Gender Discrimination - ஆண் பெண் பேதம்

#1
எதற்காக இந்தத் திருமணமும் அதைத் தொட்டு வரும் பிரச்சினைகளும் ? நம் முன்னோர்கள், யோசியாமலா ஆண் பெண் எனும் இரு பாலரைக் கொண்டு திருமணம் என்ற சமுதாயக் கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள் ? என்ற கேள்விகள் அடிக்கடி என் மூளையை ஆக்கிரமித்துக்கொள்ளும். இந்த தேடலை தொடர்ந்து , இதோ என் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.​
இக்காலத்தில் ஆணுக்குப் பெண் சமம் என்றோ , இல்லை எந்தெந்தத் துறைகளில் எந்தெந்த வழிகளில் ஆணுக்குப் பெண் நிகர் ஆக முடியும் என்றோ , அல்லது ஆணுக்கு எதிராகப் பெண்ணின் உரிமையைப் பற்றியோ ஆங்காங்கே கருத்தரங்குகள் , மேடைப்பேச்சுக்கள் , வலைதளம் ,​
சட்டமன்றம் , பாராளுமன்றம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக விமர்சிக்கப்படுகிறது. ஆம் , பெண்ணுக்கு எதிரான கொடுமைகள் உண்மையே. அதன் பொருட்டு , தனிமனிதத்திலும் , வீட்டிலும் , சமூகத்திலும் பெண் தனது உடல் மற்றும் மன வலிமையை வளர்த்துக்கொண்டு திறம்பட செயல்படுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். நானும் ஒரு பெண்ணாகையால் , இந்தப் போக்கை ஆமோதித்துக்கொண்டிருக்கும் வேளையில் , மற்றொரு பார்வையையும் கிடைக்கப் பெற்றது .​
அதை இங்கு பதிவு செய்யும் பொருட்டே இந்தக் கட்டுரை. ஆம் , என் அனுபவமும் , நான் கடந்து வந்த விஷயங்களும் , நான் படித்த நாவல்களும் ஆண் பெண் பற்றிய மற்றொரு கோணத்தையும் என்னுள் விதைத்தது.​
ஆண் மட்டுமல்ல , நம்மைத் துன்புறுத்தும் எந்தவொரு காரணியையும் (சக பெண்களால் வரும் பிரச்சினைகள் , உடல் / மன நலம் பாதிக்கும் நோய்கள் , அறிவியலால் / கண்டுபிடிப்புகளால் வரும் தொல்லைகள் , சமூக / அரசியல் பிரச்சினைகள் , அறியாமையால் வரும் பிரச்சினைகள் , இயற்கை சீற்றம் ) , நாம் ஒத்துக்கொள்ள இயலாது.​
எப்படி இப்பூமியில் தோன்றிய ஒவ்வோர் உயிருக்கும் ஒரு தனித்துவம் உண்டோ , அதேபோல்தான் , ஆணுக்கும் பெண்ணுக்கும். இரு பாலருக்கும் இரு வேறு சிறப்புக்கள் , வேறுபாடுகள் உண்டு. இது போலவே மற்ற உயிரினங்களுக்கும் தனிச்சிறப்பும் உண்டு , குறைகளும் உண்டு . எப்படி பூனையின் குணம் யானைக்கு வராதோ , குதிரையின் குணம் கழுதைக்கு வராதோ , அது போலவே ஆணின் குணம் பெண்ணுக்கு இல்லை. பெண்ணின் குணம் ஆணுக்கு இல்லை . இதுவே இயற்கை. இயற்கையே நடைமுறையும் ஆகிறது.​
ஆகவே , ஆணும் பெண்ணும் இரு வேறு உயிரினங்கள் என்பதால் , அவரவர்க்கு இறைவனால் அருளப்பெற்ற பலமும் உண்டு பலவீனமும் உண்டு. படைத்தவனின் கண் கொண்டு பார்க்கையில் , இப்பூவுலகில் சந்ததிகளைப் பெருக்கி தன்னுடைய வாழ்வைத் திறம்பட வாழ , ஆணின் தனித்துவமும் பெண்ணின் தனித்துவமும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். பெண்ணின் பலவீனத்தை ஆண் மட்டுமே சமன்படுத்த முடியும். ஆணின் பலவீனத்தை பெண் மட்டுமே சமன்படுத்த முடியும்.​
ஆக இரு வேறு உயிர்களாக, இரு வேறு சிறப்புக்களையும் , தனித்துவத்தையும் கொண்டிருப்பதால் ஆணும் பெண்ணும் சமம் அல்ல என்பது என் சொந்த கருத்து. இரு பாலரின் உடலமைப்பு வேறு , சிந்தனையும் வேறு , செயல்பாடும் வேறு , எதிர்பார்ப்புக்களும் வேறு , திறன்களும் வேறு. இயற்கைக்கும் இறைவனுக்கும் ஆணும் பெண்ணும் வெவ்வேறு உயிர்கள் , அவ்வளவே ! இயற்கையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்றத்தாழ்வு என்பது இல்லை.​
அதே சமயம் ஆணுக்குப் பெண் அடிமையும் இல்லை. பெண்ணானவள் எந்த இடத்திலும் தன் சுய மரியாதையும் , தனது பிறப்பின் இயல்பையும் விட்டுக்கொடுக்காமலிருக்க , சூழலுக்கேற்ப தன் தகுதியையும் திறமையையும் வளர்த்துக்கொள்வது அவசியமே !​
ஆக , ஆணும் பெண்ணும் இணைந்து செயலாற்றினால் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற இயலும் வகையில் தான் இயற்கை மனிதனைப் படைத்திருக்கிறது . கொஞ்சம் கூர்ந்து கவனித்துப் பார்த்தால் , ஆணின் வெற்றியைக் கொண்டாட ஒரு பெண் தேவைப்படுகிறாள் . ஒரு ஆண் தனது வெற்றியைக் கொண்டாட அம்மா சகோதரி தோழி மனைவி என ஒரு பெண்ணையே நாடுகிறான் . வெற்றியே ஆயினும் , தனியே ருசிக்க முடியவில்லை அவனுக்கு ! பெண்ணின்றி தன் வாழ்வும் சரி , உலக வாழ்வும் சரி , ஆணுக்கு இனிப்பதில்லை . பெண்ணின்றி அமையாது உலகு !! முற்றிலும் உண்மையே !!!​
அதே போல் இறைவனுக்கு அடுத்த படியாக , இறை அருளால், பெண் மட்டுமே இன்னொரு உயிரை உலகிற்கு உருவாக்கிக் கொடுக்கும் தன்மை பெற்றவள் ஆகிறாள் ! ஆனால் , ஆணின்றி அவளின் பெண்மை முழுமை அடைவதில்லை . ஆக , ஆணின்றி அமையாது பெண்ணின் உலகு !​
பெண்ணின்றி அமையாது உலகு !​
ஆணின்றி அமையாது பெண்ணின் உலகு !!​
முற்றிலும் உண்மையே !!!​
இதை மூலாதாரமாகக் கொண்டு , மனித வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட , இன்றைய நாகரிகத்தின் பண்பாட்டின் வளர்ச்சியே திருமணம் எனும் சமுதாயக் கட்டமைப்பு !​
இந்த வகையில் கணவனாக அமையப்பெற்ற ஆண் என்பவன் , தனது பலவீனத்தையே ஈகோவாகவும் , கோபமாகவும் , தாபமாகவும் வெளிப்படுத்த முயலுகிறான் . தான் ஆண் என்பதால் , பெண்மையிடம் ஆண்மை தோற்றுபோகாதிருக்க ஆண் என்ற போர்வையின் மூலம் தன் பலவீனத்தை மறைக்க முயலுகிறான். மனைவி என்பவள் தன்னவள் தனக்கானவள் என்ற உரிமையில் , தன் பலவீனத்தை மறைக்கும் நோக்கில் தவறான முறையில் தன்னை வெளிப்படுத்துகிறான் . இதைத் தொட்டே , குடும்பப் பிரச்சினைகளும் கணவன் மனைவி விரிசல்களும் .​
பிறவி குணம் , வளர்ந்த சூழல் மற்றும் தன் சுற்றுப்புறத்தால் சில பல குறைபாடுகளைக் கொண்டிருக்கிறான் எனில் அதைப் புரிந்து கொண்டு குடும்ப வாழ்க்கையைத் திறம்பட நடத்த , இந்த நாவல்கள் பெரும் உதவி புரிகின்றன ! சமுதாயத்திற்கு இந்த கதை ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது !​
 
fathima.ar

Well-Known Member
#2
Few things are true..

நல்லதை மட்டுமே எடுத்துக்கிட்டு positive changes adapt பண்றவங்களும் உண்டு..
தேவையில்லாததை எடுத்துக்கிறவங்களும் உண்டு..

Being a man or woman.
Adjust பண்ணனும் தான் அதுக்காக நம்மளோட individuality விட்டுக்கொடுத்து இல்லை
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
#3
Few things are true..

நல்லதை மட்டுமே எடுத்துக்கிட்டு positive changes adapt பண்றவங்களும் உண்டு..
தேவையில்லாததை எடுத்துக்கிறவங்களும் உண்டு..

Being a man or woman.
Adjust பண்ணனும் தான் அதுக்காக நம்மளோட individuality விட்டுக்கொடுத்து இல்ல.

அருமை ஃபாத்திமா.
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
#4
@Sasireka

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஆண் பெண் பேதமின்றி, தனித்தன்மை உண்டு, (நிறையும் குறையும்).
அர்த்தனாரீஸ்வர தத்துவம் இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

உலகை இயங்க வைக்கும் சக்தியாக உமை ஒருபாதி இருக்க, சகலத்தையும் அழிக்கும் வல்லமை கொண்ட சிவன் சரிபாதியாய் கொண்ட இறை உருவம்.

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் அல்ல, எப்பொழுதும் ஆகமுடியாது கூட. ஆனால் இருவரும் சேர்ந்து இயங்கினால் மட்டுமே உலக இயக்கம் நடைபெறும்.

நன்றி தோழி.
 
#5
Hi friends, before posting here, I posted the above thread directly under 'பொழுதுபோக்கு' by mistake.. I don't find any option to delete it.. your thoughts please..
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
#7
Hi friends, before posting here, I posted the above thread directly under 'பொழுதுபோக்கு' by mistake.. I don't find any option to delete it.. your thoughts please..
Go to பொழுதுபோக்கு, click your heading, click the ... Box next to unwatch/watch, there you will find edit option. Select edit, then u may delete your post.

If u find it cumbersome, just notify the issue to site admin / @mallika mam.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement