KUK - EIGHTEEN

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
Hai friends i come with the next update and i thank for your comments on last update also give your comments for this update also am waiting for your comments and also tell me how the story is going it is nice or any other change is needed tell me friends. happy reading.................................

உள்ளம் – பதினெட்டு

அன்று அம்மு தாமதமாகவே எல எழுந்ததும் மணியை பார்த்துவிட்டு விரைவாக தன்னை தயார் செய்துகொண்டு கிழே வர அப்போது அர்ஜுனும்,வர்சாவும் வெளியில் செல்ல தயாராகி இவள் வரவுக்காக காத்திருக்க அவள் வந்தவுடன் அர்ஜுன் “அம்மு நாங்கள் சென்று பூஜை பொருட்களை எல்லாம் வாங்கி வந்துவிடுகிறோம். வர்சாக்கு இதுபோல் வாங்குவது புதிது அதனால் நான் உடன் செல்கிறேன் என்றான்”


அம்மு “சரி அச்சு பத்து போய்விட்டு வாருங்கள், சப்பிட்டுவிட்டிர்களா”

வர்ஷா “இப்போதான் சாப்பிட்டோம் அக்கா”

ம், உனக்கு எதாவது வேண்டும் என்றாலும் வாங்கிகொள் வர்ஷா. இது என்னுடைய கிரெடிட் கார்ட் இதை நீ வைத்துகொள் உனக்கு எது வேண்டுமோ அதை வாங்கிகொள் அர்ஜுன் வாங்கி தருவான் தான் இருந்தாலும் இது உன்னுடைய பாதுகாப்பிற்காக அவனிடம் உனக்கு கேட்க தயக்கமாக இருக்கலாம் அப்போது இதை பயன்படுத்திகொள்

வர்ஷா “தேங்க்ஸ் அக்கா”

இருவரும் சென்றவுடன் காலை உணவை உண்பதற்காக சென்றாள் காலை உணவை முடித்தவுடன் கங்காவிடம்

“கங்கா மா நான் சொல்லும் பொருட்களை எல்லாம் இப்போது சென்று வாங்கி வாருங்கள் சாஜி வராங்க அவங்களுக்காக நானே சமைக்கிறேன் நீங்கள் நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள்

தேவையானதை கூறிவிட்டு ஹால்லிற்கு வர அங்கே மொத்த குடும்பமும் வர்சனை கேள்வி மேல் கேள்வி கேட்டுகொண்டிருந்தது அவளும் சென்று அங்கிருந்த சோபா ஒன்றில் அமர இவள் வந்து அமர்ந்ததை கவனித்த

சுமலா “வர்ஷன் இவளிடமா நீ உன் பெயரில் இருந்த பங்குகளை விற்றாய் உனக்கு அப்படி என்ன பண தேவை வந்தது பணம் வேண்டும் என்றால் அண்ணாவிடம் கேட்டு இருக்கலாமே எதற்கு பங்குகளை விற்றாய் வினவ”

வர்ஷன் “அத்தை நான் ஒன்றும் எனக்காக இத பங்குகளை விற்கவில்லை உங்கள் மகள்தான் எனக்கு பணம் வேண்டும் என்னுடன் இருக்கும் தோழிகள் அனைவரும் {ஒரு இடத்தின் பெயர் சொல்லி) அங்கு இடம் வேண்டும் என கேட்டாள் நானும் முதலில் அப்பாவிடம் கூறினேன் ஆனால் அவர் இப்போது வேண்டாம் என்று ம் மறுத்துவிட்டார் தேவியின் என்னை கேட்டுகொண்டே இருந்தாள் அவளையும் என்னால் சமாளிக்க முடியவில்லை அதோடு எனக்கும் கொஞ்சம் பணம் தேவைப்பட்டது அதனால் என்னுடைய பெயரில் இருந்தவைகளை மட்டும் விற்றேன் ஆனால் இவர்களுக்கு நான் கொடுக்கவில்லை அத்தை”

லக்ஷ்மி “அந்த இடத்தையாவது வாங்குனிர்களா இல்லையா எங்கே அதனுடைய டாகுமென்ட்”

தேவி “அதுவந்து அத்தை அந்த இடத்தை வாங்கவில்லை அதற்கு பதிலாக ஒரு வைர நெக்லஸ் வாங்கினேன் மிதி பணம் தோழிகளுக்கு விருந்தளித்தேனா அதில் செலவாகிவிட்டது”

