Kannil Theriyuthoru Thotram - Final 2

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

ஒரு அழகான கூட்டுக்குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகள் சம்பவங்களை அருகில் இருந்து பார்த்தது போல் இருந்தது ,உறவுகளிடையே வரும் கதா பாத்திரங்களுக்கு எந்தவித வர்ணமும் பூசாமல் அவர்களை நேரில் பார்துணர்ந்ததுபோல இருந்தது,அழகிய குடும்ப நாவல் தந்தமைக்கு மிக்க நன்றி.

நன்றி
தட்சாயணி
 

Sainandhu

Well-Known Member
புகழ்,பொன்னியை விட மகராசி தான்,
மனதில் இடம் பிடித்து விட்டார்....
நைஸ் ஸ்டோரி.....
 

HEMASENTHIL

Member
ஹாய் சக்தி,
ரொம்ப அழகான காதல்+குடும்ப கதை.கூட்டு குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளையும் அதே போல் ஒருவருக்கு பிரச்சனை என்றால் அத்தனை பேரும் தோள்கொடுப்பதையும் ரொம்ப எதார்த்தமான காட்சிகளால் கதையாய் நகர்த்தி இருக்கீங்க.புகழ் ஒவ்வொரு தடவையும் அவனுடைய கோபத்தினால் அவனுடைய ஆளுமையை வெளிப்படுத்துகிறான்.பொன்னியை பொண்ணுகேட்டு தன்னுடைய குடும்பத்தை அவர்கள் வீட்டுக்கு அனுப்புவதில்,பரஞ்சோதி அத்தையினால் பிரச்சனை ஏற்படும்போது குடும்பத்தினரிடம் அவன் கேட்ட கேள்வி,அசோக் அமுதாவை விரும்புவது தெரிந்து அதனால் பொன்னி வருத்தபடுவாள் என்று ஒவ்வொரு சமயத்திலும் பொன்னியிடம் சொன்னது போல் எங்கேயும் அவளை விட்டுகொடுக்காமல் அவனுடைய காதலை ஒவ்வொரு செய்கையிலும் வெளிப்படுத்திவிட்டான்.பொன்னி நினைப்பது போல் பேசியே எல்லோரையும் கவிழ்த்துவிடுகிறான்.பொன்னி ஆரம்பத்தில் ரொம்ப தைரியமான பெண்ணாக மனத்தில் பட்டதை வெளிப்படையாக பேசும் பெண்ணாக இருந்தவள் திருமணம் ஆனபிறகு இடத்திற்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொண்டாள்.அவள் சொல்வது போல் திருமணமான பெண்கள் இதுபோல் தன்னாலே மாறிபோய் விடுகிறார்கள்.மகராசி குடுபத்திற்குள் பிரச்சனை வரக்கூடாது என்பதால் சில சமயம் கடுமையாக இருந்திருக்கிறார்.மருமகளை மதிக்கவில்லை என்றவுடனே குடும்பம் மொத்தமும் அவளுக்கு ஆதரவாக பரஞ்ஜோதியின் செயலை எதிர்த்து நின்றது பாருங்க இப்படி பட்ட குடும்பம் கிடைத்த பொன்னி கொடுத்துவைத்தவள் தான்.அமுதா உண்மையை சொல்லாமல் அமைதியாய் இருந்த தருணங்கள் அவள் மேல் கோபம் தான் வந்தது.அவளை தவறாக நினைப்பார்கள்,தவறாக பேசுவார்கள் என்று அமைதியாக இருந்து அசோக்கிற்கும் பொன்னிக்கும் அவபெயரை வாங்கிகொடுத்துவிட்டாள்.வீட்டினரிடம் உண்மையை சொல்லி தன் மேல் நம்பிக்கை வரும்படி அவள் தானே நடந்துகொள்ளவேண்டும்.ரொம்ப அழகான கதையை தந்ததற்கு நன்றி.
 

Seethavelu

Well-Known Member
romba nalla erunthathu marakamudiyatha kathai nice characters,yaroda character nalla erukuno ella athai varisai paduthavo mudiyavillai kathai kondu sendra vetham+kaatchigal, sambavangal amaithiruntha vetham anaithum arumai kathirunthu padithatharku emaartramillai THANKU SARAYU:)
 

Sri B

Well-Known Member
அருமையான கதை குயிலம்மா... குடும்பம்,உறவுகள் இதை எல்லாம் அழகா சொல்லிருக்கீங்க.. பேசி பேசியே வழிக்கு கொண்டு வரதுனா அது புகழு தவிர வேற யாரும் இல்ல.. பொன்னி புகழ்.. அழகான கதாபாத்திரம்...இன்னும் இன்னும் நிறைய படைப்புகள் கொடுக்கணும்... வாழ்த்துகள் குயிலம்மா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top