P14 இதய கூட்டில் அவள்

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
#1
“நீயேன் டி அவனுக்கு எல்லாம் விளக்கம் சொன்ன. அவனோட நினைப்பு எதுவா இருந்தா நமக்கு என்ன?”

“அவன் உங்களைப் பத்தி பேசுவான், நான் கேட்டுட்டு இருப்பேனா... போடா நீயெல்லாம் என் புருஷன் முன்னாடி ஒண்ணுமே இல்லைன்னு காட்ட வேண்டாம்.”

“அதுக்கில்லை, அவங்க அளவுக்கு கீழ இறங்கி நாம பதில் கொடுக்கணும்னு அவசியம் இல்லைன்னு சொல்றேன். இனி ஒவ்வொரு விஷேஷத்திலேயும் நம்மை பார்க்கத்தான் செய்வாங்க. அப்ப அவங்களுக்கே புரிஞ்சிருக்கும்.”

“இவங்களை எல்லாம் ஆரம்பத்திலேயே தட்டி வைக்கணும். இல்லைனா இன்னும் பேசுவாங்க. எவ்வளவு திமிர் இருந்தா, என்னை எங்க கல்யாணம் பண்ணனும்னு அவன் சொல்லுவான். இனி பேசுவான் அவன்.”

“பாவம் விட்டுடு உன்னைப் பத்தி தெரியாம பேசிட்டான். இனி வாயே திறக்க மாட்டான்.”

“ம்ம்... அந்த பயம் இருக்கணும்.” ஆதிரை சொல்ல,

“ஆதி போதும் இனி அவங்க என்ன பேசினாலும் நீ பேசக் கூடாது சொல்லிட்டேன்.”

******************************************************************************************************************

“வர்ற சனி ஞாயிறு பாண்டிச்சேரியில் எங்க காலேஜ் பிரண்ட்ஸ் கெட் டு கெதர் இருக்கு சொன்னேன் இல்ல... நான் வரலைன்னு சொன்னாலும் பசங்க விட மாட்டேங்கிறாங்க. இதுக்கு முன்னாடியும் நான் போனது இல்லையா... உன் பொண்டாட்டி விடலையான்னு கேட்டு ஓட்டறாங்க.”

“அடப்பாவி நீங்க பண்றதுக்கு பழி என் மேலையா. உங்களுக்கு போகணும்னா போயிட்டு வாங்க.”

“நீ வரும்போது நான் இங்க இல்லைனா நல்லா இருக்குமா?”

“நீங்க தான் சாயந்திரம் வந்திடுவீங்க தானே...பரவாயில்லை போயிட்டு வாங்க.”

“போன தடவை கொடைக்காணல்ல வச்சாங்க. அதுதான் நீங்க போக முடியலை. அடுத்த தடவை எங்க வைப்பாங்களோ தெரியாது. இந்த தடவை பாண்டிச்சேரியில் வச்சிருக்காங்க. நமக்கு பக்கம்தான் போயிட்டு வாங்க.”

“சரி அப்ப வரேன்னு சொல்லிடுறேன். நான் வந்தா விக்ரமும் வரேன்னு சொன்னான்.”

****************************************************************************************************************

இவர்கள் முன் மதிய நேரத்தில் சென்று சேர, அவரே வேலைப் பார்ப்பதாக சொல்லி ஜோதி வீட்டை ஒரு வழியாக்கி வைத்திருந்தார். இவர் படுத்திய பாட்டில் வேலைக்காரி வேலையை விட்டே சென்றிருந்தாள்.

ஜோதி அவரே வீட்டை பெருக்கி, பாத்திரம் கழுவி அப்போது தான் சமையல் ஆரம்பித்து இருந்தார். வாசல் பெருக்கி துணி துவைக்க வேறே ஒருவர் வருவார்.

பேத்தியைப் பார்த்ததும் ஜோதி பேத்தியை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட, கொண்டு வந்த பைகளை ஆதிரையும் சக்தியும் உள்ளே கொண்டு சென்றனர்.

ஆதிரை சமையலை முடிக்க, மகளின் அறையை சுத்தபடுத்தும் வேலையை மங்கை செய்தார். வந்த அன்றே மகள் வேலை செய்கிறாளே என மங்கைக்கு இருந்தது.

*******************************************************************************************************************

இருட்டும் நேரத்திற்குத்தான் வெற்றியும் விக்ரமும் வந்தனர். இருவருமே களைப்பாக இருப்பது பார்த்ததும் தெரிந்தது.

வாசலோடு செல்ல முயன்ற விக்ரமை, வெற்றி தான் வற்புறுத்தி அழைத்து வந்தான். ஆதிரை வந்து “வாங்க...” என... “நல்லா இருக்கியா ஆதிரை.” என்றவன், அப்போதுதான் மனைவி அங்கிருப்பதைப் பார்த்தான்.

“ஏய்... நீ இங்க தான் இருக்கியா.” என அவன் சொல்ல,

“அருணனை விட வந்தேன். ஆதிரை அக்காதான் நீங்க வர்ற வரை இருக்க சொன்னாங்க.” என்றாள் வனிதா.

“டீ போடவா...” வெற்றி விக்ரம் இருவரையும் பார்த்து பொதுவாக ஆதிரை கேட்க, மகளை வைத்திருந்த வெற்றி போடேன் என்றான்.

நேற்று வரை எப்போ வருவ என ஆசையாக கேட்டுக் கொண்டு இருந்தவன், இன்று தன்னை பார்த்தும் அப்படி ஒன்றும் உற்சாகம் காட்டவில்லையே என நினைத்த ஆதிரை, ஒருவேளை விக்ரமும் வனிதாவும் இருப்பதனால் என நினைத்துக் கொண்டாள்.
 
SINDHU NARAYANAN

Well-Known Member
#2
Nice Precap..

இந்த ஜோதி, வேற சும்மா இருக்காம ஆதிரை வர்ற நேரம் பார்த்து வேலைக்காரியையும் வேலையை விட்டே ஓட வச்சாச்சு...
பாண்டிச்சேரியில என்ன நடந்துச்சு??? சரக்கு அடிச்சு வந்துருப்பாங்களோ???
 
Last edited:

Joher

Well-Known Member
#4
:love::love::love:

strict officer ஆதிரையை பார்த்து பம்முறான் போல........ நிறைய தண்ணீ குடிச்சுட்டானோ???

வனிதா ரொம்ப friend ஆகிட்டாளோ?????
அடிக்கடி வர்றாளே.........

மாமியாருக்கு செய்ய முடியாட்டியும் ஏன் இந்த லொள்ளு???
இவங்க பண்ணுற வேலையில் வேலைக்காரி ஓடிபோய்ட்டாளே......
 
Last edited:
#7
அம்மா வீட்டில் ரெஸ்ட் எடுத்த மாதிரி வந்தவுடனே இங்கே தன்னுடைய வீட்டில் ரெஸ்ட் எடுக்க முடியுமா, மங்கையம்மா?
பாண்டிச்சேரியில கெட் டு கெதர்ன்னா
எல்லா கைண்ட் ஆஃப் தண்ணியும்
ஆறாக ஓடியிருக்குமே
விக்ரம் பாடு குஷிதான்
தண்ணியடிச்ச மப்புலதான் வெற்றியண்ணன் பொஞ்சாதி வந்த குஷியை அடக்கி வாசிக்கிறாரோ?
 
Last edited:

Advertisement

Sponsored