KUK - 16

Advertisement

nalini sri. p

Writers Team
Tamil Novel Writer
Very very sorry for the delay friends now i come with the next update please tell your comments paa i am waiting for your comments


உள்ளம் – 16
அறையின் உள்ளே நுழைந்த யாதவ் அண்ணி அப்பா இப்பதான் எல்லாத்தையும் சொன்னங்க என்னால நம்பவே முல்டியவில்லை நீங்க தான் நந்தினி அத்தையோட பொண்ணு என்று ஆனால் நான் அத்தையை பார்க்கணும் என்று ரொம்ப ஆவலா இருந்தேன் அது முடியாம போச்சு

அம்மு “அம்மா எப்போதும் நம்ப கூடவேதான் இருப்பாங்க யாதவ் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு”


யாதவ் “அண்ணி எனக்கு அத்தையோட போட்டோ இருந்த காட்டுறீங்களா அப்பா அத்தையோட அப்ப இருந்த போட்டோதான் வைத்திருக்கரு எனக்கு இப்ப சமிபத்தில் எடுத்த போட்டோ பார்க்கணும்

அம்மு தன்னுடைய பெட்டியில் இருந்து எடுத்து காட்ட அதை பார்த்த யாதவ் “அண்ணி அத்தை போட்டோவில் கூட எவ்வளோ கம்பிரமாக இருகாங்க அவங்க எப்படி இந்த வீட்டில் அம்மா,பாட்டி சொன்னதை கேட்டு அவர்களை எதிர்க்காமல் வெளியே சென்றார்கள்”

அம்மு “உன்னை போலவே இதே கேள்வி எனக்கும் இருந்தது அம்மா தன்னுடைய கடைசி நிமிடத்தில் தான்
அவர்களுடைய வாழ்க்கையை பற்றி சொன்னங்க அதுவரை இங்கு இருக்கிற யாரை பற்றியும் தெரியாது இந்த கேள்வியை நானும் என்னுடைய சுபத்திரா அத்தை கிட்ட கேட்டேன் அம்மா இவ்வளோ தைரியமாக எல்லாத்தையும் செய்தாங்களே பின் அவங்க எப்படி அந்த வீட்டில் இருந்தவங்களை எதிர்த்து போராடாம வெளியே வந்தார்கள் என்று”


யாதவ் “அதுக்கு உங்களுக்கு விடை கிடைத்ததா அண்ணி”

அம்மு “ம்,அம்மா எல்லா விசியங்களையும் மனம் திறந்து பேசற ஒரே ஆள் அத்தை மட்டுமே அதனாலே என்னுடைய இந்த கேள்வியை நான் அவர்களிடம் கேட்டேன் அதற்கு எனக்கு கிடைத்த பதில் காதல்”

அண்ணி என்ன சொல்றீங்க காதலா என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை. A.A எவ்வளோ பெரிய நிறுவனம் அதனை உருவாக்கிய அத்தை காதலுக்காக இவ்வாறு செய்தார்களா

ம் உன்னை மாதிரி எனக்கும் இதை கேட்கும் போது அப்படிதான் இருந்தது. அத்தை கூறினார் அம்மா அவங்க கணவன் மேல் அதித காதல் கொண்டு இருந்தாங்களாம் அவரே அம்மாவை நம்பாமல் வீட்டை விட்டு போக சொன்னதும் அவங்களுக்கு இங்கிருந்தவர்களை எதிர்க்க தோணலையாம் அதோடு அவங்க அவங்க காதலின் பரிசாக அம்மாவின் வயிற்றில் நான் இருந்தேனாம்

அவர்களை அவுமான படுத்தினால் தாங்கி கொள்வார்களாம் ஆனால் அவங்க காதலின் அடையாளமாக உருவான என்னை அவுமான படுத்திவிட்டால் அம்மாவால் தாங்கி இருக்க முடியாதாம் அதனாலே வெளிய வந்துவிட்டதாக அத்தையிடம் அம்மா சொன்னார்களாம்

யாதவ் “அண்ணி காதல் ஒருவர் மீது இருந்தால் இப்படியல்லாம் செய்ய வைக்குமா ஒரு பெண்ணின் சுயமரியத்தை, தைரியம் அனைத்தையும் இழக்க செய்கிறது”

யாதவ் நீ வெற்றி மாமா வளர்ப்பு என்பத்தை நிருபிக்கிறாய் அவரை போலவே சிந்திக்கிறாய் மாமா அந்த காலத்திலேயே பெண்களுக்கு எல்லாவற்றிலும் சம உரிமை இருக்கவேண்டும் என்று அம்மாவையும் தாத்தா,பாட்டியுடன் சண்டையிட்டு படிக்க வைத்தார்களாம் “அம்மா அடிகடி என்னிடமும்,அச்சுவிடமும் சொல்வார்கள் என்னுடைய அண்ணன் வீட்டில் சண்டையிட்டு என்னை படிக்க வைக்காமல் இருந்திருந்தால் என்னால் வாழ்கையில் இந்த உயரத்தை அடைந்து இருக்க முடியாது” என நீயும் மாமவைபோலே சிந்திக்கிறாய்

அம்மா அண்ணன் என்று சொல்லும்போது நான் நினைப்பேன் அது அச்சுவின் அப்பா என்று ஆனால் அம்மாவின் கடைசி நிமிடங்களில் எனக்கு தெரியவந்தது அவங்களுக்கு உடன் பிறந்த அண்ணன் இருகாங்க அதுவும் இங்கே என ஆனால் நான் எதிர் பார்க்காதது அவரை மாதிரியே அவருக்கு ஒரு பையன் இருப்பது என்று யாதவை குறிப்பிட்டு சிறிது சிரிப்போடு முடித்தாள்

யாதவ் “அண்ணி நீங்க என்னை கிண்டல் செய்றீங்களா இல்லை பாராட்டி பேசுறீங்களா”

அம்மு “சே சே உன்னை போய் யாரவது கிண்டல் செய்வார்களா உன்னை நான் பாராட்டவே செய்தேன்”

யாதவ் “அண்ணி நீங்க சொல்ற டோனே சரியில்லை இன்னும் இங்கு இருந்தால் நான் அவ்வளவு தான் நான் கிளம்புகிறேன்”

அம்முவின் சிரிப்பொலி அங்கே பரவியது அம்முவை பார்க்க அப்பொழுது மேலே வந்த அர்ஜுனின் காதுகளில் விழுந்தது அர்ஜுன் “அம்மு எப்போதும் இப்படியே சிரித்து கொண்டே இருக்கவேண்டும் அத்தை மனதில் நந்தினியை
வேண்டினான்”


அந்த வேண்டுதலுடன் அம்முவை பார்க்க வந்த அச்சு “அம்மு நீ சொன்ன மாதிரி கம்பனியை நம்மிடம் ஒப்படைக்க நோட்டிஸ் நாளை அவர்கள் கைகளில் சென்று அடையும் என்றான்

அன்று இரவு உறங்க செல்லும் போது அம்முவிடம் அபை மீண்டும் நந்தினியை பற்றி வினவினான்

அம்மு “நீங்க அதை தெரிந்து என்ன செய்ய போறீங்க சரண் எப்படியும் உங்க குடும்பத்திற்கும் அவங்களுக்கும் ஆகாது நீங்க உங்க மாமா பக்கம் மட்டுமே எப்பொழுதும் பெசுவீர்கள் பின் எதற்கு அவரை பற்றி நான் உங்களுக்கு சொல்ல வேண்டும்”

அபை “எனக்கு அத்தைக்கும் மாமாவிற்கும் நடுவே என்ன நடந்தது என தெரியாது அத்தை எதனால் இந்த வீட்டை விட்டு சென்றார்கள் என்றும் தெரியாது ஆனால் ஒன்றுமட்டும் உன்னிடம் சொல்கிறேன் எனக்கு அத்தை என்றால் அது நந்தினி அத்தை மட்டுமே இது என்னுடைய மாமாவிற்கும் தெரியும்

