மழை-1 இரை தேடச் சென்ற பறவைகள் எல்லாம் தன் கூடுகளில் குடும்பத்துடன்ஓய்வெடுக்க..
பகல் முழுக்க ஓயாமல் வேலை பம்பரமாய் சுற்றி சுழன்று வேலை பார்க்கும் இல்லத்தரசிகள் தங்கள் தொழில் முடித்து துயில் கொள்ள,
சந்திரனாா்....தன் நட்சத்திர பரிவாரங்களோடு ..வானெனும் பால் வீதியில் கம்பீரமாய் உலா வர....
நம் ...சென்னை மாநகரம் மட்டும்...தூங்கா நகரமாய் செயற்கை ஒளிகளால் ..தேவலோகமாய் காட்சி அளிக்க...!!!
நகரை தாண்டி....ஓர் உயர்தர வகுப்பினர் வசிக்கும் ...தெருவில்...
அந்த மங்கிய நள்ளிரவில்....
கட்டிட முகப்பே...அந்த வீட்டின் செழுமையை காட்டும் ஓர் அழகான பங்களாவின் சுவர் ஏறி குதித்தது கருப்பு போர்வை சுற்றிய மர்ம உருவம்
அந்த உருவம்....பின் வாசல் போய்.... கதவை தொட... உள்ளிருப்பவர் யாரோ கூட்டு களவாணி போல..இந்த திருடனுக்கு கதவு திறந்தே வைக்கப்பட்டு இருந்தது ....
பழகிய வீடு சாயலில் அதுவும்...தன் வழியே சென்று மாடியில் உள்ள ரூம் ஒன்றின் கதவை தட்டியது......
சிறிது நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ..
அவ்வறைக்குரியவன்....ஒலி கேட்டுதூக்கம் கலைந்த கடுப்பில் கதவை திறக்க...
இருட்டில் நின்ற...அந்த உருவத்தை பார்த்து..
பேய் பேய் என்று அலறினான் ....
தன் மேல் உள்ள போர்வையை அது நீக்கியது ....
அது பேய் அல்ல அவனை ஒரு தலையாய்
காதலிக்கும் அழகான மோகினி ...
போர்வையை விலக்கியதும் அவள் நம் நாயகன் மேல் பூ மழை பொழிந்தாள் ....
அதில் நடப்புக்கு வந்தவன் எதிரிருப்பவளை பார்த்து முறைத்தான்......
அவள் அவன் முறைப்பை தூசு போல் தட்டி
விட்டு ...உங்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..ஹ்ம்ம் ஹ்ம்ம் அப்புறம் ஐ லவ் யு டா...என்று கூறி மின்னல் வேகத்தில் அவன் கன்னத்தில் இதழ் பதித்து விலகினாள்...
அவனோ அவளை அலட்சியபடுத்திவிட்டு கதவை மூடிவிட்டான்...
(இதுக்கெல்லாம் தண்டனை இருக்கு தம்பி )
அவள் கோவத்தில் அவனை ஜடம் ஜடம் ஒரு அழகான பொண்ணு ...( யாரும்மா அது?)
நம்ப பின்னாடியே வராளே..கொஞ்சம் அவளை பாப்போம்னு....ஒன்னும் கிடையாது,
எருமை....பன்னி எல்லாம் திமிரு ,அழகா இருக்கோம் ...பெரிய பதவில இருக்கோம்னு கொழுப்பு என்று அர்ச்சித்த படியே வந்த வழியே திரும்பி சென்றாள்..
அங்கே அவனது தாத்தாவை கண்டு காண்டாகினாள்....இருக்காதா பின்னே.அவள் வீட்டின் உள்ளே வருவதிருக்கு தாத்தாவிற்கு அவருக்கு பிடித்த டெம்ப்ட்டேஷன் சாக்லேட் அனைத்து பிளேவரும் வாங்கி லஞ்சம் குடுத்து வந்தா ....பேரன் அவளை துரத்துவதை கண்டிக்காமல்....
சாக்லேட் அனைத்தையும் காலி பண்ணி விட்டார் .....அந்த சுகர் தாத்தா...
தாத்தா... என்று ஹை டெசிபலில் சப்தமிட்டாள்...
அவரோ பேரன் மாதிரியே....
கொஞ்சமும் அலட்டிக்காமல்.... நிதானமாக திரும்பி அவளை பார்த்து என்னவென்று வினவினார்....
மேல உங்க பேரன் என்னை வெளிய தள்ளி கதவை சாத்திவிட்டார்....அதை கண்டுக்காம சாக்லேட் சாப்பிடறீங்க ...உங்கள என்ன பன்றேன்னு பாருங்க..
அவர் சொச்சமாய் வைத்திருந்த சாக்லேட்யையும் பறிக்க வர ...
அந்தோ பரிதாபம் !!!!
அவரும் அறைக்குள் சென்றுவிட்டார்,
டுபாக்கூர் பேமிலி...!!! வந்து மாட்டினேன் பாருன்னு...இருவரையும் அர்ச்சித்த படி தன வீடு நோக்கி சென்றாள்.நாயகி ...
வீடு செல்லும் முன் இவர்கள் பற்றி ஓர் அறிமுகம்..
நாயகன்..6 .2 " ...29 பிறந்தநாள் காணும் சத்யேந்தர்...அவனை டென்ஷன் செய்து விட்டு போன நாயகி வர்ஷா,MBA இறுதியாண்டு மாணவி .
வீட்டிற்கு வந்த வர்ஷாவிற்கு அவளது தம்பி கிஷோர் கதவை திறந்தான் .
வர்ஷா வீட்டில் அவளது அப்பா ஷண்முகம் மத்திய அரசாங்கத்தில் உயர் அதிகாரி
அம்மா வள்ளிமயில் இல்லத்தரசி
தம்பி பி.காம்.முதலாண்டு மாணவன், வர்ஷாும் அவள் தம்பிக்கும் இடையில் எந்த ரகசியமும் கிடையாது,
அவள் முகத்தை பார்த்தே என்ன நடந்துஇருக்கும்னு தெரிந்து கொண்டவன் சிரிக்க ஆரம்பித்து
அவள் முன்னாடியே சத்யாக்கு போன் செய்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாம்ஸ் என்றான் .
மறுமுனையில் என்ன சொல்லப்பட்டதோ..என்ன மாம்ஸ் சொல்லறீங்க..பேய் உங்களுக்கு வாழ்த்த்து கூறியதா, எதுக்கும் உஷாரா இருங்க பேய் உங்களை முழுங்கிட போகுது என்று சொல்லவும் ..அதை கேட்டு வர்ஷி கோவத்துடன் தங்கு தங்கு குதித்து விட்டு அறைக்குள் சென்று விட்டாள்.
மறுநாள் பொழுது பறவையின் கீச்ஒலியடன் அழகாக புலர்ந்தது .
சத்யா தோட்டத்தில ஜாகிங் செய்துகொண்டு இருந்தான் ...
அப்பொழுது அங்கு வந்த அவன் தாத்தா ஹாப்பி பர்த்டே பேராண்டி,தீர்காயுசோட எந்த குறையும் இல்லாம மனசுக்கு பிடிச்ச வாழ்க்கை வாழணும் என்று உச்சி முகர்ந்தார் ,
வர்ஷினி வீட்டுக்கு அந்த நேரத்தில் வர தாத்தா குடுக்கும் செல்லம் தான் காரணம் என்று முகத்தை தூக்கி வைத்து இருந்தவன்...
தாத்தாவின் வாழ்த்தில் நெகிழ்ந்து காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான்.
அவன் தாத்தா தான் அவனுக்கு வழிகாட்டி , குரு எல்லாம் .அவன் ப்ரோமோஷனில் சென்னைக்கு மாறுதலானபின், இன்று தான் வேலைக்கு முதல் நாள், ஆகையால் , சீக்கிரமாக கிளம்பி சாப்பிட வந்தான்,
வெறுமையான டைன்னிங்ஹால்அவனை வரவேற்றது ,
அதில் மனம் வெதும்பி சாப்பிட பிடிக்ககாமல் செல்பவனை தம்பி, சத்யா என இரு குரல்கள் நிப்பாட்டியது ,
சத்யாஎன்று அவன் தாத்தாவும் ,தம்பி என்று பலகாலமாக அவர்கள் வீட்டில் சமையல் வேலை செய்யும் கங்காமா குரலும் அவனை நிறுத்திியது,
என்ன தம்பி உங்க பிறந்தநாளுக்காக பிடிச்சது செஞ்சு வைச்சிருக்கேன்,
சாப்பிடாம கெளம்பறீங்களே என்று புலம்பினார்,
அவன் தாத்தாவோ நீ சீக்கிரம் கிளம்புவாய் என தெரியும்,அதான் நானும் சீக்கிரம் சாப்பிட வந்தேன் பேராண்டி என்றவர் ..
கங்காமா சாப்பாடு எடுத்து வை என்று உரைத்தார்,
அப்பொழுது வெளியில் 10000 வாலா சத்தம் காதை பிளந்தது , தாத்தாவும் பேரனும் வெளியே சென்று பார்த்தால், ஹாப்பி பர்த்டே மச்சி, பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா என்று இரு குரல்கள் கோரஸாக ஒலித்தது,அவர்கள் சத்யாவின் உற்ற நண்பன் அருண் மற்றும் அருணின் தங்கை தீபிகா, அருணை விட சத்யாவிடத்தில் தீபிகாவுக்கு செல்லம் அதிகம், சத்யாஅவளை சொந்த தங்கையாக தான் பார்ப்பான்,
சத்யா மெலிய புன்னகையுடன் தேங்க்ஸ்டா மச்சி , தேங்க்ஸ் தீபிமா, என்றுவிட்டு வாங்க உள்ள போலாம் என்றான் ..
எல்லோரும் உள்ளே சென்று பார்க்க அங்கு black forest கேக் , ஹாப்பி பர்த்டே சத்யா என்ற வாசகத்துடன் இருந்தது,
சத்யா கேக் வெட்டி முதலில் அவன் தாத்தாவிற்கு , பின் தீபிக்கு, அருண் மற்றும் கங்காமாவிற்கு ஊட்டினான் , பதிலுக்கு அவனுக்கும் அனைவரும் ஊட்டினர், பின்அனைவரும் சாப்பிட அமர்ந்தனர் ,
அங்கு சாப்பாட்டு மேஜையில் அவனுக்கு மிகவும் பிடித்த பதார்த்தங்களான பால்கோவா,பூரி கிழங்கு, கம்பு அடை, கார சட்னி இருந்தது,
உணவு முடிந்தவுடன் அருண் ,தீபி சத்யாவிற்கு டீ-ஷர்ட், ஷர்ட் மற்றும் ஒரு வெள்ளி கைச்சங்கிலி பரிசளித்தனர், தாத்தா அவனுக்கு ஒரு பார்க்கர்பேனா பரிசளித்தார்,
உன் பரிசு அழகா இருக்குடா குட்டி ..இந்தாடா இது உனக்கு என்று ஒரு கவரை குடுத்தான் , அதை வாங்கி பிரித்து பார்த்தாள், உள்ளல் இளம் நீல நிறமும் ஆரஞ்சு நிறமும் கலந்து முத்துக்கள் மற்றும் கல் வேலைப்பாடு செய்த சுரிதார் இருந்தது..
டிரஸ் ரொம்ப அழகா இருக்கண்ணா...மீ ஹபிப்ஈஈ என்று குதூகலித்தவளை வாஞ்சையாக பார்த்தான்...
சத்யா அருண் மற்றும் தீபி ஆபிஸ்க்கும் கல்லூரிக்கும் கிளம்ப...அங்கு கேக் சாப்பிட யாரும் இல்லை என்பதால் தீபி சத்யா கையால் ஒரு துண்டு கேக் வாங்கி தனியே வைத்து மீதி கேக்கை கல்லூரிக்கு எடுத்து கொண்டு கிளம்பிவிட்டாள்,
சத்யாவை தவிர அனைவர்க்கும் அவள் தனியே எடுத்து வைத்த கேக் துண்டு எதற்கு என்று தெரியும்.
இங்கு நம் நாயகி வீட்டில் 8 மணி கல்லூரிக்கு 7மணிக்கு தான் துயில் கலைவாள் ,
அவள் அம்மாவிடம் திட்டு வாங்கவில்லை என்றால்,அந்த நாளே போகாது ... இன்றும் அது போல அம்மாவிடம் திட்டு வாங்கி கொண்டு கல்லூரி கிளம்பி சென்றாள்..
அவளது கறுப்பி (அவளது கருப்புscootyin பெயர் scootynu சொன்னா வர்ஷி நம்பள துவைச்சு காய போட்டுருவா..), அங்கு அவளது தோழியுடன் இணைத்துக்கொண்டாள் ...
வர்ஷி வீட்டில் மட்டும் மட்டும் தான் சோம்பேறி ,வெளியில் மிகவும் பொறுப்பான.கல்லூரியின் செல்ல பிள்ளை மற்றும் படிப்பில் முதல் மாணவி.
வர்ஷி வா வா ..ஒரு முக்கியமான விஷயம் நாளை மறு நாள் நம்ப காலேஜ் டேக்கு வர போற சிஎப்கெஸ்ட் கலெக்டர்ஆம்,அவர் ரொம்ப சின்னவயசு அவரை பாக்க எல்லோரும் ஆவலா இருக்காங்க என்று அவளது தோழி உமா ஜொள்ளினாள்,
அவள் சொல்ல இங்கு இவளுக்கு டென்ஷன் ஏறியது, நாளை மறுநாள் எத்தனை பேர் அவனை பார்த்து ஜொள்ளு விட போறாங்களோ, எத்தனை பசங்க பொறாமை பட போறாங்களோ என்று நினைத்தாள்,
இவர்கள் தோழ தோழியர் படை "பைவ் ஸ்டார்" குரூப், அதில் வர்ஷி, உமா மட்டும் வந்துவிட்டார்கள்,
இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது இவர்களின் தோழர்கள் நந்தா மற்றும் தேவா வருகை புரிந்தனர்,
இவர்கள் நால்வரும் யூஜியில் இருந்து இணை பிரியா நண்பர்கள், இன்னொரு நண்பி இப்ப இணைந்தவள் .
இங்கு கலெக்டர் ஆஃபிஸில் புது கலெக்டர் வரவுக்காக அலுவலகம் பரபரப்பாக இருந்தது,
காரில் இருந்த நம் நாயகன் 6 2 அடி ,சிகப்பு நிறம் ,கற்றை. மீசை,ஆளை துளைக்கும் பார்வை என்று வந்தது நம் உம்மணாமூஞ்சி நாயகன் சத்யேந்தர் ஐ.ஏ.எஸ்.
நான்கு வருடங்களாக நார்த் சைடில் துணை கலெக்டர்ஆ இருந்து விட்டு ப்ரோமோஷனில் சென்னைக்கு கலெக்டர்ஆக வந்துள்ளான் ,மிகவும் கண்டிப்பு ,பொறுமைசாலி,கூரிய அறிவு கொண்டவன்,அனைவரும் இப்டி ஒரு கலெக்டர்ஐ எதிர்பாக்கவில்லை என்று அவர்களது முகத்திலே தெரிந்தது,
அனுபவம் மிக்கவர்கள் இவன் என்ன செய்து என்கிற மாதிரி பார்த்தனர், அவன் உள்ள நுழைந்ததும் அனைவரும் ஒருவர் பின் ஓருவராக வந்து தங்களை அறிமுக படுத்தி கொண்டும் வாழ்த்தி விட்டும் சென்றனர்....
அனைவரது வாழ்த்துக்களையும் பெற்று விட்டு தனது அறையில் அவனது பி .ஏ.உடன் அன்றய பணிகளை பற்றி ஆலோசித்து கொண்டுஇருந்தான் .....
இங்கு கல்லூரியில் நாளைக்கு மறுநாள் தன்னவனை காணப்போகிறோம் என்று வர்ஷா கனவில் மிதந்து கொண்டுஇருந்தாள்.ஆனால் தனக்கு அவனை தெரியும் என காட்டிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்...
Last edited: