Epi 2,3,

Advertisement

Lava_iin

Writers Team
Tamil Novel Writer
விண் 2 :

இவர்கள் அந்த பகுதியை சுற்றி பார்த்தார்கள் அந்த கல் இருக்கும் இடம் காமிப்பதற்கு ஒரு ட்ராக்கிங் டிவைஸ் மாதிரி கொண்டு வந்திருந்தார்கள் ஆனால் இந்த நாட்டிற்குள் நுழைந்த உடனே அது செயலிழந்தது.

இஷித் அதை பார்த்து அதிர்ச்சியானவன் மீண்டும் மீண்டும் முயற்சித்து பார்த்தும் பயன் என்னவோ பூஜ்ஜியம் தான்.

"இஷி இப்போ என்ன செய்றது இது இல்லாம நம்மலாள அந்த க்ரிஸ்ட்டல் எடுக்க முடியாது " என்றான்.

"ஷ் அமைதியா இரு ஜிம் நம்ம இருக்கது யாருக்கும் தெரிஞ்சுர போது ஹானி சொன்னால இவுங்களுக்கும் பவர்ஸ் இருக்குனு சோ அத வச்சி தான் அந்த க்ரிஸ்ட்டல் ட்ராக் பண்ண முடியாத படி வச்சுருக்காங்க போல இரு ஏதாச்சும் யோசிப்போம் " என்றான் இஷித்.

"ஷ் ...ஸ்ஸ்.. " என்று ஜிம் அழைக்க " என்ன வாய்யை தொறந்து சொல்லு " என்றான் இஷித் எரிச்சலாக.

"நீ தானே அமைதியா இருன்னு சொன்ன இப்போ வாய் தொறந்து சொல்லுன்னு சொல்ற போ நா சொல்லமாட்டேன் " என்றான் ஜிம்.

ஜிம் கோபம்கொண்டு சண்டையிட இஷிதோ " டேய் உன்ன சொல்லி தப்புள்ள சின்ன பயனை நம்பி என்ன வேற கெலெக்சி போ சொன்ன என் அப்பாவ சொல்லணும் " என்று தலையில் அடித்து கொண்டான்.

"ஹே நீ இன்னும் வளரனும் மை பாய் உனக்கு விவரம் பத்தலனு தான் உனக்கு துணையா என்ன அனுப்பி வச்சுருக்காறு என்னோட க்ராண்ட்பா " என்றான் ஜிம்.

" ஹ்ம்ம் இதலாம் கேக்கணும்னு இருக்கு வேற வழி " என்றவன் "சரி சொல்லு என்ன சொல்ல வந்த " என்று கேட்டான்.

அவர்கள் இருவரும் ஒரு ஓரமாக மறைந்து இருந்து உரையாடியதால் அவர்கள் இருவர் பேசியது யாருக்கும் கேட்கவில்லை.

ஜிம் " அந்த க்ரிஸ்ட்டல் முதல அவுங்களுக்கு தெரிஞ்சு இங்க இருக்குமா இல்ல தெரியாம இருக்குமானு நம்ம தெரிஞ்சுகனும் " என்றான்.

"அத எதுக்கு நம்ம தெரிஞ்சுகனும் நமக்கு தேவ அந்த க்ரிஸ்ட்டல் தான் ஜிம் " என்றான் இஷித்.

"இதுக்கு தான் சொன்னேன் நீ இன்னும் வளரணும்னு " என்று ஜிம் அவனை கிண்டல் செய்ய இஷித் அவனை முறைத்து பார்த்தான்.

" ஹே இஷி அந்த க்ரிஸ்ட்டல் ஒருவேல அவுங்களுக்கு தெரிஞ்சு இருந்தா கண்டிப்பா அத ஒரு பாதுகாப்பான இடத்துல தான் வச்சுறுப்பாங்க " என்றவன் " ஒரு வேல அது அவுங்களுக்கு தெரியாம இருக்குறதா இருந்தா இந்த ட்ராக்கர் ஏன் ஒர்க் ஆகாம போனும் சொல்லு சோ கண்டிப்பா என்னோட கெஸ் படி அவுங்க தெரிஞ்சுதான் இருக்கணும் " என்றான் ஜிம்.

அவன் சொன்னதை கேட்டவன் " ஹே மை சார்ம் கலகிட்ட அப்போ அவுங்களுக்கு தெரிஞ்சு தான் இருக்கணும் அதோட அத நீ சொன்ன மாறி கண்டிப்பா சேப்பா தான் வச்சுருக்கணும் " என்றான்.

