Neeya? Naana? - Poll (Neengatha Reengaram)

Advertisement

Team Maruthu or Team Jayanthi?


  • Total voters
    53
  • Poll closed .

Sainandhu

Well-Known Member
ஜெ பக்கம், ஒரே ஒரு தவறுதான்....
அவன் டிக்கட் அனுப்பியும் அவள் வரவில்லை...
அது குறித்தும் அவளுக்கு குற்ற உணர்வே...

எந்த இடத்திலும் அவனை தனக்கு கீழாக நினைக்கவில்லை..
சக மனிதனாக தான்அ,வனை நினைக்கிறாள்....

திருமணம் ஆன புது பெண்ணிற்கு புரிதல் இன்மை என்பது
சகஜமான ஒன்றுதான்....
பழக பழக தான்., கணவனின் பழக்க வழக்கங்கள்
அவனின் எதிர்பார்ப்புகள் பற்றிய புரிதல் ஏற்படும் ...
அதற்குரிய கால அவகாசம் அவளுக்கு கிடைக்கவில்லை...
திரும்பி வந்த பிறகும் அதற்கான சந்தர்பங்கள் அமையவில்லை...

வீட்டை அழகுப் படுத்தியவன், மனைவி வருகிறாளே
வீட்டிற்கு தேவையான பொருட்களையும் வாங்கி வைப்போம்
என்று தோன்றவில்லை...
இதில். அவன் வீட்டு உபயோகப் பொருட்களை வைத்து
பிரமாண்ட ஸ்டோர்ஸ் நடத்துகிறான்...irony தான்,

மற்றவர்களால் அவளுக்கு தீங்கு நேரக் கூடாது என்ற அக்கறை மட்டும்
இருந்தால், போதாது....
தன்னாலும் அவளுக்கு தீங்கு நேராமல் பார்த்து நடந்து கொள்ளணும்

அவளுக்காக, அவள் குடும்பத்திற்கு உதவிகளை புரிந்தவன்
அவளுக்காக தான்ஒரு சந்தோஷமான வாழ்க்கையை தர வேண்டும்
என்று உணரவில்லை...

அவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனைகள் இருக்கின்றன
என்பதுவே அவள் குடும்பத்தினருக்கு தெரியாத போது
அவள் அம்மா என்ன அறிவுரை கூறிட முடியும்,...???

Me always with J....
 

Seethavelu

Well-Known Member
ஜெயந்தி வளர்ந்த சூழல் அவளிடம் முதிர்ச்சியை எதிர்பார்க்க முடியாது ஆனா அவளோட அம்மா சொல்லி கொடுக்கணும் தானே அத விட்டுட்டு அவளோட சேர்ந்து வேற கடைக்கு போறது எல்லாம் ரொம்ப தப்பு இன்னைக்கு வேணா ஜெயந்தி நல்லா சம்பாதித்திருக்கலாம் but மருது செய்த உதவி எவ்வளவு பெரிது அதை நினைத்து பார்ப்பது போல தெரியவில்லை அவன் பாவம் தானே அவன் தனக்கு எல்லாமும் ஜதி என நினைப்பதால் தானே இந்த கோபம். ஏர்போர்ட்டில் அவள் தன்னைத்தான் முதலில் தேட வேண்டும் என எதிர்பார்த்தது தவறாக எனக்கு தோன்றவில்லை பொதுவா கணவன் தன் மனைவி தனக்கு முதன்மை கொடுக்கவேண்டும் என தான் நினைப்பான் அதுவும் குறிப்பாக அவளின் பிறந்த வீட்டினர்முன் [ஆனால் அதே மாதிரியான எதிர்பார்ப்பு மனைவிக்கும் இருக்கும்] அவனிடமும் தவறுகள் இருக்கிறது தப்புகள் அல்ல. இருவரும் மனம்விட்டு பேசவேண்டும் புரிந்துகொள்ளல் அனைவருக்கும் பொதுதானே ஆகா என்னோட வோட்டு மருதுவுக்கே :)
 

Sornam

Well-Known Member
Maruthu is a man of hardships and troubles. Being left alone having none to share his views, ideas or feelings he has been tuned to loneliness and single man's decision. Naturally he doesn't know how to move freely with others and he has neither been in a family situation of give and take policy or to forgo petty ego clashes!. He has to learn the art of familylife from jeyanthi and that's what he is actually craving from her. He needs his wife to cradle him , support him and particularly to know about his past. Ofcourse one single word from him would have changed the entire mind set-up of childnatured jeyanthi. But he wouldn't... not because of just ego but because he hadn't done it before... yes there is first time for every thing . In consequent circumstances both of them are equally adamant to give up..... but still then I support maruthu.. as he appears as a child seeking attention - love and priority from his one and only soul mate
 
Last edited:

umamanoj64

Well-Known Member
மருது க்கு தான் என் வோட்..
முதலில் காதல் வந்தது அவனுக்கு தான்.. அவன் செய்யும் செயல்கள் எல்லாமே காதலினால் தான்..அதிகப்பட்ச காதலில் ஈகோ பேய் பிடிச்சுகிச்சு மருதுக்கு...
காதல்னு உணராமல் அவனையே நினைச்சு கல்யாணம் செஞ்சு ஆச்சு ஜதி... வாழ்ந்த சில நாட்களில் அதை இன்னும் மருது உணர வைக்கல அவளிடம்.. கல்வியறிவு இருக்கும் அளவு பொது அறிவு இல்லை அவளிடம்.. அவள் அம்மாவுக்கும் இல்லை... அனுபவ அறிவு இல்லாததால் அவளுக்கு ஈகோ பேய் பிடிச்சு இருக்கு...
ஒருத்தருக்கு ஒருத்தர்
யாராவது பேயை ஓட்டி காதலுக்கு மரியாதை செய்தால் தான் உண்டு..:D
 

Manimegalai

Well-Known Member
என் ஆதரவு மருதுவுக்குத்தான்.
வாழ்க்கையில் எந்த உறவுகளும் இல்லாம சுயம்புவா சாதித்து காட்டியிருக்கான்..
அதனால்தான் ஆரம்பம் முதலே ரொம்ப பிடிச்சது..
அடுத்து அடுத்து வந்த
ஜெயந்தி மீதான
அவனோட அக்கறையான செயல்
அன்பை உணர்த்தலையா...
இன்னும் அவன் உணர்த்தல சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்ல....
அவ்ளோ செய்து இருக்கான்..
வார்த்தையால் நீ இல்லைனா
நான் இல்ல சொல்றது வெத்துவேட்டு...
எப்பவுமே செயல்தான் பேசனும்..
அது மருதுகிட்ட நிறையவே இருக்கு.
 

Saroja

Well-Known Member
ஊரில் வரும் பெண் அம்மாவிடம் ஆவலாக போவது
எதர்த்தம்
இவன்அங்க பிடித்த வீம்பு ஓவர்வீட்டில் இருந்து பேசி சண்டை போட்டு இருக்கனும்
வெளியே போனது தப்பு
அவங்க அம்மாவுக்கு என்ன ஆச்சு
ஜதி செஞ்ச தப்பு உங்கனால வர முடியுமா என கேட்டதான்
பேசி தீர்க்க வேண்டிய விஷயம் பக்குவம் இல்லாத
இரண்டு பேரும் சேர்ந்து பெரிசு பண்ணிட்டாங்க
 
D

[Deleted] admin 4

Guest
Team Maruthu stronger pola :) MAruthu nerraya thittu vangina mathri irunthathu... ana avan side neraya per pola...

iniku episode vanthapram pakkala...epdinu :))
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top