P12 இதய கூட்டில் அவள்

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
வெளியே செல்ல கிளம்பிக் கொண்டிருந்த விக்ரம் வெற்றியைப் பார்த்ததும், “வா வெற்றி, என்ன அதிசயமா இருக்கு.” என்றவன், “வனிதா, வெற்றி வந்திருக்கான், அவனுக்கும் சேர்த்து டீ கொண்டு வா...” என்றான்.

“வாங்க அண்ணா நல்லா இருக்கீங்களா, ஆதிரை அக்கா இல்லாம மெலிஞ்சு போயிட்டீங்க.” என வனிதா சொல்ல...

“அப்படியா?” என வெற்றி கேட்க,

“பசலை நோய் கண்ட தலைவின்னு தான் கேள்வி பட்டிருக்கேன். இப்பத்தான் தலைவனை பார்க்கிறேன். எப்ப பாரு பொண்டாட்டி புராணம் தான்.”

“ரெண்டு குழந்தை பெத்தவன்னு எல்லா சொல்ல முடியாது. இப்பதான் புதுசா கல்யாணம் ஆகி பொண்டாட்டியை பிரிஞ்சிருக்கிற மாதிரி தான் இருக்கான்.”

“ஏன் டா?” என்பது போல வெற்றி பார்க்க,

“பின்ன எல்லோரும் உங்களை மாதிரி இருக்க முடியுமா?” என கேட்டு விட்டு வனிதா உள்ளே செல்ல...

“எனக்கு என் வாயே தான் எதிரி.” என விக்ரம் சொல்ல.. அதைப் பார்த்து வெற்றி பெரிதாக சிரித்தான்.

*******************************************************************************************************************************************

சிவாவும் மேனகாவும் போன்னில் பேசிக் கொள்வார்கள். புடவை நகை எடுத்ததை அவன் சொல்லி இருந்தான். ஆனால் என்ன வாங்கினோம் என சொல்லவில்லை.

“உங்களுக்கு டிரஸ் வாங்கலை.”

“அன்னைக்கு அக்காவுக்கு ரொம்ப நேரம் குழந்தையை வச்சிட்டு இருக்க முடியாதுன்னு வாங்கலை. எனக்கு இன்னொரு நாள் வாங்கணும்.”

“உங்க பிரண்ட்ஸ் கூட போவீங்களா?”

“இல்லை நானும் அக்கா மட்டும் ஒருநாள் போய் எடுக்கலாம்னு இருக்கோம். அக்கா நல்லா எடுப்பா. அவளுக்கு நல்ல டிரெஸ்ஸிங் சென்ஸ்.”

ஆதிரைக்கு அந்த வீட்டில் இருக்கும் முக்கியத்துவத்தை மேனகாவும் உணர்ந்தாள். பேச்சுவாக்கில் மகளிடம் இருந்து எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட மஞ்சுளா, “இப்ப எல்லாம் நிச்சயத்துக்கும்தான் சேர்ந்து போய் எடுக்கிறாங்க. புடவை மட்டும் நல்லா இல்லாம இருக்கட்டும்.” என புலம்ப...அவள் வீட்டில் மேனகா இஷ்ட்டபடிதான் தாயும் தந்தையும் நடப்பர். ஒருவேளை புடவை நன்றாக இல்லையென்றால் என்ற கவலை அவளையும் தொற்றிக்கொண்டது.

*********************************************************************************************************************************************

“அம்மாவை வேற கூடிட்டு வரணும். முன்னாடி நாளே வந்தா வீட்டு காவலுக்கு ஆள் வைக்கணும். அதுக்கு நாங்க காலையில எழுந்து சீக்கிரம் கிளம்பி வங்க வந்திடுறோம்.” என்றான் வெற்றி.

“என்னவோ பண்ணுங்க உங்க இஷ்ட்டம்.” என்றுவிட்டாள் ஆதிரை. நிச்சயத்திற்கு அம்மாவையும் அழைத்து செல்ல வேண்டும். முன் தினமே சென்றால் கீர்த்திகா வீட்டிற்கும் செல்ல வேண்டும் என இழுத்து அடிப்பார். எப்படியும் ஆதிரையோடு இருக்க போவது இல்லை. பிறகு ஏன் செல்ல வேண்டும் என வெற்றி நினைத்தான்.

கீர்த்திகாவின் வீட்டுக்காரர் பெரிய மண்டையாக இருப்பார். அவருக்கு தான்தான் உசத்தி மற்றவர்கள் எல்லாம் மட்டம் என்னும் எண்ணம். ஒழுங்காக பேசவும் மாட்டார். ஆனால் மற்றவர்கள் மட்டும் எப்போதும் தனக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என எதிர்பார்ப்பார். அதனால்தான் கிர்த்திகாவே இங்கே அதிகம் வர மாட்டாள்.

********************************************************************************************************************************************

மஞ்சுளா தன் மூத்த மகள் மட்டும் மருமகனிடமும் புலம்பி இருக்க, ஏற்கனவே மனோஜ் தான் பெரிய ஆள் என்று நினைப்பான். ஆதிரை மற்றும் அவள் கணவனை பற்றி விசாரித்தவன், விவசாயம் தானே பார்கிறார்கள் என எள்ளலாக நினைத்தான்.

சிலர் அப்படித்தான். ஒன்றுமே தெரியவில்லை என்றாலும், எல்லாம் தெரிந்தது போல பேசுவார்கள். தாங்கள் தான் அதிமேதாவி என நினைப்பு.

யாரிடம் யாரைப் பற்றி பேசுகிறோம் என தெரியாமல் உளறி தான் ஆதிரையிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்ள போகிறோம் என அவனுக்கு அப்போது தெரியவில்லை. யார் அந்த ஆதிரை பெரிய ஆளா அவ, நானும் பார்கிறேன் என்ற எண்ணம் மனோஜிற்கு.
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா மஞ்சுசுளாளாஆஆஆஆஆஆஆ?
நீ செய்யுறது உனக்கே நல்லாயிருக்கா?
இன்னும் நிச்சயமே நடக்கலை
அதுக்குள்ளே சிவா என்ன பேசினான்னு பொண்ணுக்கிட்டே விஷயத்தை கறந்துட்டியே
புடவை நல்லாயில்லாட்டி என்ன பண்ணுவாய் மஞ்சுளா?
வேணும்ன்னா நிச்சயத்தன்று உன் பொண்ணை பிளவுஸ், பெட்டிகோட்டுடன்
வந்து நிற்கச் சொல்லு, மஞ்சு

எப்படியெப்படி?
மேனகா சொல்வதைத்தான் இரண்டு பெண்களைப் பெற்ற அவள் பெற்றோர் கேட்பாங்களாம்
அப்போ ஒரே பெண்ணான ஆதிரை மட்டும் என்ன இனா வானாவா?
இவங்களுக்குன்னா ஒரு நியாயம் மத்தவங்களுக்குன்னா வேற நியாயமா?

மனோஜ் பயலுக்கு கட்டம் சரியில்லை போலவே, கட்ட துரை
போ போ போய் அவள் கணவனைப் பற்றி
பேசி ஆதிரையிடம் நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டு வா, மனோஜ்
போதாதற்கு சிவா சகலையிடமும் இவன் வாங்கப் போறான்

விக்ரமின் வீட்டுக்கு வெற்றி எதுக்கு போனான்?
வாட்டு மேட்டரு, ரம்யா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top