Kaadhalae Kadhalaai Kadhalkolvayaaga Teaser

Magizh Kuzhali

Well-Known Member
#1
'காதலே காதலாய் காதல்கொள்வாயாக' என் வழியில் இரண்டாவது பயணம்.

அதனின் முன்னோட்டமாக கீழே சில வரிகளை கோர்த்துள்ளேன். இக்கதைக்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்த்தபடி உங்கள் மகிழ்குழலி, நன்றி.

கதையின் சிறு முன்னோட்டம்:

"இதோ பாரு என்னோட சம்மதமில்லாம இந்த ஏற்பாடெல்லாம் செய்திருக்கிறார்கள் எனவே நீ என்ன பண்ணுகிறாய் என்றால் உள்ளே வந்து செய்திருக்கும் பஜ்ஜி சொஜ்ஜிக்களை ஒரு வெட்டு வெட்டிவிட்டு வெற்றிலைப்பாக்கை வாயில் போட்டுக்கொண்டு பிடிக்கவில்லை என்று கூறி ஓடிவிடுகிறாய் அதை விட்டுவிட்டு வெற்றிலைப்பாக்கு தட்டை மாற்ற திட்டம் போட்டாயானால் வெற்றிலைப்பாக்கு போடாமலே உன் வாயில் சிவப்பேற்றிவிடுவேன் என்ன புரிகிறதா?"

அதுவரை பின்புறமாய் திரும்பி யாரும் வருவதற்கு முன் பேசிவிடவென்று வாயிற்கதவை கூட திறக்காமல் அந்த உருவத்தை வெளியேவே நிற்க வைத்து இவள் உள்புறமாய் கண்பார்வையை பதித்தபடி யார் எது என்று கூட கவனியாமல் பேசவும் அனுமதிக்காமல் கடகடவென கூறிமுடித்தாள்.

குட்டைபாவாடை சட்டையில் இரட்டை ஜடை முன்னே தொங்க குண்டு கன்னத்திற்கும் வளைவான மோவாய்க்கும் இடையே இருந்த குட்டி குழி இவன் பக்கமாய் இருக்க மூக்கில் வைரமூக்குத்திக்கு நிகராய் கண்களில் ஜொலிப்புடன் தன் பின்னால் பார்த்தபடி முன்னே இருந்தவரிடம் பேசியபடி திரும்ப அவனின் அந்த இளம் பழுப்புநிற கண்களை பார்த்து ஸ்தம்பித்தாள்.

அதுவரை அவளை வருடலான பார்வையுடன் பேசும் உதடுகளையும் கண்களையும் பார்த்துக்கொண்டிருந்தவன் அவளின் திகைத்த பார்வையை கண்டு துடைத்து வைத்தார் போல் முகத்தை சலனமே இல்லாமல் மாற்றிக்கொண்டான்.

"அப்படியா...புரியவில்லை என்றால் என்ன செய்வதாய் உத்தேசம்?" ஒற்றை புருவம் ஏறியிருக்க கூர்மையான பார்வையுடன் அழுத்தமான குரலில் கேட்டு மேலும் அவளை திகைப்புக்கு உள்ளாக்கினான்.

'குழப்பத்தில் ராத்விக்காவும் ஆளுமையுடன் சர்வாஜ்னாவும் இனி உங்களுடன் பயணிப்பர்.'
நன்றி

:) மகிழ் குழலி :)
 
Last edited:
#3
வாவ், புது நாவலா பா,
மகிழ் குழலி டியர்?
''காதலே காதலாய்
காதல்கொள்வாயாக'',
பேரே, சொம்மா செம
அசத்தலா இருக்கே,
மகிழ் குழலி டியர்?
 
#5
ஹா... ஹா... ஹா................
செம தில்லாத்தானே,
பேசுறா, ராத்விக்கா டியர்?
அப்புறம், ஏன் சர்வஜ்னாவைப்
பார்த்து பயப்படுகிறாள்,
மகிழ் குழலி செல்லம்?
 

Magizh Kuzhali

Well-Known Member
#9
ஹா... ஹா... ஹா................
செம தில்லாத்தானே,
பேசுறா, ராத்விக்கா டியர்?
அப்புறம், ஏன் சர்வஜ்னாவைப்
பார்த்து பயப்படுகிறாள்,
மகிழ் குழலி செல்லம்?
முதலில் நன்றி பானும்மா நான் என்ன பதிவு போட்டாலும் முதல் ஆளை உக்குவிப்பதில் நிங்களும் ஒருவர். பின் புது நாவல்தான். ராத்விக்கா படபட பட்டாசு என்றால் சர்வாஜ்னா அவளையே தூக்கி சாப்பிடுவதுபோல் அடாவடியாக இருக்கலாம் யாரு கண்டா.. தொடர்ந்து ஆதரவு கொடுபிங்கனு நம்புறேன் நன்றி
 

Latest profile posts

Sorna santhanakumar sis waiting for ur update
விட்டு செல்லாதே கண்மணியே அடுத்த வாரத்தில் இருந்து தொடரும் ஃப்ரெண்ட்ஸ்.....எக்ஸாம் and ஹெல்த் problemனால இந்த லேட்...மன்னிக்கனும் தோழமைகளே !
hiii friends... manjal vaanam konjam megam episode 2 posted.. read and share ur comments.. :) :)
எனை எரிக்கும் ஈர நினைவுகள்! 12 போட்டாச்சு. படிச்சுட்டு உங்கள் கருத்துக்களை என் கூட பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி.

Sponsored

Recent Updates