P10 இதய கூட்டில் அவள்

Advertisement

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
“நீங்க என்ன உங்க ப்ரண்டுக்கு சப்போர்ட்டா?”

“அவன் பொண்டாட்டி ஒழுங்கா இல்லைனா அவனும் என்ன தான்டி பண்ணுவான்.”

“அப்ப நான் சரியில்லைனா நீங்களும் வேற ஒன்ன பார்த்துபீங்க, அப்படியா?”

“வேற ஒன்னு பார்க்கிறாங்க. உனக்கே நாலு அறை விட்டு வழிக்கு கொண்டு வர மாட்டேன்.”

“அடிப்பியா என்னை? சரியான காட்டான்.”

“என்ன டி இப்படி சொன்னாலும் சண்டைக்கு வர... அப்படி சொன்னாலும் சண்டைக்கு வர...” என வெற்றி விழிக்க, ஆதிரை அதை கவனிக்கும் நிலையில் எல்லாம் இல்லை.

“ஒரு மனைவியோட கவுரவம் எது தெரியுமா? கணவன் பெரிய வேலையில இருக்கிறதோ, நகையோ, பணமோ, அந்தஸ்த்தோ இல்லை. கணவன் மனதில் மனைவிக்கு இருக்கும் இடம்தான்.”

***************************************************************************************************************************************

மில்லுக்கு வர வேண்டாம்னு சொன்னீங்க. நான்தான் தப்பா நினைச்சிட்டேன். ஆதிரையால முடியும் நம்மால முடியாதான்னு நினைச்சிட்டேன்.”

“ஆதிரை அக்கா கெத்தா உட்கார்ந்து ஆனந்தியை விளாசின மாதிரி என்னால கண்டிப்பா முடியாது. நான் அவகிட்ட கெஞ்சிட்டு இருந்தேன்.”

“யார்கிட்ட எப்படி பேசணும்னு அவங்களுக்கு தெரியுது. எனக்கு அது தெரியலை. ஆனந்திகிட்ட மட்டும் இல்லை. மாணிக்கத்தை என்ன அதிகாரமா வேலை வாங்கினாங்க. எனக்கு அதெல்லாம் வராது. அதுதான் எனக்கும் அவங்களுக்கும் உள்ள வித்தியாசம் இல்லை.”

“நான் அவங்களை மாதிரி ஆக முடியாது. என்ன ஒரு கம்பீரம். அவங்கதான் அங்க இருக்கணும்.”

******************************************************************************************************************************************

“இல்லை... வலி லேசாத்தான் இருக்கு. நான் அவருக்கு போன் பண்ணேன். அவர் இப்ப வந்திடுவார் அவர் வந்ததும் போறேன்.” என ஆதிரை வாசலில் உட்கார்ந்து கொண்டாள்.

ஆதிரைக்கு விக்ரமோடு மருத்துவமனை செல்ல விருப்பம் இல்லை. அதனால் கிளம்பாமல் இருந்தாள். வனிதா ஏன் அக்கா இபப்டி பண்றீங்க? நாம போவோம் அண்ணாவையும் ஹாஸ்பிடல் வர சொல்லிடலாம் என கெஞ்சாத குறையாக சொல்ல... ஆதிரை இரங்கி வருவதாகவே இல்லை.

வார்த்தையை கொட்டிவிட்டால் அல்ல முடியாது என்பது இதுதான். வனிதா பொறாமையில் பேசினாள் என ஆதிரைக்கும் தெரியும். இருந்தாலும் சில சொற்கள் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தி விடும். வனிதாவின் பேச்சு இப்போது வரை ஆதிரைக்கு மறக்க முடியவில்லை. விக்ரமோடு இயல்பாக இருக்கவும் முடியவில்லை. சில விரிசல்கள் விழுந்தால் விழுந்தது தான். கண்ணாடியில் விழுந்த விரிசல் போல... ஓட்டவைத்தாலும் என்னதான் ஓட்ட வைத்தாலும், சில விரிசல்கள் மறையாது.
 

Joher

Well-Known Member
:love::love::love:

I like ஆதிரை...... நல்லா பாயிண்ட் பாயிண்ட்டா எடுத்துவிடுறா......
வெற்றி நல்லாதான்டா act விடுற.....

சும்மானாலம் ஒரு பேச்சு வந்தாச்சு.....
Character assassination..... காலம் முழுதும் துரத்தும்.....
அப்புறம் எப்படி வனிதா கூப்பிட்டதும் ஆதிரை போவானு எதிர்பார்க்கிறாளோ.....
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

ஆதிரை உன்னோட கெத்தே தனிதான்... அதை அப்படியே மெயின்டைன் பண்ணு...

ஒரு மனைவியோட கவுரவம்.. கணவன் பெரிய வேலையில இருப்பதோ, நகையோ, பணமோ அந்தஸ்தோ இல்ல.. கணவன் மனதில் மனைவிக்கு இருக்கும் இடம்தான்... (y)(y)
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு
அப்புறம் ஏன் வெற்றியை விக்ரமுடன்
ஒப்பிட்டு ஆதிரை பேசுறாள்?
ஆதிரை சொல்வது சரிதான்
மனைவி மீது கணவனுக்கு உண்மையான அன்பு இல்லாட்டி நகை, பணத்தை வைச்சுக்கிட்டு என்ன பண்ண?
அச்சோ ஆதிக்கு டெலிவரி பெயின் வந்த நேரத்துல இந்த வெற்றி எங்கே போனான்?
அன்னிக்கு வனிதா அப்படி பேசியதால் இன்னிக்கு விக்ரமின் ஹெல்ப்பை ஆதியால் ஏற்றுக் கொள்ள முடியாது நியாயம்தான்
ஆனால் அதை நினைத்து ஆதி இப்போ பிடிவாதம் பிடிக்கலாமா?
இவளுக்கோ குழந்தைக்கோ ஏதாவது
ஆகி விட்டால்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top