சகோதரி உமா சரவணணுக்கு,
இது உங்களுக்கான கடிதம் இல்லை சகோதரி. என்னுடன் இந்த "முகில் இனமே முகவரி கொடு" என்ற உங்கள் நாவல் படித்த அல்லது படிக்கும் என் சகவாசகனுக்கு, இதில் நீங்கள் வெறும் பார்வையாளர் மட்டுமே.
ப்ரெண்ட்ஸ், நாம் படிக்கும் நாவலை இது குடும்பநாவல், கிரைம்நாவல், காதல் கதை, பழிவாங்கும் கதை என ஏதாவது ஒரு வகையில் சேர்க்கலாம். ஆனால் இந்த நாவல் அனைத்தையும் உள்ளடக்கிய நாவல். இது எந்த வட்டத்திலும் சேராது. அதற்கே அவரை பாராட்டலாம்.
பொதுவாகவே நான் எந்த நாவலின் கதையும் சொல்லமாட்டேன். ஏன் எனில் ஒரு நாவல் படிக்கும்போது எனக்கு ஏற்படும் ஒரு ஆர்வ உணர்வு என் சகவாசகனுக்கும் ஏற்பட வேண்டும் என நான் நினைப்பேன். அதனால் நாவலை பற்றி மேலோட்டமாகவே கூறுவேன். ஆனால் இந்த நாவலை பற்றி நான் எது கூறினாலும் கொஞ்சமே சொல்லமுடியும். ஏன் என்றால் இந்த நாவல் அதுக்கும் மேலாக இருக்கும்.
சில சில உதாரணம் மட்டும் சொல்கிறேன், இந்த நாவலின் உரைநடை அழகாக இருக்கும் அதில் சில,
- எண்ணம் போல் வாழ்க்கை எவருக்கும் வாய்ப்பதில்லை,
- வாழ்க்கை போல் எண்ணம் கொண்டு வாழ்வது துயரமில்லை.
- எங்கு எதிர்ப்புகள் பொய் ஆக்கபடுகிறதோ, அங்கு ஏமாற்றம் மிதமிஞ்சி போகும்,
- வலிகளையும் துன்பங்களை அதிகம் தாங்குபவரை மேலும் சோதித்து பார்ப்பதே விதிக்கு வேடிக்கையானது
இப்படி பல பல....................
ஒரு இடத்தில் முன்னாள் மனைவிக்கு இந்நாள் மனைவி முன் தாலி கட்டுவது போல் ஒரு நிகழ்வு. அங்கு உமா சகோதரி இந்நாள் மனைவியின் மனஉணர்வுக்காக 'சாமிகளே சாமிகளே' என்ற பாட்டின் சில வரிகளை போட்டிருப்பார். அதில் ஒரு ஆச்சரியம், இந்த பாடல் இடம் பெற்ற படத்தின் பெயர் கூட என் புருஷன்தான் எனக்கு மட்டும் தான் என்பதாகும்.
அதுபோல் சூர்யாவும் – அருளும் சந்திக்கும் போது அக்னிநட்சத்திரம் படத்தில் பிரபுவும் – கார்த்திக்கும் சந்திக்கும் போது இளையராஜா ஒரு இசைகோர்வை செய்திருப்பார் அதுமட்டுமல்ல மிஸ்டர் பாரத் படத்தில் சத்தியராஜ், S.V.சேகர் ரஜினி மூன்றுபேரும் டெண்டர் எடுக்கும் காட்சியில் ஒரு இசைகோர்வை வரும். அது சூர்யா, முரளி, அருள் இவர்கள் டெண்டர் எடுக்கும் போது அந்த இசையும் நம் காதில் கேட்கும்படி செய்தது சகோதரியின் எழுத்துக்கு கிடைத்த வெற்றி. எப்போதோ கேட்ட இசை உணர்வை தட்டி எழுப்புவது சகோதரியின் வெற்றியே, இப்படி சொல்லி கொண்டே போகலாம்.
அம்மா என்ற ஒரு சொல்லில்
அகிலமும் அடங்கிவிடுகிறது..
உறவுக்கும் உணர்வுக்கும் அர்த்தம் கற்பிக்கிறவள்
அன்பு’ எனும் சொல்லுக்கு அர்த்தமாகிறவள்..
முதல் சொந்தம்
முதல் பந்தம்
முதல் முத்தம்
முதல் கண்ணீர்
முதல் சொல்
முதல் உணர்வு
முதல் துடிப்பு என
அனைத்திற்கும் முதலாமவள்
அம்மா!
