Home-made chocolate truffle

Advertisement

Sahi

Well-Known Member
இது 3 அடுக்குகள் (layers) கொண்ட ஒரு டெஸெர்ட் வகை.
3 அடுக்குகள் என்ன என்னனா சாக்லேட் கேக், சாக்லேட் கேசட்டா and whipped cream.

Common ingredients
Cherries or tutty fruities
Bovonto or any soft drink or sugar syrup: 2 டேபிள் ஸ்பூன்

1. சாக்லேட் கேக்
chocalate கேக் பேக்கரில வாங்கி use பண்ணலாம் or நாமளே வீட்ல பண்ணலாம்.
தேவையான பொருட்கள்:
Dry ingredients
கோதுமை மாவு: 1 கப்
கோகோ பவுடர்: 1/4 கப்
baking பவுடர்: 1 டீஸ்பூன்
baking soda: 1/2 டீஸ்பூன்
உப்பு: 1 சிட்டிகை

Wet ingredients
முட்டை: 1 or தயிர் (1/2 கப்)
பால்: ½ கப்
refined எண்ணை: ¼ கப்
சர்க்கரை: 1/2 கப்

செய்முறை:
Dry ingredients எல்லாம் முதல்ல mix செஞ்சுடுங்க அடுத்து அதில் wet ingredients சேர்த்து மிதமா கலந்து preheated ஓவென்ல 180°C 25 min bake செய்தா சாக்லேட் கேக் ready.

2. சாக்லேட் கஸ்டர்டு

தேவையான பொருட்கள்:
சோள மாவு: 3 டேபிள் ஸ்பூன்
கோகோ பவுடர்: 3 டேபிள் ஸ்பூன்
பால்: 1 கப் and 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை: 1/2 கப்
வெனிலா எசென்ஸ்: 2 ட்ராப்ஸ்

செய்முறை:
சோள மாவையும், கோகோ பவுடரையும் 2 டேபிள் ஸ்பூன் காய்ச்சி ஆறிய பால் விட்டு கட்டி இல்லாமல் கிளறவும்.
1 கப் பாலை அடுப்பில் வைத்து சூடானவுடன் 1/2 கப் சர்க்கரை சேர்க்கவும். 1 நிமிடம் கழித்து மாவு கலவையை பாலுடன் சேர்த்து மிதமான தீயில் கை விடாமல் கிளறவும். 2/3 நிமிடங்களில் கலவை கெட்டிப்பட்டதும் (semi gravyconsistency) இறக்கி எசென்ஸ் சேர்த்து கிளறி ஆறவிடவும். சாக்லேட் கஸ்டர்டு தயார்.

3. Whipped cream
whipped cream கடையில ready-made கிடைக்கும் அது வாங்கி whip பண்ணிக்கலாம் or fresh cream வச்சு நாமளே தயார் செய்யலாம்.

தேவையான பொருட்கள்:
Fresh cream (low fat): 1 cup
Powdered sugar: ¼ cup

செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் 3/4 நீர் நிரப்பி freeze பண்ணி ஐஸ் கட்டியா வைக்கணும். பெரிய பாத்திரத்துக்குள்ள வைக்கற மாதிரி ஒரு சின்ன பாத்திரம் (whip செய்ய) and whipper இரண்டையும் chill செய்து எடுக்கவும் (10 min in freezer). ஐஸ் கட்டியுள்ள பாத்திரத்தில் சின்ன பாத்திரத்தை வைத்து அதில் Fresh cream and powdered sugar சேர்த்து whip செய்யவும். சிறிது நேரத்தில் கிரீம் 3 மடங்கு நுரைத்து அதிகரிக்கும். நம்மளோட whip cream ரெடி. Hand whipper and electric mixer ரெண்டுமே use பண்ணலாம்.IMG_20190804_134242.jpg

Layers arrangement
Layer 1: ஒரு பௌல்ல கேக் சின்ன சின்ன துண்டா பிச்சு போட்ருங்க அதுல 2/3 டேபிள் ஸ்பூன் any soft drinks or sugar syrup add பண்ணுங்க.
Cake மேல fresh Cherries or tutty fruities arrange பண்ணுங்க.
Layer 2: சாக்லேட் கஸ்டர்டு ஊற்றி spread பண்ணுங்க.
Layer 3: அது மேல whipped cream ஊத்தி பிரிட்ஜ்ல 2 மணி நேரம் வச்சிருந்து எடுத்தா சூப்பரான Chocolate truffle ரெடி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top