P15 இதய கூட்டில் அவள்

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
“அழலை சிணுங்கிட்டுதான் இருந்தா...” என்றான் வெற்றி.

“என்னை எழுப்ப வேண்டியது தான... இவ்வளவு நேரம் தூங்காமலா இருந்தீங்க.”

“நடுவுல நடுவல தூங்கினேன்...”

ஆதிரை ஓய்வுறைக்கு சென்றுவிட்டு வந்து மகளை தூக்கி சென்று கட்டிலில் உட்கார்ந்து கொண்டு பால் கொடுக்க, வெற்றி கண்ணை மூடி படுத்திருந்தான்.

இருபது நிமிடம் சென்று ஆதிரை மகளை தோளில் போட்டு தட்டிக் கொடுத்து தூங்க வைத்தவள், மகளை தொட்டிலில் போட்டு விட்டு வந்து கணவனின் அருகில் நெருங்கி படுத்து, அவனை அனைத்தும் கொள்ள, வெற்றியிடம் அசைவே இல்லை.

அவன் உறங்கிவிட்டான் என நினைத்த ஆதிரையும் தனது தூக்கத்தை தொடர... மனைவியின் சீரான மூச்சில் அவள் உறங்கி விட்டாள் என தெரிந்ததும், மெல்ல கண் திறந்த வெற்றி, “சாரி டி...” என்றான்.

**************************************************************************************************************

ஆதிரை திரும்ப விழித்த போது மணி ஏழரை. விடியற்காலையில் பால் குடித்து உறங்கியதால் மகளும் விழிக்காமல் இருக்க, பல் தேய்த்து மகம் கழுவி விட்டு வந்தவளுக்கு பசிக்க ஆரம்பித்தது. சமையல் அறைக்கு சென்றாள்.

சமையல் அறையில் பால் கூட காய்ச்சாமல் அப்படியே இருந்தது. இரவு சீக்கிரம் உண்டு விட்டு பால் கூட குடிக்காமல் உறங்கி இருந்தாள். இப்போது பார்த்தால் பால் கூட காய்ச்சியிருக்கவில்லை. பசியில் கோபமாக வந்தது.

மாமியார் இப்படித்தான் என தெரியும். எந்த வேலை எப்போது செய்ய வேண்டுமோ அப்போது செய்ய மாட்டார்.

***************************************************************************************************************

“நேத்து வந்ததில இருந்து வேலைப் பார்த்திட்டு, நைட் குழந்தை அழறது கூட தெரியாம ஆதிரை தூங்கினா?”

“இன்னும் ரெண்டு நாள் இப்படி வேலைப் பார்த்தா காய்ச்சல்ல படுத்திடுவா... அப்புறம் குழந்தைகளை யார் பார்ப்பா? வீட்டு வேலைக்கு ஆள் வச்சிகிறதுக்கு எல்லாம் பெரிய பஞ்சாயத்தா?”

“நானும் தானே உதவி பண்றேன்னு சொல்றேன். ஆதிரை ஒருவேலை பண்ணா, நானும் ஒரு வேலை பண்ணப் போறேன்.”

“நீங்க ஒரு வேலையை எவ்வளவு நேரம் பண்ணுவீங்கன்னு எனக்கும் தெரியும் மா... உங்களுக்கு முடியவும் முடியாது. உங்களுக்கு பொழுது போகலைனா கோவில் குளம்னு போயிட்டு வாங்க. அவ என்ன பண்ணனும்னு எல்லாம் நீங்க சொல்லாதீங்க.”

அம்மாவும் மகனும் பேசுவதில் ஆதிரை தலையிடவில்லை. அவள் வேலைக்காரிக்கு பாத்திரம் எடுத்துப் போட்டு விட்டு வந்தாள்.

**************************************************************************************************************

வெற்றி சென்றதும் மகளை கவனிக்க சென்றாள். ஜோதி கோவிலுக்கு சென்று விட்டார்.

மகளை குளிப்பாட்டி கஞ்சி கொடுத்து படுக்க வைத்தாள். கைகள் பரபரவென்று வேலை பார்த்தாலும், மனம் யோசனையிலேயே இருந்தது. இன்னைக்கு ஏன் இவருக்கு இவ்வளவு கோபம் வந்தது. இப்படியெல்லாம் இருக்க மாட்டாரே என யோசித்துக் கொண்டு இருந்தாள்.

அந்த அறையை துடைக்க வந்த வேலைக்காரி, “அம்மா எப்படி மா இந்த அம்மாவோட நீ இருக்க. கை குழந்தை இருக்கிற வீட்ல எவ்வளவு வேலை இருக்கும் தெரியாதா? இல்லைனா உங்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாதா... எத்தனை பேருக்கு வேலை கொடுத்திருக்கீங்க. வேலைக்கு ஆள் வச்சிகிட்டா என்ன? இந்த அம்மா மட்டும் ஏன் மா இப்படி இருக்கு?” என தன் ஆதங்கத்தை கொட்டினாள்.
 

Joher

Well-Known Member
:love::love::love:

சாரி-டி........ வெற்றிக்கு என்னாச்சு???

விடவும் மாட்டாங்க........ விலகவும் மாட்டாங்க......
நச்சு மாமியார் வீட்டை நரகமாக்குறாங்களே........
நடப்பை பார்த்து பையன் கேள்வி கேட்டால் கூட பொண்டாட்டி சொல்லிக்கொடுத்து கேட்குறான்........

வேலைக்காரிக்கு மகன் சம்பளம் கொடுக்க போறான்....... அப்புறம் என்னவாம்???
இப்படி இருந்தால் இன்னும் 100 வீட்டில் போய் வேலைக்காரி கொட்டமாட்டாளா என்ன???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எவ்வளவு கெட்ட எண்ணம் இந்த ஜோதிக்கு?
இரண்டு குழந்தைகளை அதுவும் பச்சைக் குழந்தையை வைத்துக் கொண்டு ஆதிரை எப்படி வீட்டில் வேலை செய்வாள்?
இதே கிர்த்திகாவா இருந்தால் ஜோதி இப்படி இருப்பாளா?
பொஞ்சாதி ஆதிரையுடன் வெற்றி பேசியது பாண்டிச்சேரியில் ஏதும் பிரச்சனை ஆகிடுச்சா?
ஏன்ய்யா அவன் பொண்டாட்டிக் கூடத்தானே வெற்றி பேசினான்
அடுத்தவன் பொண்டாட்டி கூடவா பேசினான்?
இல்லை ஓவர் தண்ணி அடிச்சதால்
ஏதும் பிரச்சனையா?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
வெற்றி எதுக்கு சாரி சொல்றான்???
இந்த ஜோதியை, காசி ராமேஸ்வரம்னு கோவில் தீர்த்தாடனங்களுக்கு கொஞ்ச நாளு அனுப்பி வைக்கணும்.. அப்பதான் வீட்டில நிம்மதியா இருக்க முடியும்.. ஒரு வேலைக்காரியை வச்சாத்தான் என்ன???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top