P14 தூவானம் தூவக் கண்டேன்

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
#1
விஷாகனுக்கு அதிகாலையே விழிப்பு வர... தந்தையுடன் ஜாகிங் செல்வோம் என நினைத்தவன், அவர்கள் அறைக்குச் சென்று, “அப்பா...” எனக் குரல் கொடுத்து கதவைத் தட்ட... தர்மாவும் அப்போது விழித்துத் தான் இருந்தார்.


தன் தோளில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்த மனைவியை, தலையணைக்கு மாற்றி விட்டு, தர்மா எழுந்தபடி...”உள்ள வா டா..” எனக் குரல் கொடுக்க... கதவைத் திறந்து உள்ளே வந்த விஷாகன், “அப்பா ஜாகிங் போகலாமா?” எனக் கேட்க...


“ம்ம்... பத்து நிமிஷத்துல வரேன்.” என்னும்போது கீர்த்தியும் எழுந்து விட்டாள்.


“அம்மா நீங்க எங்களோட வர்றீங்களா?”


“இல்லை... இன்னைக்கு வெள்ளிக்கிழமை. நான் குளிச்சிட்டு பூஜை பண்ணனும். நீ உன் ரோபோவை விட்டு வீடு கிளீன் பண்ண வச்சிட்டு போ...”


“ஓகே மா...”


“விஷாகன், காலையில டிபன் சாப்பிட்டு, நானும் அம்மாவும் கார்த்தி வீட்டுக்கு போயிட்டு வந்திடுறோம்.” எனத் தர்மா சொன்னதும், “அம்மா ஏற்கனவே அங்க போய்ட்டு வந்திட்டாங்க.” என்றான்.


தர்மா மனைவியை ஒரு பார்வை பார்க்க... “அப்பா வந்திருக்காங்க இல்ல... நாங்க போயிட்டுச் சாயங்காலம் வந்திடுவோம். அவன் நைட் இங்க வரட்டும். அப்பா வரணும்னு அவனும் ஆசைப்படுவான் தான.”


“ம்ம்... சரி, ஆனா நைட் இங்க வந்திடணும்.” என்றான்.

*****************************************************************************************************

இருவரும் நடந்து வந்து போது, எதிரில் விஷாகனுடன் பணிப்புரியும் காவலரின் மனைவி வந்து கொண்டிருந்தார். போனமுறை வந்த போது விஷாகன் தான் அவர்களை அறிமுகம் செய்து வைத்திருந்தான். அப்போது கணவன் மனைவி இருவரோடும் பேசி இருந்ததால் தர்மாவுக்கு நினைவு இருந்தது.


அவர் தர்மாவைப் பார்த்ததும் ஆச்சர்யத்தில், “ஹாய் தர்மா... எப்படி இருக்கீங்க? எப்ப வந்தீங்க? நான் பார்க்கவே இல்லையே...” என முகத்தில் மகிழ்ச்சி ததும்பக் கேட்க...


“ஹாய் மிஸ்ஸஸ் திலீபன். நல்லா இருக்கோம். நேத்து தான் வந்தேன். நீங்க எப்படி இருக்கீங்க?” எனத் தர்மாவும் பதிலுக்கு விசாரிக்க...


“நல்லா இருக்கேன். ஆனா நீங்க எனக்குச் சில டிப்ஸ் தரணும். நிஜமாவே உங்களை நான் முதல் தடவை பார்க்கும் போது விஷாகனோட அப்பான்னே நினைக்கலை. யூ லுக் ஸோ யெங். இப்போ தான் சின்ன வயசுகாரங்களுக்குக் கூட முடி நரைச்சிடுதே... நான் அப்படித்தான் நினைச்சேன்.” எனத் தர்மாவை பார்வையால் அளந்தபடி சொல்லி முடிக்க... ஒட்டிய வயிறு... உரண்டு திரண்டிருந்த புஞ்சங்கள்... அணிந்திருந்த அரைக் கை வைத்த டி ஷர்ட்டில்... தர்மா அப்போதும் அப்படித்தான் இருந்தார்.


தர்மா உடனே மகிழ்ந்து போய் விடவெல்லாம் இல்லை. அந்தப் பெண்மணி சொன்னதற்கு லேசாகப் புன்னகைத்தார் அவ்வளவுதான்.


தர்மா மகனைப் பார்க்க... அவன் விஷமமாகச் சிரித்துக் கொண்டிருந்தான்.


என்ன இவன் ஒருமாதிரி பார்க்கிறான் என நினைத்தவர், “சரி அப்புறம் பார்க்கலாம். திலிபனை கேட்டதா சொல்லுங்க.” எனத் தர்மா விடைபெற...


அந்தப் பெண்மணிக்கு விடைக்கொடுக்கவே மனம் இல்லை. “வீட்டுக்கு வாங்க தர்மா. நிறையப் பேசலாம்.” என அழைப்பு விடுத்தபடி அந்தப் பெண்மணி கிளம்பி சென்றார். கீர்த்தியை விட வயது குறைவு தான் இருக்கும்.

******************************************************************************************************

இதுக்குதான் இவன் அப்படிப் பார்த்தானா என நினைத்த தர்மா, “சும்மா இரு....” என எச்சரித்ததையும் மீறி, விஷாகன் அந்தப் பெண்மணி பேசியதை எல்லாம் சொல்லிவிட்டான்.