அவர்கள் இருவரும் உரையாடி கொண்டு இருக்கும் போதே அவர்கள் மேல் ஏதோ பவுடர் போல் விழ அதில் அவர்கள் உருவம் தெரிய ஆரம்பிக்க இஷித் மீண்டும் தங்களை மறைத்து கொள்ள முயற்சி செய்ய , ஆனால் தோல்வியிலே முடிந்தது.

நொடி பொழுதில் சூழ்நிலையை உணர்ந்த இஷித் " ஜிம் லேட்ஸ் மூவ் " என்று அவன் சக்தியை உபயோக படுத்த சொல்ல ஜிம் தங்கள் சுற்றி உள்ள இடங்களில் தங்கள் மறைவதற்கான இடத்தை பார்த்தான்.

காற்று சக்தி உடையவர்கள் அவர்கள் நினைக்கும் இடத்திற்கு செல்ல முடியும் ஆனால் அது அவர்கள் கண் முன் தெரியும் இடமாக இருக்க வேண்டும்.

சற்று தூரத்தில் ஒரு பக்கம் மலையும் அருவியும் ஆக்ரமித்து இருக்க அதன் பக்கத்தில் மரங்கள் இருந்தது.

அவன் அங்கே செல்ல நினைக்கையில் அவர்களை அந்நாட்டின் சோல்ஜர்ஸ் சுற்றி வளைத்தனர்.

கண் இமைக்கும் நொடியில் ஜிம் தன்னையும் இஷித்தையும் அந்த மரங்களுக்கு பின்னாடி அழைத்து சென்று விட்டான்.

இஷித்துக்கு சூழ்நிலையின் தீவிரம் புரிந்தது. அவன் மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தால் அவன் தன்னை பற்றி யோசிக்காமல் சூழ்நிலையை கையாழ்வான்.

ஆனால் அவனுடன் ஜிம் இருப்பது அவன் மனதில் ஒரு கவலையை உருவாக்கியது.

ஜிம் அவர்களுக்கு அடுத்து அவர்கள் கிரகத்தின் அரசன் அவனை வைத்து கொண்டு ஏதும் செய்வது என்பது நடவாத காரியம்.

அதோடு அவர்கள் உள்ளே நுழைந்த போதே அவர்களின் கருவிகள் எதுவும் வேலை செய்யவில்லை அதிலே அவனுக்கு புரிந்து போனது அவர்களை அவர்கள் கிரகத்தில் இருப்பவர்களால் தொடர்பு கொள்ள முடியாது என்பது.

இப்படி ஒரு சூழ்நிலையில் ஜிம்மையாவது தப்பிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தான்.

இஷித் ஜிம்மிடம் " ஜிம் நா சொல்றத கேளு நீ இங்க இருந்து அந்த ஷீல்ட் தாண்டி போ அத தாண்டிட்டா கண்டிப்பா உன்னால நம்ம கெலெக்சி கம்யூனிகேட் பண்ண முடியும் நீ இங்க இருந்து போ நா அவுங்கள டைவெர்ட் பண்றேன் " என்று சொல்ல " இல்ல இஷி நா நீ இல்லாம போ மாட்டேன் , நா உன்னோட தான் இருப்பேன் இஷி " என்றான்.

" ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் மீ ஜிம் , நீ போ , நா கண்டிப்பா தப்பிச்சு வருவேன் க்ரிஸ்ட்டளோட கிளம்பு " என்று சொல்ல " இல்ல மாட்டேன் " என்று ஜிம் அடம்பிடித்தான்.

இஷியின் பொறுமை காற்றில் பறக்க " நா சொல்றத கேளு ஜிம் இங்க இருந்து போ நம்ம கெலெக்சி தான் நமக்கு முக்கியோம் ரெண்டு பேரும் மாட்டிக்கிட்டா நம்மால யாரையும் கான்டெக்ட் பண்ண முடியாது ஜஸ்ட் கோ " என்றான் கட்டளையாக அதை கேட்டவன் மனமே இல்லாமல் அந்த இடத்தை விட்டு மறைந்தான்.

ஜிம் அந்த இடத்தை விட்டு சென்றவுடன் இஷித் தன் சக்திகள் கொண்டு தன்னை மறைத்துக்கொள்ள முயன்றான்.

மீண்டும் அந்த இடத்தில் பனிமலை போல் ஏதோ ஒரு வித ஒளியுடன் பவுடர் துகல்கள் விழ மீண்டும் அவன் சக்தி குறைந்து அவன் உருவம் தெரிய இம்முறை அவன் அங்கிருந்து செல்ல முயற்சி செய்யும் முன்னரே அந்த சோல்ஜர்ஸ் அவனை சுற்றி வளைத்தார்கள்.

அவன் அவர்களிடம் இருந்து தப்ப முயற்சி செய்யவில்லை காரணம் அவர்கள் எப்படியேனும் அவர்களுடைய அரசர் இல்லையெனில் அவர்களை தலைமை தாங்கும் ஒருவரிடம் தான் அழைத்து செல்வார்கள் அவர்களுடன் பேசி பார்த்தால் அவனால் ஒரு முடிவுக்கு வர முடியும் என்று நினைத்தான்.

அதை விட அவனால் யாரையும் கட்டுப்படுத்த முடியுதா என்பதை பயிற்சி செய்து பார்த்து கொண்டான்.

அவன் இந்த கிரகத்திற்கு வரும் போது இதை பற்றிய முழுவிவரங்களை தெரிந்து கொண்டான்.

மனிதர்கள் வேற்றுகிரகவாசிகள் பத்தி ஆராய்ச்சி பண்ணுவது பற்றியும் அவர்களின் வாழ்வுமுறை பற்றியும் அறிந்தே வந்திருந்தான்.

அதனால் தான் அந்த இடம் அவன் அறிந்ததற்கு நேர்மாறாக இருப்பது அவனை ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கியது.

அதோடு அவர்களின் வாழ்க்கை முறை அவன் கேள்வி பட்ட விஷயங்களுக்கு முரண்பாடாக இருந்தது.

அவன் பால் வழி மண்டலத்தை கேள்வி பட்ட வரை அரசர்கள் ஆட்சி புரிந்தனர். பின் அவர்களின் வாழ்க்கை முறை வளந்து டெக்னாலஜி என்று மனிதர்களால் அழைக்க படும் அந்த வாழ்க்கை முறை அதறக்கு நேர்மாறாக இருந்தது . தங்களை தாங்களே அழித்து கொல்லும் நிறைய முயற்சிகளை வருங்கால சந்ததிகளுக்கு என்று சொல்லி அந்த சந்ததிகளை பற்றி சிந்திக்காமல் வளர்ச்சி என்ற பெயரில் அழித்து கொண்டு இருக்கிறார்கள்.

21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்கள் மட்டுமே வளத்தையும் அழிவையும் கண்கூடே பார்த்தவர்கள்.

இயற்கை அன்னையின் மடியில் உருவான பழங்களின் சுவையையும் அறிந்தவர்கள் அதே போல் உரம் என்று அமிலத்தில் உருவான உணவு வகையையும் உண்டவர்கள்.

இப்போது டெக்னாலஜி வளர்கிறது என்று பாதி இயற்கை வளங்களை அவர்கள் கண் முன்னே அழிந்து விட்டது.

மொத்த இயற்கை மாசு படுத்திய பின்னர் மீண்டும் ஆர்கானிக் என்று சொல்ல படும் உணவுவகைகளை அதிக மதிப்பு கொடுத்து வாங்கி உட்கொள்கிறார்கள்.

இதில் உடம்பில் சக்கரை உப்பு இவற்றின் அளவு கூடும் போது நிறைய சிறுநீரக பிரச்சனைகள் , இன்னும் நிறைய பிரச்சனைகளை இழுத்து கொள்கிறார்கள் ஆனால் இது என் முன்னோர்களுக்கு இருந்ததா என்று சிந்திக்க மறுக்கிறார்கள்.

அவன் கண்டறிந்த விஷயங்களை சுருக்கமாக சொல்ல போனால் சுயலானத்திற்காக செயல் படும் ஜீவ ராசிகள் என்றே அறிந்திருந்தான்.

தன்னால் அவர்களுக்கு ஏதும் பயனுள்ளது என்று தெரிய வந்தால் அவனை அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் அதனாலே தன்னால் அவர்களை கட்டு படுத்த முடிகிறதா என்று பரிசோதித்த பிறகே அவர்களிடம் மாட்டி கொண்டான்.

அவனை தங்கள் மந்திர சக்தி கொண்டு ஒரு மந்திர வளையத்திற்குள் வைத்தார்கள். அவன் அந்த மந்திர வலையத்திற்கு கட்டு பட்டது போல் நடித்தான். அவன் இவ்வாறு இங்கு மாட்டி கொள்ள அங்கே இருந்து தப்பி சென்ற ஜிம் ஒரு திரையை கடந்து சென்றான்.

அந்த காடுகள் வந்து விட அங்கு இருந்து அவன் விரைந்து சென்று கொண்டிருக்கும் போது அவன் மேல் முதலில் தூவியது போல் மந்திர துகல்கள் விழ அவன் சக்தி இழந்தான்.

அவனை அந்நாட்டின் சோல்ஜர்ஸ் சுத்தி வளைத்தனர்.

அவன் பயத்தில் அவர்களிடம் இருந்து தப்பிக்க தனது காற்று சக்தியை உபயோக படுத்த முயற்சி செய்ய அந்த மந்திர துகல்கள் பட்டு சிறிது நேரம் அவனால் எதுவும் செய்ய முடியாமல் போனது.

அவர்கள் அவனை சுற்றி வளைத்து விட அவன் தன் முழு சக்தியை உபயோக படுத்தி அவர்களை தாக்கினான்.

அவர்களை தாக்கியவன் சற்றும் இன்னும் அதிகமான சோல்ஜர்ஸ் அவனை சூழ்ந்து கொள்ள இதற்கு மேல் அவன் சக்திகளை ப்ரயோகிதால் அவன் மூர்ச்சையாகி விடுவான்.

வேறு வழியில்லாமல் அவர்களிடம் அகப்பட்டு கொண்டான்.

அவர்கள் அவனையும் அந்நாட்டின் உள் பகுதிக்கு அழைத்து சென்றார்கள்.

அங்கு ஏற்கனவே இஷித் அவர்களின் மந்திர வளையத்திற்குள் நின்று கொண்டிருக்க அவனை சுற்றி உள்ள மக்கள் அவனை பார்த்து தங்களுக்குள் ஏதோ முணுமுணுத்து கொள்ள இஷித் மனமோ " நம்மள ஏன் இப்படி பாக்கரங்க அவுங்கள மாறி தானே நானும் இருக்கேன் என்கிட்ட அப்படி என்ன புதுசா இருக்கு " என்று நினைத்து கொண்டிருந்தான்.

அவன் அவ்வாறு நினைத்து கொண்டிருக்கும் போதே ஜிம்மை அங்கே தூக்கி வர அவனை பார்த்தவன் மனம் அதிர்ச்சி அடைந்தது.

அவன் ஜிம் தப்பி சென்றிருப்பான் என்ற நோக்கில் தான் பிடிப்பட்டு கொண்டான்.

அவனுக்கு என்ன ஆனாலும் கூட பொறுத்து கொள்வான் ஆனால் ஜிம்மிற்கு இவர்களை பற்றி ஒரு விவரமும் தெரியாத பட்சத்தில் அவன் மனதில் கலக்கம் சூழ்ந்தது.

அதோடு அவனை நம்பி தான் அவனுடைய சகோதரனும் , சகோதரன் மனைவி சிம்சியும் அனுப்பி இருக்கார்கள்.

ஜிம் " இஷி " என்று அழைக்க இஷித் " ஜிம் உன்ன போக சொன்னேன்ல " என்று கேட்டான்.

" இவுங்க என்ன கண்டுபிடிச்சுட்டாங்க இஷி , ஏதோ பவர் யூஸ் பண்ணி என்னோட பவர் யூஸ் பண்ண விடாம பண்ணிட்டாங்க அப்படியும் நா பவர் யூஸ் பண்ணேன் அதுக்கு மேல என்னால யூஸ் பண்ண முடியல இஷி " என்றான் ஜிம்.

ஜிம் பேசுவதை பார்த்து அவர்களில் சோல்ஜர் ஜிம்மை தாக்க அதுவரை பொறுமையாக இருந்து கொண்டிருந்தவன் அவர்கள் ஜிம்மை தாக்கியவுடன் அவன் பொறுமை காற்றில் பறந்தது.

இஷித்துக்கு கோபம் வந்து விட அந்த இடத்தில் இருந்த நீர் துளிகள் எல்லாம் அந்தரத்தில் பறக்க அருவி நீர் அலையாய் ஆர்ப்பரித்து மிக பெரிய வானுயர்ந்து சுனாமியாய் பிரவாகம் எடுக்க அதை பார்த்த அந்நாட்டு மக்கள் அனைவரும் பயந்து விட்டனர்.

அப்போது அங்கு வந்த ஒருவன் ஜிம்மை விடுதலை செய்ய அவன் ஓடி சென்று இஷித் கால்களை கட்டி கொண்டான்.

அப்போது தான் இஷித் கொஞ்சம் கொஞ்சமாக தன் சக்திகளை தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வந்தான்.

அமிர்தங்கள் அமிலங்களாக மாற
இனி உண்டோ உயிர்கள் இப்பூவியில்...
காலம் மாறி காலதேவன் காலனாய்
மாற்றியது மனித மனங்கள்...
மீட்டெடுக்க முயல்கிறேன்
மீள்வாய்யோ என் இயற்கை தாயே.....

உன்னில் சேரவா....

விண் 3 :

அவன் சக்திகள் கட்டுக்குள் வர ஆர்ப்பரித்து வானுயர்ந்து நின்ற அலைகள் நீர் வீச்சியாய் புவி ஈர்ப்பு விசையால் கீழே விழ அந்த இடங்கள் எங்கும் நீர் துளிகள் முத்துக்கலாய் தெறிக்க அக்காட்சியை காண அழகு ஓவியமாய் இருந்தது.

கோபம் கொண்ட பெண்களை போல் காற்றாற்று வெள்ளமாய் முறுக்கி கொண்டு இருந்த அலைகள் இப்போது அழகு பதுமையாய் நீர் துளிகளாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் சென்றது.

இஷித் நிலை பெற சற்று நேரம் பிடித்தது. அதற்குள் அங்கு வந்தவனிடம் சோல்ஜர் ஒருவன் " ப்ரின்ஸ் அவுங்க நம்ம இடத்துல அத்தி மீறி நுழைஞ்சு இருக்காங்க " என்று சொல்ல அந்த ப்ரின்ஸ் என்படுபவன் " எனக்கு எல்லாம் தெரியும் கிங் அவுங்கள அலச்சுட்டு வர சொன்னார் " என்றான்.

அவன் நேராக சென்று இஷித்திடம் " ஐ அம் அன்டோ " என்றவன் " உனக்கு நா பேசுற லாங்குவேஜ் புரியுது தானே " என்றான்.

அவனை பார்த்த இஷித் மனதில் ஒரு நல்லெண்ணம் தான் தோன்றியது அத்தோடு அவர்கள் அவனுக்கு அடி பணிந்து ப்ரின்ஸ் என்று சொன்னதை அவனும் தான் கேட்டு கொண்டிருந்தான்.

ஆனால் அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக நின்றான்.

" நா இந்த நாட்டோட ப்ரின்ஸ் " என்றான் அன்டோ.

அவன் சொன்னதை காதில் வாங்கினாலும் வாங்கதது போல் " நா உங்க அரசர் பார்க்கணும் " என்றான் இஷித்.

அவன் சொன்னதில் தான், அவனுக்கு தான் பேசியது புரிந்திருக்கும் என்று அறிந்தவன் அன்டோ ஒன்றும் பேசாமல் " சரி " என்று தலையை ஆட்டி ஒப்புதல் அளித்தான்.

அன்டோ திரும்பி அந்த சோல்ஜர்ஸை பார்க்க அவன் கண் அசைவிலே அவன் கட்டளையை புரிந்து கொண்டவர்கள் அங்கு பறக்கும் ஒரு போர்டு போல் ஒன்றை எடுத்துவந்தனர்.

அன்டோ அதில் ஏறி கொள்ள " இதுல நாங்க எப்படி வரது " என்று இஷித் கேக்க அவுனுடன் இருந்த ஜிம்மும் இதே கேள்வியை கண்களில் தேக்கி பார்க்க அன்டோ மனதினுள் " பாரு ஒரு ப்ரின்ஸ் கிட்ட பேசுறோம்னே மரியாதை இல்லாம இவன் கேட்டா அந்த வாண்டு கூட அத கேக்காம பார்த்து வேற வைக்குது " என்று நினைத்தவன் சோல்ஜர்ஸை பார்க்க அவர்களுக்கும் இரண்டு போர்டு கொண்டு வந்து கொடுத்தனர்.

