Naan Ini Nee - Precap 15

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
“தீபன்.. ஒண்ணும் தெரியாதது போல பீகேவ் பண்ணாத நீ..” என்று அனுராகா அடிக்குரலில் சீர,
“சீரியஸ்லி... எனக்கு ஒண்ணுமே தெரியாது.. ராகா...” என்று அவனும் சொல்ல,

“இதை நான் நம்பனுமா??!!” என்றவள், “அந்த போன் நீயே வச்சுக்கோ.. என்னவேனா பண்ணிக்கோ.. பட் நான் உன்னை தேடி மட்டும் வரமாட்டேன்..” என,

“ஹா ஹா இதைவச்சு நான் என்ன செய்ய... ம்ம் ஒன்னு பண்ணலாம்.. இதை நான் யூஸ் பண்ணிக்கிறேன்..” என்றான் அவனோ பிடிவாதமாய்..

“என்னது??!! ஆர் யூ ஜோக்கிங்...”

“நோ நோ.. யூ க்னோ.. எனக்கு உன்னோட போன் ரொம்ப பிடிச்சிருக்கு.. கைக்கு அடக்கமா.. ஐ லவ்ட் இட்.. இனி இதுதான் என்னோடது.. என்னோடது தான் உன்னோடது ஓகே வா..” என,

--------------------------------------

“நான் இப்படி கேட்கிறேன்னு தப்பா நினைக்கவேணாம்.. முன்னாடியே எங்க வீட்ல நான் பேசினது தான்.. இப்போ உங்க கிட்டயும் கேட்டிடலாம்னு தோணிச்சு..” என்று உஷா சொல்ல,
லோகேஸ்வரன் தாராவை பார்க்க, அவரோ ‘எனக்கு ஒன்னும் தெரியாது..’ என்று முணுமுணுக்க

“தாரக்கிட்ட இன்னமும் சொல்லலை.. உங்க ரெண்டு பேரையும் வச்சிட்டுத்தான் பேசணும்னு இருந்தேன்..” என்ற உஷா,

“எனக்கு அனுவை ரொம்ப பிடிச்சு இருக்கு. எங்க வீட்ல எல்லாருக்கும் தான்.. எங்க வீட்டுக்கு அனு மருமகளா வந்தா நல்லாருக்கும்..” என்றதும், லோகேஸ்வரன் முகத்தினில்
அப்படியொரு சந்தோசம்..
-------------------------------------------------------


“அப்பா நான் நாளைக்கு இருந்து ஆபிஸ் போறேன்..” என்று அனு சொல்ல,

“அதுக்கென்னடா தாராளமா!!” என்று லோகேஸ்வரன் சந்தோசமாய் சொல்ல,

“இப்போவே சொல்லிட்டேன்.. எனக்கு எதுவும் தெரியலைன்னா கேட்பேன்.. அது இல்லாம நீங்க எந்த தலையீடும் செய்யக்கூடாது..” என்று அனுராகா சொல்ல,

“கண்டிப்பா.. என்னோட பொண்ணு பேச்சுக்கு மறுப்பேது..” என்ற லோகேஸ்வரனிடம்,

“அது வீட்டு விசயமா இருந்தாலும் அப்படித்தானே இருக்கணும்..” என, அனுராகா குழப்பமாய் பார்த்தாள்.
--------------------------------

“இந்த டீடைல்ஸ் டெலி ஆகலையே...” என்று அனுராகா கேட்க,

“அது மேம்.. இது அன்னபிசியல்...” என்று மேனேஜர் சொல்ல,

“வாட்??!!” என்று அதிர்ந்த அனு, “ஓகே.. இது யாருக்கு போச்சு.. பட் இம்மிடியட் ரிட்டன் ஆகிருக்கு.. அன்னபிசியல் சொல்றீங்க நீங்க??” என,

“மேம்.. இது எப்போதும் நடக்குறது தான்.. எப்பவும் ரிட்டன் வராது.. பட் திஸ் டைம் தான் இப்படி...” என்றார் அவரும்.

“யாருக்கு பணம் போனதுன்னு கேட்டேன்...”

“மினிஸ்டர் சக்ரவர்த்தி ஏற்பாடு பண்ணிருக்கிற பொதுக்கூட்ட செலவுக்கு...” என்று மேனேஜர் தயங்கி தயங்கி சொல்ல, அது இன்னமும் அவளுக்கு ஒருவித அதிர்ச்சி..
தொழில் – அரசியல் இரண்டும் இப்போது ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து தான் இருக்கிறது என்பது அனுராகாவிற்கு நன்கு தெரியும்..

ஆனால் மினிஸ்டர் சக்ரவர்த்தி யாரோ அல்லவே.. அதிலும் அந்த பொதுக்கூட்டம் தீபனின் ஏற்பாடு என்பது அவளுக்கு நன்கு தெரியுமல்லவா??!!
 

Joher

Well-Known Member
Tks சரயு.......

அப்பாவோட underground link with தீபன் family தெரிஞ்சுடுச்சா????

போன் வேற கொடுக்கல........ இருக்குடா தீபா உனக்கு வேட்டு........

உஷா கேட்பது மூத்தமகனுக்கா ரெண்டாவது மகனுக்கா????

கைக்கு அடக்கமா......... I loved it....... இனி இதுதான் என்னோடது......... என்னோடது தான் உன்னோடது........ ஓகே வா........
போன் மட்டும் தானா........ இல்லை போன் ownerம் சேர்ந்தா?????:p:p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top