்ச முகமா இருக்காரு.” வீரா சொல்ல...
“நான் கூட கவனிச்சேன். என்ன வேலையா இருந்தாலும், கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை அண்ணி என்ன பண்றாங்கன்னு அண்ணன் பார்த்திருக்கிறார். அதே போல அண்ணியும் கொஞ்ச நேரம் அண்ணனை காணோம்னாலும் தேடுறாங்க.” என்றாள் பூரணி.
இவர்கள் எல்லாம் தங்களைப் பற்றித் தான் அலசிக் கொண்டு இருக்கிறார்கள் என தெரியாமல் அரவிந்தனும் திலோத்தமாவும் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.


****************************************************************************************************************

காலை உணவு தயராகிக் கொண்டு இருந்ததால்.... எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது கோவிலின் உள்ளே கார் வந்து நிற்க.... அரவிந்தனும் திலோத்தாமாவும் காரில் இருந்து இறங்கினர்.
இருவரும் தங்கள் திருமண உடையில் இருந்தனர். அதுவும் திலோத்தமாவை பார்த்ததும், எல்லோரும் தங்களை மறந்து அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
எல்லோரின் கவனத்தையும் கவரும்படி சர்வ லட்ச்சனமாக இருந்தாள். வைதேகி மகளை அவ்வளவு அழகாக அலங்காரம் செய்து இருந்தார்.
திலோவுக்கு அதெல்லாம் தெரியவில்லை. இவர்களை பார்த்ததும் பாவனா ஓடி வர.... நலுங்கி இருந்த அவளது ஆடைகளை சரி செய்து விட்டாள். பாவனாவுக்கும் தன்னுடைய நகைகளில் சின்னதாக இருந்தவைகளை அணிவித்து இருந்தாள்.


********************************************************************************************************************

இன்றைய இரவில் இருவரும் மனம் விட்டு பேசிக் கொண்டு இருந்தனர்.
“எல்லோர் கிட்டையும் எப்படி அரவிந்தன் இவ்வளவு பிரியமா இருக்கீங்க. உங்களை எல்லோருக்கும் பிடிக்குது இல்ல...”
“ஹே அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது. நீ என்ன உன் புருஷனை எல்லோருக்கும் பிடிக்கும்ன்னு நினைக்கிறியா? என்னை வேண்டாம்ன்னு எல்லாம் சொல்லி இருக்காங்க.” என்றான் சாதாரணமாக. அப்போது கூட திலோத்தமாவுக்கு அது மாலினி என நினைக்க தோன்றவில்லை.
“நீங்க யாரையாவது லவ் பண்ணி இருக்கீங்களா அரவிந்த்.” அவன் யாரையோ விரும்பி அந்தப் பெண் அவனை மறுத்து விட்டதோ என நினைத்துக் கேட்டாள்.
அரவிந்தனுக்கு சிரிப்புதான் வந்தது. “நீ ஏன் இப்ப இந்த ஆராய்ச்சி எல்லாம் பண்ற?” என்றான்.
 
Joher

Well-Known Member
#2
Tks ரம்யா..........

திலோ பற்றி அலசி தொங்கவிடுறாங்க எல்லோரும்.........:cool:
என்ன இந்த வித்யா........:devilish::devilish::devilish: நச்சுன்னு 4 அடிவாங்காமல் அடங்கமாட்டா போல..........
யாரு கொடுக்க போறாங்க???????? அரவிந்த் அடிக்க மாட்டேன் சொல்லிட்டான்.......... அப்போ அம்மா/husband............

பம்ப்செட் பார்த்தும் குளிக்கலையா???????:eek:
அண்ணா சிரிச்ச முகமா இருக்கிறாராம்......... காதல் களை சொட்டுது போல......:p

என்னை வேண்டாம்ன்னு எல்லாம் சொல்லி இருக்காங்க............
நீ ஏன் இப்ப இந்த ஆராய்ச்சி எல்லாம் பண்ற........
நீ loose talk விட்டால் இப்பெடியெல்லாம் கேள்வி வரத்தானே செய்யும்..........
 
Last edited:

தரணி

Well-Known Member
#9
அச்சோ ஏன் மா நீ தான் மாலினி பத்தி எதுவும் வேண்டாம்னு சொன்ன ....ஆனா உன்னை அறியாமலே அதை தெரிஞ்சிக்க போறீயா..... கண்டிப்பா மாலினி பத்தி முழுசா வராது.... பிடித்தமின்மை பத்தி மட்டும் சொல்லுவனோ
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement