Ennai Mayakum Mayavaney

Advertisement


Thulasik

Writers Team
Tamil Novel Writer
என்னை மயக்கும் மாயவனே
என்னை கதை எழுத தூண்டிய அனைத்து தோழைமைகளுக்கும் நன்றி...
என்னை மயக்கும் மாயவனே ஆமாம் இந்த கதையில் வரும் நாயகன் என்னை மயக்கிய மாயவன் தான்... மாயவன் என்ற பெயருக்கு கண்ணன், கிருஷ்ணன், கேசவன் பல புனை பெயர் இருக்கிறது... ஆனாலும் அவரை பெயர் சொல்லி அழைப்பதை விட இந்த மாயவனே எனக்கு பிடித்தம்.... நானே மயங்கி இன்னும் தெளிவு பெறாமல் இருக்கும் மாயவன் தான் என் கதையின் நாயகன்...
முதல் அத்தியாயம் - 1
மாயவன் அந்த மாய கண்ணன் தான் கண்ணில் காதலும் மனதை மயக்கும் அழகும் அனைவராலும் அமைதி என்ற பெயர் பெற்றவனும் அவனே... ஆனால் செய்யும் சேட்டைக்களுக்கு அளவில்லாமல் அதை சமாளிக்கும் திறமை அவனிடமே கற்று கொள்ள வேண்டும்...

இயற்கையின் கொஞ்சும் அழகும் வண்ண பூக்களும் துள்ளி திரியும் மான்களும் கரும் பாறை போல யானைகளும் இருக்கும் அழகிய முதுமலை மலை பிரதேசம்... கேரளமும் கன்னடமும் கலந்து ஒன்றாக உடன்பிறப்புகள் போல் இருக்கும் இந்த மலையில் உள்ள மயிலினை போல் தான் ராதை...
போதும் போதும் கதைக்கு வா சொல்ற மைண்ட் வாய்ஸ் கேக்குதுபா... எதுக்கும் என்டிரீ தரனும் தனே.. சரி வாங்க உள்ள போவோம்...
இந்த கிராமத்து பைங்கிளிக்கும் அந்த நகரத்து கிளிக்கும் காதல் வந்த கதை தான்... எப்பவும் அடாவடியா இருக்கிற ஹீரோ மாயவனையே மயக்கிய ராதைய பார்க்கலாம்... நாமும் மயங்குவோம்....

கொஞ்சலும் கெஞ்சலும் காதலும் அவனிடமே காணலாம்.. ஒரு அக்காவும் ஒரு தம்பியும் தான் உடன் பிறப்புகள்.. அந்த யசோதையின் நந்தனை போல சரியான அம்மா பிள்ளை எப்போதும் அதிகமாக பேசுபவன் தான் ஆனால் இன்னும் கை குழந்தைதான் அம்மா ஊட்டி விட்டால் உண்ணும் வழமை இன்னும் இருக்கிறது... அந்த மாயவனுக்கு காதல் என்றாலே கசப்பு பாகற்காய் தான் ஏனென்றால் நம் நாயகன் முதல் காதலே தோல்வி தான்... தாடி வளர்த்து தோல்வியை ஒவ்வவில்லை என்றாலும் அதை நினைத்து வருந்தியது ஏராளம்...
முதல் காதலே தோல்வி தழுவியதால் எப்போதும் பெண்களின் மீது நம்பிக்கை இருந்தில்லை... பெண் என்பவள் மயக்கும் மாய பிசாசுகள் தான் அவன் பார்வையில்... அப்பேர்பட்ட மாயவனை தனது மை விழியால் மயக்கிய ராதையை என்னவென்று சொல்வது....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top