EPI - 1B - என் உதிரத்தில் உ(நி)றைந்தவளே(னே)

Thanu

Writers Team
Tamil Novel Writer
1B – என் உதிரத்தில் உ(நி)றைந்தவளே(னே)

கதவின் மறுபுறம் பற்களை கடித்தபடி நின்று இருந்தவன் ஹாலை சுத்தம் செய்துவிட்டு , தனக்கு தேவையான உணவை ஆர்டர் செய்துவிட்டு குளிக்க சென்றான்.. காலை முதல் இரவு வரை அலுவலகத்தில் உள்ள பிரச்சனையை சரி செய்து மிகவும் சோர்ந்து வீட்டிற்கு வந்தான்.. வந்ததும் வீடு இருந்த கோலத்தை பார்த்து, அவனுக்கு மிகவும் கோபம் வந்தது.. இதற்கெல்லாம் காரணமான அவளிடம் காண்பிக்கும் முன்பே அவள் வெளியேற, செய்வதறியாது திகைத்து நின்றவன், ஹாலை பார்க்க பிடிக்காமல் சுத்தம் செய்தான்.. செய்து முடித்துவிட்டு குளிக்க சென்றவன் அலுப்பு தீர குளித்துவிட்டு வெளியே வர, அரைமணிநேரம் கடந்து இருந்தது..



குளிர்சாதனபெட்டியில் உள்ளவற்றை சரி செய்துவிட்டு, அப்படியே நம்ம ஹீரோயின் திட்டிக்கொண்டே பசியில் வெந்துகொண்டு இருக்க, நமது நாயகியோ, அவளுக்கு கிடைத்த அவனின் உணவை வெளுத்து கட்டிக்கொண்டு இருந்தாள்.. அஸ்வின் குளிக்க சென்ற சிறிது நேரத்திலேயே உணவு வந்துவிட, டெலிவெரி பாய் , தவறாக பக்கத்து வீட்டின் கதவை தட்டினான்.. பணம் ஏற்கனவே கட்டியதால் , ஹீரோயின் ஏதும் பேசாமல் அவற்றை வாங்கிக்கொண்டு வந்து தனது தோழிகளுடன் உண்ண ஆரம்பித்தாள்..



பசி வயிற்றை கிள்ள, ஆர்டர் செய்த உணவு இன்னுமா வரவில்லை என்று கைபேசியை ஆராய , அதுவோ ‘உங்களது உணவு டெலிவெரி செய்யபட்டுவிட்டது’ என்ற தகவல் முன்னால் இருக்க, அஸ்வின் குழம்பியபடி, அவர்களை அழைத்தான்..



அதற்குள் , கதவு தட்டும் ஒலி கேட்க, அங்கே நமது ஹீரோயின் கையில் உணவு பார்சல்களுடன் நிற்க, அழைப்பை துண்டித்துவிட்டு ,அவளை பார்த்து முறைத்தான்..



“ஹாய் .. சார்.. நான் தான் உங்க இர்ரிட்டேட்டிங்க் இடியட்.. உங்க பார்சல் எங்க வீட்டுல தந்துவிட்டு போயிட்டாங்க.. ஷோ அதை குடுக்கலாம்னு வந்தேன். பை தி வே.. ஐ அம் ஆராதனா..” என்று தன்னை அறிமுகபடுத்தி கை நீட்ட, அவனோ அவளை முறைத்துவிட்டு, பார்சல் மட்டும் வாங்கிக்கொண்டான்..



“ஓகே சார்.. நீங்க நல்ல சாப்பிட்டுவிட்டு தூங்குங்க.. அண்ட் நாங்க இன்னைக்கு தான் குடிவந்தோம் .. ரொம்ப பசிச்சது.. அதுனாலதான் அந்த கதவு வழியா வந்து உங்கவீட்டுல கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணி சாப்டுட்டு இப்படி பண்ணிட்டோம்... ஐ அம் எக்ஸ்டிரீம்லி சாரி..” என்று தனது மன்னிப்பையும் வைத்து அவனை பார்க்க , அவன் இன்னும் சிறிது இளகுவதுபோல காணப்பட, அதை பயன்படுத்தி ,” தூக்கம் வருது சார்.. பை. குட் நைட்.. “ என்று கூறிவிட்டு அவளது வீட்டிற்கு ஓடிவிட்டாள்..



