Happie birthday Raja Sir

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
இசையில் தொடங்குதம்மா...:love::love::love::love:


ராஜா சார் எழுதி இசையமைச்ச பாட்டு...இதுல என்ன ஆச்சரியம்னா அதை கமல் சார் ஹேராம் படத்துல முதல்ல ஒரு music director ட்ட கொடுத்து அப்புறம் ஏதோ ப்ராப்ளம்...ஆகி சீன்ஸ்க்காக இசையமைச்ச பாட்டு..அதுவும் சரியா பொருத்துற மாதிரி...


என்ட்ட முதல்லயே வரலன்னு கோபமே இல்லாம மீண்டும் ஏற்கனவே compose செய்த பாட்டெல்லாம் விட்டுட்டு புதுசா இசையமைச்ச பாட்டு....இந்த படத்துல உள்ளதெல்லாம்...எல்லாமே classic...

இசையில் தொடங்குதம்மா அஜய் சக்ரபர்த்தினா..

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…னு ஆஷா போன்ஸ்லே

அசத்தியிருப்பாங்க…இரண்டுமே அற்புதமான ஆலாபனை…
அதுவும் இசையில் தொடங்குதம்மா அவரே எழுதின லிரிக்ஸ்னால எனக்கு இன்னும் கூடுதலா இசைக்கும்..இனிக்கும்…

அதுவும் யார் என்ன பாட்டை பாடினா நல்லா இருக்கும்னு சரியா தெரிஞ்சு வைச்சு…அஜய் சக்ரபர்த்தி பாடின ஒரே தமிழ் பாடல் ..such a divine voice..:giggle:

அதுவே…அதை எத்தனையோ பேர் ஸ்டேஜ்ல…போட்டிகள்ல பாடுறாங்க…ஆனால் யாருமே அதற்கு நியாயம் செய்யல:cry::cautious:…இப்போ சூப்பர் சிங்கர்ல விக்ரம்னு ஒருத்தர் பாடுறார்…அது பரவாயில்ல…:love::love::love::love:(nijama vikram nalla padurar pa...name kaga sollalanu sona nambavaa poreenga...:p)


அதுவும் சிந்து பைரவி படம் சாங் ரெகார்டிங்க் அப்போ சித்ராம்மாக்கு எக்ஸாமாம்…எக்ஸாம அடுத்த வருசம் எழுதுன்னு…இரண்டு பாட்டு அவங்களை பாட வைச்சார்..அவங்களுக்கு தேசிய அவார்ட் வாங்கி கொடுத்த பாட்டு அது…:love::love::love:

சுசீலாம்மா recent interview…ல சொன்னாங்க..’நானா பாடல்லையே நீதான் பாடவைச்சன்னு…’:love::love::love:பாடுவது ஓர் கானம்..சாங்....அம்ம்ம்மாஆஅ...

பொதுவாவே கோரஸ் எனக்கு பிடிக்காது...பாட்டில....ஆனா ராஜா சார் கோரஸ்>..அதுவே தனி அழகுய்யா...:love::love::love::love:அதுவும் தரத்த் தரத்தா தார ரா ரா.....னு பாடுவது ஓர் கானம்ல வருமே....அள்ளும்

பொன்வானம்..தண்ணீர் தூவுது இருக்கே...ஜானகிம்மா...வாய்ஸ...:love::love::love::love::love:உள்ள என்னவோ செய்யும்..(ஆனா கண்றாவி நேத்து வீடியோ பார்த்தேன் முடியல....:cry: நல்ல பாட்டுக்கு மட்டும் வீடியோ செட் ஆக மாட்டேங்குது..என்ன டிசைனோ)


அப்படி ஒரு அழகா யார் எதை செஞ்சா அழகா இருக்கும்னு ராஜாவுக்குத் தெரிஞ்சிருக்கு..


என்னோட சந்தோச சாரலா….:giggle:தனிமையில தாலாட்டா:love:…அழுகையில ஆறுதலா இருந்தது இசைதான்:cry:….இங்க பல பேருக்கு அப்படி தான்…

காதல்…தாய்மை..போல இசை ஒரு உணர்வு..அது உன்னதம்…உயிர் வரை தீண்டுற உன்னதம்…feel the music அப்படி தானே இருக்கும்….


இப்ப வர ராஜா சார் சாங்க்ஸ் மந்தமாய் இருக்கலாம்…ஆனால் ரௌடி பேபியின் ஆதிக்கத்தில் மறைந்து போன மாரியின் ஆனந்தி கேட்டுப் பாருங்கள்…:love::love::love::love::love:
எத்தனை உணர்வுகளை உங்களிடம் அது கொட்டிச் செல்லும் என்று…
…இளையராஜாவின் இசை என்பது நம் வாழ் நாளின் அழிக்க முடியாத நம்மை ஆதிக்கம் செய்யும் அற்புதம்….ஆனந்தம்…:):):)



அவரால அழவைக்க முடியும்..சிரிக்க வைக்க முடியும்….ன்னை பொருத்தவரை ராஜா என்றால் நிம்மதி….எத்தனை அழுத்தம் மனசை அழுத்தினாலும் அவர் பாட்டை…பாட்டை விடுங்க…பிஜிஎம்…கேட்டாலே போதும்ங்க….இன்னிக்கு எத்தனையோ புதுசு புதுசா மியுஸீக் டைரக்டர்ஸ் வராங்க….ஆனாலும் கிட்ட்தட்ட 40 50 வருசமா தமிழ் நாட்டோட சேர்ந்து இசைக்குது அவரோட இசை..


Immortal….:love::love::love:

அதுவும் பின்னணி இசையில அவரை அடிச்சிக்க முடியாது…..விகடன் சர்வேயில பெஸ்ட் என்னவோ மௌன ராகம்…ஆனா எனக்கு
புன்னகை மன்னன் தான்…..அதுவும் கன்னத்தில் ஏனெனிந்த கண்ணீர்..இருக்கே...:love::love::cry:

இன்னிக்கு வரை மாங்குயில பூங்குயில கேட்டா கால் அசையாம இருக்காது….:p

இசை என்பது பாகவதருக்கும்….படித்தவர்களுக்கும் என்பதல்லாமல் அதை பாமரருக்கும் கொண்டு சேர்த்தவர்….

மரி மரி நின்னேவும் ராஜாவால முடியும்…
பாடறியேன் படிப்பறியேன்னும் ராஜாவால முடியும்…


எப்பவுமே நீங்க நல்லா இருக்கனும்….இப்படியே இசைக்கனும்….
We love youuuuu Raja Sir…:love::love::love::love::love::love::love:


HAPPIIEE HAPPIEE BIRTHDAY RAJA SIR

IT SHOULD BE BELATED....YES...
02/06/2019

நேத்தே எழுத நினைத்தேன்...ஆனால்..காய்ச்சலில் விழுந்தேன்....வெயில் காலத்திலும் காய்ச்சல் அடிக்கும் விசித்திர ஜந்து நான்..:ROFLMAO::sleep::p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top