பாட்டி “ஏன் டி இப்படியா பொறுப்பில்லாமல் செலவு செய்வாய் இப்போது பார் கண்டவளும் வந்து உரிமை கொண்டாடுகிறாள்”

யாதவ் “பாட்டி அக்காவை திட்டுவது ஓகே ஆனால் இப்போது எதற்கு அண்ணியை பற்றி பேசுறிங்க அண்ணி ஒன்னும் கண்டவங்க இல்லை என்னுடைய அண்ணாவின் மனைவி அதோடு என் மரியாதைக்குரிய அண்ணி”

சுமலா “ஆமாடா உனக்கும் உங்க அப்பாவிற்கும் வேற வேலையில்லை நீங்க இரண்டுபேரும் கொடுக்கிற தைரியத்தில் தான் இவள் இந்த ஆட்டம் ஆடுகிறாள். உங்களை முதலில் சொல்ல வேண்டும் எங்களுக்கு துணை நிற்காமல் எங்கிருந்தோ வந்தவளுக்கு சப்போர்ட் செய்றிங்க”

அம்மு “மாமியாரே எதோ போனால் போகுது விட்டால் ரொம்ப ஓவராக பேசுறீங்க நான் நினைத்தேன் என்றால் உங்களிடம் இருந்து அந்த கம்பனியை இன்னும் இரண்டே நாளில் என் வசம் கொண்டுவந்து விடுவேன் எதோ இவ்வளோ காலம் நீங்கள் அந்த கம்பனியை பார்த்து கொண்டதால் ஒருவாரம் அவகாசம் கொடுத்து இருக்கிறேன்.

இப்போது உங்களிடம் பேச எனக்கு நேரமில்லை என்னுடைய சாஜி இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார் அவர் வருவதற்குள் நான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவேண்டும் அதனால் இப்போது உங்களை சும்மா விடுகிறேன்”

ரவி “இனி இதை பற்றி யாரும் பேசவேண்டாம் என்னுடைய கம்பனியை எப்படி காப்பாற்ற வேண்டும் என எனக்கு தெரியும் வர்ஷன் என்னுடைய அலுவலக அறைக்கு வா”

இருவரும் அலுவலக அறையின் உள் சென்று தனக்ளுடைய பேச்சை தொடங்கினர், அவர்கள் என்னவோ பேசிக்கொள்ளட்டும் நினைத்த அம்மு தன்னுடைய அத்தைக்காக சமைக்க சென்றாள்

அலுவலக அறையின் உள் சென்றதும் ரவி “வரா நீ யாருக்கு இந்த பங்குகளை விற்றாய்”

அப்பா நான் இந்த பொண்ணு அபிதாக்கு விற்கவில்லை ஹரி inc... ஓனர் ராஜன் அவங்களுக்கு கொடுத்தேன் அதுவும் சிறிது காலத்தில் மீண்டும் நானே அதை வாங்கி கொள்கிறேன் என்று கூறிதான் கொடுத்தேன் ஆனால் எப்படி இந்த பொண்ணு கைக்கு போச்சுன்று தெரியாது

அவங்க போன் நெம்பர் அட்ரஸ் எதாவது உன்னிடம் இருக்கா

வர்ஷன் “இருக்கு பா இந்தாங்க இது அவங்க போன் நம்பர், இது கம்பனியோட அட்ரஸ்”

ரவி “இந்த நெம்பருக்கு கால் பண்ணு”

வர்ஷன் தொடர்பு கொள்ள அதை ஏற்ற ராஜன் “ராஜன் here”என்றார்

வர்ஷன் “அப்பா அவங்க பேசுறாங்க இதாங்க”

போனை வாங்கிய ரவி “மிஸ்டர் ராஜன் நீங்க என்னுடைய பையன் வர்சனிடம் இருந்து எங்கள் கம்பனியின் பங்குகளை வாங்கி இருக்கீங்க”

ராஜன் “ஆமா அதுக்கு என்ன”

ரவி “அந்த பங்குகளை நாங்கள் இப்போது வாங்கி கொள்கிறோம் என் பையன் எவ்வ்ளோக்கு வாங்கினானோ அதை விட இரண்டு மடங்கு நான் உங்களுக்கு தருகிறேன் பங்குகளை என்னிடம் கொடுத்துவிடுங்கள் நாளை காலை ரெஜிஸ்டர் செய்துகொள்ளலமா”

