Next Precap of Imaipeeli Neeyadi - E 24

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
#1
“ரோஹி... பவித்ரா உன்னை நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டா... அவளுக்கும் இந்த விஷயம் ரொம்பப் பெரிய ஷாக் தான்... உன்னோட பேசணும்னு சொன்னா... லைன்ல இருக்கா... கொஞ்சம் பேசு மா...”

சொன்ன அன்னையை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு அவர் நீட்டிய அலைபேசியை வாங்கிக் கொண்டவள் “நீங்க போங்கம்மா...” என்றாள் அமைதியாக.

அவளது நிதானமும், அமைதியும் அவருக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது என்றே சொல்லவேண்டும்... அமைதியான பவித்ரா படபடக்கும் பட்டாசாய் பொரிய, எப்போதும் படபடத்து பதிலுக்கு பதில் கூறும் மகளின் இந்த அமைதி அவருக்குப் புரியாவிட்டாலும் அவளிடம் ஏதோ ஒரு பக்குவம், நல்ல மாற்றத்தைத் தந்திருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

அன்னை நகரவும், கதவை வெறுமனே சாத்திவிட்டு கட்டிலில் அமர்ந்தவள் காதில் வைத்து ஹலோவினாள்.

“ஹலோ...” சற்றும் பிசிறில்லாத நிதானமான குரல்.

“ரோஹி... நா...நான் பவித்ரா பேசறேன்...”

“தெரியும்... அத்தை வீட்டு போன் நம்பர் இன்னும் எனக்கு மறக்கலை...” என்றாள் நிதானமாக. உண்மையில் பவித்ராவுக்கு அவளிடம் ஏதேதோ பேசவேண்டும்... சமாதானம் செய்ய வேண்டும் என்று இருந்தாலும் என்ன பேசுவதென்று தெரியாமல் திணறினாள். ஆனால் நிதானமாய் வேறு முடிவுக்கு வந்துவிட்ட ரோஹிணியிடம் அந்தப் பதட்டம் இல்லவே இல்லை.

“நல்லார்க்கியா ரோஹி...” தயங்கிக் கொண்டே கேட்டாள்.

“ரொம்ப நல்லார்க்கேன்... என்கிட்டே உனக்கு என்ன பேசணும்...” நேரடியாய் விஷயத்துக்கு வந்தாள்.
“பவி... நல்லார்க்கியாடி...”


“ஏன் அத்தை... நல்லா இருந்தா நாசம் பண்ணிட்டுப் போகலாம்னு வந்திங்களா...” வார்த்தை கனலெறிந்தாள்.

“பவி... அப்படி சொல்லாதடி... இங்கே நடந்ததெல்லாம் நானும் கேள்விப்பட்டேன்... காலைல மாப்பிள்ளைய டவுன்ல வச்சுப்பார்த்தேன்... ரொம்ப கோபமா பேசினார்...”

“ஓ... அதான் இங்கே எல்லாருக்கும் தெரிஞ்சிருச்சே... இன்னும் ஒருவருஷம் ஆக எதுக்கு காத்திருக்கே... கிளம்புன்னு சொல்ல வந்திங்களா அத்தை...”

“ப்ளீஸ், என்னைக் கொல்லாதம்மா... பணத்துக்கு ஆசைப்பட்டு செய்யக் கூடாத தப்பைப் பண்ணிட்டேன்... அதுக்கு பலனாதான் இப்பக் கிடந்து சீரழியுறேன்... என்னை மன்னிச்சிடு பவி...” கண்ணீருடன் கைகூப்பினார். என்ன இருந்தாலும் யாருமில்லாத அனாதையாய் ஆதரவற்று நின்றபோது அடைக்கலம் கொடுத்த அவரை அப்படிப் பார்க்க அவளால் முடியவில்லை.

“என்னாச்சு அத்தை... சரி உள்ளே வாங்க...” என்றவள் அவரை உள்ளே அழைத்துச் சென்றாள். சோபாவில் அமர்ந்தவரிடம், “மாமா கீதா, ராதா நல்லாருக்காங்களா...”

“ம்ம்... இருக்காங்க... உங்க மாமா தான் சுகமில்லாம கவலையா இருக்கார்... இப்போதெல்லாம் அடிக்கடி உடம்புக்கு வருது... பொண்ணுகளுக்கு ஒரு நல்லதைப் பார்க்க முடியாமப் போயிருவமோன்னு அவருக்கு பயம் வந்திருச்சு...” என்றார் கவலையுடன். “மாமாக்கு என்னாச்சு அத்தை...” அவள் கண்ணிலும் கவலை ஒட்டிக் கொண்டது.
 

Latest profile posts

Site work aguthu yarachum upd podunga
ஆளில்லை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேரும் நிலை என்னவோ
ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல்
காதலில் அரங்கேரும் கதை அல்லவோ
மாதுளம் கனியாட மலராட கொடியாட
மாருதம் உறவாடும் கலை என்னவோ
வாலிபம் தடுமாற ஒரு போதை தலைக்கேற
வார்த்தையில் விலங்காத சுவையல்லவோ
மேலும் மேலும் மோகம் கூடும்
தேகம் யாவும் கீதம் பாடும்


மாமர இலை மேலே ஆ
மாமர இலை மேலே மார்கழி பனிப்போலே
பூமகள் மடி மீது நான் தூங்கவோ
மாமர இலை மேலே மார்கழி பனிப்போல
உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க
தொட்டுப்பார் கட்டிப்பார் தேகம் வேர்க்க
பூஜைக்காக வாடுது தேவன் உன்னைத் தேடுது
ஆசை நெஞ்சம் ஏங்குது ஆட்டம் போட்டுத் தூங்குது
உன்னோடுநான் ஓயாமல் தேனாற்றிலே நீராடத் நினைக்கையில்

பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு
இன்றல்ல நேற்றல்ல காலம்தோறும்
உன்னோடு பின்னோடு காதல் நெஞ்சம்
வன்னப்பாவை மோ
Hii... Frds&siss... AMP 18 epi pottachu...
எனக்கும் தளம் அமைத்து தந்தமல்லி மேடம் க்கு என் நன்றிகள். நட்புக்கள் என்னையும் ஆதரிப்பீர்கள் என நம்புகிறேன்

Sponsored