அதில் அவர்கள் ஏறியவுடன் தரையில் இருந்து சிறிது தூரம் மேல் எழும்பி பறக்க தயராக இருந்தது.

அன்டோ கால்களினால் அதில் இருந்த நீல நிற பொத்தானை அழுத்த அது மிதமான வேகத்தில் பறந்தது.

அதே போல் இவர்கள் இருவரும் செய்ய அவனுடன் இவர்களுடைய போர்டும் பறந்தது.

அந்த நாட்டின் கோட்டையை நோக்கி பயணித்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் அவர்கள் கடந்து சென்ற அந்த நாட்டின் பகுதிகள் மிகவும் ஆச்சர்யத்துக்கு உரியதாக இருந்தது.

ஜிம் அதை கண்டு " நம்ம இந்த கெலெக்சி பத்தி பார்த்த எல்லாமே இங்க நடக்குது " என்றான் ஒரு வித ஆச்சர்யத்துடன்.

இஷித்துக்கும் அதே எண்ணங்கள் தான் அவன் இந்த கெலெக்சி பத்தி தெரிந்து கொண்ட அனைத்துமே அங்கு நடந்தேறியது.

ஆம் மன்னர் ஆட்சி முறை அழிந்து புதுமை என்றும் டெக்னாலஜி என்றும் மக்கள் மாற்றம் கண்டு விட்டது பற்றி அவன் அறிந்து இருந்தான்.

அங்கு நடப்பது முரண்பாடாக இல்லை ஆனால் அங்கு அவன் கேள்விப்பட்ட அனைத்தும் நடந்தது.

உடைகள் பழைய கால மக்கள் போல் இருந்தது. அதே போல் கட்டிடங்களும் மரங்களும் ஆனால் அனைவர் கைகளிலும் ஏதோ ஒரு டெக்னாலஜி முறையும் வைத்து இருந்தனர்.

அங்கு பள்ளி பாடங்கள் மரத்தடியில் அமைத்து அதன் கீழ் சிறுவர்கள் அமர்ந்து இருந்தார்க்ள் ஆனால் அனைவர் கையிலும் செல்பேசி என்று இக்கால மனிதர்களால் சொல்லப்படும் டெக்னாலஜி வைத்து இருந்தனர்.

இதை எல்லாம் மனதில் நினைத்ததோடு மட்டும் அல்லாமல் இஷித் அன்டோவிடம் கேட்கவும் செய்தான்.

"நாங்க உங்க கிரகத்தை பத்தி தெரிஞ்சிகிட்ட எல்லா விஷயமும் இங்க நடக்குதே எப்படி " என்று கேட்டான்.

" நீங்க எங்க கிரகத்தை பற்றி தான் தெரிஞ்சிருப்பிங்க எங்க நாட்டை பத்தி இல்ல " என்றவன் " எங்க நாட்டை பொறுத்தவரை சுயநலம் இருந்தா எங்களோட மந்திர சக்தி இழந்து அழிந்து விடுவோம் அதனால் யாரும் சுயநலமா இருக்க மாட்டாங்க ஆனால் எங்க கெலெக்சில உள்ள மக்கள் அப்படி இல்லை " என்றான்.

அதை கேட்ட இஷித் " ம்ம் நானும் அதை தான் கேள்வி பட்டேன் " என்றான்.

அன்டோ " எங்க நாடு நீங்க கேள்விப்பட்டதுக்கு வேறு பாடனது " என்று சொல்ல அவனை புரியாமல் பார்த்தான் இஷித்.

அன்டோ " நா சொல்றது உண்மை தான் அந்த கால ஆட்சி முறையில் தப்பு இருக்கு தான் இந்த கால ஆட்சி முறையிலும் தப்பு இருக்கு , அதை ரெண்டுளையும் கொண்டு வந்த மாற்றம் தான் எங்க நாடு " என்றான்.

இஷித் அவன் சொல்வது ஸ்வரஸ்யமாக இருக்க அதை கேட்க அன்டோ தொடர்ந்தான்.

"அந்த கால ஆட்சி முறை மக்கள் மன்னனை சந்திப்பதே அரிது அதோடு அவர்களை திறமைகளை முடக்கி அடிமை போல் நடத்தினர் மன்னன் போன்றவர் செல்வ செழிப்பில் இருக்க மக்கள் நிலை மாறவில்லை ஆனால் பாதுகாப்பு என்று அவர்கள் என்றும் அஞ்சியது இல்லை சம உரிமை இல்லை என்பதை தவிர மன்னன் ஆட்சியை ஒரு குறை கூற முடியாது " என்றான்.

"ஆனால் இப்போது இருக்க மக்கள் தன்னலம் என்ற பேரில் அவரவர் சந்ததிகளுக்கு தீ வைத்து கொண்டனர், கலப்படம் தாய்ப்பாலில் மட்டுமே இப்போது இல்லை, இப்போ உள்ள மக்கள் மட்டுமே வளர்ச்சி என்ற பெயரில் தங்களை தாங்களே அழித்து கொல்லும் சமுதாயத்தை கண் கூட கண்டு விட்டனர் , இந்த தலைமுறை மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவர்கள் இயற்கையான கனியையும் உண்டு இருப்பார்கள் செயற்கையான கனியையும் உண்டு இருப்பார்கள் அடுத்த தலைமுறை மக்களுக்கு இயற்கை பொருள் புரியாமல் போகபோகிறது இல்லை, உண்மையான இயற்கையான பொருள் இதுவென்று தெரியாமலே போய்விடும் , அவர்களின் முன் இயற்கை என்று எதை வைத்தாலும் அவர்களால் அதை தெரிந்து கொள்ள முடியாது ஏனென்றால் அவர்கள் இயற்கையை கண்ணில் பார்த்து கூட இருக்க மாட்டார்கள் " என்றான்.

"இந்த இரண்டு காலத்திலும் தேவைப்படும் மாற்றங்கள் தான் எங்கள் நாடு இங்கு மன்னர் ஆட்சி முறையும் உண்டு இப்போது வளந்து வரும் டெக்னாலஜி முறையும் உண்டு " என்றான்.

இஷித்துக்கு அன்டோ கூறியது அனைத்துமே வியப்பாக இருந்தது. அனைவரும் ஒன்று பட்டு வாழ்வது என்பது அவர்கள் கிரகத்தில் கூட அசாத்தியமான விஷயம்.

அவர்கள் கிரகத்தை சார்ந்தவன் செய்த தவறால் தான் இன்று அவரகள் கிரகமே அழிய இருக்கிறது.

இங்கு மட்டும் எப்படி இது சாத்தியம் என்ற கேள்வியே அவன் மனதில் வியாபித்து இருந்தது.

அதை அன்டோவிடம் கேட்கவும் செய்தான்.

"இங்கு மட்டும் எப்படி இது சாத்தியம் எப்படி உங்களால் ஒற்றுமையாக இருக்க முடிகிறது " என்று கேக்க அவனை பார்த்து புன்னகைத்தவன் "இங்கு வேறுபாடிலை அது தான் உங்களுக்கு முரண்பாடாக தெரிகிறது " என்றான்.

இஷித் அவனை புரியாமல் பார்க்க அன்டோ " நாங்கள் இங்கு சுயநலமோ துரோகமோ செய்தால் எங்கள் மந்திர சக்தி எங்களை விட்டு சென்றுவிடும் அதன் பிறகு எங்களால் இங்கு வசிக்க முடியாது மனிதர்களோடு மனிதர்கலாக தான் இருக்க முடியும் " என்றான்.

"ஒருவேல மனிதர்களா போறவுங்க உங்க ரகசியத்தை வெளி படுத்துனா " என்று இஷித் கேக்க "முட்டாள் என்பார்கள் அனைவரும் " என்றான்.

"மனிதர்கள் அதை நம்ப மாட்டார்கள் நம்பி இங்கு வந்தாலும் அதோ அந்த திரையை கடப்பது சிரமம் அதை கடந்தாலும் விலங்குகளுக்கு இரையாவார்கள் " என்றான்.

"எங்களின் சக்தியை கூட்ட செய்வது கோபம் எங்களின் சக்தியை இழக்க செய்வது துரோகம் " என்றவன் " கோபம் ஒருவனின் தூய்மையான எண்ணத்தினால் விளைவது துரோகம் ஒருவனின் தீய எண்ணத்தினால் விளைவது " என்றான்.

இவர்கள் இருவரும் பேசிக்கொண்டே வர அரண்மனை வாயில் வந்தது.

அரண்மனை பார்த்து ப்ரமிப்பாக இருந்தது இஷித் , ஜிம் இருவருக்கும்.

