my short story

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
இளமைக்கு வழி விடு



அன்றும் காலையிலே ஆரம்பித்துவிட்டார் சதாசிவம். “பார்வதி, உன் பையன் படித்து விட்டு இன்னும் எத்தனை நாளுக்கு தான் ஊர் சுற்றுவான், நான் இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் கஷ்டப்படுவது. கம்பெனிக்கு வாடா என்றால், நிர்வாகத்தில் தலையிடாமல் இருந்தால் வருகிறேன் என்கிறான், இவனுக்கு என்ன தெரியும், வெறும் காலேஜ் படிப்பு, அனுபவம் கூட இல்லை, எப்படி இவன் இந்த நிர்வாகத்தை நடத்துவன்.” என்று புலம்பிதள்ளினார்.

பார்வதி அமைதியாக, “எங்க, நமக்கு பிறகு எல்லாமே அவனுக்கு தானே. எத்தனை நாள் நாம் இருப்போம், நமக்கு ஏதாவது ஆனால், அவன் தானே பொறுப்பு எடுத்துக்கொள்வன். அதை இப்போதே கேட்கிறான். அதுவும் ஒரு வருடம் மட்டும் பாருங்கள், நான் செய்வது சரியில்லை என்றல், பின் உங்களிடம் விட்டு விட்டு நீங்கள் சொல்வதை செய்கிறேன் என்கிறான், அதில் என்ன கஷ்டம் உங்களுக்கு?.” “நீங்களே பையனை நம்பவில்லை என்றால் என்ன செய்வது”
“சரி பார்வதி, உன் பேச்சை கேட்கிறேன், வரும் நாளில் இருந்து அவனை வரச் சொல், நான் எதிலும் தலையிடமாட்டேன்.” என்றார் சதாசிவம்.

பிரச்சனை இது தான். சதாசிவத்தின் மகன் முருகன் MBA பட்டதாரி. சுதந்திர போக்கு உடைய நல்லவன். தன் தந்தையின் கட்டுபாட்டில் இருக்கும் மில் நிர்வாகத்தில் எந்த முயற்சிக்கும் தடை சொல்லும் தந்தையின் கண்டிப்பால், அவருடன் சேர்ந்து வேலை செய்யமுடியாமல், தன்னிடம் தனியே நிர்வாகத்தை ஒரு வருடம் தாருங்கள் என்று கேட்டு , இன்று பெற்று கொண்டான். அவனின் கீழ் நிர்வாகம் செயல்படதுவங்கியது. பார்வதி அம்மாவுக்கு தினம் குடைச்சலும் ஆரம்பித்தது.
“உன் பையன் என்ன நினைத்துக்கொண்டு, இப்படி செய்கிறான், ஆட்களுக்கு இரு வேளை கம்பெனி கணக்கில் அவர்கள் இருக்கும் இடத்துக்கே டீ அனுப்புகிறான். ஒரு நாளின் உற்பத்தி அளவை தொட்டுவிட்டல் எப்போது வேண்டுமாயின் ஒய்வு எடுக்கலாம் என்கிறான். உற்பத்தியை பொறுத்து அவர்களுக்கு கூலி உயர்த்துகிறான். அவன் நிர்வாகம் பார்த்து முடிவதுக்குள் என் கம்பெனி திவால் தான்.” என்று அவரின் புலம்பலால் பார்வதி தன் விதியை நொந்து, பார் விதியாகி போனார். ஒரு வருடமும் முடிந்தது. அன்று ஆடிட்டரிடம் இருந்து வந்த ரிப்போர்ட்டை வைத்து கொண்டு சதாசிவம் திணறிக்கொண்டு இருந்தார். அந்த வருடத்தின் லாபம் மட்டும் இரு மடங்கு. நிர்வாகம் திவால் ஆகும் என்ற அவரின் எண்ணம் தான் திவால் ஆனது. எப்படி இது சாத்தியம், அவருக்கு புரியவில்லை. எதிரே புன்னகையுடன் இருந்த தன் மனைவி, மகன் முகம் பார்த்தார்.

“என்ன அப்பா, ஒன்னும் புரியவில்லையா?, நம் ஆட்கள் டீ குடிப்பது என்று தினமும் நேரம் விரயமாவதை முதலில் குறைக்க தான் அவர்கள் இருக்கும் இடத்துக்கே டீ அனுப்பி வைத்தேன். உற்பத்தி கொஞ்சம் உயர்ந்தது. அதன் பின் இது தான் உற்பத்தியின் டார்கெட் என்று அதை தொட்டுவிட்டால் ஒய்வு என்று அறிவித்தேன். அது கொஞ்சம் பயன் தந்தது. பின் உற்பத்தி அதிகரித்தால் அவர்களுக்கும் சிறப்பு ஊதியம் என்றேன். அவர்களுக்கு பயன் தந்தது. நமக்கும் பயன் தந்தது. இது தான் அப்பா இந்த வெற்றிக்கு காரணம்.” என்றான் முருகன்.

சதாசிவம் ஒன்றும் சொல்லாமல் தன் மகனை கட்டிபிடித்து, “முருகா, சின்னவங்களை தட்டி கொடுத்தால் முன்னேறுவார்கள், இளமைக்கு என்று உயர்வு உண்டு என்ற பாடத்தை உன் மூலம் கற்று கொண்டேன். நீ அந்த அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்ரமணியன் தான்.” என்றார்
பார்வதி கண்கலங்க அப்பா, பிள்ளையை பார்த்து கொண்டு இருந்தார்
 

murugesanlaxmi

Well-Known Member
சகோதரிரிரிரி, எனக்கு நெஞ்சுவலியே வந்துவிட்டது, நீண்டநாளுக்கு பிறகு உங்கள் கமெண்ட்ஸ். வெற்றி வெற்றி. {அடபாவி, நேற்று பேசி விட்டு, இப்படி ஒரு கமெண்ட்ஸ். என்ற உங்கள் மனகுரலை நான் புரிந்து கொண்டேன் சகோதரி. ஹா ஹா ஹா }
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top