{கவிதை சகோதரி ஆர்த்தி ரவி}
என்று அம்மா மீது பாசம் வைத்து தந்தை {முரளி} மறந்து, தாயே நீயே, என உயர்வு ஒன்றே குறிகோள் கொண்டு அந்த தாய்க்கான உரிமை பெற்று வாழும் சூர்ய வேந்தன் ஹீரோ. இவரை பற்றி சொல்லவேண்டும் எனில் பலா பழம் போன்றவர். கருவா பையன் ஆனால் கருத்தான பையன். கருத்தில் நினைத்தவளை கைபிடித்தவர். மாற்றாம் தாய் பெண்ணான தீபாவையும் தன் உடன் பிறந்தவளாக நினைத்து திருமணம் செய்து வைத்தவர். அனாதையான ஜீவாவுக்கும் சிறப்பு செய்தவர்.மொத்தத்தில் வில்லன் போல் தெரிந்து பின் வில்லளான் ஆனாவர்.
நிந்தித்தேன் உனை மட்டுமே
சிந்திக்கவில்லை உனை கடந்து…
இதயத்திற்கு இதம் தருகிறாய்
நினைவுருவில்…
இதயத்தைப் பதம் பார்க்கிறாய்
நிகழ்வுருவில்…
இதில் நீ யார் நிசத்தில்?
புரியாத புதிராய்
மனதில் சதிராடுகிறாய்…
இருப்பினும் இதயத்தில்
வரித்து வைத்த காதலுக்கு
வடிவமாய் உன் உருவமே…
இப்படிக்கு,
என்றும் உனை நிந்தித்திருக்கும் காதல் நெஞ்சம்!
{கவிதை சகோதரி ஆர்த்தி ரவி}
என்று மனதில் காதல் இருப்பது தெரியாமல் வாழும் மனகுரல் தைரியநாயகி நிலா ஹீரோயின்.{ இவர் அடிக்கடி பாடும் கருவாபையா, கருவாபையா சூப்பர்}. நாம் பெண் பிள்ளைகளை எதையும் சகித்திடு, பொறுத்திடு என கூறி வளர்ப்பவர்கள். அது தவறு என நமக்கு புரியும்படி, கொடுமைக்கு குரல் கொடுக்கும் வீரபெண் இந்த நிலா. நல்ல படைப்பு.
மற்றும் அருள், இவரை பற்றி கூறவேண்டுமாயின் நல்லவர்,பின்கொஞ்சம் தடுமாறி மீண்டும் நல்லவர் ஆன சகமனிதன், சாரசரிமனிதன். ஆனால் பாவம் ரம்யாவிடம் மாட்டி முழிபிதுங்குகிறார். இவருக்கு ரம்யா தான் சரியான ஜோடி. இறுதியில் சூர்யாவை அண்ணன் என்று கூப்பிட்டு வாசகரிடமும் நெருங்கிவிட்டர். ரம்யா எமலோகவாசலிலும் எகபோகமாக ரசிக்கும் பெண், வாசகரின் கண்.
ஜீவா ரணகளதிலும் குதுகலம் கேட்கும் நல்லவன். அவனுக்கு ஜோடி தவறை தீயாக சூடும் தீபஓளியான தீபா. நல்லவள்,நாணயம் மிக்கவள்.
என் வானில் இரு வெண்ணிலா என இருக்கும் முரளி, அவரின் வெண்ணிலாக்கள் மகேஸ்வரி, சுதா, மற்றும் பிரபு – மாலா, கடைசி வரை திருத்தாத ஜக்கு பாட்டி{அவர் வருந்தும் ஒரே விஷயம் அவர் அருந்தும் நிலாவின் காபி} – வாழும் வரை நல்லவர் வீரபாண்டி தாத்தா,உதயகுமார், ருத்ரமூர்த்தி, அவரின் அடியாள் ஜான், அவரின் வில்லன் மகன் வினோத் என யாரையும் விட முடியாத பாத்திரபடைப்புகள். அருமையானவர்கள்
நாவலில் அங்கங்கே திருப்பம் வரும். ஆனால் நாவலே திருப்பமாக வருவது இந்த நாவல் மட்டுமே. அதனால் என் சகோதரி ஒருவர் இவருக்கு வைத்த பெயர் ட்விஸ்ட் ராணி {எ} சஸ்பென்ஸ் திலகம். அது இந்த நாவல் படிக்கும் போது எவ்வளவு பொருத்தம் என்பதை உணர்வீர்கள் ப்ரெண்ட்ஸ்.
சகோதரி அருமை நாவலுக்கும் என் வாழ்த்துக்கள். பல மாதங்களுக்கு முன் எழுதிய இந்த நாவலுக்கு காலதாமதமான என் விமர்ச்சனத்தை பொறுத்துக்கொள்ளுங்கள்.
அன்புடன் V.முருகேசன்
அருமை, மிகவும் அருமை, சகோதரரே
உமா டியரின், இந்த ''முகிலினமே முகவரி
கொடு'' நாவலைப் படித்து, சூப்பராக
கமெண்ட்ஸ் எழுதியிருக்கிறீர்கள்
வெல்டன், சகோதரரே