அந்த பிரம்பிப்பு குறையமலே உள்ளே சென்றனர்.

அங்கு பார்த்த காட்சிகள் அவர்கள் கண்களை விரிக்க செய்தது வெளியில் பார்க்க மண் சுவரால் ஆன மாளிகை உள்ளே செல்ல செல்ல டெக்னாலஜி கொண்டு செயல்பட்டு கொண்டு இருந்தது.

இதை எல்லாம் ஒரு வித ஆச்சர்யத்துடன் பார்த்து கொண்டே வர அவர்கள் முன் ஒருவர் வந்து "எங்க கிரகத்திற்கு உங்களை வரவேற்கிறேன் " என்றார்.

அவரை இருவரும் புரியாமல் பார்க்க அன்டோ " இவர் தான் எங்க நாட்டோட கிங் அப்புறம் என்னோட பாதர் " என்றான்.

அவர்கள் இருவருக்குமே ஆச்ரயமாக இருந்தது அவர்கள் கிரகத்தில் அவர்கள் அரசரை பார்க்க இவர்களே இருந்தாலும் அனுமதி வாங்கி காத்து கொண்டு இருக்க வேண்டும் ஆனால் இங்கு அந்த நாட்டின் அரசரே வந்து வவேற்றது வியப்புக்குரிய விஷயமாக இருந்தது.

அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்து செல்ல அரசர் தன் பேச்சை ஆரம்பித்தார் "நீங்க எந்த கிரகத்தை சார்ந்தவுங்க என்ன விஷயமா எங்க நாட்டுக்கு வந்துருக்கிங்க " என்று நேரடியாக கேட்டார்.

அவர் கேட்டவுடன் இஷித் தங்கள் கிரகத்தை பற்றியும் அவர்கள் வந்த விஷயத்தை பற்றியும் சொல்ல அந்த அரசரின் நெற்றியில் யோசனை ரேகைகள்.

அவர் " எங்கள மனிச்சுருங்க நீங்க வந்த விஷயம் நடக்காது " என்றார்.

இஷித் அவரை புரியாமல் பார்க்க , அவரே தொடர்ந்தார்.

"நீங்க தேடிவந்தது எங்களோட மந்திர கல் அது இல்லாம எங்களுக்கு இந்த மந்திர சக்தி இல்ல அது இல்லாட்டி எங்களோட சக்திகள் கொறஞ்சு தடுப்பு திரை தாண்டி எல்லாரும் இங்க வர ஆரம்பிச்சுருவாங்க அது எங்க நாட்டை நாங்களே அழிக்குறதுக்கு ஏற்படுத்திக்கிற வழி அத நா நிச்சயம் செய்ய மாட்டேன் " என்றார்.

அவர் சொன்னது இஷித் நியாயமாக இருந்தாலும் தன்னுடைய கிரகத்தை காக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்ததால் வேறு வழி இல்லாமல் மனதில் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொண்டு தன் மனமரிந்து பொய் உரைத்தான்.

"நீங்க சொல்றது எங்களுக்கு புரியுது ஆன நாங்க இப்போ உடனே எங்க கிரகத்தில் உள்ளவுங்களிட்ட தொடர்பு கொள்ள முடியாது நாங்க இங்க இருக்க அனுமதி கிடைக்குமா " என்று இஷித் கேக்க உண்மை உள்ளம் கொண்ட அந்த மாந்திரீக மனிதர்களால் இவனின் திடீர் மாற்றத்தை கண்டு கொள்ளவும் முடியவில்லை அவனை சந்தேகிக்கவும் முடியவில்லை அந்தோ பரிதாபம்.

தூய்மை கொண்ட உள்ளங்கள் தூய்மையான வற்றை தான் சிந்திக்கும்.

அவர்களின் வெள்ளை மனம் வெழுத்ததை பால் என்று நம்பினார்கள்.

விஷங்கள் விதைக்க படுவதில்லை...
வதைக்கிறது
நம்பிக்கை கொண்டவன் கொள்வான்...
துரோகம் கொண்டவன் கொல்வான்...
மந்திரம் என்றில் மனிதர்களாக
இருந்தும் புனிதர்களாக
வாழ்கிறார்கள்...
வாழ்வில் விதைத்தான் விஷம்...

உன்னில் சேரவா.....
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவுகள்,
இஷானா நீலகண்டன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top