Naan Ini Nee - Precap 30

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
“நான் பதினஞ்சு வயசுல கொடி பிடிச்சு ஊர்வலம் போனவன்.. சரியா முப்பது வயசு நான் சட்டமன்றம் போகும்போது... இவனுங்க வயசை விட எனக்கு அனுபவம் ஜாஸ்தி.. என்னை அப்பாவா தான் பார்த்திருக்கானுங்க.. அரசியல் வாதியா இல்லை...” என்று சக்ரவர்த்தி சொல்லிக்கொண்டு இருக்க,

காதர் அமைதியாகவே இருந்தார். திடீரென்று சக்ரவர்த்தி அழைத்து பேசுவார் என்று நினைக்கவேயில்லை.

அதிலும் ‘தீபனை அங்கேயே இருக்கச் சொல்...’ என்றதும், குழம்பித்தான் போனார்.

“அந்த தர்மா பையனுக்கு போன் போட்டு ஆர்த்தி பொண்ண நேரா இங்க கூட்டிட்டு வர சொல்லு.. செட்டுக்கு போட்டு வீட்டுக்கு வர சொல்லு..” என,

“இல்லங்கய்யா.. அது தீபன் தம்பி...” என்று காதற் இழுக்க,

“நான் சொன்னதை செய்...” என்றார் அதிகாரமாய்..

-------------------------------------

D – வில்லேஜ்... அங்கேயே எதோ ஒரு குடிலில் தான் அவள் இருக்கிறாள் என்று தெரியும். அவன் வந்திருப்பது அனுராகாவிற்குத் தெரியாது.. தெரிந்தாலும் அவள் எதுவும் செய்யப் போவது இல்லை.

இது உன்னுடைய இடம். நீ வருவது எல்லாம் சாதாரணம். ஆனால் நான் வருவது அப்படியல்ல..

இப்படிதான் இருந்திருக்கும் அவளின் எண்ணம்..!!

தீபனோ அங்கே வந்து இரண்டு மணி நேரம் ஆனது.. அவனின் பிரத்தேய குடிலில் இருக்க, அட்மினும் அவனோடு இருக்க,

“தேவையில்லாம யாரையும் அலோ பண்ணாதீங்க..” என்று சொல்லிக்கொண்டு இருந்தான்.

“ஓகே சார்.. பட்..” என்று அவர் பழைய நிகழ்வுகள் எண்ணி யோசனையாய் பார்க்க,

“ஐ வில் டேக் கேர்..” என்றவன் அவர் செல்லவும்,

அனுராகாவைப் பார்க்கச் செல்ல வேண்டும் என்று எண்ணிய மனதை இழுத்துப் பிடித்து, வெறுமெனே வாக்கிங் செல்ல, அன்றைய தினம் பார்த்து நல்ல கருமேகங்கள் சூழ்ந்து சூழலே இதமாய் இருக்க, அவனைச் சுற்றி இருக்கும் பிரச்னைகள், அவனுள் இருக்கும் உணர்வுகளின் கலவைகள் என எல்லாம் விடுத்து, சுற்று சூழலை கவனித்தபடி நடந்துகொண்டு இருந்தான்.

-----------------------------

நானே நானே நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

சொல்லாமல் கொள்ளாமல் இப்பாடல் வரிகள் தான் நினைவில் வந்து தொலைத்தது அனுராகாவிற்கு.. அதுவும் மனதளவில்.. உடல் மொத்தமும் அவனில் சாய்ந்திருக்க, அவன் அவளில் உறைகிறானா இல்லை அவள் அவனில் கறைகிறாளா என்று எதுவும் விளங்கவில்லை..

எதையும் விளக்கவும் முடியா சூழல் அது..

உன்னிடம் நான்.. என்னிடம் நீ.. இதுமட்டுமே அங்கே..

“ராகா....” என்று உச்சரித்தபடி அவனிதழ்கள் போடும் முத்தக் கோலம் எல்லாம் அவளுக்கு வேண்டியதாகவே இருந்தது..

இத்தனை நாள் பிரிவென்பது எல்லாம் எங்கோ ஓடி ஒளிந்துகொள்ள, அனுராகாவோ அவளின் தீபனின் கரங்களில்..




 

Joher

Well-Known Member
:love::love::love:

யோவ் என்னய்யா சண்டை கோழியாட்டம் சிலிப்பிட்டு நின்னீங்க......
இப்போ அனுவோ தீபன் கரங்களில்......

அம்மா தாரா உங்க பொண்ணு என்ன பண்ணுதுண்னு பாருங்க......
நீங்க இப்படியே இருந்தால் அனுராகா தீபனா தான் உங்க பொண்ணு வருவா......

அரசியல்வாதி சக்கரவர்த்தி வீட்டுக்குள்ளும் வர்றாரா???
உஷா என்ன பண்ண போறாங்க?
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
சக்கரவர்த்தி தன்னோட ஆளுமையை காட்ட ஆரம்பிச்சிட்டார்.. பிரச்சனையை முடிப்பாரா இல்லை அவரை அது எங்கே நிறுத்துமோ ...

ராகா மேடம் தீப்ஸ் கூட இருந்த ஊடல் போச்சா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top