“அம்மா, உங்களைப் பத்தி ஒரு வார்த்தை கூட விசாரிக்கலை... அப்பாவை வீட்டுக்கு வேற கூப்பிட்டிருக்கங்க. எதுக்கும் பார்த்து இருந்துக்கோங்க மா...” என்று சொல்ல... தர்மா சோபாவில் கிடந்த சின்னத் தலையணையைத் தூக்கி மகன் மீது எரிய.... அடி வாங்கினாலும் விஷாகன் சிரிக்க...


“போன தடவையே... அவங்க அப்படித்தான் பேசினாங்க.”


“அவங்க உண்மையிலேயே அக்கறையில கேட்டிருக்கலாம் மா...”


“ஏன் நானும் நல்லா தான இருக்கேன். என்கிட்டே அந்த டிப்ஸ் கேட்க வேண்டியது தான...” என மனைவி சொன்னதும் சரியாகத தான் பட்டது.


“அது தானே... அதுவும் ஒரு தடவை தான அப்பாவை பார்த்திருக்காங்க. ஆனா அப்பா பேர் கூட நல்லா நியாபகம் வச்சிருந்தாங்க. எனக்கு எதோ சரியாப் படலை...” என இன்னும், விஷாகன் ஏற்றி விட...


“நீங்க ஏன் அவங்களோட எல்லாம் நின்னு பேசுறீங்க?”


“கீர்த்தி மா... என்ன நீயும் இவனோட சேர்ந்திட்டு பேசுற.... உனக்கு என்னைத் தெரியாதா? அவங்க பேசும் போது நாமும் நின்னு பேசுறது தான மரியாதை.”


“பேசுறதுக்கு ஒரு வரைமுறை இல்லையா... அதுக்காக அவங்க என்ன வேணா பேசுவாங்களா? அவங்க பேசலை... உங்களைப் பார்த்து வழியுறாங்க.”


“சரி விடு இனிமே பார்த்தாலும் நான் பேசலை.” என்ற தர்மா மகனை பார்த்து, “இப்ப உனக்குச்சந்தோஷமா?” எனக் கேட்க... விஷாகன் அப்போதும் விடுவதாக இல்லை.

**************************************************************************************************

அப்பாவை ஓட்ட வைத்து திருப்தி அடைந்தவன், “எதுனாலும் எனக்குப் போன் பண்ணுங்க பா... டிஸ்டர்ப் பண்றதா நினைக்க வேண்டாம். அதே போல அங்க போயிட்டு போன் பண்ணுங்க.” எனத் தர்மாவும் சரி என்றார்.


இவர்கள் எல்லாம் கிளம்பிக் கொண்டிருக்க... அப்போது விஷாகனை பார்க்க யாரோ வந்திருப்பதாக வாயில் காவலர் சொல்ல... விஷாகன் சென்று என்னெவென்று விசாரித்து விட்டு வந்தவன், மிகவும் பரபரப்பாக இருந்தான்.


தனது கைபேசியில் யாருக்கோ அழைத்து, “இந்த மாதிரி விஷயம்ன்னா முதல் ஒரு மணி நேரம் நமக்கு எவ்வளவு முக்கியம்னு உங்களுக்குத் தெரியாதா நந்தா? என்ன நடவடிக்கை இதுவரை எடுத்தீங்க?”


“ஒண்ணுமே இல்லை அப்படிதானே. நேரத்தை வீணாக்கம எல்லாரையும் அலெர்ட் பண்ணுங்க.”


“ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாண்ட் ஒரு இடம் விடாம எல்லா இடமும் செக் பண்ண சொல்லுங்க. எல்லா எக்ஸ்சிட்டையும் உடனே லாக் பண்ணுங்க. சரக்கு வண்டியா இருந்தாலும் சோதனை போடணும்.” என்றவன், இன்னும் வேறு யாருக்கோ அழைத்து உத்தரவுகளைப் பிறப்பித்தவன், டி ஐ ஜிக்கும் அழைத்துச் சொல்லி விட்டு வைத்தான்.


இவ்வளவு நேரம் இருந்த விளையட்டுப் பையனில் இருந்து, கடமை என்று வந்ததும் அப்படியே மாறி இருந்தான். காவல் அதிகாரியின் தோரணை வந்திருந்தது. பெற்றோருக்கு அது நன்றாகவே புரிந்தது.
 
Last edited:

Joher

Well-Known Member
#3
:love::love::love:

நீ இங்கே சிண்டு முடியுறியா :p:p:p
பாரு உனக்கு அங்கே எவனோ முடியுறான் போல.....
ஓடு ஓடு.....
அதென்ன கார்த்திக் வீட்டுக்கு மட்டும் கணக்கு பார்த்து அனுப்புற....... அப்புறம் நைட் வந்துடணுமா???
இதுக்காகவே கார்த்திக் ரெண்டு நாள் புடிச்சு வச்சுக்கணும்.....

அப்பாவை இப்போ கூட சைட் அடிக்கிறாங்களே......
உன்னை எத்தனை பேரு அடிக்கிறாங்க அதையும் சொல்லு.....
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement