Just to relax

Advertisement

SahiMahi

Well-Known Member
சிரிக்க ... சிரித்து மகிழ



வாசுவுக்கு கொஞ்ச நாளாவே
வலது கண் மங்கலாகத் தெரிந்தது. தனது அப்பாவிடம்சொன்னான்.
"கண்ணு மங்கலாத் தெரியுதுப்பா !"

"டாக்டர பாக்க வேண்டியதுதானடா ?"

"பாத்தேன், அவரும் மங்கலாத்தான்
தெரியரார் ! "

"அட மடையா டாக்டரிடம் போய் வைத்தியம் பாருடா ?"

டாக்டரைப் பார்க்க, ஓடிக்கொண்டிருக்கும்
பஸ்ஸில் ஏறினான் வாசு .

கடுப்பான கண்டக்டரிடம்கேட்டான்,

"இந்த பஸ் எது வர போகும் ?"

"டீசல் இருக்கும் வர போகும்,ஆமா நீ
எங்க இறங்கணும் ?"

"படிகட்டுலதான் இறங்கணும் !"

ஒரு வழியாய் வாசு, டாக்டர் அட்ரஸைக்
கண்டுபிடித்து,அவரது அறைக்குள்
போனான்.

"டாக்டர் , எனக்கு கண் மங்கலாத் தெரியுது."

"நான் டாக்டர் இல்ல வக்கீல், பக்கத்து ரூம்ல டாக்டர் இருக்கார். அங்க போய்ப் பார்."

பக்கத்து ரூமின் வெளியே உள்ள காலிங்
பெல்லை வாசு அழுத்த,வெளியே வந்த
டாக்டர் கேட்டார்.

"இங்க என்ன ஒரே கூட்டம், நெருக்காம க்யூவுல நில்லுங்க ?"

வாசுவுக்கு அதிர்ச்சி- என்ன நாம ஒரு
ஆள்தானே நிக்கிறோம்,டாக்டருக்கே
இப்படியா - என நினைக்கிறான்.

" ஐயோ டாக்டர் நான் ஒரு ஆள் தானே
நிக்கறேன் !"

" ஓ- - ஒரு ஆள் தானா ?" கண்ணாடியை
கழட்டி விட்டுப் பார்த்தார்.

" சரி சரி, உள்ள வா என்ன செய்யுது ?"

"வாய் நாறுது டாக்டர் !"

"எப்ப இருந்து தம்பீ ?"

"நீங்க வாயத் திறந்ததிலிருந்து தான்
டாக்டர்."

டாக்டருக்கு கோபம் தலைக்கேறியது.
இவன ஒரு வழி பண்ணனும்னு நினைச்சுட்டார்.

"உனக்கு என்ன நோய்னு சொல்லுப்பா ?"

"கண்ணு மங்கலாத் தெரியுது டாக்டர் !"

"அந்த எழுத்த வாசி ?"

"எழுத்து எங்க இருக்கு டாக்டர் ?"

"அந்த போர்டுல உள்ள எழுத்த வாசிப்பா ?"

"போர்டு எங்க இருக்கு டாக்டர் ?"

"என்னையப் படுத்தாதப்பா, வலது பக்க
சுவர்ல தானே போர்டு தொங்குது ?"

"சுவரு எங்க இருக்கு டாக்டர் ?"

"அடப்பாவி ! சுத்தமாவே கண்ணு அவிஞ்சு போச்சா ? அப்ப உனக்கு ஆபரேஷன் பண்ண வேண்டியதுதான்.மருந்து எழுதித்
தர்ரேன், ஒரு 2 மணி நேரத்துல வாங்கிட்டு வந்துரு."

3 மணி நேரம் கழித்து வந்தவனிடம் டாக்டர்,

"ஏய்யா லேட் ?"

'போங்க டாக்டர் ,நீங்க எழுதிக் கொடுத்த
ப்ரிஷ்கிரிப்ஷன்ல கடைசியா பச்ச கலர்ல
எழுதியிருந்த மருந்து மட்டும் எந்தக்
கடையிலும் கிடைக்கல டாக்டர்."

அடப்பாவி, அது என் பேனா எழுதுதா
இல்லையான்னு கிறுக்கிப் பாத்ததுடா !
சரிசரி , படு .உங்கண்ணுல மருந்து ஊத்தறேன்."

"எரிச்சலா இருக்கா, ஜில்லுனு இருக்கா ?"

"புளிப்பா இருக்கு டாக்டர் !"

" சரி இதெல்லாம் உனக்கு சரிப்படாது.
நேரா ஆபரேஷனுக்கு போக வேண்டியதுதான்.சரி உனக்கு சாதரண ஊசி போடவா இல்ல ஸ்பெஷல் ஊசி போடவா ?"

"அதென்ன சாதரண ஊசி, ஸ்பெஷல் ஊசி ?"

"நான் போட்டா சாதரணம், நர்ஸ் போட்டா
ஸ்பெஷல் !"

ஊசி போட்டு விட்ட நர்ஸ்,அலறியடித்துக்
கொண்டு டாக்டரிடம் ஓடினாள்.

டாக்டர் வந்து கோபமா கேட்டார்.

"ஏன் - நர்ஸ் கையப்ஸபுடிச்சு தடவுன ?"

"அவங்க தான் சொன்னாங்க . கைய நல்லாத் தடவி விடுங்கன்னு !

சரி டாக்டர் ஆபரேஷன் எப்ப முடியும் ?"

" செத்த " நேரத்துல முடியும்."

"ஐயோ டாக்டர் - கொஞ்ச நேரத்துல
முடியுமுன்னு சொல்ல வேண்டியதுதானே."

ஆபரேஷன் முடிந்த பின் தான் டாக்டருக்கு
தான் செய்த தவறு தெரிந்தது. வலது கண்ணுக்குப் பதில் இடது கண்ணில்
செய்துவிட்டார்.வாசுவிடம் மன்னிப்பு
கேட்டார்.

"விடுங்க டாக்டர், இது பெரிய விஷயமா ?"

"என்னப்பா இத சிம்பிளா எடுத்துக்கிற ?"

" உங்களப்பத்தி தெரிஞ்சுதான்
ஆரம்பத்திலேயே கண்ண நான் மாத்தி
சொன்னேன்."

ஒரு வழியாக கண்ணாடி போட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்த வாசு தன் மனைவியைக் கூப்பிடுகிறான்.

"மரகதம் இங்க வாடி,கண்ணாடி எப்படி
இருக்கு ?"

" கண்ணாடியெல்லாம் நல்லாத்தான்
இருக்கு.ஆனா உங்க வீடுதான் அடுத்த
தெருவுல இருக்கு.நான் உங்க மரகதம்
இல்ல !"

கதைய இதுக்குமேல என்னால
continue பண்ண முடியல, முடிஞ்சா
யாராவது பண்ணுங்க !
 

Geetha sen

Well-Known Member
ஆரம்பத்திலிருந்து கடைசி வரை நல்ல சிரிப்பாக இருக்கிறது. Thanks sis :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top