P10 Sangeetha Swarangal

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
அர்ச்சனா கிளம்பும் போது பாவனாவையும் அழைக்க... வர மறுத்தவள் அரவிந்தனை தூக்க சொல்ல... அவன் தூக்கி வைத்துக் கொண்டான். காமாட்சிக்கு கூட பாவனா அவள் மாமா வீட்டிற்கு சென்றால்... பரவாயில்லை என தோன்றியது.
அர்ச்சனா எவ்வளவு அழைத்தும் பாவனா வர மறுக்க... “இருக்கட்டும் அர்ச்சனா, நாங்க வரும் போது வேணா அவளையும் உங்க வீட்டுக்கு கூடிட்டு வரோம்.” என்றாள் திலோத்தமா.
அவளுக்கு அர்ச்சனா ஏன் பாவனாவை அழைக்கிறாள் என புரியவில்லை. அரவிந்தனுக்கு புரிந்தது, ஆனால் மகள் விரும்பாமல் அவளை அனுப்ப அவனும் விரும்பவில்லை.
“நான் பார்த்துகிறேன் அர்ச்சனா நீ கிளம்பு.” என்றான்.
அர்ச்சனா மனமே இல்லாமல்தான் முகிலனுடன் கிளம்பினாள். அதன் பிறகு பாவனா அரவிந்தை விட்டு அந்தப் பக்கம் இந்தக் பக்கம் நகராமல் இருக்க... அவனும் மகள் எதோ உறக்க கலக்கத்தில் இருக்கிறாள் என நினைத்துக் கொண்டான்.

***********************************************************************************************************************

வித்யா தான் சாம்பார் வைத்தாள். அவள் வேகமாக செய்வதை பார்த்து, “நீங்க எவ்ளவு பாஸ்ட்டா சமைக்கிறீங்க?” என திலோத்தமா ஆச்சர்யப்பட...
“இப்படி சொல்லி நீங்க சமைக்கிறதுல இருந்து தப்பிச்சிக்க்கலாம்ன்னு நினைக்காதீங்க. மாலினி அண்ணி சமைச்சு நான் பார்த்ததே இல்லை. எங்க அண்ணன் சரி இல்லை. நான் யாரை குத்தம் சொல்ல முடியும். இழுத்து நாலு அறை விட்டிருந்தா என்னைக்கோ திருந்தி இருப்பாங்க.” என்றாள்.
“வித்யா நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. அவங்க வாழ்க்கைப் பத்தி நாம ஏன் பேசணும். அதுவும் செத்துப் போனவங்களை பத்தி தப்பா பேசக் கூடாதுன்னு சொல்வாங்க.”
“நீங்க என்னை சொல்லுங்க ஓகே... நாம அவங்களைப் பத்தி பேச வேண்டாமே.” என்றாள்.
வித்யாவுக்கு என்ன நினைப்பு என்றால்... அண்ணன் மாலினியை அவள் போக்குக்கு விட்டது போல.. எங்கே திலோத்தமாவையும் அவள் இஷ்ட்டதுக்கு விடுவிடுவானோ என ஒரு எண்ணம். அதனால் தான் மாலினியை சொல்வது போல... நீயும் அவள் மாதிரி இருந்து விடாதே என ஜாடையாக திலோத்தமாவுக்கு புரியவைக்க முனைந்தாள்.

**********************************************************************************************************************

“நீயும் போய்ப் படுமா.” காமாட்சி சொல்ல... திலோ அரவிந்தன் அறைக்குள் சென்றாள். கட்டிலில் படுத்து மகளை உறங்க வைக்க தட்டிக் கொடுத்துக் கொண்டு இருந்த அரவிந்தன், அவளைப் பார்த்தும் வரவேற்பாக புன்னகைத்தபடி எழுந்து உட்கார்ந்தான். திலோவும் புன்னகை முகமாக உள்ளே நுழைந்தாள்.
அரைத் தூக்கத்தில் இருந்த பாவனா திலோத்தமாவை பார்த்ததும், “ஆன்டி வேண்டாம் போக சொல்லுங்க.” என்றாள்.
கதவை மூடிக் கொண்டிருந்த திலோத்தமா காதில் கேட்டதை நம்ப முடியாமல் திரும்பி அரவிந்தனைப் பார்க்க.. அவனும் அதிர்ச்சியில் தான் மகளைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
 
Joher

Well-Known Member
Tks ரம்யா.......

அய்யோ புள்ளைக்கு என்ன சொல்லிக்கொடுத்தாள் படுபாவி அத்தை.......

மாலினிக்கு அரை வைக்கலை......
இப்போ உனக்கு 4 வைக்கலாம் தப்பில்லை.......

திலோ reaction?????
Aravind புள்ளையை அடிச்சிடப்போறான்........

கடங்காரி அத்தை......
 
fathima.ar

Well-Known Member
அர்ச்சனா கிளம்பும் போது பாவனாவையும் அழைக்க... வர மறுத்தவள் அரவிந்தனை தூக்க சொல்ல... அவன் தூக்கி வைத்துக் கொண்டான். காமாட்சிக்கு கூட பாவனா அவள் மாமா வீட்டிற்கு சென்றால்... பரவாயில்லை என தோன்றியது.
அர்ச்சனா எவ்வளவு அழைத்தும் பாவனா வர மறுக்க... “இருக்கட்டும் அர்ச்சனா, நாங்க வரும் போது வேணா அவளையும் உங்க வீட்டுக்கு கூடிட்டு வரோம்.” என்றாள் திலோத்தமா.
அவளுக்கு அர்ச்சனா ஏன் பாவனாவை அழைக்கிறாள் என புரியவில்லை. அரவிந்தனுக்கு புரிந்தது, ஆனால் மகள் விரும்பாமல் அவளை அனுப்ப அவனும் விரும்பவில்லை.
“நான் பார்த்துகிறேன் அர்ச்சனா நீ கிளம்பு.” என்றான்.
அர்ச்சனா மனமே இல்லாமல்தான் முகிலனுடன் கிளம்பினாள். அதன் பிறகு பாவனா அரவிந்தை விட்டு அந்தப் பக்கம் இந்தக் பக்கம் நகராமல் இருக்க... அவனும் மகள் எதோ உறக்க கலக்கத்தில் இருக்கிறாள் என நினைத்துக் கொண்டான்.

***********************************************************************************************************************

வித்யா தான் சாம்பார் வைத்தாள். அவள் வேகமாக செய்வதை பார்த்து, “நீங்க எவ்ளவு பாஸ்ட்டா சமைக்கிறீங்க?” என திலோத்தமா ஆச்சர்யப்பட...
“இப்படி சொல்லி நீங்க சமைக்கிறதுல இருந்து தப்பிச்சிக்க்கலாம்ன்னு நினைக்காதீங்க. மாலினி அண்ணி சமைச்சு நான் பார்த்ததே இல்லை. எங்க அண்ணன் சரி இல்லை. நான் யாரை குத்தம் சொல்ல முடியும். இழுத்து நாலு அறை விட்டிருந்தா என்னைக்கோ திருந்தி இருப்பாங்க.” என்றாள்.
“வித்யா நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. அவங்க வாழ்க்கைப் பத்தி நாம ஏன் பேசணும். அதுவும் செத்துப் போனவங்களை பத்தி தப்பா பேசக் கூடாதுன்னு சொல்வாங்க.”
“நீங்க என்னை சொல்லுங்க ஓகே... நாம அவங்களைப் பத்தி பேச வேண்டாமே.” என்றாள்.
வித்யாவுக்கு என்ன நினைப்பு என்றால்... அண்ணன் மாலினியை அவள் போக்குக்கு விட்டது போல.. எங்கே திலோத்தமாவையும் அவள் இஷ்ட்டதுக்கு விடுவிடுவானோ என ஒரு எண்ணம். அதனால் தான் மாலினியை சொல்வது போல... நீயும் அவள் மாதிரி இருந்து விடாதே என ஜாடையாக திலோத்தமாவுக்கு புரியவைக்க முனைந்தாள்.

**********************************************************************************************************************

“நீயும் போய்ப் படுமா.” காமாட்சி சொல்ல... திலோ அரவிந்தன் அறைக்குள் சென்றாள். கட்டிலில் படுத்து மகளை உறங்க வைக்க தட்டிக் கொடுத்துக் கொண்டு இருந்த அரவிந்தன், அவளைப் பார்த்தும் வரவேற்பாக புன்னகைத்தபடி எழுந்து உட்கார்ந்தான். திலோவும் புன்னகை முகமாக உள்ளே நுழைந்தாள்.
அரைத் தூக்கத்தில் இருந்த பாவனா திலோத்தமாவை பார்த்ததும், “ஆன்டி வேண்டாம் போக சொல்லுங்க.” என்றாள்.
கதவை மூடிக் கொண்டிருந்த திலோத்தமா காதில் கேட்டதை நம்ப முடியாமல் திரும்பி அரவிந்தனைப் பார்க்க.. அவனும் அதிர்ச்சியில் தான் மகளைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

Achi Vidya வேலை நல்லா வேலை செய்யுதே
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top