fashion jewellery

Advertisement


shanthinidoss

Well-Known Member
ஃபேஷன் ஜுவல்லரியில் மாங்காய் மாலை: நீங்களே செய்யுங்கள்!

பாரம்பரியமாக உடையணியும் போது அதற்கு பொருத்தமாக பாரம்பரிய நகை அணிந்தால் எல்லோர் கவனமும் உங்கள் பக்கம்தான்.

அணிமணிகள் விற்கும் கடைகளில் மாங்காய் மாலை கோர்க்கப்படாமல் செட்டாகக் கிடைக்கும். அதை வாங்கி நம் கற்பனைத் திறனுக்கு கேற்ப, மணிகள் வைத்தோ வெறும் மோடிஃப்களை கோர்த்தோ மாலையாக மாற்றலாம். இந்த செட்டோடு தோடுகள் வரும் என்பதால் நாம் கோர்க்கத் தேவையில்லை. இதில் பெரிதாக வேலையில்லை என்றாலும் இப்படி கோர்க்கப்படாமல் வாங்குவதற்கும் செய்த நகைகளை செட்டாக வாங்குவதற்கும் குறைந்தது 500 ரூபாய் அளவுக்கு விலை வித்தியாசம் இருக்கும். நீங்களே கோர்க்கும்போது பணம் மிச்சமாவதோடு விருந்தாளிகள் முன்னால் நீங்கள் செய்த நகைகளை அணியும்போது மனதும் குதூகலிக்கும். சரிசெய்முறைக்குப் போவோமா?


என்னென்ன தேவை?

மாங்காய் மாலை செட், (கோர்க்கப்படாத மாங்காய் மோடிஃப்கள், தோடு அடங்கிய செட்), கம்பிகள், பேசர் பீட்கள், நூல் இணைப்பான்




இந்த செட்டோடு இணைப்பதற்கு ஏற்ற கம்பிகள் பொருந்திய இரண்டு மாங்காய் மோடிஃகள் வந்திருக்கும் அதில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.



ஒரு முழம் நீளத்துக்கு கம்பிகளை வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இணைப்புள்ள மாங்காய் மோடிஃபின் இருதுளைகளில் கம்பியை விட்டு படத்தில் உள்ளதுபோல் சரிசமமாக விட்டு இழுங்கள்.



இதோ பின்புறம் இப்படியிருக்கும்.



இணைப்பான் உள்ள மாங்காய் மோடிஃபுக்கு அடுத்து தனித்தனியாக உள்ள மாங்காய் மோடிஃப்களை இரு துளைகளின் வழியாக இரு கம்பிகளையும் விட்டு வரிசையாக நெருக்கிக் கோர்த்துக் கொள்ளுங்கள்.



நடுவில் வரும் கொத்து மாங்காய் மோடிஃபை கோர்த்து அதற்கு அடுத்து தனித் தனி மாங்காய்களைக் கோர்த்துக் கொள்ளுங்கள்.



இறுதியாக, இணைப்பு வைத்த மற்றொரு மாங்காயைக் கோர்த்து முடிச்சுப் போட் வேண்டும். அடுத்து முடிச்சு போடிவது என்று பார்ப்போம். கம்பியின் முனைகளில் இரண்டு பீட் ஸ்பேசர்களைக் கோர்த்துக்கொண்டு, கோர்த்த கம்பி முனையை வளைத்து பீட் ஸ்பேசர்களுக்குள் விட்டு நெருக்கமாக இணையுங்கள்.



மீதமுள்ள கம்பியை வெட்டி சீர் செய்யுங்கள்.



இருபுறமும் கம்பி வைத்த மாங்காய் மோடிஃபிக்குள் இதோ இப்படி பட்டு நூல் இணைப்பான்களைக் கோர்த்தால் மாங்காய் மாலை அணிந்துகொள்ள தயார்!



மாங்காய் மாலை தயாரான நிலையில்…

கற்று தருவது :) : ஃபேஷன் ஜுவல்லரி டிசைனர் : கீதா

சுட்டது ;) : குட்டீஸ் கிராஃப்ட் பக்கங்கள்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top