MOONLIGHT KADHAL EPISODE 5 (PART 2)

Advertisement

Mers

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் 5.2


அப்போ இவங்க ரெண்டு பெரும் தான் ஜோடியா அதனால தான் அருண் பைய கிடைச்ச வேலைய விட்டுட்டு ஜெர்மனிக்கு அவசரமா போனானா என்னடா இது 2கி ஸ்கேம் கேஸ் போல தோண்ட தோண்ட பூதாகாரமா இருக்கு . அம்மைக்கு தெரியுமா .இவன் ரைம்ஸ் மாதிரி எல்லாத்தையும் ஒப்பிப்பானே . ஆனா அம்மை ஏதும் நம்மட்ட சொல்லலையே ...



அட ஆண்டவனே இங்க ஒருத்தன் மண்டைய பிச்சிகிட்டு இருக்கான் அதுங்க அங்க கண்ணும் கண்ணும் நோக்கியாவா இருக்குதுகுகளே . நம்ம கொஞ்சம் வளந்திருக்கலாம் ஜூம் மோட் வரமாட்டேங்குதே என்று புலம்பியவாறு எட்டி எட்டி பார்த்துக்கொண்டு இருந்தான்

அங்கே மேகியோ தான் கனவில் கண்டது நிறைவேறி விட்டதாய் நினைத்தாள் . ஆம் அவள் கனவில் தினமும் ஒரு ஆடவன் முழங்காலிட்டு அவளுக்கு மோதிரம் அனுவிப்பான் . கூடவே யூ ஆர் மைன் போரேவேர் என்று சொல்வதையும் கேட்டு இருக்கிறாள் . இத்தனை நாளும் அது ரிச்சி தான் என்று எண்ணி எண்ணியே அவன் மேல் மேலும் காதலை வளர்த்தவள் . அவன் தான் அடிக்கடி யூ ஆர் மைன் என்று சொல்லிக்கொண்டே இருப்பான் அதுனாலே என்னவோ அந்த கனவில் வருபவன் ரிச்சி என்றே நம்பினாள் . இந்த கனவு விஷயத்தைக் கூட ரிச்சியிடம் அவள் கூறியது இல்லை . அவன் மோதிரம் அணிவித்த அன்று அவன் கைகளைக் கோர்த்துக் கொண்டு இந்த நிஜம் கனவில் நடப்பதை விட ரொம்ப ஹாப்பி ஆஹ் இருக்கு என்று சொல்லி அவனை காதலோடு அணைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறாள் .



ஆனால் அவன் வேறொரு பெண்ணிற்கு மோதிரம் அணிகின்ற புகைப்படத்தை தான் பார்த்து நைஸ் பேர் மேட் போர் ஈச் அதர் என்று கமெண்ட் பண்ணுவோம் என்று கனவிலும் அவள் நினைத்ததில்லை.



இது தான் நிஜம் கனவு நிழல் என்று நினைத்துக் கொண்டாள் . பிறகு அந்த கனவு அவளுக்கு வரவில்லை. ஆனால் கடந்த ஒரு வாரமாக மீண்டும் அந்த கனவு வருவதை அவள் உணர்ந்திருந்தாள் . ஆனால் அதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை . ரிச்சிக்கு தான் நிச்சியம் முடிஞ்சாச்சே பிறகென்ன என்று . ஆனால் அவளுக்காய் நான் காத்திருப்பேன் என்று சொன்ன ஜீவனை அவள் மறந்தாளா இல்லை அவள் நினைவடுக்கில் அவன் இல்லையா என்று தான் அவனுக்கும் தெரியவில்லை இவளுக்கும் ஆராய தோன்றவில்லை



அனால் இன்று அருண் செய்த காரியத்தை நினைத்தவள் அழகையுடனே பதறியவளாய் "அருண் " என்று உரக்க விழித்தாள்



சுந்தரத்திற்கு அவள் அருண் என்று உரக்க அழைத்தது எதுவோ சரியில்லை என்ற தோன்ற மேலே போக படிக்கட்டை அடைந்து சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே அவள் அறைக்குள் நுழைந்தான் . என்ன தான் அவளிடம் அக்கா என்று உரிமையுடன் பேசினாலும் பழகினாலும் அவள் அரைக்கெல்லாம் அவன் வந்ததில்லை . முதல் முறையாய் அவள் அறைக்குள் நுழைகிறான் . அங்கே அவன் கண்ட காட்சி மேகி அருணை சரமாரியாக அறைந்தது தான்



பதறியபடி அவர்கள் அருகில் சென்றவன் . அக்கா பொறுமையா இருங்க பேசிக்கலாம் என்று அவள் கையை பற்ற முயல்கையில் அருண் அவனை நோக்கி " அழகு விடுடா . அவ அடிக்கட்டும் அப்போவது அவ கோவம் எல்லாம் வடியட்டும் . நீ போ நான் வரேன் ".



அழகு " அம்மை உன்ன அதிர்ப்பாத்துட்டு இருப்பாவ . இன்னைக்கு வீட்டுல விருந்தே தயார் பண்ணிருக்காவ . அதுதான் அக்காளையும் கூட்டிட்டு போலாம்னு வந்தேன் . இப்போ ஏதும் சரியில்லை அப்புறமா பேசிக்கலாம் . நீ வா நேரஞ்செண்டு போனா ஐய்யாக்கு நீ தான் பதில் சொல்லணும் ".



அருண் " இல்லடா பரவ இல்ல எல்லாம் பேசிட்டு நான் வரேன் . அம்மைக்கிட்ட நான் மதியம் செவ்வந்திய கூட்டியாரேனு சொல்லிரு . நான் பாத்துக்கிறேன் . நீ போ " என்று கண்ஜாடை காட்டினான்



அருண் அவர்களை திரும்பி திரும்பி பார்த்தவாறே அங்கே இருந்து செல்ல அடி எடுத்து வைக்க அவள் புறம் திரும்பி இந்தாங்க பொங்கல் உங்களுக்கு புடிக்குமேனு கோயில் போயிருந்தப்போ நான் கூட சாப்பிடாம உங்களுக்கு கொண்டுவந்தேன் .



அவள் இவர்கள் பேசின அந்த சிறு இடைவேளையில் தன்னை சுதாரித்து முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டாள் . அவன் நீட்டினதை அவள் வாங்கி அதில் சிறு துவளையை தன் வாயில் வைத்து சுவைத்து "பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு " என்று வராத சிரிப்பை வா வா என்று அழைத்து உதட்ட்டில் ஒட்ட வைத்துக் கொண்டாள் .



அவளை ஒன்றும் சொல்லாது சிரித்த முகத்துடனே வெளியேற போக " டேய் அல்லஸ் குட்டே ஸும் கேபர்ட்ஸ்தாக் (Alles Gute zum Geburtstag)" என்று சொல்லி அவனை நோக்கினாள்



இது வேறு பாஷைன்னு தெரியுது ஆனா என்னனு தான் விளங்களை என்று பொலம்பினான் சுந்தரம்



அருண் அவனை பார்த்து சிரித்துக் கொண்டே " உனக்கு ஹாப்பி பர்த்டே ஜேர்மன் ல சொல்றா ".



ஓஹ் அப்புடியா "தாங்கே தாங்கே "



ஆச்சர்யமாய் அவனை நோக்கிய மேகி " எப்புடி அழகு ஜெர்மன்ல தாங்கியூ சொல்ற "



அழகு அருணை பார்த்தவாறே " இந்த தடிமாடு போன்ல பேசுறப்போ எப்போ பாரு போற வர புள்ளைக கிட்ட இத தான் சொல்லுவான் . என்னடா அப்டினு கேட்டா தாங்யூ னு சொன்னான் அதான் கற்பூரமா புடிச்சுக்கிட்டேன் "



மேகி " சூப்பர் டா . அப்போ உங்க நொண்ணன் அங்க போய் இந்த வேல தான் பாத்திருக்கான் . பெரிய கேடி டா இவன் . ஒரு புள்ளைங்கள விட மாட்டான் காலேஜ் படிக்கிறப்போ மேப் வச்சு சுத்திட்டு இறுந்தாண்டா .நாங்க கூட கேட்டோம் என்னடா சைட் அடிக்கிறதுக்கும் மேப்க்கும் என்ன சம்பந்தம்னு அதுக்கு இந்த டாக் என்று அருணின் மண்டைய ஆட்டிட்டே " மேப்ல எந்த ஸ்டேட்ல நான் இன்னும் கவர் பண்ணலனு கண்பியூஸ் அகிர கூடாதுன்னு மார்க்கர் கைல வச்சு அப்போ அப்போ மார்க் பண்ணிப்பேன் . ஒரு ஸ்டேட்க்கு ஒன்னு தான் சோ மொத்தமா 29 ஸ்டேட் . மாசத்துல 30 இல்லனா 31 நாள் கணக்கு . ஒன்லி 2 டேஸ் தாண்டா ரெஸ்ட் எனக்கு " என்று பாவமாய் சொன்னவனை அவன் நண்பர்கள் கூட்டம் கய் முஷ்டிகள் முறுக்கி கொண்டே "அப்போ பெப்ரவரி மாசம் என்னடா பண்ணுவே . அதுல 28 நாள் தானே இருக்கு ."