நீ இந்த வீட்டிற்கு வந்து இவ்ளோ நாள் ஆகுதே நான் எப்பொழுதாவது மாமாவின் மனைவியை அத்தை என்று அழைத்து நீ பார்த்து இருக்கியா என்னால் நந்தினி அத்தை இடத்தில் மாமாவின் இப்போது உள்ள மனைவியை வைத்து பார்க்க முடியவில்லை

இதை எல்லாம் நான் ஏன் உன்னிடம் சொல்ல்கிறேன் என்றும் எனக்கே தெரியவில்லை உன் அருகில் இருக்கும் போது என்னுடைய மனது எந்தவித சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக உள்ளது அதற்கும் என்ன காரணம் என்றே எனக்கு தெரியவில்லை. இதற்கும் நீ என்னுடைய குடும்பத்தை பழி வாங்க வந்துள்ளாய் இருந்தும் என் மனம் ஏன் உன்னுடைய அருகாமையை நாடுகிறது என்றே எனக்கு புரியவில்லை

அம்மு “இது மாதிரி உருக்கமாக பேசி என்னிடம் இருந்து அனைத்தும் தெரிந்து கொள்ள நினைகிறீங்களா அது ஒருபோதும் நடக்காது இவ்வாறு பேச உங்க மாமாவிடம் கற்று கொண்டீர்களா அவரும் இது போல் பேசினதே அனைத்தையும் சாதித்தார்” அம்மு அவளின் அம்மாவை நினைத்து சொல்ல அபைக்கோ அவள் என்ன உளருகிறாள் என்றே தோன்றியது அதை அவளிடமே கேட்கவும் செய்தான்

அபை “என்ன நீ பாட்டுக்கு எதோ பேசிக்கொண்டே செல்கிறாய் மாமா அப்படி என்ன செய்தார் நந்தினி அத்தை இந்த வீட்டை விட்டு சென்றவுடன் பாட்டியின் வற்புறுத்தலுக்காக இவங்களை திருமணம் செய்துகொண்டார்.

அத்தை மாமாவை விட்டு சென்றதால் அதற்கு இடாக வெற்றி அப்பா அம்மாவை திருமணம் செய்து கொண்டதாக மாமா சொன்னாங்க இதில் மாமாவின் தவறு என்ன இருக்கு. அத்தை எதற்கு மாமாவை விட்டு போகணும் அவங்க போனதால் தானே இது எல்லாம் நடந்தது. நானும் யாருடைய பாசமும் கிடைக்காமல் வளர்ந்தேன்

மாமா அவருடைய நண்பனுக்கு [அபையின் தந்தை) செய்து கொடுத்த சத்தியத்திற்காக என்னை நன்றாக பார்த்து கொண்டார் இப்போதும் பார்த்து கொள்கிறார். அத்தை மட்டும் இங்கேவே இருந்திருந்தால் இது எதுவுமே நடந்து இருக்காதே

அத்தை இங்கு இருக்கும் போது மாமா எப்பொழுதும் அத்தைவுடனே இருப்பார் அத்தைக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தார் எனக்கு அப்போது ஐந்து வயது தான் அத்தையை மாமா பார்த்து கொள்வதை பார்த்து நான் தாத்தாவிடம் [ரவியின் தந்தை) கேட்கும் போது அவர் நமக்கு யாரிடம் அதிக பாசம் உள்ளதோ அவரை நாம் எப்பொழுதும் நன்றாக பார்த்து கொள்வோம் என்றார்

மாமா இவ்வளவு பாசமாக இருந்தும் அத்தை எதற்கு வீட்டை விட்டு செல்ல வேண்டும் இந்த ஒரு விசியத்தில் எனக்கு அத்தையின் மீது கோவம் உள்ளது. எனக்கு அம்மா பாசம் கிடைத்ததே இல்லை அத்தையிடம் மட்டுமே நான் அதை உணர்ந்தேன் அதும் எனக்கு கொடுத்துவைக்கவில்லை. இந்த விசியத்தில் அத்தை மீது தான் தவறு என்றான்”

அம்மு “போதும் நிறுத்து” இதற்கு மேல் அம்மாவை பற்றி ஒருவார்த்தை பேசினாய் என்றால் அவ்வளவு தான் என நடுங்கும் குரலினுடனே அபையை பார்த்து கத்தினாள்

அம்முவின் அம்மா என்றே அழைப்பு மட்டுமே அபையின் காதுகளை சென்றடைந்தது அது அடைந்த நொடி அம்முவின் இரண்டு தோல்பட்டையிலும் தனது கரம் கொண்டு பிடித்து நீ இப்போது என்ன சொன்னாய் அம்மா என்று தானே சொல்லு அம்மா என்றுதானே சொன்னாய் அப்படி என்றால் அத்தையின் மகளா நீ என அவளை உலுக்க அவளோ அவனையே பார்த்து கொண்டிருந்தாள்

அபையின் பேச்சு அவளின் காதுகளை சென்று அடையவே இல்லை எப்படி தன்னையும் மீறி இவனிடம் பேசினோம் என்றே சிந்தித்து கொண்டிருந்தாள் அபை அவளை உலுக்கவும் நிகழ்வுக்கு வந்தவள் அவனின் சொற்களை கேட்டு இனி நடப்பது நடக்கட்டும் பார்த்து கொள்ளலாம் என்ற முடிவுடன் அவனை எதிர்கொண்டாள்

அபை “சொல்லு நீ அத்தையின் மகளா”

அம்மு “நான் உங்க அத்தையின் மகள் மட்டும் அல்ல உங்க மாமாவின் முத்த மகள். ச்ச என்னைக்கும் இவருடைய
மகள் என்று சொல்லவே கூடாது என நினைத்து இருந்தேன். இதை என்னைவே சொல்லவைத்துவிட்ட என்னுடைய அம்மாவை பற்றி இன்னும் ஒருவார்த்தை நீ குறைவாக பேசினாய் என்றால் உன்னை கொள்ளவும் தயங்க மாட்டேன்


நடந்தது எதுவும் தெரியாமல் பேசகூடாது எப்படி என்னுடைய அம்மா இந்த வீட்டைவிட்டு அவர்களாக சென்றார்கள். இந்த கதை நல்லாருக்கே”

அபை “அப்ப நீ மாமாவிற்கும் அத்தைக்கும் பிறந்தவளா, சரி அத்தை எதற்காக வீட்டை விட்டு செல்லனும்”

அம்மு “இதை எதுக்கு என்னிடம் கேட்கிறாய் இவ்ளோ நேரம் சொன்னியே ஒரு கதை அதை யார் சொன்னார்களோ அவர்களிடமே சென்று கேள்”

அதன் பின் அங்கே அமைதி நிலவியது அப்படியே அந்த இரவு கழிய அடுத்த நாள் பொழுது அழகாக விடிந்தது

அன்றைய பொழுதின் துவக்கமே அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு நல்லதாக இல்லை என்றே சொல்லவேண்டும்.
காலையில் அந்த வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்திருக்க அம்முவும் அங்கே தான் இருந்தாள் அப்போது அங்கு வந்த அச்சு “அம்மு உனக்கும் வர்ஷாக்கும் தாலி பிரித்து கொர்க்கவேண்டுமாம் அம்மா சொன்னார்கள் அதுவும் தமிழ் முறைப்படி செய்யவேண்டுமாம் அதனால் நாளை அம்மா இங்கே வருகின்றார்களாம். அதன் பின் நாளை மறுநாள் இங்கே உள்ள கோவிலில் வைத்து சடங்கை செய்யலாம் என்றார்கள்


உன்னை எல்லா வேலைகளையும் தள்ளி வைக்க சொன்னார்கள் அதோடு அபையை பார்த்து நீங்களும் இருக்கனுமாம் அபை உங்களுக்கு மருத்துவமனையில் அவசர வேலை எதுவும் இருந்தால் மட்டும் செல்லுமாறு பார்த்து கொள்ளுங்கள் மற்றபடி நீங்கள் கட்டாயம் இருக்க வேண்டுமாம்

வர்ஷா என முதல் முறையாக வர்சாவை அச்சு அழைக்க அவன் எப்போது அழைப்பான் என்பதற்காகவே காத்திருந்த வர்ஷா அவனின் முன் வந்து நின்றாள். அவள் வந்ததும் நீயும் தயாராக இரு உனக்கு என்ன வேண்டும் என்றாலும் நாளை அம்மாவுடன் கடைக்கு சென்று வாங்கிகொள்

வர்ஷா “நீங்க வரமாட்டிங்களா சின்ன குரலில் வினவ”

அச்சு “இல்ல மா எனக்கு வேலை நிறைய இருக்கு நானும் சடங்கின் போடு இருக்க வேண்டும் அதனால் அனைத்து வேலைகளையும் முடிக்க வேண்டும் முடிந்தால் வருகிறேன்” முதல் முறையாக சகஜமாக பேசினான் வர்சாவிடம்

இவன் பேசுவதை கேட்டு ரவி,பாட்டி,சுமலா,லக்ஷ்மி யும் ஒருவேளை நந்தினிவும் வருவாளா அவள் வந்தால் என்ன செய்வாள் இப்போது நம்மை விட அனைத்திலும் உயரத்தில் இருக்கிறாள். அவள் ஒன்றும் இல்லாமல் இருந்த போதே தைரியமாக அனைத்தும் செய்வாள்.

வீட்டை விட்டு வெளியே அனுப்பும்போது அவள் அமைதியாக சென்றதே பெரிது இப்போது வந்தாள் என்றால் எது வேண்டுமானாலும் செய்வாள் என்ற நினைப்பே அனைவரையும் ஆட்டி வைக்க

அம்மு “இதை எதற்கு என்னிடம் சொல்லவில்லை எனக்கு இன்னும் எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா இப்போது இதற்கு என்ன அவசரம் பின் மெதுவாக செய்யலாமே”

அச்சு “நீ எப்போதும் வேலை வேலை என்று அதன் பின்னாலே சுற்றுவாய் என்றுதான் உன்னிடம் சொல்லவில்லையாம் என்னை சொல்ல சொன்னார்”

அத்தை வரட்டும் பேசி கொள்கிறேன் எங்க அபையின் மனதிலே “நந்தினி அத்தையும் வருவார்களா என்ற எதிர்பார்ப்பு நிறைந்து இருந்தது”

காலையில் வீட்டில் நடந்ததையே நினைத்து கொண்டு அலுவலகம் வந்தக ரவியை வரவேற்றது அம்மு அனுப்பிய வக்கீல் நோட்டிஸ் “அந்த நோட்டிசில் ரவியின் அலுவலகத்தை இன்னும் ஒருவாரத்தில் A.Aவின் கீல் ஒப்படிக்குமாறு இருந்தது அதோடு இந்த அலுவலகத்தின் முக்கால் பங்கு தங்களிடம் இருப்பதால் தங்கள் எடுப்பதே இனி முடிவு என்றும் அவர்களின் பங்கிற்கு ஏற்ப வருகின்ற லாபத்தில் கொடுக்கப்படும் எனவும் அவர்கள் ஒருபோதும் அலுவலக செயல் பாடுகளில் தலையிட கூடாது எனவும் அச்சிட பட்டிருந்தது”

அந்த நோட்டிஸ் படித்ததும் ரவியின் கோவம் அம்முவின் மேல் திரும்பியது இருந்தும் அதை கட்டுக்குள் கொணர்ந்து அடுத்து இதை எப்படி முறியடிப்பது என சிந்திக்க தொடங்கினார்

உள்ளம் கரையும்..........................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top