அவள் சென்ற திசையை பார்த்துக்கொண்டு இருந்தவன் உதடுகள் சிறிது மலர, வயிறு அவனை சத்தமிட்டு அழைத்தது.. அதற்கு உணவு வைக்க , அவள் குடுத்த பார்சலை பிரித்தவன் , கணம் இல்லாது இருக்க, மெதுவாக அதை ஓபன் செய்தான்.. அதன் உள்ளே இருந்ததை பார்த்துவிட்டு, அவனது பி.பி எகிறியது.. பார்சலின் உள்ளே , “ ரொம்ப பசிச்சது சார்.. அதுனால் சாப்ட்டுட்டுட்டேன்.. அதற்கான பணத்தை வச்சு இருக்கேன்.. எடுத்துக்கோங்க.. நீங்க நிம்மதியா ஒரு செம்பு தண்ணீர் குடித்துவிட்டு தூங்குங்க சார்.. ஒரு செம்புக்கு மேல தண்ணீர் கானில் இருக்காது.. “ என்று எழுதிஇருந்தாள் ஆராதனா..



கோவத்தில் ‘ஆரதானா’ என்று கத்தியவன், தனது இயல்பை தொலைத்து அவளை திட்டியபடி படுத்து கொண்டான்.. மறுநாள் விடியல் அவனுக்கென்று இன்னும் சோதனைகளை வைத்துக்கொண்டு காத்து இருந்தது..



-------------------------------------



ஹாய் ஹாய் ..



சின்ன அப்டேட் தான் ... அட்ஜஸ்ட் பண்ணிகோங்க .. இன்று இரவு அல்லது நாளை அடுத்த அப்டேட் உடன் வருகிறேன் .. இரண்டு பகுதிகளாக அல்லாமல் ஒரே பகுதியாக ... சரியா ..



இந்த பதிவு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் ..


 

banumathi jayaraman

Well-Known Member
ஏங்கண்ணு ஆஆஆராராஆஆதனா?
அந்த பையனுக்கு ரெண்டு
இட்லியாச்சும் வைச்சுப் போட்டு
போயிருக்கலாமில்லே?
இல்லாங்காட்டி நக்கினியூண்டு
தோசை, பரோட்டா இப்படி
ஏதாச்சும் வைச்சிருக்கலாமில்லே?
பாவம், அஸ்வின் பையன்
பசியில துடிச்சிருப்பானே

அவங்கூட்டு ப்ரிஜ்ஜில
இருந்ததையும் லவட்டிக்கிட்டு
நீ போயிட்டே
உன்னோட ப்ரெண்ட்ஸுக்கு
கொடுத்த நீயி, வாங்கினவனை
நினைச்சுப் பார்த்தியா, ஆரா?
 
Last edited:

Thanu

Writers Team
Tamil Novel Writer
ஏங்கண்ணு ஆஆஆராராஆஆதனா?
அந்த பையனுக்கு ரெண்டு
இட்லியாச்சும் வைச்சுப் போட்டு
போயிருக்கலாமில்லே?
இல்லாங்காட்டி நக்கினியூண்டு
தோசை, பரோட்டா இப்படி
ஏதாச்சும் வைச்சிருக்கலாமில்லே?
பாவம், அஸ்வின் பையன்
பசியில துடிச்சிருப்பானே

அவங்கூட்டு ப்ரிஜ்ஜில இருந்ததையும் லவட்டிக்கிட்டு
நீ போயிட்டே
உன்னோட ப்ரெண்ட்ஸுக்கு
கொடுத்த நீயி, வாங்கினவனை
நினைச்சுப் பார்த்தியா, ஆரா?
விடுங்க sis.. kitchen ready ஆனதும் ஆரா கையாள சமைச்சு அஸ்வினுக்கு குடுதுடுவோம்
 

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top