JERRY'S - 19.ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்

JERRY

Well-Known Member
#1
19.ஐ ஹேட் பாடிகார்ட்ஸ்

திருச்சி ஈசனின் வீடு,

காலையில் எச்சரிக்கை செய்வதாக நினைத்து கதிரிடம் தான் கூறிய தகவலில் ஏதோ தவறு இருப்பதாக வெற்றிக்கு தோன்ற ஆரம்பித்தது, அவசரப்பட்டு கதிரிடம் கோமாவில் இருக்கும் லாரி ஓட்டுநர் பற்றி கூறி விட்டோமா என அவரின் மனதில் பெரும் உறுத்தல் இருக்கத் தான் செய்தது, அழையா விருந்தினராக வந்த குறுஞ்செய்தியின் நோக்கம் என்னவாக இருக்கும்,யார் செய்யும் சதி வலை இது?,முரளி அவரிடம் பேசியதிலும் ஏதோ முரண்பாடாக இருப்பதை அவர் உணர்ந்தே இருந்தார்.

"ஏதோ ஒன்றை கவனிக்காமல் விட்டு இருக்கிறாய், என்ன அது?, நன்றாக யோசித்து பார்..."என்று அவரின் மனம் அவரை சிந்திக்க வலியுறுத்திக் கொண்டு இருந்தது.

ஈசன் மற்றும் கதிருடன் பத்ரா இருப்பதால் அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் தான்,அவர்களுக்கு பெரிதாக பிரச்சனை எதுவும் வர வாய்ப்பில்லை,ஒரு வேளை மித்ரன் மற்றும் உத்ராவிற்கு ஏதாவது நேர்ந்து இருக்குமோ எனச் சந்தேகம் அவர் மனதில் உதித்தது,எட்டு வருடங்களுக்கு முன் இருந்த மித்ரனும்,உத்ராவும் நிறையவே மாறி இருக்கிறார்கள் தான்,மித்ரன் கொஞ்சம் அவசர புத்தி உள்ளவனாக செயல்பட்டாலும், உத்ராவை மீறி எதுவும் செய்யமாட்டான், அவனை உத்ரா பார்த்துக் கொள்வாள்,
ஆனால் உத்ராவை அவர் கவனித்தது வரை அவளின் அமைதியானது புயலுக்கு முன் வரும் அமைதி,அவளுள் மையம் கொண்டு இருக்கும் புயல் அவளை வெல்ல வைத்தால் பரவாயில்லை ஒரு வேளை அவளையும் சேர்த்து அழித்து விட்டால் நேரும் விபரீதங்களுக்கு யாரைக் குறை சொல்ல முடியும் என பலவற்றை சிந்தித்தவர் ஒரு கட்டத்தில், "இல்லை இவர்கள் யாரும் அவன் குறியாக இருக்க மாட்டார்கள்,
பசுக்கள் ஒற்றுமையா இருந்தால் சிங்கத்தால் பசுக்களை வேட்டையாட முடியாது, தனித்து இருக்கும் பசுவைத் தான் எளிதில் வேட்டையாட முடியும்,எங்களில் தனித்து இருக்கும் நபர் யார்? "

என்ற வெற்றியின் வினாவிற்கு தீரன் என்னும் விடை கிடைத்தது,தீரனைத் தான் ஆபத்து சூழ்ந்து உள்ளது,தீரனை எவ்வாறு எச்சரிக்கை செய்வது என சிந்தித்துக் கொண்டு இருந்தவரின் கைபேசி தொடர்ந்து சிணுங்கி அவரின் கவனத்தை கவர்ந்தது, அழைத்தது வேறு யாரும் இல்லை, தென்னவன் தான் வெற்றியின் கைபேசிக்கு அழைத்து இருந்தான்,அழைப்பை எடுத்த வெற்றியிடம்

"ஹலோ... அங்கிள் இருக்கீங்களா?"

"என்னாச்சு தென்னவா... பதறாம... என்ன நடந்துச்சுனு சொல்லு..."

"தீரன் ஈசனை கடத்த ரெண்டு முறை முயற்சி செய்துருக்கான் அங்கிள்..."

"ம்ம்..."

"அது மட்டும் இல்ல அங்கிள்... இன்னொரு பக்கம் மித்ரன் கதிரைக் கடத்த முயற்சி பண்ணி இருக்கான்..."

"இந்த கதிரைக் கடத்தி இவன் என்ன பண்ண போறான்..."

"மித்ரன் கிட்ட தான் அதை கேட்கனும் அங்கிள்..."

"இவன் செய்யுறது எல்லாம் உத்ராவுக்கு தெரியுமா..."

"நீங்க வேற அவ யாரோ ஒருத்தனை சாகுற... அளவுக்கு அடிச்சுருக்கா... , மித்ரன் அவனை ஹாஸ்பிடல அட்மிட் பண்ணிருக்கான்..."

"உனக்கு எப்படி தெரிஞ்சுச்சு? "

"நானும் பல மாசமா உத்ரா பின்னாடி தானே அங்கிள் சுத்துறேன், எப்போ தான் மனசு வந்து என் பக்கம் திரும்புவானு தெரியல..."

"டேய் மித்ரன் அவளை விரும்புறான், நீ என்னடா புதுசா ஒரு கதை சொல்லுற..."

"ஐயோ அங்கிள் நான் எப்ப உத்ராவை லவ் பண்ணுறேன் சொன்னேன், என் அம்மா கிட்ட வந்து என் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுறேன் சொன்னா அதுக்கு தான் உத்ரா பின்னாடி சுத்துறேன், நீங்க கதையை மாத்த பார்க்குறீங்களே அங்கிள், என்னோட நிலாக் குட்டி என்ன கொன்னுடுவா,அது மட்டும் இல்ல அங்கிள் உத்ரா பின்னாடி சுத்துறேனு மித்ரனுக்கு தெரிஞ்சுச்சு என்னை எரிச்சுட்டு தான் அடுத்த வேலையை பார்ப்பான்..."

"உன் பிரச்னை உனக்கு,நான் கூட வந்து உன் அம்மாக்கிட்ட பேசுறேன்டா,எந்த ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணிருக்காங்க சொல்லுடா ? "

"கே.கே ஹாஸ்பிடல்..."

"எப்போ அட்மிட் பண்ணாங்க? "

"நேற்று தான் அங்கிள், ஹாஸ்பிடல இருந்து நம்ம ஸ்டேஷன்க்கு இன்போர்ம் பண்ணிருக்காங்க"

"டேய் உன் தங்கச்சி கல்யாணி எந்த ஹாஸ்பிடல் வேலை செய்யுறா..."

"அவளும் கே.கே ஹாஸ்பிடல தான் அங்கிள் வேலை செய்யுறா..."

"நல்லது... நான் கேட்ட சிசிடிவி ரெகார்ட்ஸ் கிடைச்சுதா?"

"எல்லா ரெகார்ட்சையும் உங்க செல்ல புள்ளைங்க அழிச்சுடாங்க அங்கிள்... "

"டேய் சிசிடிவி ரெகார்ட்ஸ் எல்லாம் ரெகவர் பண்ணி நல்லா படம் பார்த்துட்டு என் கிட்ட வந்து கதை சொல்லிட்டு இருக்கையாடா..."

"அங்கிள் ஏன் இப்போ டென்ஷன் ஆகுறீங்க..."

"..."

"இவங்க எல்லாரும் எதுக்கு கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க..."

"எனக்கும் யாருக்கிட்டவாது நான் சாகுறதுக்குள்ள சொல்லிடனும் நினைக்கிறேன்டா..."

"என்ன அங்கிள் இப்படி எல்லாம் சொல்லுறீங்க,நான் மட்டும் இப்போ அங்க இருந்தேன்,உங்க காதை பிடிச்சு திருகிடுவேன்..."

"சரிடா இனிமே அப்படி பேசமாட்டேன்,நான் இப்போ சொல்லுறத முதல்ல செய்... நீ தீரன் கிட்ட ஏதாவது பேசி அவனை கே.கே ஹாஸ்பிடல மித்ரன் அட்மிட் பண்ணவனை பார்த்துட்டு வரச் சொல்லு,ரொம்ப அவசரம்டா..."

"ஒரே மர்மமா போகுது அங்கிள்,என்னை தீரன் கிட்ட நேரடியா சிக்கவைக்க பிளான் பண்ணுற மாதிரி தெரியுது... அவனை ஹாஸ்பிடல்க்கு அனுப்பி வைச்சுட்டு போன் பண்ணுறேன் மொத்த கதையும் சொல்லுறீங்க... இவங்க எல்லாருக்கும் என்ன நடந்தது யோசிச்சு மொத்த முடியும் கொட்டிடும் போல..."

"சரிடா சொல்லுறேன்... தீரன் கிட்ட ஹாஸ்பிடல் அட்மிட் ஆனவன் குற்ற பின்னணியில் உள்ளவன் மட்டும் சொல்லு... வேற எதுவும் தெரியா வேண்டாம்..."

"சரி அங்கிள் வெற்றியோடு வரேன் பாருங்க..."
என்று கூறி அழைப்பை வைத்தான் தென்னவன்.

தன் நண்பன் தீரனிடம் பேசி அவனை மருத்துவமனைக்கு அனுப்புவதற்குள் தலை கீழாக தண்ணீர் குடித்தவனின் நிலைக்குச் சென்று விட்டான் தென்னவன்.

"என்ன ஆனாலும் பரவாயில்ல இன்னைக்கு எல்லாம் தெரிந்து விடும்..."என எண்ணியவாறு வெற்றியின் கைபேசிக்கு அழைத்தான் தென்னவன்.

அவனது அழைப்பு சில வினாடிகள் மட்டும் ஏற்கப்பட்டு பின் துண்டிக்கப்பட்டன,அந்தச்
சில வினாடிகளில் அவன் செவிகள் உணர்ந்த செய்தியில் அவன் கரத்தில் இருந்த கைபேசி தவறி கீழே வந்தது.

தென்னவன் கீழே விழுந்த கைபேசியை எடுத்து திருச்சியில் உதவி ஆய்வாளர்
(Sub Inspector )ஆக இருக்கும் தன் நண்பன் கரிகாலனின் கைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்தான்,அழைப்பு மறுபக்கம் எடுத்தவுடன் வெற்றியின் முகவரியைச் சொல்லி அவரின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுமாறு கூறினான்,அடுத்த கட்டமாக தன் தந்தை சக்திக்கு,"ஒரு அவசர வேலை காரணமாக திருச்சி செல்கிறேன்"என குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பி விட்டு,தன் காரை எடுத்துக் கொண்டு திருச்சிக்கு கிளம்பி விட்டான் தென்னவன்.

"டேய் போன் பண்ணா ஆப்போசிட்ல இருக்குறவன் என்ன நிலைமையில இருக்குறானு முதல்ல கேளுங்கடா...
ஏதோ வெங்காய பஜ்ஜியை ஆன்லைன்ல ஆர்டர் பண்ணவன் மாதிரி நீ பாட்டுக்கு சொல்லிட்டு போனை வைச்சுட்டா என்னடா அர்த்தம்..."என்று வாய் விட்டு புலம்பிக் கொண்டு இருந்தான் கரிகாலன்,அவன் முன்னால் உருட்டுக் கட்டையுடன் அவனின் மனைவி சம்யுக்தா நின்று கொண்டு இருந்தாள்அவளின் முகம் கோபத்தில் முற்றிலுமாக சிவந்து காணப்பட்டது,இவனின் இந்த கோலத்தை பார்த்த சம்யுக்தாவின் மனசாட்சி,
"இன்ஸ்பெக்டர் சாருக்கு எல்லாம் முதலேயே பொங்கல் வைச்சுருக்கனும், அப்ப விட்டுட்டு இப்போ அடிச்சுட்டு இருக்க... ரெண்டு வருசமா கொஞ்சம் ஓவரா பில்டப் பண்ணிட்டு இருந்தாருல... அதுக்கும் சேர்த்து வச்சு சாரை நல்லா கவனி..." என்று இன்னும் ஏழு எட்டு குற்றச்சாட்டுகளை கரிகாலனின் மேல் போட்டு தன் அன்பை பொழிந்தது.

(கரிகாலன் தென்னவனின் கல்லூரித் தோழன்,அவன் பணி புரியும் காவல் துறையை மிகவும் நேசிப்பவன்,கரிகாலன் முதலில் சென்னையில் தான் பணி அமர்த்தப்பட்டான்,அவனின் நேர்மையானது சில அதிகாரிகளை வியக்க வைத்தது என்றால் பலரை எரிச்சல் அடையச் செய்தது,
பணிக்குச் சென்று விட்டால் அவன் உணவு, உறக்கம் என அனைத்தையும் மறந்து விடுவான்,முக்கியமாக குடும்பத்தினரை மறந்தே விடுவான், அவனின் இத்தகைய செயலால் கவலை கொண்ட அவனின் பெற்றோர்,தங்களின் மகனுக்கு திருமணம் செய்து வைத்தாலாவது குடும்பம், மனைவி என மகிழ்ச்சியாக வாழ்வான் என நினைத்து சம்யுக்தாவை இரு வருடங்களுக்கு முன் திருமணம் செய்து வைத்தனர்,கல்யாணம் முடிந்த ஒரே வாரத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு மாற்றுதல் ஆகி விட்டது.

சம்யுக்தா ஒரு மௌன மொழியாள்,அவள் சிறுமியாக இருக்கும் போது நடந்த விபத்து ஒன்றில் அவளின் பெற்றோர் இருவருமே தவறி விட்டனர்,அவளின் பேசும் திறனையும் அவ்விபத்தில் இழந்து விட்டாள், சொந்தங்கள் யாவரும் எங்கே தங்கள் பக்கம் பெண் குழந்தையை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு வந்து விடுமோ என அஞ்சி ஒவ்வொருவராய் நழுவிச் சென்றனர்,
சம்யுக்தாவின் வீட்டில் வேலை செய்த மங்கம்மாவிற்கு சம்யுக்தாவை தனித்து விட்டுச் செல்ல மனம் இல்லை, தன்னோடு அழைத்துச் செல்லவும் முடியாத சூழ்நிலையில் அவர் இருந்ததால் அருகில் இருந்த 'அன்பு' பெண்கள் காப்பகத்தில் சம்யுக்தாவை சேர்த்தார்,சம்யுக்தா காப்பகத்தில் தன் காலடியை அடி எடுத்து வைக்கும் போது அவளுக்கு பதினொரு வயது,அச்சிறுமிக்கு தன் வாழ்வில் நடக்கும் செயல்கள் யாவும் பாதி புரிந்தும், மீதி புரியாத நிலையில் அமைதியாகி விட்டாள், அனைவரிடமும் இதழ் பிரியா ஒரு சிறு புன்னகையை மட்டுமே பதிலாக கிடைக்கும்.

காலங்கள் யாருக்காவும் காத்திருப்பது இல்லையே,வருடங்கள் பல கடந்தன,
சம்யுக்தா 'ஸ்பெஷல் சில்ட்ரன்' பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறாள்,
ஆண்டுகள் பல கடந்தாலும் சம்யுக்தாவை பார்க்க மங்கம்மா காப்பகத்திற்கு வந்து விடுவார்.கரிகாலன், சம்யுக்தா இருவருக்கும் திருமணம் நடைபெற முக்கியக் காரணமும் மங்கம்மா தான்,சம்யுக்தாவை கோவிலில் பார்த்த கரிகாலனின் தாய்,அவளைப் பற்றி அனைத்து தகவல்களையும் விசாரித்து தெரிந்து கொண்டு, தன் மகனுக்காக மங்கம்மாவிடம் பெண் கேட்டார்,மங்கம்மாவும் எளிதாக திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை, தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்தால் எவ்வாறு மாப்பிளையை பற்றியும், அவரின் பின்புலங்கள் பற்றியும் விசாரித்து இருப்பாரோ அதேபோல் அனைத்தையும் விசாரித்து நல்ல குடும்பம் என்று அறிந்த பின்னர் தான் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்,சம்யுக்தா தனியாகவே இருந்து விடக் கூடாது என போராடி அவளிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்கினார் மங்கம்மா.

கரிகாலனுக்கு திருமணத்தில் பெரிதாக விருப்பம் இல்லாவிட்டாலும் தன் அன்னையின் விருப்பத்திற்காக சம்யுக்தாவை திருமணம் செய்து கொண்டான்,தன் வாழ்வில் திருமணம் என்ற நிகழ்வு நடந்ததை நம்ப முடியாத ஆச்சரியத்தில் கரிகாலனின் கரம் பற்றினாள் சம்யுக்தா.

(மெல்லிய புன்னகையை மட்டும் பதிலாகத் தரும் சம்யுக்தா உருட்டுக் கட்டையை எடுக்கும் அளவுக்கு அப்படி என்ன நடந்து இருக்கும்)

தொடரும்...
 
Saroja

Well-Known Member
#8
ரொம்ப நல்லா இருக்கு
சம்யுக்தா கரிகாலன்
ஜோடியின் கல்யாணம் அருமை
 
Nasreen

Well-Known Member
#10

Nice ud
Vetri ellarayum pathi yosikiraru but avaroda pathugappu pathi yosikalayae??
Karikalan s marriage to samyuktha is to be appreciated
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement