P12 எந்தன் காதல் நீதானே

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
#1
இரு சக்கர வாகனத்தில் பொள்ளாச்சி வரை வந்து, அங்கு அவனுக்கு தெரிந்தவர் இடத்தில் வண்டியை விட்டுவிட்டு, இருவரும் கோயம்புத்தூர் செல்லும் பேருந்தில் ஏறினர்.

பேருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே இருவரும் உறங்கி விட்டனர். இரவு நேரம் சென்று உறங்கியது, அதிகாலை எழுந்து அவசரமாக எடுத்து வைத்து கிளம்பியது என இருவருக்கும் போதுமான உறக்கம் இல்லை.

காலை ஐந்து மணிக்கு ஜெய் அலாரம் வைத்து எழுந்தவன், மனைவியை எழுப்ப, வெண்ணிலாவால் கண்ணை திறக்கவே முடியவில்லை.

அவளை பார்க்கவும் பாவமாக இருந்தது. முன்தின இரவு அவளை வெகு நேரம் சென்று தான் உறங்க விட்டிருந்தான்.

“சரி முதல்ல நான் போய் குளிச்சிட்டு வரேன். பிறகு நீ எழுந்துக்கோ.” என்றவன், அவன் குளித்து விட்டு வந்து வெண்ணிலாவை எழுப்பி விட்டான்.

அதற்கு மேல் காலம் தாழ்த்த முடியாது என வெண்ணிலா எழுந்து கிளம்ப, அவள் வருவதற்குள் ஜெய் அறையை ஒழுங்கு செய்து வைத்திருந்தான்.

**********************************************************************************************

வெண்ணிலாவும் சிறிது நேரத்தில் உறங்கிப் போனாள். அவளை மடி தாங்கியவன், அவள் விழுந்து விடாமல் அணைவாக பிடித்துக்கொண்டு வெளியே வேடிக்கை பார்த்தபடி இருந்தான். மேலே வந்தவுடன் தான் மனைவியை எழுப்பினான்.

உறங்கிக் கொண்டு வந்ததால் தலை சுற்றல் வாந்தி எதுவும் இல்லை. இப்போது நன்றாக இருந்தாள்.

“ரொம்ப நேரம் படுத்து தூங்கிட்டேனா... உங்களுக்கு கால் வலிச்சிருக்கும். என்னை எழுப்பி இருக்கலாம்.” என மனைவியின் கவலையைப் பார்த்து, ஜெய் புன்னகையுடன் இல்லையென மறுத்தான்.

முன் மதிய நேரத்தில் ஊட்டியில் சென்று சேர்ந்திருந்தனர். நேராக அறைக்கு சென்றவர்கள், சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு மதிய உணவுக்கு சென்றனர்.

ஜெய் தேவையானது எடுத்து தோள்ப் பையில் வைத்துக் கொள்ள, வெண்ணிலாவும், அவளது கைபையை எடுத்துக் கொண்டாள்.

இருவரும் நல்ல பசியில் இருக்க, மதிய உணவை நன்றாக உண்டனர். மழை தூறிக் கொண்டே தான் இருந்தது.

ஜெய் ஒரு கையில் குடையை வைத்திருந்தவன், மறுகையால் மனைவியை அணைத்தபடி நடந்தே அருகில் இருந்த கார்டனுக்கு அழைத்து சென்றான்.

அங்கேயே ஒரு மணி நேரம் போல இருந்தனர். பிறகு மழை வலுக்க, ஒரு ஆட்டோவில் அறைக்கு வந்து விட்டனர்.

**********************************************************************************************

அவர்கள் செல்வது தெரிந்து, ராதிகா வேண்டுமென்றே அண்ணனை வம்பிழுத்துக் கொண்டிருந்தாள்.

“நம்ம அத்தை வீடு தானே நாங்களும் உங்களோட வரட்டுமா... அத்தை எங்களையும் வர சொன்னாங்க.”

“வாங்க ராதிகா எல்லோரும் போனா நல்லாத்தான் இருக்கும்.” என வெண்ணிலா சொல்ல, ஜெய் முறைத்தபடி நின்றிருந்தான்.

“எங்க இதை உங்க வீட்டுக்காரரை சொல்ல சொல்லுங்க பார்ப்போம்.” என ராதிகா சொல்ல...

“நீ என்கிட்டே அடி வாங்கப்போற டி... போய் வேற வேலை இருந்தா பாரு.” என சொல்லிவிட்டு ஜெய் சென்று விட... இவ்வளவு கோபம் ஏன் என வெண்ணிலா பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எனக்கு தெரியாம வேற எதோ இருக்கா என்ன? உங்க அண்ணனுக்கு என்ன கோபம்?” என வெண்ணிலா கேட்க,

“இப்பத்தான் நீ பாயிண்ட்டுக்கு வந்திருக்க அண்ணி. எங்க அண்ணனுக்கு எங்க நாங்க உங்க அண்ணனை லவ் பண்ணிட போறோம்ன்னு பயம்.” என ராதிகா சொல்ல...

“பாருங்க இவன் மட்டும் உங்களை லவ் பண்ணி கல்யாணம் பண்ணுவானாம். நாங்க பண்ணக் கூடாதாம். நீயே சொல்லு இது நியாயமா?” என்றாள்.

இப்படி ஒரு கதை வேறு ஓடுகிறதா என நினைத்தவள், இவர்கள் பேசுவதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அகல்யாவைப் பார்த்தாள். அகல்யா அண்ணனுக்கு மிகவும் பொருத்தம் என்றே தோன்றியது.

கணவனிடம் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டாள். பேசி நான்றாக வாங்கி கட்டிக்கொள்ள போகிறாள் என அப்போது அவளுக்கு தெரியவில்லை.
 
Joher

Well-Known Member
#3
:love::love::love:

ஏம்பா இப்படி அரக்க பறக்க ஒரு HM தேவையா :p:p:p எப்படியும் மாமியார் வீட்டுக்கு போய்த்தான் ஆகணும்....... என்னைக்கோ போறது புதுமாப்பிள்ளையாவே போயிருக்கலாம்...... வந்து HM போயிருக்கலாம்.......

தங்கச்சிகளுக்குள்ள குணம் அப்படியே இருக்குதும்மா ரெண்டு பேருக்கும் :love::love::love:
விடாதீங்க....... அத்தை வீட்டுக்கு வருவோம் னு போர்க்கொடி தூக்குங்க......
உங்கண்ணி வேற அவளோட அண்ணியா அகல்யா செட் பண்ணிட்டாங்க......
உங்கண்ணன் குறுக்கே வருவான்....... விடாதீங்க உங்க உரிமையை......
 
Last edited:
#6
ஹனிமூன் போயிட்டு வந்தாச்சா?
நல்லது நல்லது
ஏம்மா வெண்ணிலா உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை?
உன்னுடைய கற்பகம் சூனியக் கிழவியிடம் நீ வாங்கிக் கட்டிக்கிட்டது போல அகல்யாவும் அவஸ்தைப்படணுமா?
அந்த பொண்ணு பாவம் அவங்க வசதிக்கு ஏற்றாற் போல் ஏதோ ஒரு நல்ல இடத்தில் வாழட்டுமே
அண்ணனிடம் ராதிகா அடி வாங்கப் போவது நிச்சயம்
அதே போல புருஷனிடம் வெண்ணிலா செமயா வாங்கிக் கட்டப் போறாள்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement