GuruPoornima - Precap 14

Sarayu

Well-Known Member
#1
அன்று கமிஷனர் ஆபிஸ் செல்ல, அங்கேயோ “கண்டிப்பா இது கேஸ் பைல் பண்ணியே ஆகணும். எங்களுக்கு மேல மேல ப்ரெஷர்.. உங்க சைட் தப்பில்லைங்கிறப்போ நீங்க ஏன் டென்சன் ஆகணும்...” என்றனர்..

பாலகுருவோ பூர்ணிமா முகம் பார்க்க, அவளோ எதுவானாலும் சரி பார்த்துகொள்வோம் என்பதுபோல அமர்ந்திருந்தாள்..

“என்ன பூர்ணி... சைலேன்ட்டா இருக்க???”

“என்ன சொல்ல பாஸ்.. விடு பார்த்துக்கலாம்...” என்றவள், “என்னை அர்ரெஸ்ட்
பண்ணுவாங்களா???” என்றாள்..


“ச்சி ச்சி... என்ன பேச்சு இது..”

“ம்ம்ச் எப்படியும் என்கொயரி போகும்தானே...”

“ம்ம்ம்ம்...”

----------------------------------------------

“இப்பயும் சொல்லிக்கிறேன்.. இது உனக்காக இல்ல குரு.. உன் பொஞ்சாதி.. அதான் அந்த பூர்ணிமா புள்ளைக்காக... இன்னா பாக்குற.. ஷாக்காகீதா.... இக்கும் இக்கும்... என்னிக்கு நல்லா தெரியும் குரு.. உன் பொண்டாட்டி முட்டும் இல்லாங்காட்டி நீ என்னிக்கோ என்ன போட்டிருப்பன்னு.. அதான்...”

“டேய் டேய் டேய்.. சும்ம்மா சலம்பாத.... நீ சரன்டரே ஆகலைன்னாலும் எனக்கு எப்படி இதை ஹேண்டில் செய்யணும் தெரியும்.. பெரிய இவன்னாட்டம் வந்து பேசாத என்ன..” என்று அப்போதும் கெத்து காட்டினான் பாலகுரு..

.........................................................................

நிர்மலாவோ கிடந்து தவித்தாள்... இதில் அவளின் வருங்கால கணவன் வேறு.. இந்த வீடியோ லீக் ஆனதில் இருந்து முகம் தூக்கிக்கொண்டு இருந்தான்.. சரியாய் பேசுவதுமில்லை.. ஒருவேளை அவன் பேசியிருந்தால் கூட இவளுக்கு இந்த தவிப்பு நேர்ந்திராதோ என்னவோ..

அதிலும் அந்த பூர்ணிமா.. அவளை நினைக்க நினைக்க அப்படியொரு எரிச்சல் இவளுக்கு மூண்டது.. கடைசியில் என்னமாய் ஒரு பார்வை பார்த்தாள் அவள்...
“யாரையும் வேண்டாம்னு தூக்கி போடுறது ஈசி... இப்போவாது புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்..” என்று சொன்னவளின் பார்வையில் தான் எத்தனை ஒரு ஏளனம் இருந்தது..


நிர்மலா அன்று பூர்ணிமாவை பார்த்த ஏளன பார்வையை காட்டிலும் பத்து மடங்கு இவள் காட்டினாள் ஒரு பாவனை..
..........................................................................


“பாஸ் இப்போ ஏன் நீ இப்படி இருக்க...???”

“ம்ம்ச் ஒண்ணுமில்ல பூர்ணி..”

“ஒண்ணுமில்லயா.. உன் மூஞ்சிய பார்த்தாலே தெரியலை...” என்றவள் வந்து அவன் முகத்தோடு முகம் வைத்து தடவ,

“என்னடி பண்ற??????” என்றான் முனுமுனுப்பாய்..

“ஹா.. சமைக்கிறேன்...” என்றவள் இன்னமும் அவன் முகத்தோடு அவள் முகத்தினை அழுத்த,

“பூர்ணி...” என்றான் கொஞ்சம் கரகரப்பாய்...
 

Joher

Well-Known Member
#6
சிக்கி முக்கி நெருப்பு மாதிரி முகமும் முகமும் உரசி fire ஆகுதா.....:p
அதிலே சமையல் வேற பண்ணுறாளாமே பூர்ணிமா.....

போஸ்க்கு என்னாச்சு???

நிர்மலாக்கு ஆப்படிக்கிறானா மாப்பிள்ளை....
வினை விதைத்தால் வினை தான் விளையும்.....

Epiக்கு waiting.....
 
#10
நீ, அவளை ஏளனமா பார்க்கலாம்,
அதே இது, எங்க பூர்ணி
பார்த்தால் உனக்கு எரிச்சலா
கீதா, நிம்மி, கும்மி?
நீயே பூர்ணிமா மீது
ஜெலஸ்ஸாயி, எங்க
பாலாவை வோணாம்-னு
தூக்கி கடாசிட்டே
அப்பாலிக்கா, எங்க பூர்ணிய
பாத்து, இன்னாத்துக்கு
ஏளனமா ஒரு லுக்கு, நிர்மலா?

இப்போ உன்னோட மாப்பிளே,
உன்னாண்ட பேஜாரு
பண்ணிக்கினு கீறானா?
நல்லா நல்லா வோணும்
உனிக்கு, நிம்மி கும்மி

ரெப்யூஸ் செஞ்சு டீல்ல
உடோச்சொல்ல எப்பிடீம்மே
கீது, நிர்மலா?
நல்லா, உச்சந்தலையில
பச்ச மொளவாயை வைச்சு
அரைச்சுக்கினா மேனி
எரிச்சலா கீதா?

உனிக்கு வந்தா ரெத்தம்
அடுத்த ஆளுக்கு வந்தா,
தக்காளி சட்னியா?

நல்லாத்தேன் கீதும்மே,
உங்கூரு ஞாயம், நிம்மி,
பொம்மி?
 
Last edited:

Latest profile posts

Joher wrote on Sarayu's profile.
GP-16 இப்போ இருக்குதா??
Friends today also no episode
banumathi jayaraman wrote on Sivaranjani 24's profile.
My heartiest birthday wishes to you, Sivaranjani 24 Madam
banumathi jayaraman wrote on Selva sankari's profile.
My heartiest birthday wishes to you, Selva Sankari Madam
banumathi jayaraman wrote on Anitha aruchamy's profile.
My heartiest birthday wishes to you, Anitha Aruchamy dear

Sponsored

Recent Updates