ராஜன் “மிஸ்டர்.ரவீந்தரன் நான் உங்களிடம் அந்த பங்குகளை எப்போது தருவதாக கூறினேன். நீங்கள் என்னிடம் எவ்வளவு பணம் கொடுத்து கேட்டாலும் நான் அதை உங்களுக்கு தருவதாக இல்லை”

ரவி “அந்த அபிதா எவ்வளோ கொடுக்கிறதா சொன்னா கூறுங்கள் அதைவிட ஒருமடங்கு அதிகமாகவே தருகிறேன்”

ராஜன் “எல்லாரையும் உங்களை மாதிரி பணத்திற்கு மரியாதையை கொடுப்பவர்கள் என நினைக்காதிர்கள் மனிதனுக்கும் அவனுடைய குணத்திற்கும் மதிப்பு கொடுப்பவர்களும் இருக்கிறார்கள் நான் மனிதனுடைய குணத்திற்கு மதிப்பு கொடுப்பவன் நீங்கள் என்னதான் கேட்டாலும் உங்களுக்கு தரமாட்டேன்”

ரவி “நீங்க பேசுவது சரியில்லை என் மகன் பங்குகளை விற்கும்போதே அதை மீண்டும் திருப்பி வாங்கிகொல்வதாக கூறி இருக்கிறான் நீங்கள் அதை மறந்து தரமாட்டேன் என்கிறீர்கள்”

ராஜன் “நான் அவரிடம் திருப்பி தருவதாக கூரவும் இல்லை அது போல் பத்திரத்திலும் எழுதவில்லை அவர் விரைவாக வாங்கி கொள்வதாக சொன்னார் அப்போதும் நான் என்வசம் இருதால் தருகிறேன் என்றேன் இப்போது என்வசம் இல்லையே”

ரவி “பங்குகள் இன்னும் உங்கள் பெயரில் இருப்பதாகவே காட்டுகிறது பின் எப்படி உங்களிடம் இல்லாமல் போகும்”

ராஜன் “நான் A.Aவின் ஊழியன் பங்குகள் எனது பெயரில் இருந்தாலும் அதை என்னால் யாருக்கும் விற்கவோ இல்லை மாற்றவோ இயலாது”

ரவி கோவம் கொண்டு போனை கட் செய்துவிட்டு வர்சனை நோக்கி “உன்னையெல்லாம் என்னுடைய மகன் என்று சொல்வதற்கே வெக்கமா இருக்கு போயும் போயும் ஒரு பொண்ணுகிட்ட ஏமாந்துவிட்டு வந்திருக்க நான் பணம் கொடுக்கவில்லை என்றால் அதற்கு இப்படிதான் செய்யவேண்டுமா கொஞ்சம் பொறுக்க முடியாதா

இதை விடு அப்படி விற்ற பணத்தையும் சரியாக பயன்படுத்தி இருக்கியா அதுவும் இல்லை இனி என் கண்முன்னே நிற்காதே போய்விடு உனக்கும் இனி கம்பனிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

வர்ஷாவை அழைத்து சென்ற அர்ஜுன் காரில் செல்லும்போது அவளிடம் “வர்ஷா நான் உன்னிடம் பேசவேண்டும் இப்போது பேசலாமா”

வர்ஷா “ம் சொல்லுங்க”

அர்ஜுன் “நான் உன்னை திருமணம் செய்தது உனக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும் எனக்கு அப்போது அம்முவை தனியாக எப்படி உங்கள் வீட்டில் விடுவது என்ற குழப்பத்தில் அப்படி செய்துவிட்டேன் ஆனால் என்னுடைய வாழ்வில் மனைவி என்றால் அது நீ மட்டுமே அதை நீ புரிந்துகொள் இன்னொரு பெண்ணிற்கு என்னுடைய வாழ்வில் இடம் என்றுமே இல்லை

நேற்று நீ உன் அம்மாவிடம் பெசிகொண்டிருந்ததை கேட்டேன் எனக்காக நீ உன் அம்மாவிடம் பேசியதையும் கேட்டேன். நான் இப்போ சொல்வதை நீ இப்பொழுது மறக்ககூடாது. என்னதான் அம்மு என்னுடைய அம்மாவை அத்தை என்று கூப்பிட்டாலும் நானும் அவளும் அண்ணன் தங்கை போல்தான் ஒருவரை ஒருவர் நினைத்துள்ளோம் அவளுக்கு ஒன்று என்றால் நிச்சியம் நான் துணையாக நிற்பேன்

ஒருவிதத்தில் நான் செய்வது நன்றிகடன் என்று கூட சொல்லலாம். ஏனென்றால் நானும் என் அம்மாவும் இன்று உயிரோடவும் இவ்வளோ வசதியாக இருக்க காரணம் அத்தை i mean அம்மு அம்மா ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் சாக இருந்த எங்களை காப்பாற்றி அவர்களுடனே வைத்து எங்களை இந்த நிலைமைக்கு கொண்டுவந்தது அவர்தான்

அம்முக்கும் இதுவெல்லாம் தெரியும் ஆனால் இன்றுவரை அவளும் எங்களை வேற்று ஆளாக நினைத்தது இல்லை என் அம்மாவிற்கு என்னை விட அவள்தான் செல்லம்”

அச்சு சொல்ல சொல்ல வர்ஷா அவனையே கேள்விதொக்கிய பார்வையோடு பார்த்து கொண்டிருக்க அதை கவனித்த அர்ஜுன் இதை எதற்கு இப்போது சொல்கிறேன் என பார்க்கிறாயா

வர்ஷா “அது என இழுக்க” எதுவாக இருந்தாலும் பரவாயில்லை சொல்
நான் உங்களையும்,அக்காவையும் பற்றியும் ஏதும் நினைக்கவில்லை அதோடு உங்கள் இருவரையும் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாகவும், பிரமிப்பாகவும் உள்ளது இவ்வளோ பாசம் ஒருவர் மீது வைக்கமுடியுமா என்று


அர்ஜுன் “எனக்கு அதை பற்றியெல்லாம் தெரியாது என் அம்மா என்னிடம் சிறுவயதில் இருந்தே சொல்லி சொல்லியே வளர்த்தார் நீ எப்போதும் அம்முக்கு துணையாக இருக்கவேண்டும் அவளை நீதான் பார்த்து கொள்ளவேண்டும் என்று” என்றான்

அதோடு நான் இதையெல்லாம் உன்னிடம் எதற்கு சொல்கிறேன் என்றால் எப்படியும் இனி நம்முடைய வீட்டில் வந்து வாழ்ந்தாகவேண்டும் அப்போது உன்னால் எந்த விட சண்டையும் வந்துவிட கூடாது அதோடு உன்னுடைய மனதில் எந்தவித சந்தேகமும் எழுந்துவிட கூடாது. அதற்காகவே சொன்னேன்”

வர்ஷா “நீங்கள் வேண்டும் என்றால் என்னை அக்காவிற்காக திருமணம் செய்து இருக்கலாம் ஆனால் நான் உங்களை மனமார ஏற்றுக்கொண்டுதான் திருமணம் செய்துகொண்டேன்” என்று மனதில் நினைத்து கொண்டு அவனையே பார்த்து கொண்டிருந்தாள்

அபையும் அன்று காலையில் மருத்துவமனை சென்று தன்னுடைய நோயாளிகளை பரிசோதித்துவிட்டு இன்னும் இரண்டு நாட்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துவிட்டு வீடு வர அவன் வந்த போது அம்மு சமைத்துகொண்டிருக்க அந்த வீட்டில் உள்ள அனைவரும் ஒருவளை வருவது’ நந்தினியோ என்கிற ஐயத்துடனும் ஒருவித பயத்துடனும் இருந்தனர்

வெற்றியோ தன் தங்கையின் உடனிருந்து இத்தனை வருடம் பார்த்து கொண்டவர் அவருக்கு இங்கு எந்த குறையும் வரகூடாது என்று அவர் தங்குவதற்கான ஏற்பாடுகளை யாதவுடன் சேர்ந்து ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துகொண்டிருந்தார்

பாட்டி “சுமலா உன் புருஷன் செய்றது எல்லாம் கொஞ்சம் ஓவராக இல்லை அவன் செய்வது எல்லாம் பார்த்தால் அந்த நந்தினி தான் வரபோற மாதிரி இருக்கு ஆனா இந்த அர்ஜுன் பய அம்மா சொல்றான் இந்த அபிதா அத்தை சொல்றா அதுதான் ஒன்றும் புரியமாட்டேன் என்கிறது”

சுமலா “மா விடுமா பார்த்துகொள்ளலாம் நந்தினியே வந்தாலும் அவளால் என்ன செய்திட முடியும் இவளை அப்பொழுதே துரத்தினோம் இப்போதும் அதையே செய்வோம். பார்த்துக்கலாம் மா”

பாட்டி “அவ முன்ன போல இல்லை சுமலா இப்போது நம்மைவிட அதிக உயரத்தில் இருக்கிறாள்”

சுமலா “அவளால் ஒன்னும் செய்ய முடியாது மா நீ வேண்டுமென்றால் பாரு அண்ணன் அவளை சமாளித்துவிடுவான் அவனுக்கு கம்பனி என்றால் உயிர் அதுக்காக தானே அவளை நாம் வெளியே அனுப்பும்போது வேடிக்கை பார்த்துகொண்டிருந்தான் பின் லஷ்மியை மணந்துகொண்டான்”

பாட்டி “ம் பார்க்கலாம்”

இவர்கள் இவ்வாறு பேசிகொண்டிருக்க அபையும் தன்னை தயார் செய்துகொண்டு வந்தமர்ந்தான். அவனுக்கு இன்று அம்முவின் அனைத்து செயல்களும் வித்தியாசமாக இருந்தது கலையில் எழுந்தபோதும் நேற்று நடந்துகொண்டதற்கு ஏதும் சொல்லவில்லை இப்போதும் அமைதியா இருக்கிறாள் இது புயலுக்கு முன் வரும் அமைதியோ என்றே தோன்றியது

இவ்வாறு ஒவ்வொருவரும் ஒருமனநிலமையில் இருக்க அர்ஜுனும்,வர்சாவும் தங்களுடைய பர்சஸ் முடித்துக்கொண்டு வந்தனர் அதே வேலை அம்முவும் சமையலை முடித்து இருந்தாள்

அர்ஜுன் வந்ததும் “அம்மு ஐயர் என்னவெல்லாம் சொன்னாரோ அனைத்தும் வாங்கிவிட்டோம் உனக்கும் வர்சாக்கும் இன்னும் புடவை எடுக்கவேண்டும் அது மட்டுமே பாக்கி”

அம்மு “நானும் எல்லா வேலையையும் முடித்துவிட்டேன் இனி அத்தை வந்தால் அவரை அழைத்து சென்று புடவை எழுத்துகொள்ளலாம் அப்படியே உனக்கும்,சரணுக்கும் டிரஸ் எடுக்கவேண்டும்”

அபை “எனக்கு எதற்கு வேண்டாம்”

அர்ஜுன் “இது எங்களுடைய வழக்கம் வீட்டில் எந்த பூஜை செய்தாலும் அனைவருக்கும் புது ஆடை எடுப்போம் அதோடு இது மிகவும் முக்கியமான ஒரு நிகழ்வு அதற்கு எடுக்காமல் எப்படி”

யாதவ் “அண்ணாக்கு மட்டும் புதுசா எனக்கெல்லாம் இல்லையா”

அம்மு “உனக்கு இல்லாமலா யாதவ் எத்தனை வேண்டுமோ எடுத்துகொள்”

யாதவ் “அண்ணி நீங்க கிரேட் ஆனா இந்த அண்ணாவையும், வர்சாவையும் பாருங்க ஒரு பேச்சுக்கு கூட எடுத்துகொள் என்று சொல்லவில்லை”

இவர்கள் இவ்வாறு பேசிகொண்டிருக்க வெளியே கார் வரும் சத்தம் கேட்டு அனைவரும் விரைந்தனர்
வர்சாவிர்க்கோ படபடப்பாக இருந்தது நன்னுடைய மாமியார் தன்னை ஏற்றுகொள்வாரா இல்லை ஏதேதும் சொல்லிவிடுவார என்று அதே படபடப்புடன் அவரை எதிர்கொண்டாள். அபையோ அத்தையும் வருவார்களோ என்ற ஆசையுடன் வெளியே வந்தான்


காரிலிருந்து முதலில் ராஜன் இறங்க அவரை பார்த்த வர்ஷன் “அப்பா இவரிடம் தான் நான் பங்குகளை விற்றேன்” ரவிக்கு இவரை எங்கோ பார்த்திருக்கோமே ஆனால் எங்கே என்று சிந்தித்து கொண்டிருந்தார்

அவரை யோசிக்க விடாமல் அத்தமா என்ற சத்தம் கேட்க அங்கே தன்னுடைய கவனத்தை செலுத்தினார். அவர் பார்க்கும் போது வடஇந்தியர்கள் அணியும் உடையோடு நல்ல கம்பீரத்தோடும் முகத்தில் சாந்தம் குடிகொண்டு ஒரு பெண்மணி நிற்க அவரை அம்மு கட்டிகொண்டிருந்தாள்

