Ennai mayakum mayavaney -5

Advertisement

Thulasik

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் 5

மயக்கத்திலிருந்து எழுந்தவள் இருவரும் தன்னை முறைப்பதை பார்த்து மறுபடியும் சம்பூவின் மடியில் படுத்துக்கொன்டாள்...

ஏய் ஆக்டிங் விடாதடி ஒழுங்கா எந்திரி கண்ணு ரெண்டும் நோண்டிருவேன் எந்திரி எதுக்குடி கத்திட்டு விழுந்த சொல்லு என்று சம்பூ அதட்டினாள்...

அங்கங்கே இருந்தவர்கள் தங்களை வேடிக்கை பார்ப்பதைக் கண்டு உள்ளே போகலாம் என்றாள் ராதா...

நீ வா இன்னைக்கு இருக்கு வா என்று ரம்யாவை உள்ளே அழைத்து சென்றவர்கள் சோபாவில் அமர்ந்தனர்....
இப்ப சொல்லு எதுக்கு விழுந்த என்று அதட்டியவளை யாரோ என் மேல இவங்க கம்பவுண்ட்லருந்து குதிச்சுட்டாங்கடி பயந்து மயங்கிட்டேன்... யாருனு தெரியலை ஓடிடாங்க என்றாள்...

யாருடி ஆளை பார்த்தியா இல்லையா என்றாள்... ஏய் அதுக்குள்ள மயங்கிட்டேன் தெரியலை என்றாள்...

ராதாவிற்கு தான் சிரிப்பாக இருந்தது எதுக்குடி சிரிக்கிற என்னடி சொல்லு உனக்கு தெரியுமா? என்றாள் சம்பூரணம்....

தெரியும்டி பக்கத்து வீட்டு பையன் தான் கேபிள் கரக்டா கிடைக்கிறது இல்லைன்னு அப்பப்போ இப்படி ஏறி நின்னு சரி பண்ணிட்டு இருப்பான்... அவனை பார்த்து பயந்துருப்பாடி என்றாள்...
அவனுக்கு அறிவே இல்லையாடி யாரு வா காட்டு மிரட்டிட்டு வரலாம் என்றாள்...

ஏய் பாவம் சின்ன பையன்டி இவ கத்துறது பார்த்து தான் அவன் பயந்து குதிச்சு ஓடிருப்பான்... நீ வேணும்னா பாரு அவனுக்கு தான் அடி பட்டுருக்கும் இவ சும்மா எல்லாத்துக்கும் விழுந்து தொலைப்பா விடு என்றாள்...

கேள்வியாக பார்த்தவளிடம் ஆமாடி உண்மையா தான் சொல்றேன் நானும் நிறைய டைம் அனுபவிச்சுருக்கேன் திட்டியும் இருக்கேன் விடுடி சாப்பிட போகலாம் வா என்றாள்...

தோழியின் பதிலில் சற்று மனம் தெளிந்தாலும் இன்னும் இதுல ஏதோ இருக்கு பார்க்கணும்... காலைல அந்த பக்கத்து வீட்டு பையனுக்கு டோஸ் குடுக்கனும் என்று நினைத்தப்படி இரவு உணவை முடித்தனர்...
அங்கே சென்னையில் மாயவன் வீட்டில் கோபத்தோடு கத்தி கொண்டிருந்தான்

ஆளில்லாத ரூம்ல பேன் ஓடுது... கரன்ட் எல்லாம் வீணா செலவு ஆகுது சும்மா எல்லாரும் போட்டுட்டு போயிடுறிங்க... ஆஃப் பண்ணவும் மறந்துடுறீங்க என்ன நெனைச்சுட்டு இருக்கிங்க எல்லாரும் என்று கோபத்தில் கத்திக் கொண்டிருந்தான்..

எல்லாம் ஓடுது ஓடுதுன்னு சொன்னா ஓடி போய் பிடிடா அண்ணா என்று அவனது தம்பி சரவணன வாய் கொடுத்து நன்றாக அவனிடம் முதுகில் மொத்து வாங்கினான்...

இவர்களின் சண்டையை பார்த்த அவன் அம்மா சும்மா இருடா அவனை போட்டு அடிக்காத இனி எல்லாம் சரி பண்றோம் போடா என்றார்...
ஆமா இப்படியே சொல்லுங்க ஒவ்வொரு டைம்மும் என்று நிமிர்ந்து பார்த்த தம்பியை முறைத்தவாறு அவனது அறைக்கு சென்று லேப்டாப்பை உயிர்ப்பித்து அவனது மெயில்களுக்கு பதில் அனுப்பி கொண்டிருந்தான்...

சற்று நேரத்திற்கு எல்லாம் வேலையை முடித்து விட்டு தனது மொபைலை எடுத்தவன் அவனது நன்பனுக்கு அழைத்தான்...


என்னடா சம்மர்க்கு எங்க போறோம் ஊட்டி தான் பெஸ்ட் சொல்றேன்ல அங்க தான் வெயிலுக்கு நல்லா இருக்கும் மார்னிங் எல்லார்கிட்டேயும் கேட்டு சொல்லுடா என்றவன் மாமா என்று அழுக்குரலை கேட்டு திரும்பினான்...
ராதாவின் வீட்டு வாசலில் வேகமாக ஒரு புல்லட் வந்து நின்றது... அதனின் சத்தத்தை கேட்ட சம்பூரணம் வாசலுக்கு விரைந்து ஓடினாள்...

ஏன்பா அம்மா கிட்ட தான் கூப்பிட்டு சொல்லிட்டேனே காலைல வரேன்னு ஏன் வந்தீங்க போங்க என்றாள்...

ஏய் சும்மா இருடி வாங்க அங்கிள் என்று உள்ளே ஓடி சென்று தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள் ராதா....

சம்பூவை முறைத்தவாறு வாங்கி கொண்டவர் கையிலிருந்த ஒரு கவரை ராதாவிடம் கொடுத்தார்...

இவ அம்மா முறுக்கு சுட்டு வைச்சுருந்தாளாம் காலைல இவளை எடுத்துட்டு போக சொன்னதுக்கு போமான்னு ஓடி வந்துட்டாளாம் உனக்கு கொடுத்துட்டு வர சொன்னா...
ராதா சம்பூவை பார்த்த பார்வை துரோகிடி நீ என்ற ரீதியில் இருந்தது...

அதை விட சோபாவில் அமர்ந்திருந்த ரம்யா ரெண்டும் நமக்கு தெரியாம சாப்பிட பிளான் பண்ணிருக்கும்... கவரையே தூக்கிட்டு ஓடிரனும் என்று கவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்...

அப்புறம் நான் கிளம்புறேன்மா மார்னிங் வீட்டுக்கு வந்திடு என்றவர் சம்பூவை ஒரு பார்வை பார்த்து நடந்தார்...

அப்பாவை அனுப்பிட்டு வரேன்டி என்று அவருடனே நடந்தவள் ஒரு இருபது நிமிடம் கழித்து அவரை அனுப்பி விட்டு உள்ளே வந்தாள்...

உள்ளே எனக்கு தான் உனக்கு தான் என்று ரம்யாவும் ராதாவும் அடித்துக் கொண்டிருந்தனர்... தலையெழுத்து இரண்டும் உருப்படாது.
திங்கிறதுக்கே அடிச்சுகுதுங்க இதுங்க எப்படி ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க போதுங்ளோ தெரியலை....

தனக்கு ஐபிஎல் படிப்பு தேவையா என்று ஐந்நூற்றி ஐம்பதாவது முறையாக யோசித்தாள்...

இவங்க கிட்டா கேட்டா ரம்யா உனக்கு வேணாம்டி எங்களோட இரு சொல்லுவா ஆனா ராதா கண்டிப்பா கட்டைய தூக்கி அடிக்க வருவா எதுவும் யோசிக்காம நாமளும் முறுக்கு சாப்பிட உட்காந்துரலாம்... எப்படியும் இவங்க சண்டை ஓயாது என்று முறுக்கு கவரை பார்த்தவள் மெதுவாக எடுத்துக் கொண்டு வெளியே நடந்தாள்....

உள்ளே இருவரும் இன்னும் சண்டை போட்டு கொண்டிருந்தனர்... அவளுக்கு நிறைய யோசிக்க வேண்டி இருந்தது.... அதையும் மீறி அதிகமாக பேசிய களைப்பு சோர்வடைய செய்தது...
உள்ளே எட்டி பார்க்க திரும்பியவளின் பார்வை எதிர் வீட்டு ஜன்னலின் திரைச்சீலை அவசரமாக மூடிய உருவத்தின் மீது பதிந்தது...

கோதை தான் என கண்டு கொண்டவள் உள்ளே திரும்பி சத்தம் போட்டாள்... ஏய் முறுக்கு எடுத்துட்டு வந்து அரை மணி நேரம் ஆச்சுடி இன்னும் அதை கவனிக்காம சண்டை போடுறீங்க... விளங்கிடும்

உங்களை எல்லாம் வெச்சுட்டு என்ன பண்றதுன்னு தெரியலை ஒழுங்க வாங்க என்றாள்...

இன்னும் அந்த நிழல் உருவம் அங்கேயே தனது காதை தீட்டி கொண்டிருந்தது...

ஒட்டு கேக்குறவங்களை எல்லாம் அடிச்சு மண்டைய ஒடைக்க போறேன் பார்த்துகிட்டே இருங்கடி என்று இன்னும் சத்தமாக கத்தினாள்...
எதுக்குடி ரிசன் இல்லாம ஏதேதோ சொல்ற என்று வந்த ராதைக்கு கண்களாலே பதிலளித்தாள்...

இவ்வளவு நேரம் இருந்த இளகு தன்மை சென்று ராதைக்கு பயம் பிடித்து கொண்டது...


நாமும் மயங்குவோம்....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top