Neeya? Naana? - Poll (Neengatha Reengaram)

Advertisement

Team Maruthu or Team Jayanthi?

  • Total voters
    53
  • Poll closed .

Sundaramuma

Well-Known Member
காதல் என்ற கோணத்திற்கே இந்த கதை இன்னும் வரவில்லை...
அவனுக்கு பிடித்தது, கை நழுவி போகவிடாமால் கல்யாணம்
பண்ணிக் கொள்கிறான்...
இந்த கல்யாணத்தின் வெற்றி மருதுவின் கையிலேதான்..

மனித மனங்களை புரிந்தவன்,அறிந்தவன், உலக அனுபவம்
உடையவன், அவன் தான் அவளை வழி நடத்தணும்...

அதற்கு முக்கியமாக அவனுடைய காரணமில்லா ,சிறுபிள்ளை தனமான
கோபத்தை விட்டொழித்து அவளுடன் சுமுகமாக இருந்தாலே
அவர்களின் வாழ்க்கை சந்தோஷமே...

ஜெ க்கு அவனோட ஆதர்ஷ் வாழ்க்கை வாழ வேண்டும் ...
அமைய வேண்டும் என்பதே விருப்பம் ...

அவனுடைய கோபத்தையே அவள் பிரதிபலிக்கிறாள்...
அவன் நீ தான் என் வாழ்க்கை என்பதை புரியவைத்தால்
அவளுக்கும் அவனே முக்கியமானவனாக ஆகிடுவான்...
அவனுடைய எதிர்பார்ப்பும் நிறைவேறும்,....

அனுபவமிக்க முன் ஏர் சரியான பாதையில் சென்றால்...
அனுபவமில்லா பின் ஏர் அதையே பின்பற்றிச் செல்லும்...
I totally agree with you (y)(y)(y)
someone need to guide her.....
 
Joher

Well-Known Member
எஸ்....இரண்டு பேரு மேலவும் தப்பு இருக்கு .....

ஆனா தங்களோட ஈகோ விட்டு யார் முதல்ல இறங்கி வரணும்ன்னு பார்த்தா அது மருது தான்.....ஆசை பட்டு கட்டினான் .....இவன் தான் தன்னோட வழிக்கு அவளை கொண்டு வரணும் ......அவ தான் லகான் ஆச்சே ....
அவ போற திசையை இவன் தான் மாத்தணும் ......

Yes உமா......
2 பேர் கிட்டேயும் தப்பு இருக்கு.....

ஆனால் மௌனவிரதம் தொடங்கி வச்சது மருது.....
லாஸ்ட் pc கூட..... அவ கேக்குறதுக்கெல்லாம் பதில் சொன்னேனே சொல்றான்.......
அப்போ இவனா எதுவும் பேசிக்கல......

பெரிய business மேன்.....
வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை உணர்ந்தவன்......
அப்போ அவளுக்கு சொல்லி புரியவைக்கலாமே......

அவன் தனியாக வளர்ந்து தன்னையும் வளர்த்துக்கொண்டவன்.....

ஜெயந்திக்கு அம்மா சரியில்லை....
பொண்ணுக்கு தெரியாவிட்டாலும் சொல்லிக்கொடுக்கவில்லை......
அவங்களுக்கு தம்பி மேல என்ன கோபமோ?????
 
அவன் முகத்தை இவ பிரதிபலிக்குறா ..... ஏர்போர்ட் சீன் மருது நடந்தது கொஞ்சம் கூட சரியில்லை .....
வருவாங்க முதல்ல எல்லோரையும் விசாரிச்சுட்டு தான் கணவன் or மனைவி கிட்ட வருவாங்க ....
இவன் லூசாட்டம் நடந்துட்டு இவளை சொல்லறான் ....

அம்மா தம்பி சொன்னவங்க இப்போ உன் வீட்டுக்காரர் சொல்லறாங்க .....பொண்ணு இல்லாதப்போ
கவனிக்கவும் இல்லை போல இருக்கு ....
 
Vote போட்டாச்சா?
 
D

[Deleted] admin 4

Guest
poll தெளிவா இல்லை ஹமீதா ......யாரு சரின்னு கேட்குறீங்களா இல்லை யார் முதல ஈகோ விடணும்ன்னு
கேட்குறீங்களா ....

ninga yaar side....avlo than....

sari thapppe illaiye..inga rendu perume sari..rendu perume thappu...

avlo than...
 
Suvitha

Well-Known Member
நீயா? நானான்னு இப்போது நிக்குறதுல மருதுவும், ஜெயந்தியும், ஒருத்தொருக்கொருத்தர் சளைத்தவங்களாகத் தெரியலை. ஆனால் மருது, ஜயந்தி எப்படி இருந்தாலும் அவளை விடமுடியாது ன்னு தானே கல்யாணம் பண்ணினான். கண்டிப்பாக வெளிநாட்டிற்கு வேலைக்கு போவாள் என்பது வரை தெரிந்தே தான் நடந்த திருமணம். அப்படி இருக்கும் போது மருது இப்படி முறுக்கிகிட்டு அலையுறதை ஏத்துக்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக தன்னோட காதலைச் சொல்லி அவளை தன்வசப்படுத்துவது அவன் பொறுப்பு.

அதே போல இப்போது இந்த பொண்ணு அவன் ஸ்டோருக்கு கூப்பிடலை என்கிற காரணத்தை வச்சிட்டு அம்மா கூட கூட்டணி போட்டு வேறு கடைகளுக்கு ஷாப்பிங் போறதெல்லாம் ரொம்ப ஓவர். ஏன் அவன் கூப்பிட்டா தான் இவ போவாளாமா? கணவனின் கடை அவளது இல்லையா? கணவன் அதன் திறப்பு விழாவிற்கு பிளைட் டிக்கட் அனுப்பி கூப்பிட்டது போதாதாமா, இந்த ஜெயந்திக்கு...அதிலும் நான் ஷாப்பிங் போன விஷயத்தில் ஜெயந்தி அம்மா மேல செம காண்டுல இருக்கிறேன். நம்ம கடையிலே எல்லாம் கிடைக்கும் போது மற்ற கடைக்கு போகக்கூடாது ன்னு மகளுக்கு சொல்லிக்குடுக்கவுமா தெரியாது இந்த அம்மாவிற்கு. இந்த விஷயத்தில் என்னுடைய சப்போர்ட் முழுக்க முழுக்க மருதுவிற்கே...
 
pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
காதல் என்ற கோணத்திற்கே இந்த கதை இன்னும் வரவில்லை...
அவனுக்கு பிடித்தது, கை நழுவி போகவிடாமால் கல்யாணம்
பண்ணிக் கொள்கிறான்...
இந்த கல்யாணத்தின் வெற்றி மருதுவின் கையிலேதான்..

மனித மனங்களை புரிந்தவன்,அறிந்தவன், உலக அனுபவம்
உடையவன், அவன் தான் அவளை வழி நடத்தணும்...

அதற்கு முக்கியமாக அவனுடைய காரணமில்லா ,சிறுபிள்ளை தனமான
கோபத்தை விட்டொழித்து அவளுடன் சுமுகமாக இருந்தாலே
அவர்களின் வாழ்க்கை சந்தோஷமே...

ஜெ க்கு அவனோட ஆதர்ஷ் வாழ்க்கை வாழ வேண்டும் ...
அமைய வேண்டும் என்பதே விருப்பம் ...

அவனுடைய கோபத்தையே அவள் பிரதிபலிக்கிறாள்...
அவன் நீ தான் என் வாழ்க்கை என்பதை புரியவைத்தால்
அவளுக்கும் அவனே முக்கியமானவனாக ஆகிடுவான்...
அவனுடைய எதிர்பார்ப்பும் நிறைவேறும்,....

அனுபவமிக்க முன் ஏர் சரியான பாதையில் சென்றால்...
அனுபவமில்லா பின் ஏர் அதையே பின்பற்றிச் செல்லும்...
Perfect Sai ka:cool::giggle:
This is what my opinion too.....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top