காரிலிருந்து இறங்கியவரை பார்த்ததும் தான் சுமலா,பாட்டி, லக்ஷ்மிக்கும் நிம்மதியாக இருந்தது. அபைக்கோ ஏமாற்றமாக இருந்தது இருந்தும் அதை சமாளித்துக்கொண்டு நின்றிருந்தான்

சுபத்திரா “எப்படி இருக்க அம்மு நீ இல்லாமல் எனக்கு அங்கே ஒன்றும் ஓடவில்லை. நீ இங்கே நன்றாக இருக்கிறாயா எங்கே உனது கணவன் நீ இன்னும் அவரை என்னிடம் காட்டவேஇல்லை”

அம்மு தந்து பக்கத்தில் இருந்த அபையை சுபத்திரா முன் நிறுத்தி அத்தமா இவர்தான் என்னுடைய கணவர் அபைசரண் என்றதோடு எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் என்றாள்.

அவரும் அவர்களுக்கு ஆசிவழங்க சுபத்திராவின் அருகில் இருந்த கிரணும்,சோனாவும் மேடம் சுபத்திரா மேடமை பார்த்ததும் எங்களை மறந்துவிடீர்களே என்றனர்

அம்மு “நீங்களும் வந்திருகீங்களா அத்தமாவை பார்த்த சந்தோசத்தில் எதையும் கவனிக்கவில்லை”

ராஜன் “அதுதான் தெரிகிறதே இந்த அங்கிலும் உன் கண்ணுக்கு தெரியவில்லை என்று”என்றார்

அம்மு “சாரி அங்கிள்”

அர்ஜுன் “மா இதுவெல்லாம் நன்றாக இல்லை பார்த்துகொள்ளுங்கள் உங்கள் மகளை பார்த்ததும் மகனை கூட மறந்துவிட்டிர்கள்”

சுபத்திரா “நான் வந்தவுடம் அம்மு எப்படி வந்து என்னை கட்டிகொண்டாள் நீ மெதுவாக வந்தால் எப்படி கவனிக்க முடியும் சரி அதைவிடு என்னுடைய மருமகள் எங்கே உன்னை பார்க்கவா நான் இவ்ளோதுரம் வந்திருக்கிறேன்”

அர்ஜுன் “அதுதானே நீங்கள் என்னை கண்டுகொண்டுவிட்டாலும் இதோ இவள் தான் உங்கள் மருமகள் வர்சநந்தினி எங்களையும் ஆசிர்வதாம் செய்யுங்கள்”

சுபத்திரா அவர்களையும் ஆசிர்வதாம் செய்து பின் வர்சாவை நோக்கி இங்கே வா என்றார் அவளும் தயக்கத்துடன் அவரின் அருகே வர “என்னை உன் அம்மா போல் நினைத்துகொள் எதுவேண்டுமானாலும் தயங்காமல் என்னிடம் கேட்கலாம் சரியா”

வர்ஷா “ம் என்றாள்”

சுபத்திரா அர்ஜுனை நோக்கி நீ வாழ்க்கையில் செய்த ஒரே நல்ல விசியம் எனக்கு தங்கசிலை போல் ஒருமருமகளை கொண்டுவந்ததுதான் என்றார். அவர் சொல்வதை கேட்டு அம்மு சிரிக்க என்னை பார்த்தால் உனக்கு கிண்டலாக இருக்கா என கேட்டு அவளை நெருங்க அவளோ உன்னை பார்த்தாள் கிண்டலாக இல்லை ஆனால் நீ பேசினாள் உன்னை லூசு என தெளிவாக சொல்லலாம் என்றுவிட்டு ஓட அவளை துரத்திக்கொண்டு அர்ஜுனும் செல்ல சுபத்திரவோ இங்கேயும் ஆரம்பித்து விட்டிர்களா உங்கள் கலாட்டவை என்றார்

அம்முவும்,அச்சுவும் இப்படி துரத்தி விளையாடுவதை கண்டு அபையும்,வர்சாவும் அவர்களை ஆச்சரியமாக நோக்க அவர்களின் பார்வையை கண்ட சுபத்திரா இது எப்போதும் நடப்பதுதான் என கூறினார்.

உள்ளம் கரையும்............................
 

banumathi jayaraman

Well-Known Member
ராஜன் சூப்பர்
ரவீந்திரன்கிட்ட ஷேர்ஸைக் கொடுத்துட்டுத்தான் ராஜன் அங்கிள் மறுவேலை பார்க்கணும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top