MMT - 1

Advertisement

Rhea Moorthy

Writers Team
Tamil Novel Writer
மாலத்தீவுகளின் தென் கோடியில், இந்தியப் பெருங்கடலின் நடுவில், ஆழ்கடலின் அமைதியினை அனுபவித்து ரசித்தபடி, தனது தொலைதூர பயணத்தினை மேற்கொண்டு இருந்தது, ஒரு சிறிய வெள்ளை நிற சொகுசு படகு. அத்தனை அழகிய சொகுசு படகிற்கு சொந்தக்காரன், தஞ்சை மண்ணினை பூர்வீகமாகக் கொண்ட மாயன் எனும் உலகப் புகழ் பெற்ற புகைப்பட கலைஞன்.

அவன் ஒரு மிகச் சிறந்த புகைப் படத்தினை எடுப்பதற்காக, தகிக்கும் எரிமலை முகட்டிலும், நடுங்கும் பனிப் பிரதேசத்திலும் நாட்கணக்காக காத்திருக்கும் குணம் கொண்டவன். வருடம் ஒரு முறை வெளிவரும் அவனுடைய புகைப்பட தொகுப்பினை காண்பதற்கே, பல லட்சங்களில் அனுமதிச்சீட்டு விற்கப்படும். எனில் அவனுடைய புகைப்படத்தின் மதிப்பினை நீங்களே கணக்கிட்டு அறிந்து கொள்ளுங்கள்.

தாவி வந்து தழுவிய கடல் காற்றினை, தவிர்க்க மனமின்றி படகின் நுனியில் நின்று, பறவைபோல கைவிரித்து, மனமுருக ரசித்துக் கொண்டிருந்தான் மாயன். அவனுக்கு பின்னால் ஒய்யாரமாக கால்நீட்டி அமர்ந்துகொண்டு, மதுவினை கணக்கு வழக்கின்றி தொண்டையில் சரித்துக் கொண்டிருந்தான் அசோக். இருவரும் பால்ய காலம் தொட்டே நெருங்கிய நண்பர்கள்.

ஒருவன் இயற்கையை ரசிப்பதிலும், அதை உயிரோட்டத்தோடு படம் பிடிப்பதிலும் வல்லவன். மற்றொருவனோ தன் வாழ்வில் எதையுமே ரசிக்கும் பழக்கம் இல்லாதவன், ஆனால் வியாபார துறையில் வித்தகன். ஆரம்ப காலத்தில் மாயன் எடுத்த புகைப்படங்களை, எவ்வாறு பள்ளியின் கவனத்திற்கு கொண்டு சென்றானோ, அதே போல முட்டி மோதி இன்று உலகின் சந்தைக்கும் கொண்டு வந்துவிட்டான்.

இவ்விருவருக்குமான ரசனைகள் வேறு பட்டாலும், நட்பெனும் பந்தத்தால் இரு சிகரங்களும் இன்றுவரை ஒற்றுமையாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. இப்போது மாயன் தன்னுடைய நெடுநாள் கனவாகிய மதுராந்தகத் தீவிற்கு புகைப்படம் எடுக்க கிளம்பிட, அசோக் தனது விடுமுறையை கொண்டாடும் விதமாக அவனோடு இணைந்து கொண்டான்.

கடல் காற்றை கைவிரித்து ரசித்துக் கொண்டிருந்த மாயனைப் பார்த்து அசோக், 'தம்பிக்கி பெரிய டைட்டானிக் ஹீரோனு நினைப்பு, கார்னர்ல நின்னு கடலை ரசிக்குறதப்பாரு. கிளம்பும்போதே ரெண்டு பொண்ணுங்கள தள்ளிட்டு போவோம்டானு படிச்சு படிச்சு சொன்னேன். கேட்டாத்தான?!' என்று மெல்லமாக முணங்கினான்.

மாயன், "அண்ணே.. நேத்த விட இன்னிக்கி உயரத்துக்கு வந்துட்டோம், ஸோ நாமளும் மத்தவங்கள மாதிரி லைஃப்ப என்ஜாய் பண்ணியே தீரனுங்கிறது, சரியான வாழ்க்கை முறை இல்ல. எந்த உயரத்துக்கு போனாலும் சரி, எவ்வளவு பள்ளத்துக்கு போனாலும் சரி, இப்டித்தான் நான் இருப்பேன், இதுதான் என் குணம்னு சொல்றதுதான் சரியான வாழ்க்கை."

அசோக், "இந்த தத்துவத்தை அடுத்த தடவை நம்ம ஃபோட்டோ எக்ஸிபிஷன்ல எழுதி வைக்கிறேன், எத்தன பேர் நின்னு வாசிக்கிறாங்கனு நினைக்கிற?"

மாயன், "ஒரு நாயும் திரும்பிப் பாக்காது"

"தெரியுதில்ல, இங்க பணம் தாண்டா எல்லாம். பணம் இருந்தா நீ தப்பா சொன்னாலும் சரி, பணம் இல்லனா நீ சரியா சொன்னாலும் தப்பு."

"ஆனா எவ்வளவு பணம் இருந்தாலும், என் மனசுக்கு எது சந்தோஷம் தருதோ அதைத்தானடா நான் செய்ய விரும்புவேன்?"

"என்னமோ பண்ணு, ஆனா தனியா இருக்கும்போது பண்ணு. வெளியுலகத்துல நான் சொல்ற மாதிரி நீ நடந்துக்கிட்டா மட்டும்தான் நமக்கு கல்லா கட்டும் மகனே."

"ஷப்பா, மொக்க போடாம நீ போய் உன் வேலையப்பாரு. நான் போய் என் வேலைய பாக்குறேன்."

அவன் சொன்னதும் ஞாபகம் வந்தவனாய், காலியாய் இருந்த தன் மது கிண்ணத்தில் மதுவை நிறைத்துக் கொண்டு வந்த அசோக், "அதுசரிடா, நீ இவ்ளோ எக்ஸைட் ஆகுற அளவுக்கு இந்த தீவுல என்னதாண்டா இருக்கு?" என்றான் அசோக்.

"இது உலகத்துலேயே ரொம்ப புராதனமான தீவு. செவன்டீன்த் சென்ட்சுரில ஜேக்கப்ங்கிற ஒரு வெள்ளக்காரன் இந்த தீவ கண்டுபிடிச்சான். அந்த தீவுக்குள்ள ஆவரேஜ்ஜா இருபது அடில, இரநூறு டன் வெயிட்ல நிறைய சிலை இருக்குது. அதைத்தான் இப்போ நான் போட்டோ எடுக்கப் போறேன்."

"அங்க கொண்டுபோய், எவன்டா அந்த சிலையெல்லாம் வச்சது?"

"அங்க பல வருஷத்துக்கு முன்னால நிறைய ஆதிவாசி ஜனங்க வாழ்ந்தாங்க. அவங்களுக்கு அப்பவே கலைத்திறன், கலாச்சாரம், தனி மொழி அப்டினு நிறைய தனித்தன்மை இருந்திருக்கு. அவங்கதான் அந்த சிலை எல்லாம் செஞ்சது."

அசோக் மதுவின் மயக்கத்தையும் மீறிய பீதியோடு, "டேய் மவனே, இப்போவும் அங்க ஆதிவாசி இருக்காங்களா? எனக்கு வாழ்க்கையில சாதிக்க நிறைய இருக்குடா, பொசுக்குனு போட்டுகீட்டு தள்ளிரப்போறாங்க."

"ஹா.. ஹா.. இல்ல மச்சி, எயிட்டீன்த் சென்ட்சுரில வெள்ளக்காரங்க இந்த தீவு மக்கள அடிமை வணிகத்துக்கு யூஸ் பண்ணிக்க, தூக்கிட்டு போயிட்டாங்க. அவங்க கையிலிருந்து தப்பின சிலரும் அம்மை நோயால இறந்து போயிட்டதா, பல வருஷத்துக்கு முன்னாலே நிறைய ரிப்போர்ட்ஸ் வந்திடுச்சு. இப்போ அது ஆளில்லாத தீவுதான், அதோட புராணத்தை பாதுகாக்க, நினைக்குது இந்திற அரசாங்கம். அதனால ஒரு சில விஷயங்களுக்கு மட்டும்தான் ஸ்பெஷல் பர்மிஷன் கொடுக்கிறாங்க."

"ஏதோ நீ சொல்றனு, நான் நம்பி வர்றேன்டா."

அன்று அந்தி மாலைப் பொழுதினில் அவர்களின் சொகுசு படகு மதுராந்தகத் தீவினை நெருங்கிற்று. அகன்று விரிந்த மலைகளோடு, பச்சைப் பசேலென பசுமை நிறமாய் செழித்து வளர்ந்திருந்தது அந்த மதுராந்தகத் தீவு. தெரியாத இடத்தில், இரவு நேரத்தில், உன்னை செல்ல விடமாட்டேன் என்று அசோக் வம்படியாக மாயனை படகைவிட்டு இறங்கவே விடவில்லை. நண்பனின் பிடிவாத குணம் தெரிந்த மாயனும் பொழுது விடியும் வரையில் படகிலேயே காத்திருக்க முடிவெடுத்தான்.

அவன் சும்மா இருந்தாலும் அவனின் கை சும்மா இருக்காதே!... அன்றிப் பொழுதில், ஆதவனின் ஒளிக்கற்றைகளை, ஆடைகளாய் சூடியிருந்த அந்த அழகிய மலைத்தீவு அவனது கவனத்தை வெகுவாகவே கவர்ந்தது. படகிலிருந்து பார்ப்பதற்கே அழகில் பிரமிக்க வைத்த அம்மலையை, புகைப்படமாக்க அவனது விரல் துடித்திற்று.

விருட்டென்று உள்ளே சென்றவன் தன்னுடைய விலை உயர்ந்த கேமராவை எடுத்துக்கொண்டு வந்தான். இடம் பொருள் பார்த்து, க்ளிக் செய்யும் நொடிதனில் "மாயா..." என்றொரு பெண் குரல் காற்றில் வந்து அவன் செவிகளில் மோதிற்று.

அக்குரலில் இருந்த காந்தம், அவனின் இரும்பு இதயத்தை ஈர்க்க, "யாரு? யாரது?" என்று கத்தினான்.

படகின் உள்ளறையில் இருந்து வெளிவந்த அசோக், "டேய் என்னடா? ஏன் கத்துற?" என்றான்.

"மச்சி, யாரோ என் பேர் சொல்லி கூப்பிட்ட மாதிரி இருந்தது."

"அடேய், நாம இருக்கிறது நடுக்கடல்ல. அலைக்காத்து கொஞ்சம் அதிகமா அடிச்சாலும், நம்ம காது இப்டித்தான் ரியாக்ட் பண்ணும். எனக்கும்கூட இந்த காத்துனால, யாரோ என்ன அசோக் அசோக்குனு கூப்பிடுற மாதிரியே இருக்கு. நான்லாம் உன்ன மாதிரி கன்பியூஸ் பண்ணிக்கிறேனா? பேசாம போய் தின்னுட்டு தூங்குடா குரங்கு" என்று கூறிக்கொண்டே மதுக் குவளையோடு தனது அறைக்குள் ஐக்கியமாகினான்.

ஆனால் மாயனுக்கு நன்றாகத் தெரியும் அது காற்றலைகளால் உருவான பிரம்மை இல்லை என்று. மஞ்சள் வெயிலின் மாய வண்ணம் மறைந்து, அச்சுறுத்தும் படியான கரு வண்ணம் குவியத் துவங்கிய அம்மலையை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே நின்றான் மாயன்.

அப்போது மீண்டும் அவன் செவியில், "உனக்காகத்தான் நெடு நாட்களாக நான் இங்க காத்திருக்கேன்.. வா.. மாயா.." என்று தெள்ளத்தெளிவாக மீண்டும் அக்குரல் வந்து அவன் காதில் விழுந்தது.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "மாயவனின்
மயில் தூரிகை"-ங்கிற புதிய
அழகான அருமையான லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ரியா மூர்த்தி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே செம சூப்பரா இருக்கு,
ரியா டியர்
மாயனைக் கூப்பிட்டது யாரு?
ஹீரோயினா? இல்லை வேறு யாரேனும் மாயனுக்கு உறவுப் பெண்ணா?
இல்லை ஏதாவது ஆவியா?
 

Kavipriya

New Member
Super starting Mam.., thrilling a eruku pola story...Maanthirigan Part 2 eruka Mam?? Antha story ku rmba wait panro please Mam atha apdiye vitrathinga
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top