அதற்கு அருண் " சீட்டு குலுக்கி ஆட் வுமன்(odd woman ) அவுட் பண்ணிருவேண்டா இல்லனா ராக் பேப்பர் சிஸர் வச்சி ஜட்ஜ் பண்ணனும்டா என்று முகத்தை தொங்க போட்டு சொன்னனவனை கய் தொங்கி போற அளவுக்கு அடிச்சு துவம்சம் பண்ணிட்டாங்க என்று சொல்லி விழுந்து விழுந்து சிரித்தாள் .



இதை கேட்ட அழகு " ஓஹோ படிக்க அனுப்பிச்சா துரை இந்த வேல தானா . நான் கூட நெனச்சுருக்கேன் இன்ஜினியரிங் படிக்கிறவனுக்கு எதுக்கு இவ்ளோ மேப்னு . அப்போ என்ன சொன்ன எல்லா ஸ்டேட் ல இருக்கிற IT கம்பனியும் மேப் பண்ணி அதுல பெஸ்ட் சூஸ் பண்ணி , கேம்பஸ் ட்ரை பண்ணி , அப்டி பண்ணி இப்டி பண்ணினு எத்தனை பண்ணி போட்ட என் வெள்ள பண்ணி "என்று அவனும் கோதாவில் இறங்க



மேகியும் அழகும் அவனை குமிய வைத்து கும்மாங்குத்து குத்தி விட்டு தான் நிமிர்ந்தனர்

நிமிர்ந்த அருண் ஐ அனைத்து விடுவித்த அழகு "எவ்ளோ அடிச்சாலும் தாங்குற டா நீ ரொம்ப நல்லவன் ... அவ்வ்வ்வ்வ்வ் " என்று வடிவேல் பாணியில் சொல்லி சிரித்தான்



அருண் " சேரி ரெண்டு பெரும் அழகாய் சிட்டுவேஷன் டிஸ்ட்ராக்ட் பண்ணிட்டீங்க . சூப்பர் குட் ஜாப் . ஆனா எனக்கு ஏதும் மறக்காது. அழகு நீ வீட்டுக்குப் போ . நாங்க ரெண்டு பேரும் வரோம்

" என்று சொல்லிக்கொண்டே மேகியை அழைத்துக் கொண்டு பக்கத்து ரூம் சென்று தாழ் இட்டுக் கொண்டான்



அழகு கதவை தட்டி " டேய் கல்யாணத்துக்கு அப்பறோம் தான் மத்ததெல்லாம். ஞாபகம் வச்சுக்கோ அம்மை கண்ணீர் அருவியை தெறந்துச்சுன்னா சரவணா ஸ்டோர்ஸ் ஆபர் ல சீல வாங்கி குடுத்தாலும் நிக்காது டே . பாத்துக்கோ சொல்லிப்புட்டேன் அவ்ளோதான் ".



அருண் "வாய மூடிட்டு போ அவன் அவன் இங்க எந்திருச்சு நீக்கவே முடியல இதுல .... போடா டாக் கடுப்ப கெளப்பாத "



அழகு " சேதாரம் இல்லாம வீட்டுக்கு வந்து சேறு . அக்கால கொடும படுத்தாதே . எதுனாலும் பேசி தீர்த்துக்கோ "



உள்ளே சென்றவுடன் நீண்ட நேரம் அவள் ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் .



அருண் " நீ இப்போ என்ன சொல்ல வர அம்மு "



அதற்கு மௌனமே பதிலாய் நின்றவளை ஒன்னும் செய்ய முயலாதவனாய் . அவள் அருகில் சென்று அவள் தோள் தொட்டுத் திருப்பி " ஸ்பீக் அவுட்" என்று கர்ஜித்தான்



மேகி நிதானமாக " கல்யாணம்னு வந்தாள் கண்டிப்பா நான் அவரை முதலாவதா கன்சிடெர் பண்ணுவேன்னு நான் ப்ராமிஸ் பண்ணிற்கே. இது நடந்து ஒரு 2 இயர்ஸ் இருக்கும். ஆனா அப்ரோ அவர் என்ன டிஸ்டர்ப் பண்ணல. நானும் அவர் நடவடிக்கை பார்த்து அவர் இன்னொருதுங்க மேல இன்டெர்ஸ்டெட்ன்னு நெனச்சு விட்டுட்டே . பட் அவரோட நான் பேசிட்டு தான் உன்ன பத்தி நான் யோசிக்க கூட முடியும்



அருண் " யாரவன் ?" என்றான் கைகள் மார்புக்கு குறுக்கே கட்டியவாறு வெகு நிதானமாய்



மேகி " உனக்கு தெரிஞ்சவர் தான் " என்று மென்னு முளிங்கினாள்



அருண் " நான் யாருன்னு மட்டும் தான் கேட்டேன் "



அவள் வெகு நிதானமாய் உச்சரித்த பெயரைக்கேட்டு சந்தோஷப்படுவதா இல்லை குழப்பமாவதா என்று தெளிவாக குழம்பினான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top