Kaathal Sindhum Thooral - Precap 25

Sarayu

Well-Known Member
#1
இதில் தான் வேறு அவளை கடிந்துகொண்டது எண்ணி வருத்தமாக இருக்க, எதையுமே அவன் முகத்தினில் காட்டிக்கொள்ளவில்லை, அதற்குமேல் கண்மணியை அவன் பேசவும் விடவில்லை, அவனே முன் சென்று “ஹாய் ஐம் அதிரூபன்..” என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டான்..

அவனின் நீட்டிய கரங்களை ஒருமுறை தயங்கியே வருண் பற்றி “ஐம் வருண்..” என்றவன், திரும்ப கண்மணியைப் பார்க்க,

‘சண்டையில்லாம போகணும்னு நினைச்சாலும் இவன் விடமாட்டான் போலவே..’ என்றெண்ணிய அதிரூபன், கண்களை லேசாய் இடுக்கி “வருண்...” என்றழைக்க,

“ஹா.. டெல் மீ...” என்ற வருணின் குரலில் அப்படியொரு நிமிர்வு..
நான் என்ன தவறு செய்தேன்.. நான் ஏன் தயக்கம்கொள்ள வேண்டும் என்ற நிமிர்வு
அது.. அவனின் பார்வையும் அதுவே சொல்ல,


கண்மணியோ “நீங்க வீட்டுக்கு வருவீங்கன்னு நாங்க யாரும் எதிர்பார்க்கலை.. அதுமட்டுமில்ல, லைப்ல சிலது நம்ம எதிர்பார்க்காதது தானே நடக்கும்... எங்க ரிலேஷன்ஷிப்பும் அப்படித்தான்.. பட் எங்களுக்கு பிடிச்சு நடந்தது.. சிலது உண்மையை ஒத்துக்கணும்...” என்று பேச்சை அத்தோடு முடிக்க எண்ணினாள்.

---------------------------------------------
ஆனால் அதிரூபனோ, சிறிது நேரத்திற்கு முன்னே அவளை திட்டியது எல்லாம் விட்டு, இப்போது அவளை சமாதானம் செய்ய முயல, கண்மணிக்கு கடுப்பாய் தான் இருந்தது. அது அவளின் முகத்திலும் தெரிய,


“இப்போ ஏன் கண்மணி இவ்வளோ கோவம்??” என்றான் ஒன்றும் அறியாதவன் போல.

‘கோவமா??? எனக்கா??!!’ என்றுதான் பார்த்துவைத்தாள்..

“ஹப்பாடி அனல் அடிக்குது போ..” என்று கைகளை விசிருவது போல் செய்தவன், “சரி.. சரி... தப்புதான்.. ஒரு டென்சன்ல கத்திட்டேன்.. சாரி..” என்றான் அவளின் விரல்களுக்கு சொடுக்கிட்டபடி..

பார்க் தான்.. யாரும் பார்க்க மாட்டார்கள் தான். இருந்தாலும் இவர்கள் வசிக்கும் இதே ஏரியா ஆகிற்றே.. தெரிந்தவர்கள் கண்களில் அதுவும் இப்படி தொட்டுக்கொண்டு பேசிக்கொண்டு பட்டால், அது இருவருக்குமே மரியாதையாய் இருக்காதல்லவா.. கண்மணி கொஞ்சம் தள்ளி அமர்ந்துகொண்டாள் பட்டென்று.

அதிரூபனோ மெல்ல சிரித்தவன் “ஓகே... சரண்டர்... இப்படி காமன் பிளேஸ்ல எப்படி உன்னை சமாதானம் செய்றதுன்னு தெரியலை.. கொஞ்சம் பாத்து பண்ணுங்க எசமான்..” என்று கைகளை உயர்த்தி பேச ஆரம்பித்தவன், பட்டென்று அடுத்து கைகளை கட்டி பணிவாய் பேச, அவன் செய்தது பார்த்து கண்மணிக்கு கோபம் போய் சிரிப்பு வந்துவிட்டது..

-------------------------------------------------------

மஞ்சுளாவோ அதிரூபனிடம் ஒன்றுமே பேசவில்லை.. ஏன் ?? என்ன என்று எந்த கேள்வியும் கேட்கவில்லை. அதுவே அவனுக்கு ஒருமாதிரி இருந்தது. அம்மா எப்போதும் இப்படியில்லை. மனதில் ஒன்றும் வைத்துகொள்ளவே மாட்டார்.. நல்லதோ கெட்டதோ கேட்டுவிடுவார்.. ஆனால் இந்த ஒரு ஓரிரு நாட்களாக அவனோடு அளவாகவே வைத்துக்கொண்டார்.

நிவின் கூட சொல்லி சொல்லி பார்த்தான். ஆனால் அதிரூபனும் சரி மஞ்சுளாவும் சரி தனி தனியே அவனிடம் ‘இதுல நீ எதுவும் பேசாத..’ என்று சொல்லிவிட்டனர்.

காரணம் கண்மணி..

------------------------------------------------------------------
அதோ இதொவென நாட்கள் நகர்ந்திட, இன்னும் கண்ணன் தீபா திருமணத்திற்கு ஐந்து நாட்களே இருந்தது. கடைசி கட்ட திருமண வேலைகள் கூட முடிந்திருந்தது. கண்மணிக்கு இப்போது மனதினில் எவ்வித பாரமும் இல்லை என்றாலும், அப்பா தன்னோடு முன்போல பேசாது இருப்பது அத்துனை சங்கடம் கொடுத்தது.
சியாமளா முதலில் கோபித்தவர் பின் ஓரளவு சமாதானம் ஆகிப்போனார். ஆனால் எப்போதுமே பெண் பிள்ளைகளுக்கு அப்பா தானே ஸ்பெசல். அதுபோலவே தானே அப்பாக்களுக்கும். ஆகையால் கண்மணியின் காதல் சடகோபனுக்கும், சடகோபனின் பாராமுகம் கண்மணிக்கும் மன சுணக்கத்தை கொடுக்காது இருக்கவில்லை.


‘இப்படி பண்ணிட்டாளே சியாமி..’ என்று மனைவியிடமே புலம்பினார்..
சியாமளா யாருக்குச் சொல்வார்?? யாருக்குத்தான் சொல்ல முடியும்??


‘என்னென்னவோ நினைச்சிருந்தேன்.. கண்ணன் சொன்னப்போ கூட எனக்கு அது அவ்வளோ பெரிய பாதிப்பா தெரியலை.. ஆ.. ஆனா.. இது..’ என்றவர் வெகுவாய் வருந்திப் போனார்..

 

Joher

Well-Known Member
#5
Ty Sarayu.........

அதிரூபன் இந்த முறை அவனோட chance விடாமல் பிடிச்சுட்டான்.......
ஒரு வழியா காதல் வெளியே தெரிந்துவிட்டது........

ஆனால் அம்மாக்கும் பையனுக்கும் என்னாச்சு???????
ஒருவருக்கொருவர் பாராமுகம்.......
கண்மணி என்ன பண்ணினா??????

கண்ணன் அப்பா கிட்ட சொல்லிவிட்டான்......
வருணும் வீட்டில் சொல்லிவிட்டானா??????
இன்னும் அப்பா பீல் பண்ணுறாரே??????
அண்ணி வந்து கண்மணி-அதி காதலை கல்யாணமாக்குவாள் போல.......

Waiting for Mrs. கண்ணன்............
 
Last edited:
#7
கண்மணி சூப்பரா ஏதோ
ஆப்பு வைச்சுட்டாள்
போலவே, சரயு டியர்?
ஹா... ஹா... ஹா...........
அதுக்குத்தான் கொஞ்சமா
ஆடணும்-ங்கிறது Mr,சடகோபன் சார்
பெரிய கண்ஸ் திருமணத்தில்
இடியாப்பம் புழிஞ்சாச்சா?
சூப்பர்ப், சரயு டியர்
உனக்கு இது தேவைதான்.
கண்ணன் தம்பி
 

Latest profile posts

மண்ணில் தோன்றிய வைரம் 35 அப்டேட் போட்டாச்சு மக்களே.....
மண்ணில் தோன்றிய வைரம் 34 அப்டேட் போட்டாச்சு மக்களே.
ஹாய் ப்ரண்ட்ஸ் கல்லுக்குள் ஒரு காதல் பதிவு போட்டுட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லிருங்க ப்ரண்ட்ஸ்....
அம்மு dear இதுலயும் mani sir irukaruthanu
எங்கேயும் காதல்! - 17 போட்டாச்சு. படிச்சுட்டு உங்கள் எண்ணங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

Sponsored

Recent Updates